Saturday, June 20, 2009

தியாகராஜரின் பொன்மொழிகள்

Top பிரகலாதன் இறைவனை வேண்டுதல் - ராம ப்ரபோ4!
  • நீவு அனேக அண்ட3 கோட்லன், விதீ4ந்த்3ராதி3 தே3வாஸுர, ஸ்தூ2ல, ஸூக்ஷ்மம்பு3ல, புட்டிஞ்சி, காபாடி3, நஷ்டம்பு3 ஸேயன்,
  • ஸதா3, மூடு3 ரூபம்பு3லும் தா3ல்சி, லோகேஸு1டை3, விஷ்ணுவை, ருத்3ருடை3, சால லீலா வினோத3ம்பு3லன் ஸேய,
  • மர்த்யுல், ஸதா3, ஷண்-மதம்பை3ன கூபம்பு3லோ புட்டி,
  • காமாதி3, ஷட்3-வர்க3 க்ரு2த்யம்பு3லுன் ஸல்பி,
  • 3ர்வ அசல ஆரூடு4லை, மூடு4லை,
  • சால, தா3ர, அர்ப4க, ஆகா3ர, கோ3, ப3ந்து3, லோகம்பு3லம் ஜூசுசு, உப்பொங்கு3சும்,
  • குக்ஷி பூர்ணம்பு3 ஸேயங்க3 லேக, எப்புடு3ன், து3:க2 வாராஸி1லோ, மக்3னு(ல)ய்யெத3ரு;
  • ஸ்ரீ ராமுனி ஜேரு ஆ ராஜ மார்க3ம்பு3லன், ஸ்வப்னமந்தை3ன, ஸாதி4ம்ப லேரய்ய;
  • நே நம்மினானய்ய, நாயொக்க பா4க்3யம்பு3 நீவஞ்சுனு உன்னானு.
ராம பிரபுவே!
  • நீ, அனேக கோடி அண்டங்களை - பிரமன், இந்திரன், தேவர்கள், அசுரர்கள், தூலம், சூக்குமங்களை படைத்து, காத்து, அழித்தல் செய்ய,
  • எவ்வமயமும், (மும்மூர்த்திகளின்) மூன்று உருவங்களைப் புனைந்து, உலகத்தலைவனாகி, விஷ்ணுவாகி, ருத்திரனாகி, மிக்கு வினோதமான திருவிளையாடல்களை நடத்த,
  • மாந்தர்கள், எவ்வமயமும், அறுமதங்களெனும் கிணற்றினில் பிறந்து,
  • காமம் முதலான, உட்பகை ஆறின் காரியங்கள் இயற்றி,
  • செருக்கெனும் மலையினில் ஏறி, மூடர்களாகி,
  • மிக்கு, மனைவி, மக்கள், இல்லம், பசுக்கள், சுற்றம் ஆகியயோரை (ஆகியவற்றினை) கண்டு, பெருமிதமுற்று,
  • வயிறு நிரப்ப இயலாது, எப்போதும், துயரக் கடலினில் ஆழ்ந்தோராயினர்;
  • ஸ்ரீ ராமனை அடையும், அந்த, அரச பாட்டைகளைக் கனவிலும் பின்பற்றிலரய்யா;
  • நான் நம்பியுள்ளேனய்யா, எனதொரு பேறு நீயென்றுள்ளேன்.
prahlAda bhakti vijayam - Part 2 Top
வருணன், பிரகலாதனுக்கு அறிவுரை கூறுதல்
  • சித்தமௌ ப3ங்கா3ரு ஸிம்ஹாஸனமுனன், உத்தமோத்தமுனு உஞ்சி,
  • ஊர்ஜிதம்பை3ன, த்4யானமௌ பன்னீடி தா4ரசே, ஹரிகி ஸ்னானம்பு3 கா3விஞ்சி, ஸந்தஸில்லுசுனு,
  • அபி4மானமனு வஸ்த்ரமு அமரங்க3 கட்டி,
  • விபு4னிபை, சனுவனு விந்த ரத்னமுல க4ன பூ4ஷணமுலிடி3,
  • கனி கரம்பு33னு, நீது3 புண்யமுலனு நிர்மலம்பை3ன ஸ்வாத்3வன்னமுலனு பெட்டி,
  • ஸ்வானந்தமுனனு ஆனந்த3மனு விடெ3ம்பு3 அமரகா3னொஸகி3,
  • மனஸார ஜூசுசு, தனுவுனு மரசி,
  • அனிஸ1ம்பு3னேகமை, ஆனந்த3மந்தி3,
  • த்ரி-ஜக3ம்பு3லனு நீவு த்ரு2ணமுகா3னெஞ்சி,
  • விஜயம்பு3 சேகொன்ன வீருடை3னாவு;
  • ஆக3ம ஸஞ்சாருன், அகி2ல லோகேஸு1ன், கனுலார ஸேவிம்ப காங்க்ஷிஞ்சினாவு;
  • வினுதுலு ஸேயவே, விஸ்1வாஸமுக3னு.
  • சித்தமெனும் பொற் சிங்காதனத்தினில், உத்தமரிலும் உத்தமனை இருத்தி,
  • திண்ணமான தியானமெனும் பன்னீர் அருவியினால், அரிக்கு குளியல் செய்வித்து, மகிழ்வுற்று,
  • அபிமானமெனும் உடை நன்றாகக் கட்டி,
  • மேலோன் மீது, காதலெனும் அரிய ரத்தினங்களினால், உயர் ஆபரணங்கள் அணிவித்து,
  • கனிவுடன், உனது புண்ணியங்களெனும், தூய சுவையான அன்னமிட்டு,
  • தனது உள்ளத்தினில் ஆனந்தமெனும் வீடிகை நன்றாக அளித்து,
  • மனதாரக் கண்டுகொண்டு, மெய்ம்மறந்து,
  • இடையறாது, அவனுடன் ஒன்றி, ஆனந்தமடைந்து,
  • மூவுலகையும், நீ புல்லென எண்ணி,
  • வெற்றி பெற்ற வீரனாகினாய்;
  • ஆகமங்களில் உறைவோனை, அனைத்துலக ஈசனை, கண்ணார சேவிக்க விழைந்துள்ளாய்;
  • போற்றிகள் செய்வாயய்யா, விசுவாசத்துடன்.
(prahlAda bhakti vijayam - Part 1) Top
33ன, பவன, தபன, பு4வனாதி்3 அவனிலோ, நக34ர, அஜ, ஸி1வ, இந்த்3ராதி3 ஸுருலலோ, ப43வத்3-ப4க்த வர அக்3ரேஸருலலோ, பா33 ரமிஞ்சே, சைதன்யமா! ஸர்வ ஸாக்ஷி!
  • த்3வைதமு ஸுக2மா? அத்3வைதமு ஸுக2மா?
  • விஸ்தாரமுகா3னு தெல்புமு நாதோ.
ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், புவி ஆகியவற்றிலும், அரி, பிரமன், அரன், இந்திரன் முதலான வானோரிலும், கடவுள் பக்தர்களில் தலைசிறந்தோரிலும், நன்கு திருவிளையாடல் புரியும், சைதன்யமே! யாவற்றிற்கும் சாட்சியே!
  • துவைதம் சுகமா, அன்றி அத்துவைதம் சுகமா?
  • விவரமாகத் தெரிவிப்பாயெனக்கு.
(dvaitamu sukhamA - rIti gauLa) Top
ஸீதா ராமா!
  • நீயெட3 ப்ரேம ரஹிதுலகு, நாம ருசி தெலுஸுனா?
  • காமினி வேஷ தா4ரிகி, ஸாத்4வீ நட3தலு ஏமைன தெலுஸுனா?
  • தன ஸௌக்2யமு, தானு எருக3க, ஒருலகு, தகு3 போ34ன ஸுக2மா?
  • 4னமகு3 புலி, கோ3 ரூபமைதே, ஸி1ஸு1வுகு பாலு கல்கு3னா?
ஓ சீதாராமா!
  • உன்னிடம் காதலற்றோருக்கு (உனது) நாமச் சுவை தெரியுமா?
  • பெண் வேடமணிவோனுக்குக் கற்பரசியின் நடத்தைகள் ஏதாகிலும் தெரியுமா?
  • தனது சுகத்தினைத் தானே யுணராது, மற்றோருக்கு தக்க போதனை சுகமளிக்குமா?
  • கொடிய புலி பசு உருக்கொண்டால், கன்றுக்கு பாலும் சுரக்குமா?
(rAma nIyeDa - kharahara priya) Top
  • 4ர்ம, அர்த2, காம, மோக்ஷ தா3னமேலனே?
  • மர்மமெருக3 லேனி இந்த்3ர ஸ1ர்மமேலனே?
  • அறம், பொருள், இன்பம், வீடெனும் பாகுபாடுகளேனோ?
  • உட்பொருளறியா இந்திரப் பட்டமுமேனோ?
(pAhi rAma rAmayanucu - kharahara priya) Top
ஸீதம்ம, ஸௌமித்ரி!
  • ராமுனிகி, மீரிரு பக்கல நிலப3டி3, கொலிசே முச்சட, நெனருஞ்சி, த்யாக3ராஜுனிதோ, பா33 தெல்ப ராதா3?
  • தனுவுசே, வந்த3னமொனரிஞ்சுசுன்னாரா?
  • சனுவுன, நாம கீர்தன ஸேயுசுன்னாரா?
  • மனஸுன தலசி, மை மரசியுன்னாரா?
  • ஹரி ஹரி!
சீதம்மா! இலக்குவா!
  • இராமனுக்கு இரு பக்கத்திலும், நீங்கள் நின்று, சேவை செய்யும் அழகினை, கனிவு கூர்ந்த்து, தியாகராசனுக்கு, விரிவாகத் தெரிவிக்கலாகாதா!
  • உடலினால் வந்தனம் செய்கின்றீர்களா? (அல்லது)
  • அன்புடன் நாம கீர்த்தனை செய்கின்றீர்களா? (அல்லது)
  • உள்ளத்தில் நினைந்து மெய் மறந்துள்ளீர்களா?
  • (கேட்பதற்கு) மன்னிப்பீராக!
(pakkala nilabaDi - kharahara priya) Top
  • புட3மி ஸுத ஸஹாயுடை3 செலங்கே3 பூர்ணுனி, ஆத்மாராமுனி, கூடி3யாட3, நட3சி, நட3சி ஜூசேரு அயோத்4யா நக3ரமு, கானரே.
  • அட்டே கன்னுலு கூர்சி, தெரசி, ஸூத்ரமு பட்டி, வெலிகி வேஷ தா4ருலை, புட்டு, சாவு லேனி தாவு தெலியக, பொக3டெ33ரு.
  • புவி மகள் உடனுறையாக விளங்கும் பூரணனை, ஆன்மாராமனை, கூடியிருப்பதற்கு, நடந்து, நடந்து நோக்கினர் அயோத்தி நகரத்திற்கு, (ஆயின்) காணரே!
  • அப்படியே, கண்களைக் கோர்த்து, (பகுதி) திறந்து, செபமாலை பற்றி, வெளியில் வேடமணிந்து, பிறப்பு, இறப்பற்ற இடத்தினை யறியாது, புகழ்ந்தனர்.
(naDaci naDaci - kharahara priya) Top
ஓ மனஸா!
  • ஸ்ரீ ஸாகேத ராமுனி ப4க்தியனே சக்கனி, ராஜ மார்க3முலு உண்ட33, ஸந்து3ல தூ3ரனேல?
  • சிக்கனி பாலு, மீக33 உண்ட33, 'சீ2'யனு க3ங்கா3-ஸாக3ரமேலே?
ஓ மனமே!
  • சாகேதராமனின் பக்தியெனும், மேலான அரச பாட்டைகளிருக்க, சந்துகளில் நுழைவதேனோ?
  • கெட்டியான பாலும், ஏடுமிருக்க, 'சீ' யெனும் கள்ளேனோ?
(cakkani rAja - kharahara priya) Top
ரே மனஸா!
  • ஸ்வாது32ல ப்ரத3, ஸப்த ஸ்வர, ராக3 நிசய ஸஹித, நாத3 லோலுடை3, ப்3ரஹ்மானந்த3மு அந்த3வே;
  • ஹரி, ஹர, ஆத்ம-பூ4, ஸுர பதி, ஸ1ர ஜன்ம, க3ணேஸா1தி3, வர மௌனுலு உபாஸிஞ்ச,
  • 4ர, த்யாக3ராஜு தெலியு.
ஏ மனமே!
  • சுவையான பயன்களையருளும், ஏழ் பதப் பண்களுடன் கூடிய, தியாகராசன் அறியும், நாதத்தில் திளைப்போனாகி, புவியில் பரமானந்த மெய்துவாய்;
  • அரி, அரன், தான்தோன்றி, இந்திரன், முருகன், கணபதி முதலானோரும், உயர் முனிவர்கள், மற்றோரும் நாதத்தினை வழிபடுவர்.
(nAda lOluDai - kalyANa vasanta) Top
ராம!
  • கனுலு தாகனி பர காந்தல மனஸெடுலோ?
  • கோ4ர, பூ4த பதினி ஜூசி, தா3ருகாரண்ய ஸதுலு, மேர மீரி, பு4வினி, அபதூ3ரு கல்க3 ஜேஸிரே.
  • நன போ3ணுலபை நேரமன நோரேமி?
இராமா!
  • கண் படாத பிற பெண்டிரின் மனமெவ்விதமோ?
  • (பிச்சாடனர் வேடத்தில் வந்த) சிவனைக் கண்டு, தாருகா வனப் பெண்டிர், வரை மீறி, புவியில் அவதூறுண்டாகச் செய்தனரன்றோ?
  • இளங்கன்னியரின் மீது தவறு காண, வாயென்ன?
(kanulu tAkani-kayANa vasanta) Top
காமித ப2ல தா3யக!
  • நா தலனு, சக்கனி வ்ராத, கலிகி3யுண்டே கதா3, கல்கு3னு?
  • பா43வத அக்3ரேஸருலகு3, நாரத3, ப்ரஹ்லாத3, பராஸ1ர, ராம தா3ஸுலு, பா3கு33, ஸ்ரீ ரகு4ராமுனி பத3முல, ப4க்தி ஜேஸின ரீதி த்யாக3ராஜுனிகி, இபுடு3, கலிகி3யுண்டே கதா3, கல்கு3னு?
  • கலினி இங்கி3தமெருக3க நின்னாடு3கொண்டி.
விரும்பிய பயன்களை யளிப்போனே!
  • எனது தலையில், நல்லெழுத்து உண்டாயிருந்தாலன்றோ (விரும்பியது) கிடைக்கும்?
  • தலைசிறந்த பாகவதர்களாகிய நாரதர், பிரகலாதன், பராசரர், இராமதாசர் முதலானோர், நன்கு, இரகுராமனின் திருவடிகளைப் பத்தி செய்த முறை, தியாகராசனுக்கிப் போழ்து உண்டாயிருந்தாலன்றோ (விரும்பியது) கிடைக்கும்?
  • கலியின் இங்கிதமறியாது உன்னைக் குறைசொன்னேன்.
(kaligiyuNTE kadA-kIravANi) Top
ஸாமஜ வர க3மன!
  • ஸாம நிக3மஜ, ஸுதா4 மய, கா3ன விசக்ஷண!
  • வேத3 ஸி1ரோ மாத்ரு2ஜ, ஸப்த-ஸ்வர, நாதா3சல தீ3ப!
  • ஸ்வீக்ரு2த யாத3வ குல, முரளீ வாத3ன!
களிற்றின் சிறந்த நடையோனே!
  • சாம வேதத்துதித்த அமிழ்த மயமான இசை வல்லுநனே!
  • மறைமுடியின் அன்னை (நாதோங்காரம்) ஈன்ற, ஏழ் பதமெனும், நாதக்குன்றின் (மேலிட்ட) விளக்கே!
  • குழலிசைக்கும், யாதவ குலத் தோன்றலே!
(sAmaja vara gamana - hindOLaM) Top
ஸாக்ஷாத்கார!
  • மோக்ஷமு க3லதா3 -
    • பு4விலோ ஜீவன்முக்துலு கானி வாரலகு?
    • நீ ஸத்34க்தி, ஸங்கீ3த ஞான விஹீனுலகு?
  • ப்ராண, அனல ஸம்யோக3மு வல்ல, ப்ரணவ நாத3மு, ஸப்த-ஸ்வரமுலை பரக3,
  • வீணா வாத3ன லோலுடௌ3, ஸி1வ மனோ-வித4மெருக3ரு.
சாட்சாத்காரமே!
  • முத்தி உண்டாமோ -
    • புவியில் சீவன் முத்தர் ஆகாதவர்களுக்கு?
    • உனது தூய பத்தி (கலந்த) இசை அறிவற்றோருக்கு?
  • (உயிர்)மூச்சு மற்றும் (உடல்) வெம்மையின் சேர்க்கையினால், பிரணவ நாதம் ஏழ் பதங்களாகித் திகழ,
  • வீணையிசையில் திளைக்கும் சிவனின் உள்ளப் பாங்கினையறியார்;
mOkshamu galadA-sAramati Top
கமலானன!
  • க்ஷம கல்கு3, பூ4-தனய, லக்ஷ்மணாதி3 மஹாத்முலகே கானி, அன்யுலகு, ஸமுகா2ன நில்வ கல்கு3னா?
கமல வதனத்தோனே!
  • பொறுமையுடை, நிலமகள், இலக்குவன் முதலான மேலோருக்கேயன்றி, பிறருக்கு, உனது முன்னிலையில் நிற்கக் கிடைக்குமா?
(samukhAna nilva-kOkila varALi) Top
த்யாக3ராஜ நுத!
  • ஸந்ததம்பு3, ஸ்ரீ காந்த ஸ்வாந்த ஸித்3தா4ந்தமைன மார்க3 சிந்த லேனி வாரு,
  • எந்த நேர்சின, எந்த ஜூசின, எந்த வாரலைன, காந்த தா3ஸுலே;
  • பர ஹிம்ஸ, பர பா4ம, அன்ய த4ன, பர மானவ அபவாத3, பர ஜீவனாது3லகு அன்ரு2தமே பா4ஷிஞ்சேரய்ய.
தியாகராசனால் போற்றப்பெற்றோனே!
  • எவ்வமயமும், மாமணாளன் உள்ளுறை சித்தாந்தமாகிய நெறியின் எண்ணமற்றவர்,
  • எத்தனை கற்றாலும், எத்தனை கண்டாலும், எத்தகையவராயினும், பெண்டிர்க்கடிமைகளே;
  • பிறரைத் துன்புறுத்தல், பிறன் மனை, பிறர் பொருள், பிற மனிதரைப் பழித்தல், பிறரால் பிழைத்தல் ஆகியவற்றிற்கு மெய்யல்லாதவற்றையே பகர்வராயினரய்யா.
(enta nErcina-Suddha dhanyAsi) Top
ராம!
  • ஸர்வாந்தர்யாமி நீவனே ஸாம்ராஜ்யமு நிஜமே?
  • நிர்வாஹமு லேனியீ ஜனுல கனி நிர்மலாத்முலெடு ஸைரிஞ்சிரோ கானி!
  • தா3ரி தெலிய லேரு கொந்த3ரு;
  • 3ரித்3ருலைனாரு;
  • ஸு-து3ரஹங்காருலை பரம நிக்ரு2ஷ்ட மதாசாருலைனாரு;
  • ஜாருலைனாரு; அதி3 கா3க,
  • தாரு மாரு பனுல ஜேஸெத3ரு;
  • ஸம்ஸாருலைனாரு;
  • கபடமேமோ தெலிய!
இராமா!
  • யாவரிலும் உள்ளியங்குவோன் நீயெனும் (உனது) பேராட்சி உண்மையா?
  • கட்டுப்பாடற்ற இம்மக்களைக்கண்டு, தூயவுள்ளத்தோர் எங்ஙனம் பொறுத்தனரோ?
  • நன்னெறி யறிந்திலர் சிலர்;
  • வறியோராயினர்;
  • தீய அகந்தையுற்று, மிக்கு இழிந்த கொள்கைகளைக் கடைபிடிப்பவராயினர்;
  • பிறர்மனை நயப்பவராயினர்;
  • முரண்பாடான பணிகளைச் செய்தனர்;
  • இல்வாழ்வில் உழல்பவராயினர்.
  • இந்தக் கபடமென்னவோ அறியேன்!
  • (எல்லா உயிர்களிலும் இறைவன் உள்ளியக்கமாக உள்ளான் என்றால், ஏன் இத்தனை முரண்பாடுகள் உள்ளன என்று இறைவனைக் கேட்கிறார்)
(sarvAntaryAmi - bhairavi) Top
இன குலோத்தம!
  • தனயுனி ப்3ரோவ ஜனனி வச்சுனோ? தல்லி வத்33 பா3லுடு3 போனோ?
  • வத்ஸமு வெண்ட தே4னுவு சனுனோ?
  • வாரித3முனு கனி பைருலு சனுனோ?
  • மத்ஸ்ய கண்டிகி விடுடு3 வெட3லுனோ?
  • ஈ ரஹஸ்யமுனு எரிகி3ம்புமு.
பரிதி குலோத்தமா!
  • மகனைக் காக்க, ஈன்றவள் வருவாளோ (அன்றி) தாயிடம் சிறுவன் செல்வானோ?
  • கன்றின் பின் பசு செல்லுமோ?
  • முகில் தேடி பயிர்கள் செல்லுமோ?
  • கயற்கண்ணியிடம் காதலன் செல்வானோ?
  • இந்த இரகசியத்தினை விளக்குவாய்.
(tanayuni brOva-bhairavi) Top
மனஸா!
  • மேலு மேலு ராம நாம ஸுக2மு, ஈ த4ரலோ.
    • நிண்டு3 தா3ஹமு கொன்ன மனுஜுலகு, நீரு த்ராகி3ன ஸுக2ம்பு3 கண்டே,
    • சண்ட3 தா3ரித்3ர மனுஜுலகு, த4ன பா4ண்ட3மு அப்3பி3ன ஸுக2ம்பு3 கண்டே,
    • தாபமு ஸைரிஞ்சனி ஜனுலகு, அம்ரு2த வாபி அப்3பி3ன ஸுக2ம்பு3 கண்டே,
    • 3ரி, தா3பு லேக, ப4யமந்து3 வேளல, தை4ர்யமு கல்கு3 ஸுக2ம்பு3 கண்டே,
    • ஆகலி வேளல, பஞ்ச ப4க்ஷ்ய, பரமான்னமு அப்3பி3ன ஸுக2ம்பு3 கண்டே,
    • ஸ்ரீ ராமுனி, மனஸுன சிந்திஞ்சு ஸுக2ம்பு3 கண்டே,
    • ஸார ஹீனமௌ, க்ரோத4 ஸமயமுன, ஸா1ந்தமு கல்கு3 ஸுக2ம்பு3 கண்டே,
    • நேரனி மூடு4லகு, ஸகல வித்3யா பாரமு தெலியு ஸுக2ம்பு3 கண்டே,
    • ராமுனிபை, நிஜ ப4க்தி கலிகி3, கா3ன ரஸமு தெலிஸின ஸுக2ம்பு3 கண்டே,
    • பாமர செலிமி ஸேயனி வாரி, பா4வமு லோனி ஸுக2ம்பு3 கண்டே,
    • சேய தகு3, வேதா3ந்த விசாரண, சேயக3 கல்கு3 ஸுக2ம்பு3 கண்டே,
    • பா3யக, நிர்கு3ண பா4வமு க3ல, பரப்3ரஹ்ம அனுப4வ ஸுக2ம்பு3 கண்டே,
    • ராஜஸ, தாமஸ கு3ணமு லேனி பூஜலு கல்கு3 ஸுக2ம்பு3 கண்டே,
    • ராஜ ஸி1கா2 மணியைன, த்யாக3ராஜுகு ஒஸங்கு3 ஸுக2ம்பு3 கண்டே,
  • மேலு மேலு ராம நாம ஸுக2மு, ஈ த4ரலோ.
மனமே!
  • மேலாம் மேலாம், இராம நாம சுகம், இப்புவியில்.
    • மிக்கு நீர் வேட்கை கொண்ட மனிதர்களுக்கு நீரருந்தின சுகத்தினை விட,
    • மிக்கு வறிய மனிதர்களுக்கு, செல்வப் பெட்டகம் கிடைத்த சுகத்தினை விட,
    • (முவ்)வெம்மை தாங்காத மக்களுக்கு அமிழ்தக் குளம் கிடைத்த சுகத்தினை விட,
    • போக்கு, புகலின்றி அச்சமுறுவமயம், துணிவுண்டாகும் சுகத்தினை விட,
    • பசி வேளையில், ஐவகை உண்டியும், பாயசமும் கிடைத்த சுகத்தினை விட,
    • நலனருளும், இராமனை மனத்தினில் சிந்திக்கும் சுகத்தினை விட,
    • சாரமற்ற சீற்ற சமயத்தில் சாந்தம் உண்டாகும் சுகத்தினை விட,
    • கல்லாத மூடர்களுக்கு, அனைத்து வித்தைகளிலும் கரைகாணத் தெரியும் சுகத்தினை விட,
    • இராமனிடம் உண்மையான பக்தி உண்டாகி, இசை ரசனையும் தெரியும் சுகத்தினை விட,
    • பாமரர்களின் இணக்கம் கொள்ளாதவரின் இயல்பினிலுள்ள சுகத்தினை விட,
    • செயத்தகு வேதாந்த விசாரணை செய்வதினால் உண்டாகும் சுகத்தினை விட,
    • இடையறாது, நிர்க்குண இயல்புள்ள, பரம்பொருளின் அனுபவ சுகத்தினை விட,
    • இராசத, தாமத குணங்களற்ற வழிபாடு ஏற்படும் சுகத்தினை விட,
    • பிறையணிவோனாகிய தியாகராசனுக்கு (இராமன்) வழங்கும் சுகத்தினை விட,
  • மேலாம் மேலாம், இராம நாம சுகம், இப்புவியில்.
(mElu mElu rAma nAma - saurAshTraMa) Top
ஓ மனஸா!
  • எடுல ஓர்துனே? நா மனவி சேகொனவே.
    • தி3ன-கர குல பூ4ஷணுனி, தீ3னுட3வை, ப4ஜன ஜேஸி, தி3னமு க3டு3புமு அனின, நீவு வினவு, அதி3 ஏல?
    • கலிலோ, ராஜஸ, தாமஸ கு3ணமுலு கல வாரி செலிமி, கலஸி, மெலஸி திருகு3சு, மரி, காலமு க33பகனே, ஸுலப4முகா3 கட3 தேரனு, ஸூசனலனு தெலிய ஜேயு, த்யாக3ராஜு மாட வினவு, அதி3 ஏல?
ஓ மனமே!
  • எப்படிப் பொறுப்பேன்? எனது வேண்டுகோளை ஏற்பாய்.
    • பகலவன் குல அணிகலனை, பணிவுடையோனாகி, பஜனை செய்து, நாளைக் கழிப்பாயென்றால், நீ கேளாயஃதேன்?
    • கலியில், இராசத, தாமத குணங்கள் உடையோரின் நட்பினில், கூடிக்கலந்து, திரிந்துகொண்டு, மேலும் பொழுதை வீணாக்காது, எளிதாக, கடைத்தேறுதற்குக் குறிப்புகளைத் தெரியப்படுத்தும், இங்கு, தியாகராசனின் சொல்லைக் கேளாயஃதேன்?
(manasA eTulOrtunE - malaya mArutaM) Top
  • து4ரீணுடௌ3, த்யாக3ராஜ நுதுடு3, எந்த முத்3தோ3! எந்த ஸொக3ஸோ!
  • எவரி வல்ல வர்ணிம்ப தகு3னே!
    • எந்த வாரலைன கானி, காம சிந்த ஆக்ராந்துலு ஐனாரு;
    • அத்த மீத3 கனுலு, ஆஸகு தா3ஸுலை;
    • ஸத்த பா43வத வேஸுலைரி;
    • து3த்த, பால ருசி தெலியு ஸாம்யமே!
  • உலக பாரஞ் சுமப்போனாம், தியாகராசன் போற்றுவோன், எவ்வளவு கவர்ச்சியோ! எவ்வளவு ஒயிலோ!
  • எவரால் வருணிக்க இயலுமோ!
    • எப்படிப்பட்டவராயினும், காம எண்ணங்களால் பீடிக்கப் பட்டோராயினர்.
    • அத்தை மீது கண்கள், ஆசைக்கடிமைகளாகி;
    • (ஆயின்) தூய பாகவதர் வேடமணிந்தனர்.
    • பாண்டம், பாலின் சுவையறிதல் போன்றதே!
(enta muddO - bindu mAlini) Top
ஓ பராத்பர!
  • கதா2ம்ரு2தமு சே, ப3ஹு காலமு, ஆகலி தீரியுன்னானு;
  • து3ராத்முலகு3, பூ4-கிராதகுல சேர ராது3 அனுசு, நீ பராயணுல செலிமி ரா கோரு, த்யாக3ராஜ நுத!
ஓ பராபரமே!
  • பல காலம், (உனது) சரிதை (எனும்) அமிழ்துண்டு, பசியாறியுள்ளேன்;
  • தீய உள்ளத்தோராகிய, புவியின் இழிந்தோரைச் சேரலாகாதென, உனது தொண்டு பூண்டோரின் இணக்கம் பெறக் கோருகின்றேன்.
(sudhA mAdhurya - sindhu rAmakriya) Top
அய்யா!
  • ஸம்ஸாருலைதே ஏமி, ஸி1கி2 பிஞ்சா2வதம்ஸுடு3 எது3டனு உண்ட33?
      • ஹிம்ஸ ஆது3லு எல்ல ரோஸி,
      • ஹம்ஸாது3ல கூடி3, ப்ரஸ1ம்ஸ ஜேயுசுனு,
    • ஏ ப்ரொத்3து3 கம்ஸாரினி நம்முவாரு,
      • ஞான, வைராக்3யமுலு ஹீனமு ஐன, அட்டி ப4வ கானனமுன திருகு3 மானவுலு,
      • ஸதா3, த்4யான, யோக3 யுதுலை,
      • நீ நாமமு பல்குசு,
    • நானா கர்ம ப2லமு தா3னமு ஸேயுவாரு,
      • க்ரூரபு யோசனலு தூ3ரு ஜேஸி,
      • தன தா3ர, புத்ருல பரிசாரகுல ஜேஸி,
    • ஸார ரூபுனி பாத3 ஸாரஸ யுக3முல, ஸாரெ-ஸாரெகு மனஸார பூஜிஞ்சுவாரு,
      • பா43வதுல கூடி3,
      • போ43முலு எல்ல ஹரிகே காவிம்புசுனு,
      • வீணா கா3னமுலதோ, ஆக3ம சருனி, ஸ்ரீ ராக3முன பாடு3சு,
    • த்யாக3ராஜ நுதுனி பா3கு33 நம்முவாரு,
  • ஸம்ஸாருலைதே ஏமி?
அய்யா!
  • இல்லறத்தினர் ஆனால் என்ன, மயிற்பீலி யணிவோன் எதிரிலிருக்க?
      • இம்சை ஆகிய யாவும் வெறுத்து,
      • முற்றுமுணர்ந்தோரைக் கூடி,
      • (இறைவனின்) புகழ் பாடிக்கொண்டு,
    • எவ்வமயமும், கஞ்சனை வதைத்தோனை நம்புவோர்,
      • ஞானம், வைராக்கியம் ஆகியவை யற்ற அத்தகைய, பிறவிக் காட்டினில் திரியும் மனிதர்கள்,
      • எவ்வமயமும், தியானம், யோகம் உடையோராய்,
      • உனது பெயர் உரைத்துக்கொண்டு,
    • பற்பல கருமங்களின் பயன்களை (இறைவனுக்கு) அர்ப்பணிப்போர்,
      • கொடிய எண்ணங்களைத் துறந்து,
      • தனது மனைவி, மக்களை (இறைவனின்) சேவையில் ஈடுபடுத்தி,
    • சார உருவத்தோனின் திருவடிக் கமல இணையினை, எவ்வமயமும், மனதார வழிபடுவோர்,
      • பாகவதர்களைக் கூடி,
      • (உலக) இன்பங்களை யெல்லாம் அரிக்கே அர்ப்பணித்துக்கொண்டு,
      • வீணை இசையுடன், ஆகமங்களில் உறைவோனை, சிறந்த இராகங்களில் பாடிக்கொண்டு,
    • தியாகராசன் போற்றுவோனை, முழுதும் நம்புவோர்,
  • இல்லறத்தினர் ஆனால் என்ன?
(saMsArulaitE - sAvEri) Top
மனஸா!
  • நா மாட வினி, ஸாரெகு, முக்தி கனுமீ; மஞ்சிதி3 அனுமீ;
  • பலு வித4, கர்மம்பு3லயந்து3, மர்மமு தெலுஸுகோ; ஹரினி கலுஸுகோ;
  • லோகுலு, தம த்ரோவ ஏகமு அந்து3ரு; ஒப்புகோகவே; மோஸ போகவே;
  • மாடி மாடிகி, நூனெ ரோடி எத்3து3லு திருகு3; தா4டி ரா; மதமு ஏ பாடிரா?
  • ஆ மதமுல அந்து3, நேமமு, ஸத்யமு ஏமர போகு;
  • 3தி அந்தரமு லேது3; ப்ரத்யேகமுன ஜூடு3, நித்யுனி;
  • தொலி, ப4வ நாடகமுல, ஜேயு பாபமு தொலகு3னு; ஸுக2மு கலுகு3னு.
மனமே!
  • என் சொல்லைக் கேட்டு, எவ்வமயமும், முத்தி காணேன்; 'நல்லது' என்று சொல்லேன்;
  • பலவிதமான (வேத) கருமங்களில் உட்பொருள் அறிந்துகொள்; அரியைக் கலந்து கொள்;
  • உலகோர் தமது நெறியொன்றே (உண்டு) என்பர்; ஒப்புக்கொள்ளாதே; மோசம் போகாதே;
  • திரும்பத்திரும்ப செக்கு மாடுகள்தான் சுற்றும்; கடந்து வா; அந்நெறிகளினால் என்ன பயன்?
  • அந்நெறிகளில் (சென்று) கட்டுப்பாட்டினையும், உண்மையினையும் மறந்து போகாதே;
  • போக்கு வேறில்லை; ஒவ்வொன்றிலும், காண்பாய் அழிவற்றோனை, யாவற்றையும் சாதித்தவனை;
  • (அங்ஙனம் கண்டால்) முன்னர், பிறவிக்கடலெனும் நாடகத்தில் செய்த பாவங்கள் தொலையும்; சுகம் உண்டாகும்;
(SrI rAma rAmASritulamu - sAvEri) Top
  • மேனு ப3லமு குலமு ஏல?
  • ராம ப4க்தி காரணமு, வெலயு ஸகல ஸித்3து4லு எல்ல வெண்ட வச்சு கானி.
    • நீட, காகி, மீனு முனுக3, நிரதமு உத3ய ஸ்நானமா?
    • தேட கனுலு, கொங்க3 கூர்ச, த்4யானமா?
    • பத்ரமுலனு மேயு மேக, ப3லமைன உபாஸமா?
    • சித்ர பக்ஷுலு எக3ய, ஸூர்ய, சந்த்3ருலகு ஸாம்யமா?
    • கு3ஹல, வேஷ கோடுலு உண்டே, கு3ணமு கல்கு3 மௌனுலா?
    • 3ஹனமுனனு, கோதுலு உண்டே, க4னமௌ வன வாஸமா?
    • ஜங்க3முலு, பலுகக உண்டே, ஸங்க3திகா3 மௌனுலா?
    • அங்க3மு முய்யனி பா3லுலு, அபுடு3, தி33ம்ப3ருலா?
  • வலசு, த்யாக3ராஜ வரது3 வர ப4க்துலு ஸேயு ப4க்தி, செலகு3, ஸகல ஜனுலகு எல்ல, செல்லின காஸு ஔனுகா3!
  • உடல் வலிமையும் குலமும் ஏன்?
  • இராமனின் பக்தி காரணமாக திகழும் அனைத்து சித்திகள் யாவும் பின் தொடருமன்றோ?
    • நீரில் காகமும் மீனும் மூழ்க, என்றும் காலைக் குளியலா?
    • தூய கண்களைக் கொக்கு குவிக்க, (அது) தியானமா?
    • இலைகளை மேயும் ஆடு, முழுப் பட்டினியா?
    • பல்வகைப் பறைவைகள் பறக்க, சூரிய சந்திரர்களுக்கு நிகரா?
    • குகையில் வேடமணிந்த கும்பலிருந்தால், குணமுடை முனிவர்களா?
    • காடுகளில் குரங்குகளிருந்தால், பெரும் வன வாசமா?
    • சங்கமர்கள் பேசாதிருந்தால், மொத்தமாக முனிவர்களா?
    • உடல் மூடாத சிறுவர்கள் அப்படியானால், திகம்பரர்களா?
  • காதலுடன், தியாகராசனுக்கருள்வோனின் உயர் தொண்டர்கள் செய்யும் பக்தி, திகழும் அனைத்து மக்கள் யாவர்க்கும் செல்லும் காசாகுமன்றோ!
(balamu kulamu - sAvEri) Top
நனு கன்ன தல்லி!
  • எல்ல வாரி த4னமுலு, அஸ்1வமுலு, மரி, எக்குவைன க3ட்டி மித்3தெ3லு, அன்னியு கல்ல கானி, கன்ன வாருலு காஞ்சு ஸுக2மு, ஸுன்ன அனுசுனு, உல்லமுனனு பா33 தெலுஸுகொண்டினி;
  • ஊரகே, த4னிகுல 3ஸம்பா4ஷணமு நேனு ஒல்ல;
  • மாயலு அனி தெலிஸி, ரஜ்ஜு பை உரக3 பு3த்3தி4 செந்த3னு ஏல?
  • பலுகு மஞ்சி கானி, பா3ந்த4வுலு, மரி, பா3வ, மரது3லு, அக்கலு, அன்ன, தம்முலு, கலிமி ஜூசு வாரு, லேமினி கனுல கான ராரு, அனுசுனு தலசுகொன்ன வெனுக, வாரி மாயல தக3ல ஜாலனு;
  • மரு, மரீசிகலனு ஜூசி, நீரு அனி ப்4ரமஸி, கந்து3ரா?
  • கனக பூ4ஷணமுல பெட்டி, மரியு, ஸொக3ஸு ஜேஸி, பாலு போஸி, பெஞ்சின தனுவு, ஸதமு காது3, நிர்மல தனமு இஞ்சுக லேது3 அனுசுனு அனுதி3னமு ஒனரிஞ்சு ஸத்-க்ரியல, நீகு அனி பல்கிதி;
  • அன்னிட நீவு அனி எரிகி3, வேல்புல வேரு அனி எஞ்சுது3ரா?
என்னை ஈன்ற தாயே!
  • எல்லோருடைய செல்வம், குதிரைகள், மற்றும் மிக்கு கெட்டியான மெத்தை வீடுகள் - இவை யாவும் பொய்யே யன்றி, (இவற்றை) உடையவர்கள் பெறும் சுகம் வெற்றென, உள்ளத்தில் நன்கு தெரிந்துகொண்டேன்;
  • வீணாக, செல்வந்தரின் கூற்றுக்களை நான் வெறுக்கவில்லை;
  • (இவை) மாயையென்றறிந்து, 'பழுதையில் பாம்பு' நோக்கு கொள்வதேனம்மா?
  • மொழி நல்லதல்லாத உறவினர்கள், மற்றும் மைத்துனர்கள், மைத்துனிகள், தமக்கையர், அண்ணன், தம்பியர் (ஆகியோர்), செல்வத்தை நோக்குவோர், வறுமையினைக் கண்ணால் காணமாட்டாரென நினைத்துக்கொண்ட பின்னர், அவர்தம் மாயையில் அகப்பட இயலேனம்மா!
  • மறையும், கானலைக் கண்டு நீரெனத்திகைத்து (உண்மையில்) (நீரினைக்) காண்பரோ?
  • தங்க நகைகள் அணிவித்து, மேலும் அலங்காரம் செய்து, பாலூற்றி வளர்த்த இவ்வுடல் நிலையற்றது, (இதனில்) தூயத் தன்மை சிறிதும் இல்லையென, அனுதினமும் (நான்) செய்யும் நற்பணிகளை உனக்கென உரைத்தேன்.
  • யாவற்றிலும் நீயென்றறிந்து, (பிற) கடவுளரை உன்னின்றும் வேறென எண்ணுவரா?
(kanna talli - sAvEri) Top
  • க்3ரஹ ப3லமேமி?
    • தேஜோ-மய, விக்3ரஹமுனு த்4யானிஞ்சு வாரிகி, நவ க்3ரஹ ப3லமேமி?
    • க்3ரஹ பீட3ல, பஞ்ச பாபமுலனு, ஆக்3ரஹமுலு க3ல, காம ஆதி3 ரிபுல, நிக்3ரஹமு ஜேயு, ஹரினி ப4ஜிஞ்சு, த்யாக3ராஜுனிகி, ரஸிக அக்3ரேஸருலகு, க்3ரஹ ப3லமேமி?
  • ஸ்ரீ ராம அனுக்3ரஹ ப3லமே ப3லமு.
  • கோள்களின் வலிமையெம்மாத்திரம்?
    • ஒளிமயமான (இராமனின்) திருவுருவத்தைத் தியானிப்போருக்கு, ஒன்பது கோள்களின் வலிமையெம்மாத்திரம்?
    • கோள்களின் பீடைகளை, ஐம்பாதகங்களை, விட்டகலாத, இச்சை முதலான உட்பகைவரை அழியச் செய்யும், அரியினைத் தொழும், இத்தியாகராசனுக்கும், ரசிகரில் தலைசிறந்தோருக்கும் கோள்களின் வலிமையெம்மாத்திரம்?
  • இராமனின் அருள் வலிமையே வலிமை.
(graha balamEmi - rEvagupti) Top
மனஸா!
  • ஸோ1பி4ல்லு ஸப்த ஸ்வர ஸுந்த3ருல ப4ஜிம்பவே.
  • நாபி4, ஹ்ரு2த், கண்ட2, ரஸன, நாஸ, ஆது3லயந்து3 ஸோ1பி4ல்லு ஸப்த ஸ்வர ஸுந்த3ருல ப4ஜிம்பவே.
    • 4ர ரு2க், ஸாம ஆது3லலோ,
    • வர கா3யத்ரீ ஹ்ரு23யமுன,
    • ஸுர, பூ4-ஸுர மானஸமுன,
    • ஸு14 த்யாக3ராஜுனியெட3
  • ஸோ1பி4ல்லு ஸப்த ஸ்வர ஸுந்த3ருல ப4ஜிம்பவே.
மனமே!
  • திகழும் ஏழு சுரங்களெனும் சுந்தரர்களை வழிபடுவாய்.
  • கொப்பூழ், இதயம், தொண்டை, நாக்கு, மூக்கு ஆகியவற்றினில் திகழும் ஏழு சுரங்களெனும் சுந்தரர்களை வழிபடுவாய்.
    • ஆதாரமான, ருக், சாம ஆகிய மறைகளிலும்,
    • புனித காயத்திரி (மந்திரத்தின்) இதயத்திலும்,
    • வானோர், மற்றும் அந்தணர் உள்ளங்களிலும்,
    • மங்களம் நிறை இத்தியாகராசனிடமும்
  • திகழும் ஏழு சுரங்களெனும் சுந்தரர்களை வழிபடுவாய்.
(SObhillu sapta svara - jaganmOhini) Top
மனஸா!
  • வினவே! மோஸ போகு; ஸத்-ஸஹவாஸமு விட3வகே.
  • ஸ்ரீ ராமுனி தெலியக, தலசக, மோஸ போகு.
    • அல்ப ஆஸ்1ரயமுன கல்கு3 வெஸனமுலு, கல்பாந்தரமைன போது3;
    • ஸே1ஷ தல்ப ஸ1யனுனி நெர நம்மிதே, ஸங்கல்பமெல்லனு ஈடே3ருனு.
    • 4ன தருணுலகு ஆஸி1ஞ்சுடெல்ல, வெனுக, தனுவுகு அலஸடே;
    • மனஸு சேத ஸேவ்யுனி தலசிதே, ஸு-மன ஸத்வமுனொஸகு3னே.
    • கௌ3ரவ ஹீன த4னிகுல காசுடயு, நேரமுலகு எட3மௌனு.
  • கா3ரவிஞ்சு த்யாக3ராஜ ஹ்ரு23ய ஆகா3ருனி.
மனமே!
  • கேளாயடி! மோசம் போகாதே; நல்லிணக்கத்தை விடாதேயடி!
  • இராமனை தெரிந்துகொள்ளாது, நினையாது மோசம் போகாதே.
    • அற்பப் புகலினால் உண்டாகும் துன்பங்கள் கற்பங்கள் பலவானாலும் தொலையாது;
    • அரவு அணையில் துயில்வோனை முழுதும் நம்பினால், நினைத்தவையெல்லாம் ஈடேறும்;
    • செல்வம், மற்றும் பெண்டிருக்கு ஆசைப்படுவதெல்லாம், பின்னர் உடலுக்கு இளைப்பே;
    • உள்ளத்தினால், வணங்கத்தக்கோனை நினைத்தால், உள்ளத் தூய்மையினை வழங்கிடுவானே.
    • கௌரவமற்ற செல்வந்தரிடம் காத்துக்கிடத்தல், தவறுகளுக்கு இடமாகும்.
  • தியாகராசனின் இதயத்தில் குடிகொண்டோனைக் காதலிப்பாய்;
(mOsa pOku - gauLipantu) Top
மனஸா!
    • ஸுமதுலௌ நருலனு ஜேரி,
  • நிஜ ஸுக2மனுப4விஞ்சுடகு, நீகு இதி3 ஸமயமு; ஏமரகே.
    • அந்தரங்க3முன கலுகு34யமுன,
    • ஆந்தரிக ப4க்தி மார்க3மு தெலிஸி,
  • ஸ்ரீ த்யாக3ராஜ ஸன்னுதுனி ஜூட3 ஸமயமு; ஏமரகே.
மனமே!
    • மெய்யறிஞர்களாகிய மனிதர்களுடன் இணங்கி,
  • உண்மையான சுகத்தினை அனுபவிப்பதற்கு, உனக்கிதுவே தருணம். ஏமாறாதே.
    • உள்ளத்தினில் உண்டாகும் அச்சத்துடன்,
    • உட்புற பக்தி நெறியினைத் தெரிந்து,
  • தியாகராசன் மிக்கு போற்றுவோனை தரிசிக்க, தருணம் இதுவே; ஏமாறாதே.
(samayamu EmarakE - kalgaDa) Top
ஓ மனஸா!
  • மன ஸாமர்த்2யமு ஏமி?
  • ஸாகேத ராஜு, விஸ்1வமனே ரத2முன எக்கி, தன ஸாமர்த்2யமுசே, தானே நடி3பிஞ்செனே!
ஒ மனமே!
  • நமது திறமையென்ன?
  • சாகேத மன்னன் பேரண்டமெனும் தேரேறி, தனது திறமையினால், தானே (தேரை) நடத்துகின்றானே!
(manasA mana - vardhani) Top
ராம!
  • தெலிய லேரு, ப4க்தி மார்க3முனு.
    • இலனந்தட திருகு3சுனு, கலுவரிஞ்சேரு.
    • வேக3 லேசி, நீட முனிகி3, பூ4தி பூஸி, வேள்ளனெஞ்சி,
    • வெலிகி ஸ்1லாக4னீயுலை,
    • பா33 பைகமு ஆர்ஜன லோலுலு ஐரே கானி,
  • தெலிய லேரு, ப4க்தி மார்க3முனு.
இராமா!
  • தெரிந்திலரே, பக்தி நெறியினை.
    • புவியெங்கும் திரிந்துகொண்டு, பிதற்றினர்.
    • விடியற்காலை யெழுந்து, நீரில் மூழ்கி (யெழுந்து), நீறு பூசி, விரல்களை யெண்ணி,
    • வெளிப் பார்வைக்கு, போற்றத் தக்கோராகி,
    • நன்றாக பணம் ஈட்டும் ஆசைகொண்டவராகினரே யன்றி,
  • தெரிந்திலரே, பக்தி நெறியினை.
(teliya lEru rAma - dhEnuka) Top
ராம!
  • எவரு தெலியனு பொய்யெத3ரு?
  • விவரமு லேனி பூஜலு ஜேஸெத3ரு.
    • முத3முன, பருல ரூகலகு, பர ஸுத3துலகு ஆஸி1ஞ்சி,
    • தா கூடு3டகு, உத3ரமு நிம்புட கொரகு,
    • சால, ஊரனூர திரிகெ33ரு ஆவரகு.
    • கொன்ன தொத்துல மாட மீர லேக,
    • அன்ன, தம்முல, தல்லி, தண்ட்3ருல, நேரமு என்னுடே பனி கானி,
    • ஸாரமைன நீ பத3மு நம்மெத3ரா?
    • ஆலு, பி3ட்33லனு நம்மெத3ரு;
    • வாரிகி ஆஸி1ஞ்சி, பருல கொம்பலு முஞ்செத3ரு;
    • காலுனி வல்ல, நிண்டா3ரு கஷ்டமு ஜெந்தி3, பு4வினி புட்டெத3ரு.
    • பெத்33லதோ கல்லலாடி3,
    • பு3த்3தி4 லேனி த4னிகுல தா வேடி3,
    • வத்3து3 அன வாரிதோ மோடி3,
    • இட்லு ப்ரொத்3து3 போவுட கானி, பதிதுல கூடி3.
    • ஈஸுன மரியாத3 லேது3;
    • நிண்டு3 காஸு கல்கி3ன வானிகி அன்னிட வாது3;
    • ஆஸ நீயெட3 கல்க3 போது3;
    • நிஜ தா3ஸுலு எவரோ கன சேத காது3.
    • பன்னுக3, மனகே ஸ1க்தியனி,
    • அன்னி கல்லலு அனுசுனு, தொ3ங்க34க்தி;
    • இதி3 ஏடி விரக்தி?
    • இதி3யா பேத3 யுக்தி?
  • யோகு3லு மேனு எருக3 லேக,
  • தமகே க3தியனி த்4யானிந்துரு.
இராமா!
  • எவர் அறியலாயினர்?
  • விவரமற்ற வழிபாடுகள் செய்தனர்.
    • களிப்புடன், பிறர் பணத்திற்கு, பிற பெண்டிருக்கு ஆசைப்பட்டு,
    • தான் (அவற்றை) அடையவும், வயிறு நிரப்புவதற்கும்,
    • மிக்கு ஊரூராகத் திரிந்தனர், அதுவரை;
    • கொண்ட மனைவியரின் சொல் மீர இயலாது,
    • அண்ணன், தம்பியர், தாய், தந்தையரின் குற்றம் காண்பதுவே பணியன்றி,
    • சாரமான உனது திருவடியினை நம்பினரா?
    • இல்லாள், மக்களை நம்பினர்;
    • அவருக்கு ஆசைப்பட்டு, பிறர் குடும்பங்களைக் குலைத்தனர்;
    • நமனால் நிறைய துன்பமடைந்து, (பின்னர்) புவியில் பிறந்தனர்;
    • பெரியோர்களிடம் பொய் கூறி,
    • அறிவற்ற செல்வந்தர்களை தாம் இரந்து,
    • (அப்படி) வேண்டாம் என்றவரிடம் சினந்து,
    • இப்படியாக, வீழ்ந்தோருடன் கூடி, பொழுது போகுமேயன்றி;
    • பொறாமையினால் மரியாதை இல்லை;
    • மிக்கு செல்வம் படைத்தோனுக்கு, எதனிலும் வாது;
    • அன்பு உன்னிடம் தோன்றாது;
    • உண்மையான தொண்டவர்கள் எவரோ, காணக் கையாலாகாது;
    • தமக்கே மிக்கு வல்லமையென,
    • 'யாவும் பொய்'யென, கள்ள பக்தியுடன்,
    • ஈதென்ன பற்றின்மை?
    • இஃதா இவ்வேழையின் வழிமுறை?
  • யோகியர்கள் உடல் நினைவின்றி,
  • தமக்கே கதியென்று தியானிப்பர்.
(evaru teliyanu poyyedaru - punnAgavarALi) Top
ஸ்ரீ ராம!
  • இந்த பா4க்3யமனி நிர்ணயிம்ப, ப்3ரஹ்மா, இந்த்3ராது3ல தரமா?
    • மதி ஹீனுலைன,
    • நெம்மதி லேனி வாரைன,
    • அதி பாப க்ரு2துலைன,
    • என்னடிகி ஸத்33தி ரானி வாரைன,
    • ஸாரெகு, மாயா ஸம்ஸாரமந்து3, சால தூ3ரின வாரைன,
    • காம ஆது3ல பூரித மதுலைன,
    • நீது3 மர்மமு தெலியனி, கர்ம மார்கு3லைன,
    • 4ர்ம ரஹிதுலைன,
    • நினு மதி3 சிந்திஞ்சு ஸு-ஜனுல 2பூஜிஞ்சின வாரிகி,
    • ப்ரதி லேனி, நினு ஸன்னுதி ஸேயு ப4க்துல ஜத கூடி3ன வாரிகி,
    • நின்னு மனஸார நம்மின ஸுதா4 பூர சித்துல ஸேவ கோரின வாரிகி,
    • லோகமுலு நிர்மிஞ்சின, நீது31ர்மமு ஸ்மரியிஞ்சு, நிர்மல மதுல, ஸ1ர்மமு எஞ்சின வாரிகி,
  • இந்த பா4க்3யமனி நிர்ணயிம்ப, ப்3ரஹ்மா, இந்த்3ராது3ல தரமா?
இராமா!
  • இத்தனைப் பேறென நிர்ணயிக்க பிரமன், இந்திராதியருக்கும் தரமா?
    • அறிவிலிகளாயினும்,
    • நிம்மதியற்றவர்களாயினும்,
    • மிக்கு பாவம் செய்தோராயினும்,
    • என்றுமே நற்பேறு வாராதவராயினும்,
    • எந்நேரமும், மாயமான, சமுசாரத்தினில் மிகவும் நுழைந்தோராயினும்,
    • இச்சைகள் முதலானவை நிறை உள்ளத்தினராயினும்,
    • உனது மருமம் அறியாத கரும நெறியினராயினும்,
    • அறமற்றோராயினும்,
    • உன்னை மனதில் சிந்திக்கும், நன்மக்களை வழிபடுவோருக்கு,
    • மாற்றில்லா உன்னை நற்போற்றி செய்யும் தொண்டர்களின் இணக்கம் கொண்டோருக்கு,
    • உன்னை மனதார நம்பின, அமிழ்து நிறை சித்தத்தோரின் தொண்டு விழைவோருக்கு,
    • உலகங்களைப் படைத்த, உனது பெயரினை நினைந்திருக்கும், களங்கமற்ற உள்ளத்தோரின் மகிழ்ச்சியினைக் கருதுவோருக்கு,
  • இத்தனைப் பேறென நிர்ணயிக்க பிரமன், இந்திராதியருக்கும் தரமா?
(inta bhAgyamani - punnAgavarALi) Top
மனஸா!
  • ஸங்கீ3த ஞானமு, ப4க்தி வினா, ஸன்-மார்க3மு கலதே3.
  • ப்4ரு2ங்கி3, நடேஸ1, ஸமீரஜ, க4டஜ, மதங்க3, நாரத3 ஆது3லு உபாஸிஞ்சே ஸங்கீ3த ஞானமு, ப4க்தி வினா, ஸன்-மார்க3மு கலதே3.
    • ந்யாய அந்யாயமு தெலுஸுனு;
    • ஜக3முலு மாயா-மயமு அனி தெலுஸுனு;
    • து3ர்-கு3ண, காயஜ ஆதி3, ஷட்3-ரிபுல, ஜயிஞ்சு கார்யமு 3தெலுஸுனு.
மனமே!
  • இசையறிவு, பக்தியின்றி, நன்னெறி சேர்க்காதே.
  • பிருங்கி முனி, நடேசன், வாயு மைந்தன், குடமுனி, மதங்கர், நாரதர் ஆகியோர் வழிபடும் இசையின் அறிவு, பக்தியின்றி, நன்னெறி சேர்க்காதே.
    • நியாயம், அந்நியாயம் தெரியும்,
    • உலகங்கள் மாயை மயமெனத் தெரியும்,
    • தீய குண காமம் முதலான ஆறு (உட்)பகைவரை வெல்லும் வகை தெரியும்.
(sangIta jnAnamu - dhanyAsi) Top
ராம!
  • 3ட்டு கான ரானி கு3ண்ட; பட்டுக தா3ட நீ பேரு தெப்பண்ட;
  • காமாதி3 நக்ர பா34 தீர்ப, நீ சேதி சக்ரமு லேதா3?
  • சல சித்தமு அனு அலலகு, செலகு3 நீ வாம ஹஸ்தமு வைரியகு3னு;
  • மத3 மத்ஸரமுலு அனு க3ஜமுலகு, நீ பத3 கமல அங்குஸ1 ரேக2 அங்குஸ1மு;
  • ஸோ1காது3லு அனு பர்வதமுலகு, நீ கர அங்கித வஜ்ர ரேக2 வஜ்ரமு;
  • அஹம் அனு ஜட3த்வம் அணசி ப்3ரோவ, ஸஹஜமௌ நீ சேதி ஸ1ரமுலு லேவா?
  • து3ஷ்-கர்மமு அனு கொண்ட3லெக3ய ஸேய, நிஷ்-கல்மஷ பவனஜுடு3ண்டு3;
  • ஜனன, மரணமு அனு ஸுடி3னி நில்ப, க4னமைன நீ ஆக்3ஞ காத3னு வடி3னி?
  • ஜாதிகி ஒகரு கூடி3னாரமு; ப்ரீதி சேத தெலுஸுகொண்டிமி நாம ஸாரமு;
  • பன்னுக34வமு அதி கோ4ரமு; நின்னு வினா அன்ய தை3வமுலனு கோரமு.
இராமா!
  • கரை காணமுடியாத கடல்; பற்றிக்கொண்டு தாண்டுவதற்கு, உனது பெயர் தெப்பமாம்!
  • இச்சை முதலான முதலைகளின் தொல்லைகளைத் தீர்க்க, உனது கை ஆழியுண்டன்றோ!
  • நிலையற்ற மனமெனும் அலைகளுக்கு, ஒளிரும், உனது இடது கை எதிரியாகும்;
  • செருக்கு, பொறாமையெனும் யானைகளுக்கு உனது கமலத் திருவடியின் வளைந்த கோடுகள் அங்குசமாகும்;
  • துயரங்கள் ஆகியவை எனும் மலைகளுக்கு, உனது கைகளிலுள்ள ஆழ்ந்த கோடுகள் குலிசமாகும்;
  • 'நான்' எனும் அறிவீனத்தையடக்கி, (என்னைக்) காக்க, இயற்கையான உனது கையம்புகளுண்டன்றோ!
  • தீவினைகளெனும் மலைகளைப் பறக்கடிக்க, களங்கமற்ற, வாயு மைந்தன் உண்டு;
  • பிறப்பு இறப்பெனும் சுழலை நிறுத்த, வல்லமைமிகு உனது ஆட்சியன்றோ, காலத்தின் மீது!
  • சாதிக்கொருவர் கூடினோம்; காதலுடன், தெரிந்துகொண்டோம் (உனது) பெயரின் சாரத்தினை;
  • நேர்த்தியான பிறவிக்கடல் மிக்கு கோரமானது; உன்னைத் தவிர மற்ற கடவுளரை வேண்டோம்.
(SrI rAma dAsa - dhanyAsi) Top
ஸ்ரீ ராம!
    • கு3ருவு சில்ல கி3ஞ்ஜ,
    • கு3ருவே ப்4ரமரமு,
    • கு3ருடே3 பா4ஸ்கருடு3,
    • கு3ருடே34த்3ருடு3,
    • கு3ருடே3 உத்தம க3தி,
  • கு3ருவு நீவு அனுகொண்டி.
இராமா!
    • குரு தேற்றாக்கொட்டை;
    • குருவே குளவி;
    • குருவே பகலவன்;
    • குருவே மங்களமானவன்;
    • குருவே உத்தமமான புகல்;
  • குரு நீயெனக் கருதினேன்.
(nI cittamu niScalamu - dhanyAsi) Top
மனஸா!
  • த்4யானமே வரமைன க3ங்கா3 ஸ்நானமே.
    • வான நீட முனுக3 முனுக3, லோனி வஞ்சன த்3ரோஹமனு கர போனா?
    • பர த4ன, நாரீமணுலனு தூ3ரி, பர நிந்த3ல, பர ஹிம்ஸல மீரி, த4ரனு வெலயு, ஸ்ரீ ராமுனி கோரி,
  • த்யாக3ராஜு தெலுஸுகொன்ன ராம த்4யானமே வரமைன க3ங்கா3 ஸ்நானமே.
மனமே!
  • தியானமே புனித கங்கை நீராடலாகுமே.
    • மழை நீரில் நனைய நனைய, உள்ள, வஞ்சனை, துரோகமெனும் கறைகள் போமோ?
    • பிறர் பொருள், பெண்மணிகளை வெறுத்து, பிறரைத் தூற்றல், பிறரை துன்புறுத்தலை மீறி, புவியில் ஒளிரும் இராமனை வேண்டி,
  • தியாகராசன் தெரிந்துகொண்ட இராம தியானமே புனித கங்கை நீராடலாகுமே.
(dhyAnamE - dhanyAsi) Top
  • எட்ல கனுகொ3ந்து3னோ ஸ்ரீ ஹரினி, நேனு?
    • 4ரலோ கலுகு3 ஸம்பத3ல ரோஸி, தனுவுனு மரசி, ஹரினி கூடு3 மஹாராஜுலகு கா3க, எட்ல கனுகொ3ந்து3னோ ஸ்ரீ ஹரினி?
    • மலயனி மத3முன தெலியகுண்டினி;
    • ஈ ஜன்மமு, ஈ பா4க்3யமு, ஈ ஸொம்முலு எல்ல ப்ரயோஜனமா?
  • எப்படிக் கண்டுகொள்வேனோ அரியை, நான்?
    • புவியிலுள்ள செல்வங்களை வெறுத்து, உடலினை மறந்து, அரியைக் கூடும் பெருந்தகைகளுக்கன்றி, எப்படிக் கண்டுகொள்வேனோ அரியை?
    • விட்டகலாத செருக்கினால் அறியாதிருந்தேன்;
    • இப்பிறவி, இப்பேறு, இந்த சொத்துக்கள் யாவும் பயன் படுமோ?
(eTla kanugondunO - ghaNTA) Top
ஓ மனஸா!
  • ஸமயமு தெலிஸி, புண்யமுலு ஆர்ஜிஞ்சனி குமதி, உண்டியேமி, போயியேமி?
  • ஸாரமௌ, கவிதல வினிஸ வெர்ரிவாடு3 ஸந்தோஷபடி3 ஏமி, பட3க ஏமி?
  • சேரெடே3ஸி, கு3ட்3டி3 கன்னுலு, பா3கு33 தெரசி ஏமி, தெரவகுண்டி3ன ஏமி?
  • துரக வீதி2லோ, விப்ருனிகி பானக பூஜ, நெரய ஜேஸி ஏமி, ஸேயகுண்டி3 ஏமி?
  • 4ரனு ஈனி த4ன கோட்லகு யஜமானுடு3, தா ப்3ரதிகி ஏமி, த3ய்யமைனன ஏமி?
  • பத3மு, த்யாக3ராஜ நுதுனிபை கானிதி3, பாடி3 ஏமி, பாட3குண்டி3ன ஏமி?
  • ஏத3னு, ஸ்ரீ ராம ப4க்தியு லேனி நர ஜன்மமு எத்தி ஏமி, எத்தகுண்டி3ன ஏமி?
ஓ மனமே!
  • சமயமறிந்து, நல்வினையீட்டாத அறிவிலி இருந்தென்ன, போயென்ன?
  • சாரமான கவிதைகளைக் கேட்டு, பித்தன் களிப்பு உற்றாலென்ன, உறாவிடிலென்ன?
  • அகன்ற, பார்வையற்ற கண்கள், நன்கு திறந்தென்ன, திறவாதிருந்தென்ன?
  • துலுக்கர் வீதியினில், அந்தணனுக்கு, பானக பூசை நிறையச் செய்தென்ன, செய்யாதிருந்தென்ன?
  • புவியினில், ஈயாத செல்வம் கோடிகளுக்கு உரியவன், தான் பிழைத்தாலென்ன, பேயானாலென்ன?
  • பாடல், தியாகராசன் போற்றுவோன் மீது அல்லாதாகில், பாடியென்ன, பாடாதிருந்தென்ன?
  • என்னவாகிலும், இராமனின் பக்தியற்ற மனிதப் பிறவி எடுத்தென்ன, எடுக்காதிருந்தாலென்ன?
(samayamu telisi - asAvEri) Top
த்யாக3ராஜார்சித பத3 யுக3!
  • நம்மக நே மோஸ போது3னு, அடரா?
    • து3ர்விஷயம்முலு, மனஸுன, தூ3ரக சேஸே நினு,
    • 4ன, தனய, களத்ர ஆது3லு, தமத3னி பு3த்3தி4 ஈயனி நினு,
    • இந்த்3ரியம்முலகு ஆஹ்லாத3மு இச்சே ரூபமு க3ல நினு,
    • பொ3ம்ம இண்ட்3லு கானி, நெர நம்மகு ப4வமுனு, அனு நினு,
    • நெம்மதி3 லேனி ஜனன மரணம்முல தொலகி3ஞ்சே நினு,
  • நெர நம்மக நே மோஸ போது3னு, அடரா?
தியாகராசன் தொழும் திருவடி இணையோனே!
  • உன்னை நம்பாது நான் மோசம் போவேன், அப்படித்தானே, ஐயா?
    • தீய விடயங்கள் மனதினில் நுழையாது செய்யும் உன்னை,
    • செல்வம், மக்கள், மனைவி ஆகியவற்றினை தமதெனும் எண்ணம் தராத உன்னை,
    • புலன்களுக்குக் களிப்பு ஊட்டும் உருவமுடைய உன்னை,
    • பொம்மை வீடேயன்றி, சிறிதும் நம்பாதே உலக வாழ்க்கையை யெனும் உன்னை,
    • நிம்மதியற்ற பிறப்பு, இறப்புகளினை யொழிக்கும் உன்னை,
  • முழுதும் நம்பாது நான் மோசம் போவேன், அப்படித்தானே, ஐயா?
(nammaka nE mOsa - asAvEri) Top
  • ஹரி அனுவாரி ஸரி எவ்வரே?
    • பலு வித4முல தலபுல ரோஸி,
    • நிலவரமகு34க்தியு ஜேஸி,
    • மலயனி மத பே43மு கோஸி,
    • கரகு3சு மதி3லோ காமிஞ்சி,
    • ஹரி சரணமுலனு ஹ்ரு23யமுன உஞ்சி,
    • வர ஸு1க முக24னமனி எஞ்சி,
  • ஹரி அனுவாரி ஸரி எவ்வரே?
    • ஈ ஸுக2மு எருக3னி ஜன செலிமி, வாஸுகி விஸமே, மரி, கொலிமி,
    • நிஜ தா3ஸுல ஸம்பா4ஷண ப3லிமி.
  • ஹரி அனுவாரி ஸரி எவ்வரே?
  • 'அரி' யென்பவருக்கீடு எவரே?
    • பல விதமான எண்ணங்களை வெறுத்து,
    • நிலையான பக்தி செய்து,
    • வளையாத மத வேறுபாடுகளை யறுத்து,
    • உருகிக்கொண்டு உள்ளத்தினில் காதலித்து,
    • அரியின் திருவடிகளை இதயத்தினிலிருத்தி,
    • உயர் சுகரின் சொற்செல்வமென்று எண்ணி,
  • 'அரி' யென்பவருக்கீடு எவரே?
    • இந்த சுகத்தினை யுணராத மக்களின் நட்பு வாசுகி நஞ்சேயென, மேலும் சூளையென,
    • உண்மையான தொண்டர்களுடன் உரையாடல் வலிமையென (எண்ணி),
  • 'அரி' யென்பவருக்கீடு எவரே?
(hariyanuvAri - tODi) Top
ஓ மனஸா!
  • ரூகலு பதி3 வேலு உன்ன, சேரெடு3 நூகலு க3தி கானி;
  • கோகலு வெய்யி உன்ன, கட்டுகொனுடகு ஒகடி கானி;
  • ஊரு ஏலின, தா பண்டு3ட, மூடு3 மூர தாவு கானி;
  • நூரு ப4க்ஷணமுலு அப்3பி3ன, எந்தோ நோடிகி அந்த கானி;
  • ஏரு நிண்டு33 பாரின, பாத்ரகு தகு3 நீரு வச்சு கானி;
  • ஹரினி, த்யாக3ராஜ ஸன்னுதுனி மரவகே.
ஓ மனமே!
  • பணம் பத்தாயிரம் இருந்தாலும், கையளவு நொய்யே கதியன்றோ?
  • ஆடைகள் ஆயிரம் இருந்தாலும், உடுத்துக்கொள்வதற்கு ஒன்றேயன்றோ?
  • ஊராண்டாலும், தான் படுத்தல் மூன்று முழ இடமேயன்றோ?
  • நூறு உண்டிகள் கிடைத்தாலும், எத்தனையோ வாய்க்கு அத்தனையேயன்றோ?
  • ஆறு நிரம்பிப் பாய்ந்தாலும், பாத்திரத்தளவே நீர் கொள்ளுமன்றோ?
  • அரியினை, தியாகராசன் போற்றுவோனை மறவாதே.
(rUkalu padi vElu - dESiya tODi) Top
ஓ மனஸா!
  • ப்ரொத்3து3 பொய்யெனு;
  • ஸ்ரீ ராமுனி பூனி ப4ஜிம்பவே.
    • நித்3து3ர சேத கொன்னாள்ளு;
    • விஷய பு3த்3து4ல சேத கொன்னாள்ளு;
    • ப்ரொத்3து3ன லேசி, த்ரி-தாபமுலனு நருல பொக3டி3 பொக3டி3 கொன்னாள்ளு;
    • பட்டி எத்3து3 ரீதி, கன்ன தாவுல பு4ஜியிஞ்சி, ஏமி தெலியக கொன்னாள்ளு;
    • முத்3து33 தோசு, ப4வ ஸாக3ரமுன, முனிகி3, தேலுசு கொன்னாள்ளு;
    • பத்3து3 மாலின, பாமர ஜனுலதோ, வெர்ரி பலுகுலாடு3சு கொன்னாள்ளு;
    • முத3முன, த4ன, தனய, ஆகா3ரமுலு ஜூசி, மத3மு சேத கொன்னாள்ளு;
    • அந்து3, செத3ரின, அந்த ஸோ1க அர்ணவ க3துடை3, ஜாலி ஜெந்து3டயு கொன்னாள்ளு;
    • எத3டி பச்ச ஜூசி, தாள லேக, தானு இலனு திருகு3ட கொன்னாள்ளு;
    • முதி3, மதி3 தப்பின, வ்ரு2த்34 தனமுசே, முந்து3, வெனுக தெலியகயே கொன்னாள்ளு;
    • யாகா3தி3 கர்மமு ஸேயவலெனு அனு அலஸட சேத கொன்னாள்ளு;
    • அந்து3, ராக3, லோப4முலதோனு, அபராத4முல ஜேஸி, ராஜஸமுன கொன்னாள்ளு;
    • பா3கு33, நாம கீர்தனமுலு ஸேயுடே, பா4க்3யமு அனக கொன்னாள்ளு;
    • த்யாக3ராஜ நுதுடை3ன, ஸ்ரீ ராமுனி தத்வமு தெலியகயே கொன்னாள்ளு.
  • ப்ரொத்3து3 பொய்யெனு;
  • ஸ்ரீ ராமுனி பூனி ப4ஜிம்பவே.
ஓ மனமே!
  • பொழுது போனது;
  • இராமனை விரதம் பூண்டுத் தொழுவாய்.
    • உறக்கத்துடன் சில நாள்;
    • விடய எண்ணங்களுடன் சில நாள்;
    • காலையெழுந்து, மூவாசையினால் மனிதர்களைப் புகழ்ந்து புகழ்ந்துச் சில நாள்;
    • பட்டி மாடு போன்று, கண்ட இடங்களில் உண்டு, ஏதுமறியாது சில நாள்;
    • அழகாகத் தோன்றும் பிறவிக் கடலினில் மூழ்கி, மிதந்துச் சில நாள்;
    • முறை தவறிய தீய மக்களுடன், மூடத்தனமான உரைகளாடிச் சில நாள்;
    • களிப்புடன், செல்வம், மக்கள், வீடுகளை நோக்கி, செருக்குடன் சில நாள்;
    • அதனில் சிந்திய அத்தனைத் துயரக்கடலில் உழல்வோனாகி, துன்பமடைதல் சில நாள்;
    • எதிர்ப் பச்சையினை கண்டு, பொறுக்க மாட்டாது, தான் உலகினில் திரிதல் சில நாள்;
    • முடிவில், அறிவு தவறிய முதுமையுடன் முன்பின் தெரியாமலே சில நாள்;
    • வேள்வி முதலிய கருமங்கள் இயற்ற வேணுமெனும் அலைச்சல்களுடன் சில நாள்;
    • அதனில், பற்று, பேராசைகளுடன் குற்றங்களிழைத்து, இராசத குணத்துடன் சிலநாள்;
    • சிறக்க, (இறைவனின்) நாம கீர்த்தனை செய்தலே பேறெனாது சில நாள்;
    • தியாகராசன் போற்றுவோனாகிய, இராமனின் தத்துவம் அறியாமலே சில நாள்;
  • பொழுது போனது;
  • இராமனை விரதம் பூண்டுத் தொழுவாய்.
(proddu poyyenu - tODi) Top
தா31ரதீ2!
  • ஆஸ1 தீர, தூ3ர தே31முலனு ப்ரகாஸி1ம்ப ஜேஸின, ரஸிக ஸி1ரோமணி!
  • 4க்தி லேனி, கவி ஜால வரேண்யுலு, பா4வமெருக3 லேரு அனி, கலிலோன ஜனி, பு4க்தி, முக்தி கல்கு3னு அனி, கீர்தனமுல போ3தி4ஞ்சின, த்யாக3ராஜ கரார்சித!
  • நீ ரு2ணமு தீ3ர்ப நா தரமா?
தாசரதீ!
  • ஆசை தீர, தூர தேசங்களில் ஒளிரச் செய்த, இரசிகரின் முடிமணியே!
  • பக்தியற்ற, புலமைத்திறனில் சிறந்தோர், உள்ளப் பாங்கினை அறியமாட்டாரென, கலியினில் பிறந்து, உலக இன்பமும், முக்தியும் உண்டாகுமென, கீர்த்தனங்களைப் புகட்டிய, தியாகராசனின் கரங்களினால் தொழப் பெற்ற, தாசரதீ!
  • உனது கடனைத் தீர்க்க என்னால் இயலுமா?
(dASarathI nI RNamu - tODi) Top
ராம!
  • தப்பி, ப்3ரதிகி, போவ தரமா, கலிலோ?
    • முப்புன, விஷய தடாகமுன முனுக3க, த்3ரு24 மனஸை, தப்பி, ப்3ரதிகி, போவ தரமா?
    • கஞ்சு மொத3லு, லோஹ த4ன, கனகமுலனு ஜூசி, விஷமு அஞ்சு, மரியு, பெஞ்சிக அனுசு எஞ்சி, அண்டனி மனஸை, தப்பி, ப்3ரதிகி, போவ தரமா?
    • நங்க3 நாசுல மானகு3, அங்க3 வஸ்த்ரமுல பா33கு3, முங்க3ருலனு கனி, அந்தரங்க3முனனு ஆஸி1ஞ்சக, தப்பி, ப்3ரதிகி, போவ தரமா?
    • ஜாஜி, மல்லெ, மந்தா3ர, ஸரோஜமுலனு, மனஸார, ராஜ பத2முசே, த்யாக3ராஜ நுதுனி பூஜிஞ்சக, தப்பி, ப்3ரதிகி, போவ தரமா?
இராமா!
  • தப்பிப் பிழைத்துப் போகத் தரமா, கலியினில்?
    • முதுமையில், விடயங்களெனும் தடாகத்தினில் மூழ்காது, திடமான மனத்தினனாகி, தப்பிப் பிழைத்துப் போகத் தரமா? (அல்லது)
    • கொடிய, விடயங்களெனும் தடாகத்தினில் மூழ்காது, திடமான மனத்தினனாகி, தப்பிப் பிழைத்துப் போகத் தரமா?
    • வெண்கலம் முதலாக, உலோகச் செல்வமாகிய பொன் ஆகியவற்றைக் கண்டு, நஞ்சு எனவும், மேலும், கலவோடெனவும் எண்ணி, தீண்டாத மனத்தினனாகி தப்பிப் பிழைத்துப் போகத் தரமா?
    • பாசாங்கு செய்வோரின் இனிமையிலும், (பெண்களின்) அங்க, ஆடை ஒயிலிலும், மயிர்ச் சுருளல்களையும் கண்டு, உள்ளத்திலும் ஆசைப்படாது, தப்பிப் பிழைத்துப் போகத் தரமா?
    • சாதி மல்லி, மல்லிகை, மந்தாரம், தாமரை மலர்களினால் உளமார, உயர் பக்தி நெறியினில், தியாகராசன் போற்றுவோனை வழிபடாது (நமனிடம்) தப்பிப் பிழைத்துப் போகத் தரமா?
(tappi bratiki - tODi) Top
ஓ மனஸா!
  • கோடி நது3லு, த4னுஷ்கோடிலோன உண்ட33, ஏடிகி திரிகெ33வே!
  • ஸூடிக3, ஸ்1யாம ஸுந்த3ர மூர்தினி, மாடி மாடிகி ஜூசே மஹாராஜுலகு, கோடி நது3லு, த4னுஷ்கோடிலோன உண்ட33, ஏடிகி திரிகெ33வே!
    • 3ங்க3 நூபுரம்பு3னனு ஜனிஞ்செனு.
    • ரங்க3னி காவேரி கனி ராஜில்லெனு.
ஓ மனமே!
  • கோடி நதிகள் (ராமனின்) வில் நுனியிலிருக்க, ஆறுகளுக்குத் திரிகின்றாயே!
  • நேரிடையாக, கார்முகில் வண்ண எழிலுருவத்தோனை, அவ்வப்போது காணும் சான்றோருக்கு, கோடி நதிகள் (ராமனின்) வில் நுனியிலிருக்க, ஆறுகளுக்குத் திரிகின்றாயே!
    • கங்கை (அவன்) திருவடியில் பிறந்தாள்.
    • அரங்கனை, காவேரி கண்டு, புகழ்பெற்றாள்.
(kOTi nadulu - tODi) Top
த்யாக3ராஜ ஸன்னுத!
  • கத்33னு வாரிகி, கத்3து3 கத்33னி மொரலனிடு3, பெத்33ல மாடலு, நேடு3 அப3த்34மௌனோ?
    • நித்3து3ர நிராகரிஞ்சி, முத்3து33 தம்பு3ர பட்டி, ஸு1த்34மைன மனஸுசே, ஸு-ஸ்வரமுதோ, பத்3து3 தப்பக ப4ஜியிஞ்சு, ப4க்த பாலனமு ஸேயு, தத்33ய-ஸா1லிவி நீவு.
தியாகராசன் போற்றுவோனே!
  • உண்டென்போருக்கு, உண்டுண்டென முறையிடும், பெரியோரின் சொற்கள் இன்று பொய்யாகுமோ?
    • உறக்கத்தினைப் புறக்கணித்து, அழகாக தம்புரா பிடித்து, தூய உள்ளத்துடனும், இனிய சுரத்துடனும், நியமம் தவறாது, பஜனை செய்யும் தொண்டர்களைப் பேணும் அக் கருணையுள்ளத்தோன் நீ.
(kaddanu vAriki - tODi) Top
மனஸ!
  • த்யாக3ராஜு மாட வினி, கட3 தேர ராதா3?
    • எட3 லேக, ப4ஜன ஜேஸி, நீயெட3 கல்கு3, நிஜ, த3ப்33ரல தெலிஸி, கட3 தேர ராதா3?
    • 2ல சித்த, 2லௌகிகமு அனே, ஸ்1ரு2ங்க2லமந்து333லகனே, உலூக2ல ப3த்3து4னிகி நிஜ தா3ஸுடை3, வெலஸில்லு.
மனமே!
  • தியாகராசனின் சொல்லினைக் கேட்டு கடைத்தேறலாகாதா?
    • இடைவிடாது பஜனை செய்து, உன்னிடம் உள்ள உண்மை, பொய்களினைத் தெரிந்து, கடைத்தேறலாகாதா?
    • இழிந்த எண்ண, உலகியல் எனும் சங்கிலியினில் சிக்காது, உரலில் கட்டுண்டவனின் உண்மைத் தொண்டனாகித் திகழ்வாய்.
(kaDa tEra - tODi) Top
  • ஸ்ரீ ராம ஸ்வாமி கருண லேனி வாரு, இலலோ, ஏமி ஜேஸிதேனேமி?
  • காம, மோஹ தா3ஸுலை, ஸ்ரீ ராமுனி கட்டு தெலிய லேனி வாரு, இலலோ, ஏமி ஜேஸிதேனேமி?
    • ஸவமு ஜேஸிதேனேமி?
    • கலிமினி, புத்ரோத்ஸவமு கலிகி3தேனேமி?
    • பு4விலோ அன்ய பீ3ஜ ஜனிதுனி கொனியேமி?
    • மேட3 கட்டிதேனேமி?
    • அந்து3ன லாந்த3ரு ஜோடு3 கட்டிதேனேமி?
    • சேடி3யலனு மெப்பிஞ்ச தெலிஸிதேனேமி?
    • இம்மு கலிகி3தேனேமி?
    • இல்லாலிகி ஸொம்மு பெட்டிதேனேமி?
    • கம்ம வில்து கேளினி தெலிஸியேமி?
    • ராஜ்யமேலிதேனேமி?
    • 3ஹு ஜனுலலோ பூஜ்யுலைதேனேமி?
    • ஆஜ்ய ப்ரவாஹமுதோ அன்னமிடி3தேனேமி?
    • கு3ருவு தானைதேனேமி?
    • கண்டிகி மேனு கு3ருவை தோசிதேனேமி?
    • வர மந்த்ரமு அன்யுலகு உபதே3ஸி1ஞ்சிதேனேமி?
  • வர த்யாக3ராஜ நுத, ராமுனி த3ய லேனி வாரு, இலலோ, ஏமி ஜேஸிதேனேமி?
  • இராம சுவாமியின் கருணையற்றோர், புவியினில், என்ன செய்தாலென்ன?
  • காம, மோகத்திற்கு அடிமைகளாகி, இராமனின் கட்டினை அறியாதவர், புவியினில், என்ன செய்தாலென்ன?
    • வேள்விகள் இயற்றினாலென்ன?
    • சொத்துக்கு மக்கட் செல்வம் உண்டானாலென்ன?
    • புவியில் பிறருக்குப் பிறந்தவனை தத்து எடுத்தாலென்ன?
    • மேடை கட்டினாலென்ன?
    • அதனில் லாந்தர் ஜோடு கட்டினாலென்ன?
    • வனிதையரை மெச்சத் தெரிந்தாலென்ன?
    • உலக இன்பங்கள் உண்டானாலென்ன?
    • இல்லாளுக்கு நகைகள் இட்டாலென்ன?
    • கரும்பு வில்லோன் கேளிக்கைகள் தெரிந்தாலென்ன?
    • அரசாண்டாலென்ன?
    • வெகு மக்களிடை வணங்குதற்குரியோன் ஆனாலென்ன?
    • நெய் வழிந்தோட அன்னமிட்டாலென்ன?
    • தான் ஆசான் ஆகினாலென்ன?
    • கண்ணுக்குத் (தனது) மேனி செழிப்பாகத் தோன்றினாலென்ன?
    • உயர் மந்திரங்களை மற்றவருக்கு உபதேசித்தாலென்ன?
  • உயர் தியாகராசன் போற்றும், இராமனின் தயையற்றோர், புவியினில், என்ன செய்தாலென்ன?
(Emi jEsitE - tODi) Top
ஓ மனஸ!
  • எந்து3கு சபலமு? வினவே நா மனவினி.
  • முந்த3டி வலெ, ப4க்துல போஷிஞ்சுடகு, எந்து3 தா3கி3னாடோ3! ஈட3கு ரானு, என்னடு33ய வச்சுனோ!
    • அல நாடு3, கனக கஸி1பு, நிண்டா3ரு சலமு ஜேஸி, ஸுதுனி, ஸகல பா34ல பெட்டக3, மதி3னி தாளக, நிஸ்1சலுடை3ன, ப்ரஹ்லாது3 கொரகு, கம்ப3மு லோபல உண்ட33 லேதா3?
    • முனு, வாரி வாஹ வாஹன தனயுடு3, மத3முன, ரவிஜுனி சால கொட்டுட ஜூசி, மனஸு தாள ஜால லேக, ப்ரேமமுன, பாலனமு ஸேய, தாள தருவு மருகு3ன நில்வக3 லேதா3?
  • ஆ ரீதி, நேடு, எந்து3 தா3கி3னாடோ3! ஈட3கு ரானு, என்னடு33ய வச்சுனோ!
    • தொலி ஜன்மமுல நாடு3 ஜேஸின து3ஷ்கர்மமுலனு அணக3னு ஸேய,
    • ஆரு ஸ1த்ருலனு பட்டி, பொடி3 ஸேய, அதி3யு கா3க,
    • இலனு, சஞ்சல விரஹித நிஜ ப4க்த ஜனுலனு, த்யாக3ராஜுனி ரக்ஷிம்ப,
  • நேடு, எந்து3 தா3கி3னாடோ3! ஈட3கு ரானு, என்னடு33ய வச்சுனோ!
ஓ மனமே!
  • ஏன் தடுமாற்றம்? கேள், எனது வேண்டுகோளினை.
  • முன்னாள் போன்று, தொண்டர்களைப் பேணுவதற்கு எங்கு ஒளிந்துள்ளானோ! இங்கு வர என்று தயை வருமோ!
    • அன்று, இரணியகசிபு, நிறைய சூழ்ச்சிகள் செய்து, (தனது) மகனுக்கு அனைத்து தொல்லைகளும் இழைக்க, உள்ளத்தினில் பொறுக்காது, உறுதியான பிரகலாதனுக்காக, கம்பத்தின் உள்ளே யிருக்கவில்லையா?
    • முன்னம், முகில் வாகனன் மைந்தன், செருக்கோடு, பரிதி மைந்தனை மிக்குப் புடைக்கக் கண்டு, மனது பொறுக்க இயலாது, கனிவுடன் காப்பதற்கென, பனை மரத்தின் மறைவினில் நிற்கவில்லையா?
  • அவ்வகையில், இன்று எங்கு ஒளிந்துள்ளானோ! இங்கு வர என்று தயை வருமோ!
    • முற்பிறவிகளின் போது செய்த தீய செயல்களை அடக்கவும்,
    • ஆறு உட்பகைவரைப் பற்றித் தூளாக்கவும், அஃதன்றி,
    • இவ்வுலகில் சஞ்சலமற்ற, உண்மையான தொண்டர்களையும், தியாகராசனையும் காக்கவும்,
  • இன்று எங்கு ஒளிந்துள்ளானோ! இங்கு வர என்று தயை வருமோ!
(endu dAginADO - tODi) Top
நாராயண!
  • நஸ்1வரமைன, த4ன, அஸ்1வமுலனு, நே விஸ்1வஸிஞ்ச; ஹரி ஹரி.
  • கோடீஸு1ல கனி, ஸாடி லேனி, பல்கு போ3டினி ஒஸகி3, மும்மாடிகி, வேட3னு.
  • ஆஸ1 பிஸா1ச ஆவேஸ1மு கலுகு3, த4னேஸு1ல காசெடு3 தே31மு ஏலனு?
  • தூ3ரெடு3 பனுலகு தூ3ரெத3ரு; கட3 தேரெடு3 பனுலனு தேரே மனஸுகு.
  • தொலி தா ஜேஸின ப2லமே கலத3னி, இலனு எஞ்சனி மர்த்யுல செலிமி எந்து3கு?
  • நோரு எப்புடு3, நீ பேரே பலுகனி; வேரே எவருன்னாரே?
  • மித்ர குலேஸ1 சரித்ர (ராமாயண) ரஸிக ஜன மித்ரமு கோருது3.
  • நா ஜூபுலு, மீ நாஜூகு தனமுனே ஜூட3னி.
நாராயணா!
  • நிலையற்ற, செல்வம், வாகனங்களை நான் ஒரு நாளும் நம்பமாட்டேன்.
  • கோடீசுவரர்களைக் கண்டு, ஒப்பற்ற நாமகளினை யளித்து, உறுதியாக வேண்ட மாட்டேன்.
  • ஆசைப் பிசாசுகளின் ஆவேசம் கொண்ட செல்வந்தர்களைப் பேணும் நாடு (எனக்கு) எதற்கு?
  • வெறுக்கத் தக்கப் பணிகளில் ஈடுபடுவர்; கடைத் தேறும் பணிகளைக் கொண்டுவாராரே உள்ளத்திற்கு.
  • முன்னம் தான் செய்வினையின் பயனே கிடைக்குமென இங்கு எண்ணாத மனிதரின் நேசமெதற்கு?
  • (எனது) நாவெப்போழ்தும் உனது பெயரினையே உரைக்கட்டும்; வேறே எவருளரே?
  • பரிதி குலத் தலைவனின் சரிதத்தினை (ராமாயணத்தினை) விரும்புவோரின் நட்பு கோருவேன்.
  • எனது பார்வை உமது நேர்த்தியினையே காணட்டும்.
(nArAyaNa hari - yamunA kalyANi) Top
  • 4ஜரே ரகு4வீரம்;
    • அன்னியு பனிகொதி3கெ3னா? இடு அடு 2 திரிகி3ன தெலிஸெனா?
    • நீவு து3ராஸல ரோஸி, பர நிந்த3னலு எல்லனு பா3ஸி,
    • பஞ்சேந்த்3ரியமுலனு அணசு; ப்ரபஞ்ச ஸுக2மு விஸமு அனுசு,
    • வேரு பனுலகு போக, கோ3-முக2 வ்யாக்4ரமு சந்த3மு காக,
    • தப்பு தண்டலனு மானி, ப4வ தரணமுனனு மதி3 பூனி,
    • கர்மமு ஹரிகி ஒஸங்கி3, ஸத்-கார்யமுலந்து3 உப்பொங்கி3,
    • 4க்தி மார்க3முனு தெலிஸி, நிஜ பா43வதுல ஜத கலஸி,
    • மாயா ரஹிதுனி கொலிசி, நீ மனஸுன ராமுனி தலசி,
    • காமாது3லனு ஏகிஞ்சி, நீ கார்யமுலனு ஸாதி4ஞ்சி,
    • ராஜ அதி4புகா3 வெலஸி, த்யாக3ராஜ வரது33னி தெலிஸி,
  • 4ஜரே ரகு4வீரம்.
  • பஜிப்பாயடா, இரகுவீரனை, அம்புகள் நிறைந்த, தசரத குமாரனை;
    • அனைத்துமே பணிக்குதவுமா?
    • இங்கும் அங்கும் திரிந்தும் தெரிந்ததா?
    • நீ தீய ஆசைகளைத் துறந்து,
    • பிறரைப் பழித்தல் யாவற்றினையும் விடுத்து,
    • ஐம்புலன்களை யடக்கு;
    • பிரபஞ்ச சுகம் நஞ்சென (எண்ணி),
    • வேறு பணிகளுக்குச் செல்லாது,
    • பசு-முகப் புலி போன்றாகாது,
    • தப்பு தண்டல்களை விடுத்து,
    • பிறவிக் கடல் கடத்தலை உள்ளத்தில் விரதம் பூண்டு,
    • கருமங்களை அரிக்கு அர்ப்பித்து,
    • நற்பணிகளில் பெருமிதமுற்று,
    • பக்தி நெறியினைத் தெரிந்து,
    • நிசமான பாகவதர்களுடன் இணக்கம் கொண்டு,
    • மாயையினுக்கு அப்பாற்பட்டோனைத் தொழுது,
    • உனது மனத்தினில் இராமனை நினைந்து,
    • காமம் ஆகியவற்றினைப் பழித்து,
    • உனது காரியங்களினை நிறைவேற்றி,
    • மன்னாதி மன்னனாக விளங்கியவனே தியாகராசனுக்கருள்வோனெனத் தெரிந்து,
  • பஜிப்பாயடா, இரகுவீரனை.
(bhajarE raghuvIraM - kalyANi) Top
மனஸா!
  • அஜ, ருத்3ராது3லகு, பூ4-ஸுராது3லகு அருதை3ன, ராம ப4ஜன ஸேயவே, பரம ப4க்திதோ;
  • நாத3 ப்ரணவ ஸப்த ஸ்வர, வேத3, வர்ண, ஸா1ஸ்த்ர, புராணாதி3 சதுஷ்-ஷஷ்டி களல பே43மு கலிகே3, மோத3கர ஸ1ரீரமெத்தி, முக்தி மார்க3முனு தெலியனி, வாத3 தர்கமேல?
மனமே!
  • பிரமன், உருத்திராதியருக்கு, அந்தணர் ஆகியோருக்கும் அரிதான, இராம பஜனை செய்வாயடி, பரம பக்தியுடன்;
  • நாதோங்கார ஏழ் சுரம், மறை, மொழி, சாத்திரம், புராணம் ஆகிய அறுபத்து நான்கு கலைகள் மலரும், மகிழ்வூட்டும், (மனித) உடலெடுத்து, முத்தி நெறி தெரியாத வாத, தருக்கமேன்?
(bhajana sEyaveE - kalyANi) Top
மனஸா!
  • நிஜமுக3 பல்கு -
    • நிதி4 சால ஸுக2மா? ராமுனி ஸன்னிதி4 ஸேவ ஸுக2மா?
    • 3தி4 நவனீத க்ஷீரமுலு ருசியோ? தா31ரதி2 த்4யான ப4ஜன ஸுதா4 ரஸமு ருசியோ?
    • 3ம ஸ1மமு அனு க3ங்கா3 ஸ்நானமு ஸுக2மா? கர்த3ம து3ர்விஷய கூப ஸ்நானமு ஸுக2மா?
    • மமத ப3ந்த4ன யுத நர ஸ்துதி ஸுக2மா? ஸுமதி, த்யாக3ராஜ நுதுனி கீர்தன ஸுக2மா?
மனமே!
  • உண்மையாகச் சொல்வாய் -
    • செல்வம் மிக்கு சுகமாமோ அன்றி இராமனின் சன்னிதி சேவை சுகமாமோ?
    • தயிர், வெண்ணெய், பால் ஆகியவை சுவையாமோ? தாசரதியின் தியானம், பஜனையெனும் அமுதச் சாறு சுவையாமோ?
    • மனவொடுக்கம், மனவமைதியெனும் கங்கை நீராடல் சுகமாமோ? அருவருப்பான, தீய விடயங்களெனும் கிணற்று நீராடல் சுகமாமோ?
    • அகந்தைக் கட்டுண்ட மனிதர்களின் புகழ்ச்சி சுகமாமோ? நல்லுள்ள, தியாகராசன் போற்றுவோனின் கீர்த்தனை சுகமாமோ?
(nidhi cAla - kalyANi) Top
ராம!
  • ஏ வரமடு3கு3து3ரா நின்னு?
    • ஈ ஜக3தினி கல ஸுக2 ராஜினி, மரி, நிர்ஜர ராஜ பத3ம்பு3ல, நேனு ஈ ஜன்மமுன அடு33னு;
    • த்யாக3ராஜுனி மதி3கெப்புடு3, ராஜ பத2முலைதே ஜயமௌ கானி.
இராமா!
  • என்ன வரம் வேண்டுவேனய்யா, உன்னிடம்?
    • இப்புவியினிலுள்ள இன்பங்களையோ, அன்றி, இந்திர பதவியையோ, நானிந்தப் பிறவியினில் வேண்டேன்;
    • தியாகாராசனின் உள்ளத்திற்கெப்போழ்தும், (பக்தியெனும்) அரச பாட்டையானால் மட்டுமே, வெற்றி நண்ணும்.
(E varamaDugudu - kalyANi) Top
த்யாக3ராஜ நுத!
  • அனுராக3மு லேனி மனஸுன ஸு-ஞானமு ராது3;
  • 4னுலைன அந்தர்-ஞானுலகெருகே கானி;
  • வக3 வக3கா3 பு4ஜியிஞ்சே வாரிகி த்ரு2ப்தியௌ ரீதி, ஸ-கு3ண த்4யானமு பைனி ஸௌக்2யமு.
தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
  • அனுராகமற்ற மனத்தினில் மெய்ஞ்ஞானம் வாராது;
  • சான்றோராகிய உள்நோக்கு ஞானியருக்கே தெரியும்;
  • வகை வகையாக புசிப்போருக்கு நிறைவுண்டாவது போன்று, சகுணத் தியானத்தினில் சௌக்கியமும்.
(anurAgamu lEni - sarasvati) Top
ராம!
  • துண்ட விண்டி வானி மொத3லைன, மதா3து33கொட்டி, நேல கூல ஜேயு, நிஜ ப3ண்டு ரீதி கொலுவு, த்யாக3ராஜுனிகே, இய்யவய்ய.
    • ரோமாஞ்சமனு க4ன கஞ்சுகமு,
    • ராம ப4க்துட3னு முத்3ர பி3ள்ளயு,
    • ராம நாமமனு வர க2ட்33மு -
  • இவி ராஜில்லுனய்ய
இராமா!
  • இச்சை, செருக்கு ஆகியவற்றைப் புடைத்து, மண் கவ்வச் செய்யும், உண்மையான (அரச) சேவகனாக, தியாகராசனுக்கு சேவையருளுமய்யா
    • மெய்ப் புல்லரிப்பெனும் கனமான கவசம்,
    • இராமனின் தொண்டனெனும் முத்திரை வில்லை,
    • இராம நாமமெனும் உயரிய வாள் -
  • இவை திகழுமய்யா (தியாகராசனின் மீது)
(baNTu rIti - haMsa nAdaM) Top
4ர்மாத்மக!
  • 4ன, தா4ன்ய தை3வமு நீவையுண்ட33, து3ர்மார்க3 சர அத4முலனு, தொ3ர நீவன ஜாலரா.
  • பலுகு போ3டினி, ஸப4லோன, பதித மானவுலகொஸகு32லுலனு எச்சட பொக33னி, த்யாக3ராஜ வினுத!
அறவுருவே!
  • செல்வம், உணவுப் பொருட்கள் வழங்குவோன் நீயாகவிருக்க,
  • கலைமகளினை, அவையினில், (அறத்தினின்றும்) வீழ்ந்த மானவருக்களிக்கும் கடையரை எங்கும் புகழாத நான்,
  • தீய நெறி செல்லும் இழிந்தோரை 'துரை நீ'யென மாட்டேனய்யா (durmArga cara - ranjani) Top
    3ருட33மன!
    • ஞானமொஸக3 ராதா3?
    • நீ நாமமு சே, நா மதி3 நிர்மலமைனதி3;
      • பரமாத்முடு3, ஜீவாத்முடு3, பது3-நாலுகு3 லோகமுலு, நர, கின்னர, கிம்புருஷுலு, நாரதா3தி3 முனுலு, வாரமு, தானனே ஞானமொஸக3 ராதா3?
    கருடன் ஏறுவோனே!
    • மெய்யறிவு அருளலாகாதா?
    • உனது நாம பஜனை செய்து, எனதுள்ளம் மாசற்றதாகியது;
      • பரமான்மா, சீவான்மா, பதினான்கு உலகங்கள், மனிதர், கின்னர, கிம்புருடர்கள், நாரதர் முதலான முனிவர்கள், எவ்வமயமும் தானேயெனும் மெய்யறிவு அருளலாகாதா?
    (jnAnamosaga - pUri kalyANi) Top
    மனஸா!
    • ஸ்ரீ ராம ப4ஜன, பர லோக ஸாத4னமே;
    • ஸ்மர, லோப4, மோஹ ஆதி3 பாபுலனு, ஸ்மரியிஞ்சகே;
      • ஜனன ஆதி3 ரோக3, ப4யாது3லசே,
      • ஜக3மந்து3 கல்கு3, து3ராஸலசே,
      • தனய ஆதி3 பா3ந்த4வுல ப்4ரமசே, தக3லனு ஈது3.
    மனமே!
    • இராமனின் பஜனை, மறுமைக்குச் சாதனமடி;
    • காமம், பேராசை, மயக்கம் ஆகிய பாவிகளை நினையாதேயடி;
      • பிறவி முதலாக, நோய்களெனும் பேரச்சங்களிலும்,
      • உலகினில் ஏற்படும் தீய ஆசைகளிலும்,
      • (மனைவி) மக்கள் முதலாக, சுற்றமெனும் திகைப்பினிலும் சிக்கவிடாது;
    (para lOka sAdhanamE - pUri kalyANi) Top
    ராமய்ய!
    • ஸந்தே3ஹமுனு தீர்புமய்ய;
    • நந்த3 அர்சித, பத3 யுக3முலு மேலோ?
    • நாக3ரீகமகு3 பாது3கா யுக3ம்பு3லு மேலோ?
      • வர மௌனுலெல்ல சரணம்பு3லனு ஸ்மரியிம்ப, நீது3 பத3மு ஒஸங்கெ3னே;
      • 4ரத அர்சன சே, பாது3கலு, த4ர, நின்னு ஒஸங்கே3.
    இராமய்யா!
    • ஐயத்தினைத் தீர்ப்பீரய்யா;
    • நந்தர் தொழுத (உனது) திருவடி இணை மேலோ?
    • நாகரீகமான (உனது) பாதுகை இணை மேலோ?
      • உயர் முனிவர்கள் யாவரும் (உனது) திருவடிகளினை சிந்திக்க, உனது பதத்தினை யளித்தனவே;
      • பரதன் தொழுத பாதுகைகளோ, அணிவோன் உன்னை யளித்தனவே.
    (உனது பதம் - வைகுண்டம்) (sandEhamunu - rAmapriya) Top
    த்யாக3ராஜ வினுத!
    • கடு3பு கொரகே, அரவை நாலுகு3 களல நேர்சினா, முனு ஜேஸினதி3 கா3க, ஏமி?
    • கலிமி லேமுலகு காரணம்பு3 நீவே;
      • கோரி, நூவுல கொண்ட3 தீஸி, ஸிங்க3ரி, முனி கூர்மி பு4ஜிஞ்செனா?
      • வைரி தம்முடு3, ஸாரமைன ரங்க3னி, இல்லு ஜேர்செனா?
    தியாகராசனால் போற்ற பெற்றோனே!
    • வயிற்றுக்காக, அறுபத்து நான்கு கலைகள் கற்றாலும், முன்பு செய்தவை யன்றி மற்றென்ன?
    • செல்வத்திற்கும் வறுமைக்கும் காரணம் நீயே.
      • கோரி எள் மலையைப் பெற்று, சிங்கரி முனி, விரும்பியருந்தினானா?
      • (உனது) பகைவனின் தம்பி, அருமையான அரங்கனை வீடு சேர்த்தானா?
    (kaLala nErcinA - dIpakaM) Top
    த்யாக3ராஜ நுத!
    • பர லோக ப4யமு லேக, ப4வ பாஸ13த்3து4லையேரு;
      • கரி, வாஜி, ஸ்1ரு2ங்கா3ர ஆராம, ஸி1பி3க ஆது3லெல்ல,
    • மனகே கலிகெ3னனி, பர லோக ப4யமு லேக, ப4வ பாஸ13த்3து4லையேரு;
      • கொன்ன காந்தலனு, கன்ன பி3ட்33லனு, வன்னெ சீரலனு, வான கு3டி3ஸெலனு,
      • தின்னகா3 கனி, தை3வ லோகமனி,
    • தன்னுகொள்ளலோ, பர லோக ப4யமு லேக, ப4வ பாஸ13த்3து4லையேரு.
    தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
    • மறுமையின் அச்சமின்றி, உலக வாழ்க்கைச் சுருக்குக் கயிற்றினில் கட்டுண்டனர்
      • கரி, பரி, சிங்கார வனங்கள், சிவிகை, ஆகியவை யாவும்
    • தமக்கேயுண்டானவையென்று, மறுமையின் அச்சமின்றி, உலக வாழ்க்கைச் சுருக்கு கயிற்றினில் கட்டுண்டனர்
      • கொண்ட மனைவியரையும், ஈன்ற மக்களையும், வண்ணச் சேலைகளையும், மழைக் குடில்களையும்
      • திண்ணமெனக் கண்டு, (இதனையே) வானுலக மென்றெண்ணி,
    • இழுபறிகளிலே, மறுமையின் அச்சமின்றி, உலக வாழ்க்கைச் சுருக்குக் கயிற்றினில் கட்டுண்டனர்
    (para lOka bhayamu - mandAri) Top
    ஓ மனஸா!
    • ஸாரமே கானி, அன்ய மார்க3 விசாரமு ஏடிகே?
    • வாரு வீரு, தெலிய லேக பல்கு வார்தலு, வினனேலே?
    • ராம நாமமு ஸாரமே கானி, அன்ய மார்க3 விசாரமு ஏடிகே?
      • ரகு4 வீருனி நாம ஸுதா4 ரஸமுனனு, ஸாரெகு பானமு ஜேஸி,
      • 'நாராயண நாராயண' அனுசுனு, வாரமு,
    • ஸ்ரீ நாரத3 முனி, வல்மீக ஜாதுனிகி, கூரிமினி, உபதே3ஸி1ஞ்ச லேதா3?
      • ஸீதா வருனி நாம ஸுதா4 ரஸ பானமு, நிரதமுனனு ஜேஸி,
      • 'ஹரி ஹரி ஹரி' அனுசு ஸந்ததம்பு3னு
    • ஸு1க ப்3ரஹ்ம, பரீக்ஷித்துகு ஒஸக3 லேதா3?
      • அதி நேமமுதோ, நாமாம்ரு2த பானமு, ஏமரகனு ஜேஸி,
      • 'ராம ராம ராம' அனுசு ஸததமு,
    • ஸி1வுடு, கௌ3ரிகி, ஆ மஹிமலனு, ஆ ரஹஸ்யமுலு, அதி ப்ரேமனு உபதே3ஸி1ஞ்ச லேதா3?
    ஓ மனமே!
    • சாரமேயற்ற பிற நெறிகளின் எண்ணம் எதற்கடி?
    • அவரும், இவரும், அறியாது பேசும் சொற்களைக் கேட்பதேனடி?
    • இராம நாமமே சாரமேயன்றி, பிற நெறிகளின் எண்ணம் எதற்கடி?
      • இரகு வீரனின் நாம அமிழ்துச் சாற்றினை, எவ்வமயமும் பருகி,
      • 'நாராயண, நாராயண'வென்று (செபித்துக்கொண்டு) நாளும்,
    • உயர் நாரத முனி, (இராம நாமத்தினை) புற்றிலுதித்தோனுக்குக் கனிவுடன் உபதேசிக்கவில்லையா?
      • சீதை மணாளனின், நாம அமிழ்துச் சாற்றினை இடையறாது பருகி,
      • 'அரி, அரி, அரி'யென்று (செபித்து), எவ்வமயமும்,
    • சுகப்பிரும்மம் (அரி நாமத்தினை) பரீட்சித்துக்கு அளிக்கவில்லையா?
      • மிக்கு நியமத்துடன், (இராம) நாம அமிழ்தினை மறவாது பருகி,
      • 'இராமா, இராமா, இராமா'யென (செபித்து), எவ்வமயமும்,
    • சிவன், கௌரிக்கு, அம்மகிமைகளினையும், அம்மருமங்களினையும், மிக்கு அன்புடன் உபதேசிக்கவில்லையா?
    (sAramE kAni - pantuvarALi) Top
    ஓரி!
    • ஸி1வ ஸி1வ ஸி1வயன ராதா3?
    • 4வ ப4ய பா34லனணசுகோ ராதா3?
      • காமாது3ல தெக3 கோஸி,
      • பர பா4மல, பருல த4னமுல ரோஸி,
      • பாமரத்வமுனு எட3பா3ஸி,
      • அதி நேமமுதோ, பி3ல்வ அர்சன ஜேஸி,
    • ஸி1வ ஸி1வ ஸி1வயன ராதா3?
      • ஸஜ்ஜன க3ணமுல காஞ்சி,
      • முஜ்-ஜக3தீ3ஸ்1வருலு அனி மதினெஞ்சி,
      • லஜ்ஜா ஆது3ல தொலகி3ஞ்சி,
      • தன ஹ்ரு2ஜ்-ஜலஜமுனனு தா பூஜிஞ்சி,
    • ஸி1வ ஸி1வ ஸி1வயன ராதா3?
      • ஆக3மமுல நுதியிஞ்சி,
      • 3ஹு பா3கு3 லேனி பா4ஷலு சாலிஞ்சி,
      • பா43வதுலதோ போஷிஞ்சி,
      • வர த்யாக3ராஜ ஸன்னுதுட3னி எஞ்சி,
    • ஸி1வ ஸி1வ ஸி1வயன ராதா3?
    அன்பர்காள்!
    • 'சிவ சிவ சிவ' யெனலாகாதா?
    • (அதனால்) பிறவி அச்சமெனும் தொல்லைகளை அடக்கலாகாதா?
      • இச்சை ஆகியவற்றினை அற வீழ்த்தி,
      • பிற மாதர், பிறர் செல்வத்தினை வெறுத்தொதுக்கி,
      • அறிவீனத்தினை யொழித்து,
      • மிக்கு நியமத்துடன் வில்வ அருச்சனை செய்து,
    • 'சிவ சிவ சிவ' யெனலாகாதா?
      • நன்மக்களின் இணக்கம் கொண்டு,
      • (சிவன்) மூவுலகங்களின் ஈசனென மனத்தினிலெண்ணி,
      • நாணம் முதலானவற்றை விடுத்து,
      • தனது இதயக் கமலத்தினில் தான் (அவனைத்) தொழுது,
    • 'சிவ சிவ சிவ' யெனலாகாதா?
      • ஆகமங்களைப் போற்றி,
      • முற்றிலும் பயனற்ற சொற்கள் போதுமென்று,
      • பாகவதர்களுடன் (கூடி) (இறைவனை) கொண்டாடி,
      • தியாகராசன் சிறக்கப் போற்றும் மேலோனெனக் கருதி,
    • 'சிவ சிவ சிவ' யெனலாகாதா?
    (Siva Siva - pantuvarALi) Top
    மனஸா!
    • வாடே3ரா தை3வமு;
    • ஆடி3ன மாடலு தப்படு3 அனுசுனு, ஆ-சந்த்3ர-அர்கமுக3 கீர்தி கலிகி3ன, வாடே3ரா தை3வமு;
      • 3ண்டி3 ரக்கஸுல மத3மு அணசனு,
      • ஆக2ண்ட3ல ஆதி3 ஸுர கோட்லனு, பூ4 மண்ட3ல ஸுஜனுல பாலிம்பனு,
    • கோத3ண்ட3 பாணி ரூபமுதோ வெலஸின, வாடே3ரா தை3வமு;
      • தா3ரி தெலிய லேனி அக்3ஞுலகு, ப4வ நீரதி4 தா3டி, மோக்ஷமு அந்து3டகு,
      • நீரஜ அரி த4ருடு3பதே3ஸி1ஞ்சே,
    • தாரக நாமமுதோனு, வெலஸின வாடே3ரா தை3வமு;
      • தா4த்ரு2 வினுதுடை3ன,
      • த்யாக3ராஜுனி சேத பூஜலு அந்தி3,
      • பா3கு33, ப்ரத்3யோதனான்வயமுனனு ஜனிஞ்சி,
    • ஸீதா பதியனி பேரு கலிகி3ன, வாடே3ரா தை3வமு.
    மனமே!
    • அவனே தெய்வமடா;
    • சொன்ன சொல் தவறானென, சந்திர சூரியர் தோன்றிய நாள் முதலாக புகழ் படைத்த அவனே தெய்வமடா;
      • எண்ணற்ற அரக்கர்களின் செருக்கினையொடுக்கவும்,
      • இந்திரன் முதலாக வானோர் சமூகத்தினையும், புவி மண்டலத்திலுள்ள நன்மக்களையும் பேணுதற்கும்,
    • கோதண்டபாணி உருவத்துடன் திகழும் அவனே தெய்வமடா;
      • நெறி தெரியாத அறிவிலிகளுக்கு, பிறவிக் கடலினைக் கடந்து மோக்கமுறுதற்கு,
      • கமலப் பகையினை அணிவோன் உபதேசிக்கும்,
    • (ராம எனும்) தாரக நாமத்துடன் திகழும் அவனே தெய்வமடா
      • பிரமனால் போற்றப் பெற்றோனாகிய,
      • தியாகராசனின் கைகளினால் வழிபாட்டினைப் பெற்று,
      • சிறக்க பரிதி குலத்தில் பிறந்து,
    • 'சீதாபதி' யென பெயர் படைத்த அவனே தெய்வமடா.
    (vADErA daivamu - pantuvarALi) Top
    ரகு4 வர!
      • தல்லி தண்ட்3ருலு, அன்ன தம்முலு உன்னா, பொலதிகி ஒகடு3 புருஷுண்டு3 ஔனா?
      • பர தை3வமுலு, பா3கு3 ஸொம்முலு, மங்க3ள ஸூத்ரமுலு ஔனா?
    • மனஸுன நீகே மருலு-கொன்னானு.
    இரகுவரா!
      • பெற்றோரும், உடன் பிறந்தோரும் இருந்தாலும், பெண்ணுக்கு ஒருவன் கணவனாவானா?
      • பிற தெய்வங்களும், சிறந்த நகைகளும், தாலிக் கயிறாகுமா?
    • உள்ளத்தினில், உன்மீதே காதல் கொண்டேன்.
    (raghu vara nannu - pantuvarALi) Top
    ஓ ராம!
      • வேத3, ஸா1ஸ்த்ர, புராண வித்3யலசே, பே43 வாத3முலு தீரக, ப்4ரமயு வாரல ஜூசி...
      • போ43முல கொரகு, பு4விலோ, ராஜஸம்முன யாகா3து3லு ஒனரிஞ்சி அலயு வாரல ஜூசி...
    • ஈ ஜன்மமுன, நின்னு ராஜி ஜேஸுகொன லேக, ராஜில்லரனி...
    • அன்னி கல்லலு அனுசு...
    • ஆடி3 பாடி3 வேடி3, நே, சின்ன தனமு நாடே3, நின்னே நெர நம்மினானுரா.
    ஓ இராமா!
      • மறைகள், சாத்திரங்கள், புராணங்களின் ஏட்டறிவினால், பேத வாதங்கள் தீராது திகைப்போரைக் கண்டு...
      • இன்பங்களுக்காக, புவியில், இராசதத்துடன் வேள்விகள் முதலானவை இயற்றி அலைவோரைக் கண்டு...
    • இப்பிறவியில், உன்னை ஒப்புக்கொள்ளச் செய்யாது, (மனிதர்) திகழாரென...
    • (மற்று) அனைத்தும் உண்மையல்லவென்று...
    • ஆடிப் பாடி, வேண்டி, நான் சிறு வயது முதலே, உன்னையே மிக்கு நம்பினேனய்யா.
    (ninnE nera - pantuvarALi) Top
    • ராஜில்லின, ஸ்ரீ த்யாக3ராஜ ஸகு2னி மர்மமுலனு, ஈ ஜக3தினி, வின்னவாரிகே, ஜயமு ஜயமு ஜயமனி, நாரத3 முனி வெட3லின ஸு-கு3ணாதிஸ1யமு வினரே!
    • ஒளிரும், தியாகராசனுக்கு இனியோனின் (அரியின்) மருமங்களினைச் செவிமடுத்தோருக்கு, இவ்வுலகத்தினில் வெற்றி, வெற்றி, வெற்றியென்று முழங்கி, நாரத முனிவர் எழுந்தருளிய பெருஞ்சிறப்பினைக் கேளீரே!
    (nArada muni - pantuvarALi) Top
    • மாயப்ப, ராம ப4க்தி எந்தோ கொ3ப்பரா!
    • த்ரிப்படலனு தீர்சி, கண்டி ரெப்ப வலெனு காசு, மாயப்ப, ராம ப4க்தி எந்தோ கொ3ப்பரா!
      • லக்ஷ்மி தே3வி வலசுனா?
      • லக்ஷ்மணுண்டு3 கொலுசுனா?
      • ஸூக்ஷ்ம பு3த்3தி43ல ப4ரதுடு3 ஜூசி ஜூசி ஸொலஸுனா?
      • 13ரி எங்கி3லி இச்சுனா?
      • சந்த்3ர த4ருடு3 மெச்சுனா?
      • அப3ல ஸ்வயம்ப்ரப4கு, தை3வமு, அசல பத3வினி இச்சுனா?
      • கபி வாரிதி4 தா3டுனா?
      • கலிகி ரோட கட்டுனா?
      • அபராதி4 த்யாக3ராஜுகு, ஆனந்த3மு ஹெச்சுனா?
    • எமதப்பன் இராமனின் பக்தி எவ்வளவோ உயர்ந்ததடா!
    • (மனத்தின்) திரிதல்களைத் தீர்த்து, கண்ணிமைபோல் காக்கும், எமதப்பன் இராமனின் பக்தி, எவ்வளவோ உயர்ந்ததடா!
    • அன்றேல்,
      • இலக்குமி தேவி மருவுவாளா?
      • இலக்குவன் சேவைபுரிவானா?
      • நுண்ணறிவுடை பரதன், கண்டு கண்டு மயங்குவானா?
      • சபரி எச்சில் கொடுப்பாளா?
      • பிறையணிவோன் மெச்சுவானா?
      • அபலை சுயம்பிரபையினுக்கு, தெய்வம் நிலையான பதவியளிக்குமா?
      • குரங்கு கடலினைத் தாண்டுமா?
      • பெண்ணொருத்தி உரலில் கட்டுவாளா?
      • குற்றவாளி தியாகராசனுக்கு, ஆனந்தமும் பெருகுமா?
    (appa rama bhakti - pantuvarALi) Top
    பரமாத்ம!
    • பாலுமாலின பாமருலனொல்ல, ஈ லோகமுலனு, நீ லீலகா3னு ஜூசு, கு3ண ஸீ1லுல, நா பால கல்க3 ஜேஸி, பாலிம்புமய்ய;
    • நர, கின்னர, கிம்புருஷ, அஸுர, நிர்ஜர ராஜ, ஸி1வ, ஆதி3 ரமா பதுல, தரு, பூ4-த4ர, அனேக அண்ட3முல, நீ லீலகா3னு ஜூசு, கு3ண ஸீ1லுல, நா பால கல்க3 ஜேஸி, பாலிம்புமய்ய.
    பரம்பொருளே!
    • சோம்பித்திரியும் மூடர்களை யொறுக்க, இவ்வுலகங்களினை (உனது) திருவிளையாடலாக நோக்கும் நற்பண்பினரை என் பங்கில் உண்டாகச் செய்து, பேணுவாயய்யா;
    • மனிதர், கின்னரர், கிம்புருடர், அசுரர், மூப்பற்றோர் அரசன், சிவன், இரமை மணாளன் முதலானோர், மரங்கள், மலைகள், பற்பல அண்டங்களையும், உனது திருவிளையாடலாக நோக்கும் நற்பண்பினரை என் பங்கில் உண்டாகச் செய்து, பேணுவாயய்யா
    (lIlagAnu jUcu - divyamaNi) Top
    ஓ ராம!
    • தாமராகு நீரு வித4மு ப்ரபஞ்சமு; தத்வமு காது3;
    • 3ஜ்ஜ முண்ட்3ல மீத3 தகு3லுகொன்ன ப3ட்ட, க்3ரக்குன தீய வஸ1மா?
    • அச்சுக3, ப4வமுன தகு3லுகொன்ன மதி3, வச்சுனா, நீ வத்33கு?
    ஓ ராமா!
    • தாமரை இலை (மீது) நீர் போன்றது உலகம் - உண்மையன்று;
    • கழங்கு முட்களின் மீது சிக்கிக்கொண்ட துணி, உடனே எடுக்கவியலுமா?
    • அப்படியே, பிறவிக்கடலில் சிக்கிக்கொண்ட மனது, வருமா உனதருகினில் (எளிதினில்)?
    (SrI rAma jaya rAma - varALi) Top
    ராம சந்த்3ர!
    • நீ நாமமந்து3, நிஜ ப்ரேம லேனி ப்3ரதுகு ஏமி?
    • ஸந்ததம்பு3, தன அந்தரம்பு3ன, நீ சிந்த லேனி வாடு3 எந்த?
    • தொ3ரக ரானி, நீ சரண ப4க்தி, ஏமரின மானவுடு3 அஸுருடே3.
    இராம சந்திரா!
    • உனது நாமத்தினில் உண்மையான காதலற்ற பிழைப்பென்ன?
    • எவ்வமயமும் தனதுள்ளத்தினில் உனது நினைவற்றவன் எம்மாத்திரம்?
    • கிடைத்தற்கரிய, உனதுத் திருவடிப் பற்றினைத் தவறவிட்ட மனிதன் அரக்கனே;
    (pAhi paramAtma - varALi) Top
    ஸ்ரீ ராம!
    • நோரேமி நின்னாட3?
    • ஸாரெ ஸாரெகுனு, பாப கர்மமுலு ஸல்புசுனுண்டு3 நாவண்டி வானிகி, நோரேமி நின்னாட3?
    • பாபுலு ஆருகு3ரு, வஸ்1யுலு கா3க, பண்ட்3லு இகி3லிஞ்சுசு தருணுலகை, நிஜ ப4க்தியு தெலியனி, த்யாக3ராஜுனிகி, ஒருலகைன, நோரேமி நின்னாட3?
    இராமா!
    • வாயென்ன, உன்னைக் குறை சொல்ல?
    • எவ்வமயமும் பாவச் செயல்களை இயற்றிக்கொண்டிருக்கும் என்போன்றவனுக்கு, வாயென்ன, உன்னைக் குறை சொல்ல?
    • பாவிகள் அறுவர் (தன்) வயப்படாது, பல்லிளித்துக் கொண்டு, வனிதையருக்காக, உண்மையான பக்தியினை அறியாத, தியாகராசனுக்கு, மற்றவருக்காகிலும், வாயென்ன, உன்னைக் குறை சொல்ல?
    (nOrEmi SrI rAma - varALi) Top
    கல்யாண ஸுந்த3ர ராம!
    • கருண ஏலாக3ண்டே, ஈ வித4மே;
    • பரமாத்முடு3, ஜீவாத்முடு3 ஒகடை3 பரகு3சுண்டு3, ப4க்த பராதீ4னுனி கருண ஏலாக3ண்டே, ஈ வித4மே;
      • அன்ரு2தம்பு3 ஆட3டு3;
      • அல்புல வேட3டு3;
      • ஸு-ந்ரு2புல கொலுவடு3;
      • ஸூர்யுனி மரவடு3;
      • மாம்ஸமு முட்டடு3;
      • மது4வுனு த்ராக3டு3;
      • பர-ஹிம்ஸல ஸேயடு3;
      • எருகனு மரவடு3;
      • மூடு3 ஈஷணமுல வாட3டு3;
      • ஜீவன்-முக்துடை3 திருகு3 முத3முனு ஜூபடு3;
      • வஞ்சன ஸேயடு3;
      • வருலதோ பொ3ங்கடு3;
      • சஞ்சல சித்துடை3 ஸௌக்2யமு விடு3வடு3;
      • ஸாக்ஷியனி தெலிஸி, அந்து3 லக்ஷ்யமு விடு3வடு3.
    கலியாண சுந்தரராமா!
    • கருணை எங்ஙனமென்றால், இவ்விதமே;
    • பரமான்மா, சீவான்மா ஒருவனாகி யொளிரும் தொண்டரைப் பேணுவதில் ஈடுபட்டவனின், கருணை எங்ஙனமென்றால், இவ்விதமே;
      • மெய்யல்லாதது பேசான்;
      • அற்பர்களை வேண்டான்;
      • நன்மன்னரிடமும் சேவை செய்யான்;
      • சூரியனை மறவான்;
      • இறைச்சியைத் தொடான்;
      • கள்ளருந்தான்;
      • பிறருக்குத் தீங்கிழையான்;
      • கற்றதனை மறவான்;
      • மூவாசைகளை பயன்படுத்தான்;
      • சீவன் முத்தனாகித் திரியும் களிப்பினை வெளிப்படுத்தான்;
      • வஞ்சனை செய்யான்;
      • சான்றோரிடம் பொய் பேசான்;
      • அலையும் மனத்தினனாகி, (தனது) சுகத்தினை வீடான்;
      • சாட்சியெனத் தெரிந்து, எட்டவேண்டிய இலக்கினை வீடான்.
    (karuNayElAgaNTE - varALi) Top
    • ஈ மேனு கலிகி3னந்து3கு, ஸீதா ராம நாமமே பல்க வலெனு;
    • காம ஆதி3 து3ர்-கு3ண ஸ்தோம பூரிதமைன, பாமரத்வமே கானி, நேமமு லேனி அட்டி, ஈ மேனு கலிகி3னந்து3கு, ஸீதா ராம நாமமே பல்க வலெனு;
      • ஸம்ஸாரமுனு ப்3ரோவ, தா3ரினி பர-ஹிம்ஸ ஜெந்து3 கிராதுடு3, ஹம்ஸ ரூபுல க3தினி அடு33, ராம நாம ப்ரஸ1ம்ஸ ஜேஸி, உபதே3ஸி1ஞ்ச, த4ன்யுடு3 காதா3?
      • தாபஸி ஸா1பமிட3கா3, ஜலோரக3 ரூபமு கொனி உண்ட33, தாபமு ஸைரிஞ்சக தல்லடி3ல்லக3, ஸ1ர சாப த4ருனி நாம ஸ்1ரவணமு, ப்3ரோவ லேதா3?
      • கரி ராஜு, தெலிய லேக, ப3லுடை3ன மகரி சேத, கா3ஸி ஜெந்த3கா3, அர லேக, நிஜமுன ஆதி3 மூலமனக3, வரது3டு3, வேக3மே வச்சி, ப்3ரோவக3 லேதா3?
      • ஆக3ம, வேத3முலனு, தா3னவுடு3 கொம்போவகா3, சதுர ஆனனுடு3, த்யாக3ராஜ நுத, தாரக நாமயனி, பா3கு33 நுதிம்ப, ப4யமு தீர்பக3 லேதா3?
    • ஈ மேனு கலிகி3னந்து3கு, ஸீதா ராம நாமமே பல்க வலெனு.
    • இவ்வுடல் உண்டானதற்கு, சீதாராமனின் நாமத்தினையே உரைக்கவேண்டும்
    • காமம் முதலான தீய குணங்கள் நிரம்பிய, இழிவே யல்லாது, கட்டுப்பாடற்றதாகிய, இவ்வுடல் உண்டானதற்கு சீதாராமனின் நாமத்தினையே உரைக்கவேண்டும்
      • வாழ்க்கையை நடத்த, வழிப்போக்கர்களுக்கு (வழிப்பறி செய்து) தீங்கிழைக்கும் வேடன், முற்றுமுணர்ந்தோர் கதியினை வேண்ட, இராம நாமத்தினை பரிந்துரைத்து, (நாரதர்) உபதேசிக்க, பேறுடைத்தோனல்லவா?
      • தவசி சாபமிட, நீர்வாழ் பிராணியின் உருவம் கொண்டிருக்க, துயர் தாளாது தத்தளிக்க, வில்லம்பு ஏந்துவோனின் நாமத்தின் கேள்வி உய்விக்கவில்லையா?
      • கரியரசன், அறியாது, வலியோனாகிய முதலையினிடம் துயருற, கூச்சலெழுப்பி, 'உண்மையான ஆதி மூலமே' யென, வரதன் விரைந்து வந்து காக்கவில்லையா?
      • ஆகமங்கள், மறைகளை, அசுரன் கொண்டுபோக, நான்முகன் 'தியாகராசன் போற்றும், தாரக நாமத்தோனே' என்று நன்கு போற்ற, (அவனது) அச்சத்தினைப் போக்கவில்லையா?
    • எனவே, இவ்வுடல் உண்டானதற்கு சீதாராமனின் நாமத்தினையே உரைக்கவேண்டும்
    (I mEnu kaligina - varALi) Top
    ஸீதா நாத2!
    • ஸ்நான ஆதி3 ஜப, தப, யோக3, த்4யான, ஸமாதி4, ஸுக2 ப்ரத3 நின்னே, ப4ஜன ஸேயு வாட3னு.
    சீதை மணாளா!
    • (புனித) நீராடல் முதலாக, செபம், தவம், யோகம், தியானம், சமாதி ஆகியவற்றின் சுகத்தினையருளும் உன்னையே பஜனை செய்பவன் (நான்)
    (ninnE bhajana - nATa) Top
    • பரமாத்முடு3 வெலிகே3 முச்சட, பா33 தெலுஸுகோரே;
      • ஹரியட, ஹருட3ட, ஸுருலட, நருலட, அகி2லாண்ட3 கோடுலட -
    • அந்த3ரிலோ, பரமாத்முடு3 வெலிகே3 முச்சட, பா33 தெலுஸுகோரே;
      • 33ன, அனில, தேஜோ-ஜல, பூ4-மயமகு3 ம்ரு23, க23, நக3, தரு கோடுலலோ,
      • ஸ-கு3ணமுலோ, வி-கு3ணமுலோ,
      • ஸாது4, த்யாக3ராஜாதி3 ஆஸ்1ரிதுலலோ,
    • ஸததமு, பரமாத்முடு3 வெலிகே3 முச்சட, பா33 தெலுஸுகோரே.
    • பரமான்மா ஒளிரும் சிறப்பினை நன்கு தெரிந்துகொள்வாய்;
      • அரியாம், அரனாம், வானோராம், மனிதராம், அனைத்தண்ட கோடிகளாம் -
    • யாவற்றிலும் பரமான்மா ஒளிரும் சிறப்பினை நன்கு தெரிந்துகொள்வாய்;
      • விண், காற்று, நெருப்பு, நீர், புவி - (ஐம்பூதங்கள்) மயமான மிருகம், பறவை, மலை, மரம் கோடிகளிலும்,
      • குணங்களிலும், குணங்களற்றும்,
      • சாது தியாகராசன் ஆகிய (அவனை) புகலடைந்தோரிலும்,
    • எவ்வமயமும், பரமான்மா ஒளிரும் சிறப்பினை நன்கு தெரிந்துகொள்வாய்.
    (paramAtmuDu - vAgadhISvari) Top
    • ஸு14 லக்ஷணமுலு-க3ல ராமுனிகி, ப்ரத3க்ஷிணமு ஒனரிந்துமு, ராரே;
      • குக்ஷினி, ப்3ரஹ்மாண்ட3ம்பு3லுன்னவட;
      • விசக்ஷுணுட3ட;
      • தீ3க்ஷா கு3ருட3ட;
      • லக்ஷண லக்ஷ்யமு-க3ல ஸ்1ருதுலகு ப்ரத்யக்ஷம்பௌ3னட;
      • ஸி1க்ஷ-படி3, ஸப4னு மெப்பிஞ்சு ப4க்த ரக்ஷகுண்டௌ3னட;
      • அக்ஷரஸ்து2லைன, ப4ஜன பருலகே அந்தரங்கு3டௌ3னட;
      • ஸாக்ஷியை வெலயு, த்யாக3ராஜ பக்ஷகுடௌ3னட;
    • முப்பதி3 ரெண்டு3 ஸு14 லக்ஷணமுலு-க3ல ராமுனிகி ப்ரத3க்ஷிணமு ஒனரிந்துமு ராரே.
    • நல்லிலக்கணங்களுடைய இராமனை வலம் வருவோம் வாரீர்
      • வயிற்றினில் பிரமாண்டங்களுள்ளனவாம்;
      • பகுத்தறிவோனாம்;
      • தீக்கையருள் ஆசானாம்;
      • இலக்கண-இலக்குடைத்த மறைஞருக்குக் காணப்படுவானாம்;
      • கற்றறிந்து, அவையினை மேம்படுத்தும் தொண்டரைக் காப்பானாம்;
      • அழியா இறையில் நிலைத்து, பஜனையில் ஈடுபட்டோருக்கே உள்ளுறைவானாம்;
      • சாட்சியாகி விளங்கும் (அவன்), தியாகாராசனின் பக்கமிருப்பானாம்;
    • முப்பத்தியிரண்டு இலக்கணங்களுடைய இராமனை வலம் வருவோம் வாரீர்
    (lakshaNamulu - Suddha sAvEri) Top
    ஓ ராம!
    • இந்தகன்ன ஆனந்த3மேமி?
    • ஸந்த ஜனுலகெல்ல 3ஸம்மதியையுண்டு3 கானி; இந்தகன்ன ஆனந்த3மேமி?
      • ஆடு3சு, நாத3முன பாடு3சு, எது3ட ரா வேடு3சு, மனஸுன 4கூடி3யுண்டு3ட சாலு; இந்தகன்ன ஆனந்த3மேமி?
      • ஸ்ரீ ஹரி கீர்தனசே, தே3ஹாதி3 இந்த்3ரிய ஸமூஹமுல மரசி, 5ஸோஹம் ஐனதே3 சாலு; இந்தகன்ன ஆனந்த3மேமி?
      • நீ ஜபமுலு வேளனு ஈ ஜக3முலு நீவை ராஜில்லுனய; இந்தகன்ன ஆனந்த3மேமி?
    ஓ இராமா!
    • இத்தனைக்கு மேலான ஆனந்தமென்ன?
    • சான்றோர் யாவருக்கும் ஒப்புதல் இருக்குமன்றோ!
      • ஆடிக்கொண்டு, நாதத்துடன் பாடிக்கொண்டு, எதிரில் வர வேண்டிக்கொண்டு, உள்ளத்தினில் கூடியிருத்தலே போதும்; இத்தனைக்கு மேலான ஆனந்தமென்ன?
      • அரியின் கீர்த்தனையுடன், உடல் முதலாக புலன்கள் அனைத்தினையும் மறந்து, நான் அவனானதே போதும்; இத்தனைக்கு மேலான ஆனந்தமென்ன?
      • உனது செபம் இயற்றும் வேளை, இவ்வுலகங்கள் நீயாகி ஒளிருமய்யா; இத்தனைக்கு மேலான ஆனந்தமென்ன?
    (intakannAnanda - bilahari) Top
    மனஸா!
    • ஸீதா ராம ப4க்துனி சாரித்ரமு வினவே;
    • (ஆ)ஸக்தி லேக, தா கோருசு, ஜீவன்முக்துடை3, ஆனந்த3முனொந்து3 ஸீதா ராம ப4க்துனி சாரித்ரமு வினவே;
      1. ஜப தபமுல தா ஜேஸிதினி அன ராது3;
      2. கபடாத்முடு3 மனமை, பல்க ராது3;
      3. உபம தனகு லேக உண்ட3வலெனனி, ஊரயூர திருக33 ராது3;
      4. சபல சித்துடை3 ஆலு ஸுதுலபை ஸாரெகு ப்4ரம காராது3;
      5. 4வ விப4வமு நிஜமனி எஞ்சக3 ராது3;
      6. ஸி1வ மாத4வ பே43மு ஜேயக3 ராது3;
      7. பு4வனமந்து3 தானே யோக்3யுட3னு அனி பொ3ங்கி, பொட்ட ஸாகக3 ராது3;
      8. பவனாத்மஜ த்4ரு2தமௌ, ஸீதா பதி பாத3முலனு ஏமர ராது3;
      9. ராஜஸ, தாமஸ கு3ணமுலு காராது3;
      10. அவ்யாஜமுனனு ராலேது3 அன காராது3;
      11. ராஜ யோக3 மார்க3மு நீ சித்தமு ரா ஜூசுட விட3வக3 ராது3;
      12. ராஜ ஸி1கா2 மணியைன, த்யாக3ராஜ ஸகு2னி மரவ ராது3 -
    • அனே ஹரி ப4க்துனி சாரித்ரமு வினவே.
    மனமே!
    • சீதாராமனின் தொண்டனின் நடத்தையினைக் கேளாய்;
    • (உலக) பற்றின்றி, தானே வேண்டி, சீவன்-முத்தனாகிக் களிப்பெய்தும் தொண்டனின் நடத்தையினைக் கேளாய்;
      1. செபம், தவங்களைத் தான் இயற்றினேனென்று கூறலாகாது;
      2. வஞ்சக உள்ளத்தோன் நாமாகி, பேசலாகாது;
      3. உவமை தனக்கு இல்லாமல் இருக்கவேண்டுமென, (திறமைகளைக் காட்டிக்கொண்டு) ஊரூராகத் திரியலாகாது;
      4. அலையும் உள்ளத்தினனாகி, மனைவி மக்கள் மீது, எவ்வமயமும், மயக்கம் கூடாது;
      5. உலக வைபவத்தினை நிசமென்று எண்ணலாகாது;
      6. சிவ, மாதவ வேறுபாடு செய்யலாகாது;
      7. புவியினில் தானே திறமையுடையவனெனப் பொய் சொல்லி, வயிறு வளர்க்கலாகாது;
      8. வாயு மைந்தன் பற்றியுள்ள சீதா பதியின் திருவடிகளை மறக்கலாகாது;
      9. இராசத, தாமத குணங்கள் கூடாது;
      10. காரணமின்றி, (இறைவனின் கருணை) வரவில்லை யெனலாகாது;
      11. இராச யோக நெறியினை, உனதுள்ளம் அடையப் பெறுதலை விடலாகாது;
      12. அரசர்களின் முடிமணியாகிய, தியாகராசனின் நண்பனை மறக்கலாகாது -
    • எனும், அரியின் தொண்டனின் நடத்தையினைக் கேளாய்.
    (bhaktuni cAritramu - bEgaDa) Top
    ஓ மனஸா!
    • நாத3 உபாஸனசே, ஸ1ங்கர, நாராயண, விது4லு வெலஸிரி
      • வேத3 உத்3தா4ருலு,
      • வேத3 அதீதுலு,
      • விஸ்1வமு எல்ல நிண்டி3யுண்டே3 வாரலு,
    • நாத3 உபாஸனசே, ஸ1ங்கர, நாராயண, விது4லு வெலஸிரி;
      • மந்த்ர ஆத்முலு, யந்த்ர, தந்த்ர ஆத்முலு, மரி,
      • மன்வந்தரமுலு என்னோ கல வாரலு,
      • தந்த்ரீ, லய, ஸ்வர, ராக3 விலோலுலு,
      • த்யாக3ராஜ வந்த்3யுலு,
      • ஸ்வதந்த்ருலு,
    • நாத3 உபாஸனசே, ஸ1ங்கர, நாராயண, விது4லு வெலஸிரி
    ஓ மனமே!
    • நாத வழிபாட்டினால் (மும்மூர்த்திகள்) சங்கரன், நாராயணன் மற்றும் நான்முகன் ஒளிர்ந்தனர்;
      • மறைகளைக் காத்தோர்,
      • மறைகளைக் கடந்தோர்,
      • உலகனைத்தும் நிறைந்திருப்போராக
    • நாத வழிபாட்டினால் (மும்மூர்த்திகள்) சங்கரன், நாராயணன் மற்றும் நான்முகன் ஒளிர்ந்தனர்;
      • மந்திர, இயந்திர, தந்திரங்களின் ஆன்மாவானோர்,
      • மன்வந்தரங்களெத்தனையோ உடையோர், அன்றி
      • நரம்பு, தோற்கருவிகள், சுரம் மற்றும் ராகத்தினில் வல்லுனர்கள்,
      • தியாகராசன் வணங்குவோர், மற்றும்
      • தன்னிச்சையாக இருப்போராக
    • நாத வழிபாட்டினால் (மும்மூர்த்திகள்) சங்கரன், நாராயணன் மற்றும் நான்முகன் ஒளிர்ந்தனர்.
    (nAdOpAsana - bEgaDa) Top
    ஓ மனஸா!
    • தெலிஸி, ராம சிந்தனதோ, நாமமு ஸேயவே;
    • தலபுலு அன்னி நிலிபி, நிமிஷமைன, தாரக ரூபுனி நிஜ தத்வமுலனு தெலிஸி, ராம சிந்தனதோ நாமமு ஸேயவே;
      • ராமாயன சபல அக்ஷுல பேரு; காமாது3ல போரு வாரு வீரு;
      • ராமாயன ப்3ரஹ்மமுனகு பேரு; ஆ மானவ ஜனன ஆர்துலு தீரு;
      • அர்கமு அனுசு ஜில்லெடு3 தரு பேரு; மர்கட பு3த்3து4லு எட்டு தீரு?
      • அர்குடு3 அனுசு பா4ஸ்கருனிகி பேரு; கு-தர்கமனே அந்த4காரமு தீரு;
      • அஜமு அனுசு மேஷமுனகு பேரு; நிஜ கோரிகலு ஏலாகு3 ஈடே3ரு?
      • அஜுடு3 அனி வாகீ3ஸ்1வருனிகி பேரு; விஜயமு கல்கு3னு;
    • த்யாக3ராஜ நுதுனி தெலிஸி, ராம சிந்தனதோ, நாமமு ஸேயவே;
    ஓ மனமே!
    • தெரிந்து, இராமனின் சிந்தனையுடன் (அவன்) நாமத்தினை செபிப்பாய்;
    • நினைப்புகளனைத்தினையும் நிறுத்தி, (ஒரு) நிமிடமாவது தாரக உருவத்தோனின் உண்மையான தத்துவங்களைத் தெரிந்து, இராமனின் சிந்தனையுடன் (அவன்) நாமத்தினை செபிப்பாய்;
      • 'ராமா'யென, அலையும் கண்களுடையோரின் பெயராகும்; காமம் முதலானவற்றுடன் போராடுவர் இவ்விதம் எண்ணுவோர்;
      • 'ராமா'யென பரம்பொருளுக்கும் பெயராகும்; இவ்விதம் எண்ணும் அம்மானவர்களின் பிறவித்துயர்கள் தீரும்;
      • 'அர்க்க'மென எருக்கஞ்செடிக்குப் பெயராகும்; இவ்விதம் எண்ண, குரங்குத் தன்மை எப்படி தீரும்?
      • 'அர்க்க'னெனப் பகலவனுக்கும் பெயராகும்; இவ்விதம் எண்ண, குதர்க்கமெனும் இருள் நீங்கும்;
      • 'அஜம்' என ஆட்டுக்கடாவிற்குப் பெயராகும்; இவ்விதம் எண்ண, நிசமான கோரிக்கைகள் எங்ஙனம் ஈடேறும்?
      • 'அஜன்' எனக் கலைமகள் கேள்வனுக்கும் பெயராகும்; இவ்விதம் எண்ண, வெற்றியுண்டாகும்;
    • தியாகராசன் போற்றுவோனைத் தெரிந்து, இராமனின் சிந்தனையுடன் (அவன்) நாமத்தினை செபிப்பாய்.
    (telisi rAma - pUrNa candrika) Top
    ராம!
    • நீகே த3ய ராக, நே ஜேயு பனுலெல்ல நெரவேருனா?
    • ஏகோபிஞ்சக, 'நேனு நீவ'னு ஞானிகி ஏலாகு3 ஸுக2மிச்சுனே?
      • மனஸு நில்வனி வாரு, மாயா ஜாலமு ஜேஸி, மரி, முக்தி கொனனௌனே;
      • கனு ஸம்ஞகு ரானி காந்தனு, ப3லிமினி கரமிட3, வஸ1மௌனே;
      • வாடி3க லேனி வித்3யல சேத, ஸப4லோன வாதி3ஞ்ச, போனௌனே;
      • சாடி3 வின்ன மாட, மதி3னி நில்வ லேனி, ஸரஸுனி விதமௌனே;
      • மெப்புலகை, ப3ஹு த4ர்மமு ஜேஸிதே, மிகு3ல ப்3ரோவ தகு3னே;
    இராமா!
    • உனக்கே தயை வாராது நான் செய்யும் பணிகளெல்லாம் நிறைவேறுமா?
    • ஏகோபிக்காது, 'நான் நீ' யெனும் ஞானிக்கு எங்ஙனம் சுகம் தருமே?
      • மனது நில்லாதவர்கள் செப்பிடுவித்தைகள் செய்து எப்படியும் முத்தி பெறுதலாகுமே;
      • கண் சைகையினுக்கு வாராத பெண்ணை, வலுவில் கரமிட வயப்படலாகுமே;
      • பழக்கமற்ற வித்தைகளுடன், அவையில் வாதிக்க, செல்லத்தகுமே;
      • கோள் கேட்ட சொற்கள், உள்ளத்தினில் நில்லாத பண்புடைத்தோன் விதமாகுமே;
      • (பிறர்) மெச்சுதற்காக மிக்கு கொடையளித்தால் (இறைவன்) மிக்கு காக்கத் தகுமே;
    (nIkE daya rAka - nIlAmbari) Top
    • என்னக3 மனஸுகு ரானி, பன்னக3 ஸா1யி ஸொக3ஸு, பன்னுக3 கனுகொனனி கன்னுலேலே? கன்னுலேலே? கண்டி மின்னுலேலே?
    • மோஹமுதோ, நீல வாரி வாஹ காந்தினி கேரின, ஸ்ரீ ஹரினி கட்டுகொனனி தே3ஹமேலே? தே3ஹமேலே? ஈ கே3ஹமேலே?
    • ஸரஸிஜ, மல்லெ, துளஸி, விருவாஜி, பாரிஜாதபு விருலசே பூஜிஞ்சனி கரமுலேலே? கரமுலேலே? ஈ காபுரமுலேலே?
    • மாலிமிதோ, த்யாக3ராஜுனு ஏலின ராம மூர்தினி லாலிஞ்சி பொக33னி நாலிகேலே? நாலிகேலே? ஸூத்ர மாலிகேலே?
    • எண்ணுதற்கு மனதிற்கெட்டாத, அரவணையோனின் ஒயிலினை நன்கு கண்டுகொள்ளாத கண்களெதற்கோ? கண்களெதற்கோ? கண்களின் ஒளியெதற்கோ?
    • பேருவகையுடன், நீல முகிலின் மிளிர்ச்சியினைப் பழிக்கும் அரியினை, அணைத்துக்கொள்ளாத மேனியெதற்கோ? மேனியெதற்கோ? இவ்வில்லமெதற்கோ?
    • தாமரை, மல்லிகை, துளசி, இருவாட்சி, பவளமல்லி ஆகிய மலர்கொடு தொழாத கரங்களெதற்கோ? கரங்களெதற்கோ? இக்குடும்பமெதற்கோ?
    • கனிவுடன், தியாகராசனை ஆண்ட இராம மூர்த்தியினை ஏத்திப் புகழாத நாவெதற்கோ? நாவெதற்கோ? செபமாலையெதற்கோ?
    (இப்பாடல், பிரகலாதன், இறைவனின் அண்மையில்லாமை குறித்து தன்னையே நொந்துகொள்வதாக அமைந்துள்ளது.) (ennaga manasuku - nIlAmbari) Top
    • ஆகாஸ11ரீரமு ப்3ரஹ்மமனே, ஆத்மா ராமுனி தா ஸரி ஜூசுசு,
    • லோகாது3லு சின்மயமனு,
    • ஸுஸ்வர லோலுடௌ3, த்யாக3ராஜ ஸன்னுத, ஸீதா வர!
      • கீ3தா ஆதி3 அகி2ல உபநிஷத்-ஸார பூ4த ஜீவன்முக்துடு3 அகு3டகு,
      • ஸங்கீ3த ஞானமு, தா41வ்ராயவலெரா;
    • (வெட்ட) வெளி மெய், பிரமமெனும், ஆன்மா ராமனை, தான் சரிகண்டுகொண்டு,
    • உலகங்கள் சின்மயமெனும்,
    • இனிய சுரங்களில் திளைக்கும்,
    • தியாகராசனால் சிறக்கப் போற்றப் பெற்ற, சீதை மணாளா!
      • கீதை முதலாக, அனைத்து உபநிடத சாரமாகிய, பூத சீவன் முத்தனாகுதற்கு,
      • இசையறிவு, தாதை எழுதவேண்டுமய்யா;
    (sItA vara - dEva gAndhAri) Top
    மனஸா!
    • மரவகரா, நவ மன்மத2 ரூபுனி;
    • ஆ-ஜன்மமு, ஹ்ரு2த்3ராஜீவமுதோ பூஜிந்துர த்யாக3ராஜ நுதுனி.
    ஏ மனமே!
    • மறக்காதேயடா, இள மன்மத உருவத்தோனை;
    • வாழ்நாள் முழுதும், இதயக் கமலம்கொடு வழிபடுவேன், தியாகராசனால் போற்றப் பெற்றோனை.
    (maravakarA - dEva gAndhAri) Top
    • தன லோனே த்4யானிஞ்சி, தன்மயமே காவலெரா;
    • தன கு3ஹலோ, தானு உண்டெ3டு3 தாவுனு தெலியக3 வலெரா;
    • நீ மர்மமு, ஆ க்ஷணமே, நிஸ்1சயமை தெலுஸுனுரா;
    • 'ஏனு' அனு மாய, ஆ வேளனு, ஏ வங்கோ தெலியது3ரா;
    • தொலி கர்மமே, ப3லமு தோய கூட3து3, விதி4கி;
    • ப்ரக்ரு2தி ஸ்வபா4வமுலு, ப்ரஜ்வலிஞ்சுசுனு உண்டு3;
    • லக்ஷ்யமு ஜேயரு, மதி3லோ, லக்ஷ அந்தரமுலகைன;
    • ம்ரிங்கி3ன கள்ளகு, ருசுல மேலு கனே வாரு எவரு;
    • பூ4தமுலு ஐது3னு, நீவு, பொரல ஜேயுசுன்னாவு;
    • நிரவதி41ய்யபை, நீவு, நித்ய ஆனந்த3முன உன்னாவு;
    • ஸ்ரீ த்யாக3ராஜுனி சே பட்டி ரக்ஷிஞ்செத3வு;
    • தன்னுள்ளே தியானித்து, தன்மயமேயாக வேண்டுமய்யா;
    • தனது குகையினில் தானிருக்குமிடத்தினை அறியவேண்டுமய்யா;
    • உனது மருமம், அந்நொடியே உறுதியாகத் தெரியுமய்யா;
    • 'நான்' எனும் மாயை, அவ்வேளை, எம்மூலையிலோ, தெரியாதய்யா;
    • முன்வினையே (என்னை) வலிய தள்ளக்கூடாது, விதிக்கு;
    • இயற்கைத் தன்மைகள் சுடர்விட்டுக்கொண்டிருக்கும்;
    • (ஆயினும் தியானத்திலுள்ளோர்) சட்டை செய்யார், மதியினில், இலட்சம் இடைவெளிகளாயினும்;
    • விழுங்கிய கண்களுக்கு, சுவைகளின் மேன்மையைக் காண்பவர் யாரே?
    • (ஏனெனில்) பூதங்களைந்தினையும் நீ புரளச் செய்கின்றாய்;
    • அனந்த அணையின்மீது நீ அழிவற்ற ஆனந்தத்தினிலுள்ளாய்;
    • தியாகராசனைக் கைப்பற்றிக் காத்தனை.
    (இச்சொற்கள் பிரகலாதன் அரியை நோக்கி உரைப்பதாக) (tanalOnE dhyAninci - dEva gAndhAri) Top
    ஓ மனஸா!
    • த்யாக3ராஜு மனவி வினவே; விவரம்பு33 நே தெல்பெத3;
      • மனஸெரிங்கி3, கு-மார்க3முன மரி பொரலுசு செட3 வலதே3;
      • ஈ நட3தலு பனிகி ராது3; ஈஸ்1வர க்ரு2ப கலுக3 போது3;
      • த்4யான ப4ஜன ஸேயவே.
    ஓ மனமே!
    • தியாகராசனின் வேண்டுகோளினைக் கேளாயடி; விவரமாக நான் தெரிவிக்கின்றேன்;
      • மனதறிந்து, தவறான வழியில் மறுபடியும் புரண்டு, கெடக்கூடாதடி;
      • இந்நடத்தைகள் உதவா; ஈசனின் கிருபை யுண்டாகாது;
      • தியானம், பஜனை செய்வாயடி.
    (vinavE O manasA - vivardhani) Top
    • நருடை3 புட்டினந்து3கு, ராம நாம ஸ்மரணே ஸுக2மு;
    • வர ராஜ யோக3 நிஷ்டு2லௌ வாரிகி ஆனந்த3மந்தெ3டு அட்டு, ராம நாம ஸ்மரணே ஸுக2மு;
      • ராம நாம ஸ்1ரவணமு வல்ல, நாம ரூபமே ஹ்ரு23யமு நிண்டி3, ப்ரேம புட்ட ஸேயக3 லேதா3?
    • நிஷ்காம த்யாக3ராஜு ஸேயு ராம நாம ஸ்மரணே ஸுக2மு.
    • மனிதனாகப் பிறந்ததற்கு, இராம நாமத்தினை உள்ளுருவேற்றலே சுகமாகும்;
    • உயர் இராச யோகத்தினில் நிலைத்திருப்போராகிய அவர்களுக்கு, ஆனந்தம் நண்ணுதல் போன்று, இராம நாமத்தினை உள்ளுருவேற்றலே சுகமாகும்
      • இராம நாமத்தினைச் செவி மடுத்ததனால், நாமத்தின் உருவமே இதயத்தினில் நிறைந்து, (இறைவனிடம்) காதல் பிறக்கச் செய்யவில்லையா?
    • இச்சைகளற்ற, தியாகராசன் இயற்றும், இராம நாமத்தினை உள்ளுருவேற்றலே சுகமாகும்.
    (smaraNE sukhamu - jana ranjani) Top
    ராம ப4க்துடை3ன த்யாக3ராஜ வினுத, ராம!
    • 'தத்-த்வம்-அஸி'யனு வாக்யார்த2மு, நீவனு பர தத்வமெருக3 தரமா?
    • தாமஸ, ராஜஸ கு3ணமுல தன்னுகோள்ளு போத3யா;
    • வேத3, ஸா1ஸ்த்ர தத்வமெருக3 தரமா?
    இராமனின் தொண்டனாகிய தியாகராசனால் போற்றப் பெற்றோனே, இராமா!
    • 'தத்-த்வம்-அஸி' யெனும் வாக்கியத்தின் கருத்து, நீயெனும் பர தத்துவத்தினை அறியத் தரமா?
    • தாமத, இராசத குணங்களின் தொல்லைகள் போகாதய்யா;
    • மறைகள், சாத்திரங்களின் தத்துவத்தினை அறியத் தரமா?
    (tatvameruga - garuDa dhvani) Top
    பா4விஞ்சி, ராக3, லயாது3ல ப4ஜியிஞ்சே ஸ்ரீ த்யாக3ராஜ நுத, ராம!
    • அகி2ல நைக3ம ஆஸ்1ரித, ஸங்கீ3த ஞானமனு, ப்3ரஹ்மானந்த3 ஸாக3ரமீத3னி தே3ஹமு, பூ4 பா4ரமு;
    • பா4விஞ்சி, ராக3, லயாது3ல ப4ஜியிஞ்சே, ஆனந்த3 ஸாக3ரமீத3னி தே3ஹமு, பூ4 பா4ரமு;
    • ஸ்ரீ விஸ்1வ நாத2, ஸ்ரீ காந்த, விது4லு, பாவன மூர்துலு உபாஸிஞ்ச லேதா3!
  • உள்ளத்தினில் உணர்ந்து, ராகம், லயம் ஆகியவற்றினை பஜிக்கும், தியாகராசனால் போற்றப் பெற்ற, இராமா!
    • அனைத்து மறைகளும் சார்ந்திருக்கும் இசையின் அறிவெனும் பேரானந்தக் கடலினில் நீந்தாத உடல் புவிக்குச் சுமையே;
    • உள்ளத்தினில் உணர்ந்து, ராகம், லயம் ஆகியவற்றினை பஜிக்கும், ஆனந்தக் கடலினில் நீந்தாத உடல் புவிக்குச் சுமையே;
    • விசுவநாதன், இலக்குமி மணாளன், பிரமன் ஆகியோரும் (மற்ற) புனித மூர்த்திகளும் (இசையினை) வழிபட்டனரன்றோ!
    (Ananda sAgara - garuDa dhvani) Top
    ஸீதா ராம!
    • நீபை தனகு ப்ரேம போது3.
    • மனஸு நீ பத3முலனே ஜேர, கனுலு நீ ரூபமுனே கோர, நீ பேருலகே நோரூர - தனபை இதி3 நீ 4கருணேரா;
    • ஜனனீ, ஜனக, ஆப்துலு, அன்யுலு, த4ன, கனக, கு3ரு, வேல்புலு, தி3னமு நீவேயனி மாடலு - இவி நா பூ4ஷணமுலு;
    • போ43 அனுப4வமுலந்து3, பா3கு33, பு3த்3தி4 நீயந்து3;
    • த்யாக3ராஜுனி ஹ்ரு23யமந்து3 வாகீ3ஸா1னந்த3மு அந்து3.
    சீதாராமா!
    • உன்மீது தனக்கு காதல் அகலாது;
    • மனது உனது திருவடிகளையே நாட, கண்கள் உனதுருவத்தினையே விழைய,உனது பெயர்களுக்கே நாவூர - என்மீது இஃதுனது கருணையே அய்யா;
    • தாய், தந்தை, உற்றார் உறவினர், மற்றோர், செல்வம், பொன், குரு, தெய்வம் (ஆகியவை) என்றும் நீயேயெனும் சொற்கள் - இவையேயெனது அணிகலன்களாகும்;
    • உலக இன்பங்களைத் துய்க்கும்போதும், நன்கு (எனது) அறிவு உன்னிடமே;
    • தியாகராசனின் இதயத்தினில் பேரானந்தம் எய்தும்.
    (வாகீ3ஸா1னந்த3மு - ப்3ரஹ்மானந்த3மு) (rAma nIpai tanaku - kEdAraM) Top
    ராம!
    • மரசே வாட3னா, நினு? நீயொக்க மதி3னெஞ்ச வலது3.
      • கானி மானவுலு, கருண லேக, நாபை லேனி நேரமுலெஞ்சின கானி,
      • ஸ்ரீ நிஜமுக3, நா செந்த ஜேரின கானி,
    • ரானி நீ த3ய மரசே வாட3னா?
    இராமா!
    • மறப்பவனா, உன்னை (நான்)? உனதொரு மனத்தினில் (அப்படி) எண்ணலாகாது;
      • வேண்டாத மனிதர்கள், கருணையின்றி, என்மீது இல்லாத குற்றங்கள் கண்டாலும்,
      • செல்வம், உண்மையாகவே, என்னை வந்தடைந்தாலும்,
    • வாராத உனது தயையினை, மறப்பவனா, (நான்)?
    (வாராத - கிடைத்தற்கரிய) (maracE vADanA - kEdAraM) Top
    நீரஜாக்ஷ!
    • நின்னாட3னேல?
    • கன்னவாரி பைனி காக ஸேயனேல?
      • கர்மமுனகு தகி3னட்லு, கார்யமுலு நடு3சுனு;
      • 4ர்மமுனகு தகி3னட்லு, தை3வமு ப்3ரோசுனு;
      • சித்தமுனகு தகி3னட்லு ஸித்3தி4யு கல்கு3னு;
      • வித்தமுனகு தகி3னட்லு வேடு3க நடு3சுனு;
    • ஸன்னுதி ஜேஸி, தத்வமு தெலிஸின, த்யாக3ராஜுனிகி, நின்னாட3னேல?
    கமலக்கண்ணா!
    • உன்னை குறை கூறுவானேன்?
    • கண்டவர்களின் (அல்லது பெற்றோர்) மீது ஆத்திரப் படலேன்?
      • கருமத்திற்கேற்ப, காரியங்கள் நடக்கும்;
      • அறத்திற்கேற்ப, தெய்வம் காக்கும்;
      • எண்ணத்திற்கேற்ப, வெற்றி கிடைக்கும்;
      • காசுக்கேற்ப, கூத்து நடக்கும்;
    • உன்னை சிறக்கப் போற்றி, உண்மை யறிந்த தியாகராசனுக்கு, உன்னை குறை கூறுவானேன்?
    (ninnADanEla - kannaDa) Top
    ராம!
    • இதே3 பா4க்3யமு கா3க, ஏமி உன்னதி3ரா?
    • ஸதா3 நீ பத3 பங்கஜமுலனு, ஸம்மதமுக3 பூஜிஞ்சு, வாரிகி, இதே3 பா4க்3யமு கா3க, ஏமி உன்னதி3ரா?
      • ஹ்ரு23ய அரவிந்த3முன நின்னு உஞ்சி,
      • தானே ப்3ரஹ்மானந்த3மு அனுப4விஞ்சி,
      • இந்து34ரு மொத3லு அந்த3ரினி, ஸுர ப்3ரு2ந்த3, பூ4-ஸுர ப்3ரு2ந்த3முல, தானு எந்து3 கனி,
    • ஆனந்த3முன, நீயந்து3 பா4வன ஜெந்து3சு உண்டு3 வாரிகி, இதே3 பா4க்3யமு கா3க, ஏமி உன்னதி3ரா?
      • ஆஸ1 பாஸ1முல தெக3 கோஸி,
      • அன்னியு மதி3 ரோஸி,
      • கர்மமு பா3ஸி,
      • நின்னு கருணா வாராஸி1யனி பூஜ ஜேஸி,
      • து3ஸ்-ஸங்க3தி ஜேஸி, மேனு கா3ஸி ஜெந்த3க,
      • நினு காஸீ11 நுதுட3னி, ஆஸ1 நீயெட3,
    • கீஸ14க்தியு ஜேஸின வாரிகி, இதே3 பா4க்3யமு கா3க, ஏமி உன்னதி3ரா?
      • நீவே க3தியனி பட்டி,
      • ராகா3து3ல தோட3 பூரித ப4வ ஸாக3ரமுனு தா3டி,
    • ஸந்ததமுனு, வேத3 ஆக3மாது3ல வேக3 நுதினிடு3, பா43வதுட3கு3, த்யாக3ராஜுனிகி இதே3 பா4க்3யமு கா3க, ஏமி உன்னதி3ரா?
    இராமா!
    • இதுவே பேறல்லாது (வேறு) என்ன உள்ளதய்யா?
    • எவ்வமயமும், உனது திருவடித் தாமரையினை, முழு மனதுடன் தொழுவோருக்கு, இதுவே பேறல்லாது, (வேறு) என்ன உள்ளதய்யா?
      • இதயக் கமலத்தினில், உன்னையிருத்தி,
      • தானே பரமானந்தத்தினைத் துய்த்து,
      • பிறையணிவோன் முதலாக, வானோர்கள், அந்தணர்கள் யாவரிலும், தன்னை எங்கும் கண்டு,
    • ஆனந்தமாக, உன்னிடம் உள்ளுணர்வு கொண்டிருப்போருக்கு, இதுவே பேறல்லாது, (வேறு) என்ன உள்ளதய்யா?
      • ஆசை, பாசங்களை அற வீழ்த்தி,
      • யாவும் மனத்தாலும் துறந்து,
      • கருமங்களை விடுத்து,
      • உன்னை கருணைக் கடலென தொழுது,
      • தீய நட்பு கொண்டு உடல் துயருறாது,
      • உன்னை, காசி ஈசனால் போற்றப் பெற்றோனென, உன்னிடம் காதலும்,
    • அனுமன் (போன்ற) பக்தியும் செய்வோருக்கு, இதுவே பேறல்லாது, (வேறு) என்ன உள்ளதய்யா?
      • நீயே புகலெனப் பற்றி,
      • இராகம் ஆகியவற்றின் துணையுடன், நிறை பிறவிக் கடலினைத் தாண்டி,
    • மறைகள், ஆகமங்கள் ஆகியவற்றின் ஊக்கத்துடன், எவ்வமயமும் போற்றி செய்யும், பாகவதனாகிய, தியாகராசனுக்கு, இதுவே பேறல்லாது, (வேறு) என்ன உள்ளதய்யா?
    (idE bhAgyamu - kannaDa) Top
    ஓ மனஸா!
    • ரஞ்ஜிம்ப ஜேஸெடு3 ராக3ம்பு3லு, மஞ்ஜுளமகு3னவதாரமுலெத்தி, மஞ்ஜீரமு க4ல்லனி நடிஞ்சு மஹிம தெலியு த்யாக3ராஜ நுதுட3கு3 ஸ்ரீப ப்ரிய ஸங்கீ3தோபாஸன சேயவே.
    ஏ மனமே!
    • களிப்பூட்டும் இராகங்கள், எழிலான வடிவங்களெடுத்து, சதங்கைகள் கலீரென, நடமிடும் பெருமை அறியும், தியாகராசனால் போற்றப் பெற்றோனாகிய, மாமணாளனுக்கு விருப்பமான இசை வழிபாட்டினைச் செய்வாய்.
    (Sripa priya - aThANA) Top
    மானஸ!
    • ராம ப4ஜன ஸேய ராதா3?
      • 4வ ஸாக3ரமுனனு தரிம்ப, த்யாக3ராஜு மனவினி வினி,
      • அஜ ருத்3ராது3லகு ஸததமு ஆத்ம மந்த்ரமைன,
    • தாரகமகு3, ராம நாம ப4ஜன ஸேய ராதா3?
      • கரகு33ங்கா3ரு வல்வ கடினெந்தோ மெரயக3, சிரு நவ்வுலு-க3ல முக2முனு சிந்திஞ்சி சிந்திஞ்சி,
      • அருண ஆப4 அத4ரமுனு, ஸுருசிர த3ந்த ஆவளினி, மெரயு கபோல யுக3முனு, நிரதமுனனு தலசி தலசி,
    • ராம ப4ஜன பா3கு33 ஸேய ராதா3?
    மனமே!
    • இராம பஜனை செய்யலாகாதா?
      • பிறவிக் கடலினைக் கடக்க, தியாகராசனின் வேண்டுகோளினை யேற்று,
      • பிரமன், உருத்திராதியருக்கு, எவ்வமயமும், தமது மந்திரமான,
    • தாரகமாகிய, இராம நாமத்தினை நன்கு பஜனை செய்யலாகாதா?
      • உருக்கிய பொன்னாடை இடையில் மிக்கொளிர, புன்சிரிப்பு திகழும் முகத்தினைச் சிந்தித்துச் சிந்தித்து,
      • மிளிரும் சிவந்த உதடுகளை, அழகிய பல்வரிசைகளை, பளபளக்கும் கன்ன இணையினை, என்றும் நினைந்து நினைந்து,
    • இராம நாமத்தினை நன்கு பஜனை செய்யலாகாதா?
    (bhaja sEya rAdA - aThANA) Top
    நாரத3 கா3ன லோல!
    • நீவு லேகயே தனுவுலு நிரதமுகா3 நடு3சுனு?
    • நீவு லேகயே தருவுலு நிக்கமுகா3 மொலுசுனு?
    • நீவு லேகயே வானலு நித்யமுகா3 குரியுனு?
    • நீவு லேக த்யாக3ராஜு நீ கு3ணமுலனெடு பாடு3னு?
    நாரதரின் இசை விரும்பியே!
    • நீயின்றி எவ்வுடல்கள் என்றும் நடக்கும்?
    • நீயின்றி எம்மரங்கள் திண்ணமாக வளரும்?
    • நீயின்றி எம்மாரிகள் நிலையாகப் பெய்யும்?
    • நீயின்றி தியாகராசன் உனது குணங்களையெங்ஙனம் பாடுவான்?
    (nArada gAna - aThANA) Top
    மனஸா!
    • செடே3 பு3த்3தி4 மானுரா;
    • இடே3 பாத்ரமெவரோ ஜூட3ரா;
    • பூ4 வாஸிகி, தகு32லமு கல்கு3னனி, பு3து4லு பல்க வின லேதா3?
    • ஸ்ரீ வாஸுதே3வஸ்ஸர்வமனுசுனு சிந்திஞ்சரா த்யாக3ராஜ வினுதுனி.
    மனமே!
    • கெட்டுப்போகும் புத்தியினைக் கைவிடடா;
    • இங்கு பாத்திரமெவரோ காணடா;
    • புவி வாசிக்கு தகுந்த பயனுண்டாகுமென, அறிஞர்கள் சொல்லக் கேட்டிலையோ?
    • வாசுதேவனே அனைத்துமென சிந்திப்பாயடா, தியாகராசனால் போற்றப் பெற்றோனை.
    (ceDE buddhi - aThANA) Top
    ராமா!
    • மட்டு மிதமு லேனட்டி தே3வதா மதமுலலோ ஜொரப3டு3தா3மண்டே, கட்டு ஜேஸினாவு 'ராம ப3ந்து3'.
    • மா மதமுலனு லலாடமுன, பிதாமஹுடு3 வ்ராய லேத3னுசுனு, காம மத3முலகு ஹிதவனுசு, நிஷ்காம த்யாக3ராஜுகு, மரி மரி தோசே, கட்டு ஜேஸினாவு 'ராம ப3ந்து3'
    இராமா!
    • எண்ணிறந்தது போலும், கடவுளரின் மதங்களில் நுழைவோமென்றால், (என்னைக்) கட்டியுள்ளாய், 'இராமனின் அடிமை' யென.
    • எமது மதத்தினை நெற்றியில் தாதை எழுதவில்லையாதலால், (மற்ற மதங்கள்) ஆசை, செருக்கு ஆகியவற்றிற்கு உகந்தவையென, பற்றற்ற, தியாகராசனுக்கு, திரும்பத்திரும்பத் தோன்றுகின்றது, (என்னைக்) கட்டியுள்ளாய் 'இராமனின் அடிமை' யென.
    (kaTTu jEsinAvu - aThANA) Top
    ஸ்ரீ ராம!
    • ஸந்ததமு நின்னே நெர நம்மினானு;
      • கன்ன கன்ன வாரினி வேடு3கொன்னானு; ப2லமு லேத3னி, நின்னே நெர நம்மினானு;
      • தா3ர, தனயுல, உத3ர பூரணமு ஸேயு கொரகு, தூ3ர தே31முலனு ஸஞ்சாரமு ஜேஸி, ஸாரமிந்தைன லேக, வேஸாரி, ஈ ஸம்ஸார பாராவாரமந்து3 கலுகு32லமு ஈ தா3ரியனி தெலிஸி, நின்னே நெர நம்மினானு;
      • ஸஞ்சித கர்மமு தொலகி3ஞ்சி, நன்னு ஏ வேள கருணிஞ்சி, ப்3ரோசு, தை3வமு நீவனுசு யாசிஞ்சி, கொஞ்செபு நருல நுதியிஞ்சனு நா வல்லனு காது3 அஞ்சுனு, து3ஸ்-ஸங்க3தி சாலிஞ்சி ஸந்ததமு, நின்னே நெர நம்மினானு;
      • பூ4தலமுன, ஒக்கரி சேதி த4னமபஹரிஞ்சு கா4தகுல, பரலோக பீ4தியு லேனி பாதகுல பட்டி, யம தூ3தலு கொட்டெடி3 வேள, ப்3ரோதுனனி பல்கனு, எவரி சேத காத3னி, நின்னே நெர நம்மினானு.
    ஸ்ரீ ராமா!
    • எவ்வமயமும் உன்னையே மிக்கு நம்பியுள்ளேன்;
      • கண்ட கண்டவர்களை வேண்டிக்கொண்டேன்; பயனில்லையென, நான் உன்னையே மிக்கு நம்பியுள்ளேன்;
      • மனைவி மக்களின் வயிற்றினை நிரப்புவதற்காக, தூர தேசங்களில் சஞ்சரித்து, சாரம் சிறிதுமின்றி, துயருற்று, இந்த சமுசாரக் கடலில் கிடைக்கும் பயன் இந்த விதமென உணர்ந்து, உன்னையே மிக்கு நம்பியுள்ளேன்;
      • முன்வினையை ஒழித்து, என்னை, எவ்வேளையும், கருணித்துக் காக்கும் தெய்வம் நீயென, இரந்து, அற்ப மனிதரைப் போற்ற என்னாலாகாதென, தீயோரிணக்கம் போதுமென்று, எவ்வமயமும், உன்னையே மிக்கு நம்பியுள்ளேன்;
      • புவியில் மற்றவரின் செல்வத்தினைக் கவரும் கொலையாளிகள், மற்றும், பரலோக அச்சமற்ற பாதகர்களைப் பிடித்து, நமனின் தூதர்கள் உதைக்கும்போது, காப்பேனெனப் பகர, எவராலும் இயலாதென, உன்னையே மிக்கு நம்பியுள்ளேன்.
    (ninnE nera namminAnu - Arabhi) Top
    மனஸா!
    • வேத3, புராண ஆக3ம, ஸா1ஸ்த்ராது3லககு ஆதா4ரமௌ, த்யாக3ராஜு ஸேவிஞ்சு, நாத3 ஸுதா4 ரஸம்பு3, இலனு, நர ஆக்ரு2தியாயே;
      • ஸ்வரமுலு ஆருன்னொகடி க4ண்டலு;
      • வர ராக3மு கோத3ண்ட3மு;
      • து3ர, நய, தே3ஸ்1யமு த்ரி கு3ணமு;
      • நிரத க3தி ஸ1ரமுரா;
      • ஸரஸ ஸங்க3தி ஸந்த3ர்ப4மு க3ல கி3ரமுலுரா;
    • 4ர ப4ஜன பா4க்3யமுரா.
    மனமே!
    • வேத, புராண, ஆகம, சாத்திரங்கள் ஆகியவற்றிற்கு ஆதாரமான, தியாகராசன் சேவிக்கும், நாதமெனும் அமுதச்சாறு இங்கு (இராமனாக) மனித உருவானதே!
      • சுரங்கள் ஆறோடொன்று, மணிகளாக,
      • உயர் ராகம், கோதண்டமாக,
      • துரம், நயம், தேசியம், (நாணின்) முப்பிரிகளாக,
      • நிலையான கதி, அம்புகளடா;
      • இனிய சங்கதி, தருணத்திற்கேற்றச் சொற்களடா;
    • வில்லேந்துவோனின் பஜனையே பேறாகுமடா.
    (nAda sudhA rasam - Arabhi) Top
    ஓ மனஸா!
    • ஸ்வர, ராக3 ஸுதா4 ரஸ யுத ப4க்தி, ஸ்வர்கா3பவர்க3முரா;
    • பரமானந்த3மனே கமலமுபை, ப3க, பே4கமு செலகி3யேமி?
      • மூலாதா4ரஜ நாத3மெருகு3டே முத3மகு3 மோக்ஷமுரா;
      • கோலாஹல, ஸப்த ஸ்வர க்3ரு2ஹமுல கு3ருதே மோக்ஷமுரா;
      • 3ஹு ஜன்மமுலகு பைனி, ஞானியை பரகு3ட, மோக்ஷமுரா;
    • ஸஹஜ ப4க்திதோ, ராக3, ஞான ஸஹிதுடு3, முக்துடு3ரா;
    • மர்த3ல தாள க3துலு தெலியகனே, மர்தி3ஞ்சுட ஸுக2மா? ஸு1த்34 மனஸு லேக, பூஜ ஜேயுட ஸூகர வ்ரு2த்திரா;
    • ரஜத கி3ரீஸு1டு3, நக3ஜகு தெல்பு, 'ஸ்வரார்ணவ' மர்மமுலு, விஜயமு க3ல த்யாக3ராஜுடெ3ருகே3;
    விஸ்1வஸிஞ்சி தெலுஸுகோ. ஏ மனமே!
    • சுர, ராக அமுதச் சாறு கூடின பக்தி வானுலகமும், மோக்கமுமாகுமடா;
    • பேரானந்தமெனும் கமலத்தின் மீது கொக்கும், தவளையும் திகழ்ந்தென்ன (பயன்)?
      • மூலாதாரத்திலெழும் நாதத்தினையறிதலே களிப்புடை மோக்கமடா;
      • (உடலில்) கோலாகலமான ஏழு சுரங்களின் இருப்பிடங்களைத் தெரிதலே மோக்கமடா;
      • பல பிறவிகளுக்குப் பின்னர் ஞானியாகித் திகழ்தல் மோக்கமடா;
    • உடன் பிறந்த பக்தியுடன், ராக ஞானமும் உடையோன் முத்தனடா;
    • மத்தளத்தின் தாள நடைகளறியாமலே (மத்தளத்தினை) அடித்தல் சுகமா? (அங்ஙனமே) தூய உள்ளமின்றி வழிபாடு செய்தல் பன்றியொழுக்கமடா;
    • பனி மலையீசன் மலைமகளுக்குத் தெரிவிக்கும், சுரக்கடலின் மருமங்கள், வெற்றியுடைத் தியாகராசன் அறிவானே;
    நம்பித் தெரிந்துகொள்வாய். (svara rAga sudhA - SankarAbharaNaM) Top
  • ராம!
    • விஷயாலு ஏல ரோயரோ எப்புடு3?
    • ராயாயீ தே3ஹமு?
  • ராமா!
    • விடயங்களை (மனிதர்கள்) ஏனோ வெறுக்கமாட்டார், எவ்வமயமும்?
    • கல்லோ யிவ்வுடல்?
    (விடயங்கள் - புலன் நுகர்ச்சி) (rAma sItA rAma - SankarAbharaNaM) Top
  • ராம!
    • நீ ப4க்தி ஸதா3 பாலிஞ்சுனு; மோக்ஷமொஸகு3; நீ ஸன்னிதி4னி ப்ரமாணமு ஜேஸி பல்கெத3;
    • ஸத்வ கு3ணம்பு3னனு உபாஸனமு ஒனரிஞ்சிரி பெத்33லு; தத்வமு தெலிஸெனு இக ப4வ தரணோபாயமு நீவனி;
    • லோகுலு நிஜ தா3ஸுல கனி, லோபடு3 து3ரஸூயலதோ, நினு தூ3ஷிஞ்சின, செடி3 போலேரு கானி.

  • இராமா!
    • உனது பற்று எவ்வமயமும் பாதுகாக்கும்; வீடருளும்; (இதை) உனது புனித முன்னிலையில் ஆணையிட்டுச் சொன்னேன்;
    • சத்துவ குணத்துடன் (உன்னை) வழிபாடு செய்தனர், சான்றோர்; தத்துவம் தெரிந்தது - இனி பிறவிக்கடலைத் தாண்டுவிக்கும் சாதனம் நீயென;
    • உலகோர், உண்மையான தொண்டர்களைக் கண்டு, உட்படும் தீய பொறாமையினால், உன்னைத் தூற்றினாலும், கேடுறாரன்றோ;
    (rAma ninu vinA - SankarAbharaNaM) Top
    த்யாக3ராஜ அர்சித!
    • ராக3மு, தாளமு, ரக்தி ப4க்தி ஞான யோக3மு, அனுராக3மு லேனி பா43வதுலு உத3ர ஸ1யனுலே கானி
    தியாகராசனால் தொழப்பெற்றோனே!
    • இராகம், தாளம், கனிந்த பக்தி (கூடிய) ஞான யோகம், அனுராகம் (இவை) அற்ற பாகவதர்கள் உதரத்தினில் உறங்குபவர்களேயன்றோ?
    (உத3ர ஸ1யன - மறுபடியும் தாய் வயிற்றினில் பிறத்தல்.) (mariyAda kAdurA - SankarAbharaNaM) Top
    த்யாக3ராஜ வினுத!
    • மனஸு ஸ்வாதீ4னமைன ஆ க4னுனிகி மரி மந்த்ர தந்த்ரமுலேல?
    • தனுவு தானு காத3னி எஞ்சு வானிகி தபஸு சேயனேல?
    • அன்னி நீவனுசு எஞ்சின வானிகி ஆஸ்1ரம பே43முலேல?
    • கன்னு கட்டு மாயலனி எஞ்சு வானிகி காந்தல ப்4ரமலேல?
    • ஆஜன்மமு து3ர்விஷய ரஹிதுனிகி க3தாக3தமு இகயேல?
    தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
    • மனது தன்வயப்பட்ட அச்சான்றோனுக்கு, பின்னர், மந்திர, தந்திரங்களேனோ?
    • உடல் தானல்ல என்றெண்ணுவோனுக்கு தவமியற்றலேன்?
    • அனைத்தும் நீயென்று எண்ணியவனுக்கு ஆச்சிரம வேறுபாடுகளேனோ?
    • கண்கட்டு மாயையென்று எண்ணுவோனுக்குப் பெண்களால் திகைப்பேனோ?
    • வாழ்நாள் முழுதும் தீய விடயங்களற்றோனுக்கு போக்கும் வரவும் இனியேனோ?
    (விடயங்கள் - புலன் நுகர்ச்சி) (manasu svAdhIna - SankarAbharaNaM) Top
  • 4க்த த்யாக3ராஜ நுத ராம!
    • பா4வுகமகு3 ஸாத்வீக ப4க்தி பி3ச்சமிய்யவே;
    • முக்திகி, அகி2ல ஸ1க்திகி, த்ரி-மூர்துலகு, அதி மேல்மி;
    • ப்ராணமு லேனி வானிகி, ப3ங்கா3ரு பாக3 சுட்டி, ஆணி வஜ்ர பூ4ஷணமுரமந்து3 பெட்டு ரீதி,
    • ஜாணலகு, புராண, ஆக3ம, ஸா1ஸ்த்ர, வேத3, ஜப, ப்ரஸங்க3 த்ராண கல்கி3யேமி?
    தொண்டன் தியாகராசனால் போற்றப் பெற்ற இராமா!
    • பேறெனத்தகும் சாத்துவிக பக்திப் பிச்சையிடுவாயய்யா;
    • முக்திக்கும், அனைத்து சக்திகளுக்கும், மும்மூர்த்திகளுக்கும் மிக்கு மேலானதாகும்;
    • உயிரற்றவனுக்கு பொற் பாகைச் சுற்றி, ஆணி வைர நகைககள் மார்பிலணிவித்தல் போலும்,
    • கெட்டிக்காரர்களுக்கு புராண, ஆகம, சாத்திர, வேதம் ஓதல், சொற்பொழிவுத் திறனுண்டாகியென்ன (பயன்)?
    (bhakti biccam - SankarAbharaNaM) Top
    • பூ4ரி வித்3யல நேர்சின,
    • தா4ன்ய த4னமுல சேத த4ர்மமெந்தயு ஜேஸின,
    • மானக பா43வதாதி3 ராமாயணமுலு சதி3வின,
    • யோக3முலப்4யஸிஞ்சின போ43முலெந்தோ கலிகி3ன,
    • பெத்331ஸுத்3து3லு வினக,
    • நான்ய சித்த ப4க்துல வாக3ம்ரு2த பானமு ஸேயக,
    • மானுஷாவதார சரித மர்மக்3ஞுல ஜத கூட3க,
    • த்யாக3ராஜ நுதுடௌ3 ராம தா3ஸுல செலிமி ஸேயக,
  • பு3த்3தி4 ராது3.
    • மிக்கு வித்தைகள் கற்றிடினும்,
    • உணவுப்பண்டங்கள், செல்வத்தினால் தருமங்களெத்தனை செய்திடினும்,
    • தவறாது, பாகவதம், இராமாயணம் ஆகியவை ஓதிடினும்,
    • யோகங்கள் பயின்றிடினும், புவியின்பங்க ளெத்தனையோ உண்டாயினும்,
    • சான்றோர் சொற்களைக் கேளாது,
    • மற்ற எண்ணங்களற்ற தொண்டர்களின் சொல்லமிழ்து பருகாது,
    • மானிட உருவ (இராமனின்) சரித மருமமறிந்தோரின் கூட்டு சேராது,
    • தியாகராசன் போற்றும் இராமனின் தொண்டர்களின் நட்பு கொள்ளாது,
  • அறிவு வாராது. (அறிவு - இறைவனை உணரும் மெய்யறிவு) (buddhi rAdu - SankarAbharaNaM) Top
    • மனஸா!
    • ராம ப4ஜன பருலகேல த3ண்ட3 பாணி ப4யமு?
    • அஜ ருத்32ஸுரேஸு1லகு ஆயா ஸ்தா2னமொஸங்கு3 ராம ப4ஜன பருலகேல த3ண்ட3 பாணி ப4யமு?
      • அண்ட3 கோட்லு நிண்டி3ன, கோத3ண்ட3 பாணி முக2முனு, ஹ்ரு2த்-புண்ட3ரீகமுன ஜூசி, பூஜ ஸல்புசு, நிண்டு3 ப்ரேமதோ கரங்கு3 நிஷ்காமுலகு,
      • வர வேத3ண்ட3 பாலு தா3ஸுடை3ன, த்யாக3ராஜு ஸேயு ராம ப4ஜன பருலகு,
    • ஏல த3ண்ட3 பாணி ப4யமு?
    • மனமே!
    • இராமனின் பஜனையில் ஈடுபட்டோருக்கேன் தண்டபாணியின் அச்சம்?
    • பிரமன், உருத்திரன், வானோர் தலைவன் ஆகியோருக்கு அந்தந்தப் பதவிகளை வழங்கும் இராமனின் பஜனையில் ஈடுபட்டோருக்கேன் தண்டபாணியின் அச்சம்?
      • அண்டங்கள் கோடிகளில் நிறைந்துள்ள கோதண்டபாணியின் முகத்தினை, (தமது) இதயக் கமலத்தினிற் கண்டு, வழிபாடு செய்துகொண்டு, நிறை காதலுடன் உருகும் இச்சைகளற்றோருக்கும்,
      • உயர் வேழத்தினைக் காப்போனின் தொண்டனாகிய தியாகராசன் செய்யும் இராமனின் பஜனையில் ஈடுபட்டோருக்கும்
    • ஏன் தண்டபாணியின் அச்சம்?
    (தண்டபாணி - நமன்) (bhajana parulakEla - suraTi) Top
    • ஓ மனஸா!
    • கீ3தார்த2மு, ஸங்கீ3தானந்த3முனு, ஈ தாவுன, ஜூட3ரா;
    • ஸீதா பதி சரணாப்3ஜமுலிடு3கொன்ன வாதாத்மஜுனிகி பா33 தெலுஸுரா;
    • ஹரி, ஹர, பா4ஸ்கர, காலாதி3, கர்மமுலனு மதமுல மர்மமுலனெரிங்கி3ன, ஹரி வர ரூபுடு3, ஸுகி2ரா.
    • ஓ மனமே!
    • கீதையின் பொருளினையும், சங்கீதத்தின் ஆனந்தத்தினையும் இவ்விடத்தினில் காண்பாயடா;
    • சீதாபதியின் திருவடித் தாமரைகளை யேந்தியிருக்கும் வாயு மைந்தனுக்கு நன்கு தெரியுமடா;
    • அரி, அரன், பரிதி, சக்தி முதலான கருமங்கள் எனும் மதங்களின் மருமங்களினை யறிந்த, உயர் வானர உருவத்தோன், களிப்பவனடா.
    (gItArthamu - suraTi) Top
    • ஸா1ந்தமு லேக ஸௌக்2யமு லேது3
    • தா3ந்துனிகைன வேதா3ந்துனிகைன ஸா1ந்தமு லேக ஸௌக்2யமு லேது3
      • தா3ர, ஸுதுலு, த4ன, தா4ன்யமுலு உண்டி3ன,
      • ஸாரெகு, ஜப, தப, ஸம்பத3 கல்கி3ன,
      • ஆக3ம ஸா1ஸ்த்ரமுலு அன்னியு சதி3வின,
      • பா43வதுலு அனுசு பா3கு33 பேரைன,
      • யாக3 ஆதி3 கர்மமுலு அன்னியு ஜேஸின,
      • பா3கு33 ஸகல ஹ்ரு2த்3பா4வமு தெலிஸின,
    • ஸா1ந்தமு லேக ஸௌக்2யமு லேது3
    • தனகு உபஸா1ந்தமு லேக ஸௌக்2யமு லேது3
    • (மன) அமைதியின்றி சௌக்கியமில்லை;
    • தவசிக்காகிலும், வேதாந்திக்காகிலும் (மன) அமைதியின்றி சௌக்கியமில்லை;
      • மனைவி, மக்கள், செல்வம், தானியங்களுடைத்தாயினும்,
      • எவ்வமயமும் செப, தவச் செல்வங்களுண்டாகினாலும்,
      • ஆகம சாத்திரங்களனைத்தினையும் கற்றிடினும்,
      • பாகவதரெனச் சிறக்க பெயர் பெற்றிடினும்,
      • வேள்வி முதலான கருமங்களனைத்தும் இயற்றிடினும்,
      • (அவற்றின்) உட்கருத்தினையெல்லாம் நன்கறிந்திடினும்,
    • (மன) அமைதியின்றி சௌக்கியமில்லை;
    • தனக்கு உபசாந்தமின்றி சௌக்கியமில்லை.
    (SAntamu lEka - SAma) Top
    • ஓ மனஸா!
    • எடுலைன ப4க்தி வச்சுடகே யத்னமு ஸேயவே;
    • மடு-மாய ப4வமுனு மனத3னி எஞ்சக, வட பத்ர ஸ1யனுனி பாத3 யுக3முலந்து3 எடுலைன ப4க்தி வச்சுடகே யத்னமு ஸேயவே;
      • வித்3யா க3ர்வமுலேல?
      • நீவு அவித்3யா வஸ1மு கானேல?
      • 2த்3யோத அன்வய திலகுனி புரமேலு பு3த்3தி4 ஆஸு13 தோசதே3ல?
      • ராம நாமமு ஸேய ஸிக்3கா3? காராதே3மி? பல்கவு? புண்டி பு3க்3கா3?
      • பா4மல கர தா3டகயுண்டே, ஜக்33;
      • பாமர! மேனு நம்மக நீடி பு3க்33;
      • போ43 பா4க்3யமுலந்து3 நிஜ பா43வதுலகௌ நீ பொந்து3;
      • த்யாக3ராஜ வரது3னி நீயந்து3 பா3கு33 த்4யானிஞ்சு;
      • 4வ ரோக3 மந்து3.
    • ஓ மனமே!
    • எப்படியாகிலும் பக்தி வருதற்கே முயற்சிப்பாய்
    • கண்கட்டு மாய உலக வாழ்வினை நமதென எண்ணாது, ஆலிலையிற் றுயில்வோனின் திருவடி இணையினில் எப்படியாகிலும் பக்தி வருதற்கே முயற்சிப்பாய்
      • கல்விச் செருக்கேனோ? நீ அவித்தையின் வயப்படுவதேனோ?
      • பரிதி குலத் திலகத்தின் நகர் செல்லும் எண்ணம் சடுதியில் தோன்றாததேனோ?
      • இராம நாம (செபம்) செய்ய நாணமோ? செய்யக் கூடாதோ? பேசமாட்டாயோ? புண் வாயோ?
      • பெண்டிர் கரை தாண்டாதிருந்தால், மிக்க நன்று;
      • அறிவிலியே! உடலை நம்பாதே; (அது) நீர்க் குமிழி
      • இன்பம், பேறு - இவற்றிற்கிடையும், உண்மையான தொண்டர்களுடன் இருக்கட்டும் உனது தொடர்பு;
      • தியாகராசனுக் கருள்வோனை உன்னுள் நன்கு தியானிப்பாய்;
      • உலக வாழ்வெனும் நோய்க்கு (அதுவே) மருந்து.
    (eTulain bhakti - SAma) Top
    • மனஸா!
    • அதி3 காது34ஜன;
    • எத3லோன எஞ்சுட ஒகடி; பய்யெத3 கல்கி3னசோ ஒகடி; அதி3 காது34ஜன;
    • கொ3ப்ப தனமுகை ஆஸ; குத்ஸித விஷய பிபாஸ; மெப்புலகை ப3ஹு வேஸமிடி3 உப்33தில்லெத3ரு; அதி3 காது34ஜன.
    • மனமே!
    • அஃதன்று பஜனை;
    • உள்ளத்தினில் நினைப்பதொன்று, வெளியில் நடப்பதோ மற்றொன்று; அஃதன்று பஜனை;
    • பெரியதனத்திற்கு ஆசை; இழிந்த விடயங்களின் வேட்கை; பெயருக்கென பல வேடங்களிட்டு பெருமிதமுறுவர்; அஃதன்று பஜனை.
    (adi kAdu bhajana - yadukula kAmbhOji) Top
    • மாகேலரா விசாரமு, ஸ்ரீ ராம சந்த்3ர?
    • ஜத கூர்சி, நாடக ஸூத்ரமுனு, ஜக3மெல்ல மெச்சக3, கரமுனனிடி3, க3தி தப்பக ஆடி3ஞ்செத3வு ஸுமீ!
    • இராம சந்திரா! எமக்கேனய்யா கவலை?
    • சோடுகட்டி, நாடகக் கயிற்றினை, உலகெல்லாம் மெச்ச, கரத்தினில் பற்றி, கதி தப்பாது, ஆட்டுவிக்கின்றாயன்றோ!
    (mAkElarA vicAramu - ravi candrika) Top
    • ஈ தனுவு அஸ்தி2ரமனி, ஈ கலி மானவுலகு, எந்து3கோ பா33 தெலியது3?
      • 3ட்டிக3 ராள்ளனு கட்டின க்3ரு2ஹமுலு,
      • மட்டு மிதமு லேனட்டி பரிஜனுலு,
      • சுட்டுகொன்ன நிஜ சுட்டாலகு, ஒருல பட்டுலகு அதி2துலகு பெட்ட லேக, தம பொட்ட ஸாகுகொன்ன, அட்டி தே3ஹமுலு,
      • ரெட்டு ஸஞ்சுலனு கட்டின த4னமுல பெட்டெல தோட3னு,
    • பெட்டி பொய்யே மட்டு கனுங்கொ3னி, எந்து3கோ பா33 தெலியது3 ஈ தனுவு அஸ்தி2ரமனி?
      • கல்லலாடி3, கடு3பு பல்லமு நிம்புடகு, எல்லவாரி த4னமெல்ல ஜேர்சுகொனி,
      • பல்லவாத4ருலனெல்ல கனி, ஸு1னகபு பில்லல வலெ திரிகி3,
        • வொள்ள ரோக3முலு கொள்ளகா3 தக3ல,
        • தொல்லி பைகமுலு மெல்ல ஜார,
        • ஜனுலெல்ல தூ3ர,
        • பரமெல்ல பார,
    • பு4வி மள்ளி புட்டு ப2லமெல்ல கனுங்கொ3னி, எந்து3கோ பா33 தெலியது3 ஈ தனுவு அஸ்தி2ரமனி?
      • வஞ்சகுலனு அனுஸரிஞ்சின அலமட இஞ்சுகைன ஸைரிஞ்ச லேக,
      • தம ஸஞ்சித கர்மமுலஞ்சு தெலிஸி,
      • வேரெஞ்சு வாரல ஜூசி,
      • மஞ்சு வலெ ப்ரதி-ப2லிஞ்சு ஸம்பத3லஞ்சு, கோரகனு,
    • மஞ்சி த்யாக3ராஜு, அஞ்சிதமுக3, பூஜிஞ்சு, நுதிஞ்சு ப்ரபஞ்ச நாது2னி ப4ஜிஞ்சுதா3மனுசு எந்து3கோ பா33 தெலியது3 ஈ தனுவு அஸ்தி2ரமனி?
    • இவ்வுடல் நிலையற்றதென இக்கலி மானிடர்களுக்கு ஏனோ நன்கு தெரியாது?
      • கெட்டியாக கற்களினால் கட்டிய வீடுகளும்,
      • மட்டு மிதமற்றதெனும் பரிசனங்களும்,
      • சூழ்ந்துள்ள உண்மையான சுற்றத்தினருக்கும், பிறர் மக்களுக்கும், விருந்தினருக்கும் ஈயாது, தமது வயிற்றினை நிரப்பி வளர்த்த அத்தகைய உடலும்,
      • சாக்குப் பைகளில் கட்டிய செல்வப் பெட்டகங்களுடனும்,
    • விட்டு வைத்து ஏகும் வரையினைக் கண்டுகொண்டும், ஏனோ நன்கு தெரியாது?
      • பொய்ப் பகன்று, வயிற்றுக் குழியினை நிரப்புதற்கு, பிறர் சொத்துக்களையெல்லாம் சேர்த்துக்கொண்டு,
      • மொட்டிதழ் பெண்டிரைக் கண்டு, நாய்க் குட்டிகளைப் போன்று திரிந்து,
        • உடலை நோய்கள் கொள்ளையாகப் பீடிக்க,
        • முந்தைய சொத்துக்களெல்லாம் மெள்ள கரைய,
        • மக்கள் யாவரும் தூற்ற,
        • பரமெல்லாம் நழுவ,
    • புவியில் மீண்டும் பிறக்கும் பயன்களைக் கண்டுகொண்டும், ஏனோ நன்கு தெரியாது?
      • வஞ்சகர்களை அனுசரித்தலின் துன்பத்தினைக் கொஞ்சமும் தாளாது,
      • தமது முந்தைய வினைகளெனத் தெரிந்து,
      • வேறெண்ணுவோரை நோக்கி,
      • பனித்துளி போன்று பிரதிபலிக்கும் சம்பத்துக்கள் என, (அவற்றினை) விழையாது,
    • சீரிய தியாகராசன் பணிவுடன் தொழும், போற்றும் உலகத் தலைவனை (நாமும்) வழிபடுவோமென, ஏனோ நன்கு தெரியாது?
    (endukO bAga - mOhanaM) Top
    • ஜராதி3 ரோக3 யுத தனுவுசே, நராத4முலுயேமி ஸாதி4ஞ்சிரி?
      • நிரந்தரமு, ஸகல விஷய து3க்க2 பரம்பரலசே, சிவுகக3,
      • மதி3லோ, து3ரந்த, காம, மத3முனு, பா3தி4ஞ்சக3,
      • து3ர்மதுடே3;
    • மூப்பினால் விளையும், நோயுற்ற உடலுடன், மனிதரில் இழிந்தோர் என்ன சாதித்தனர்?
      • இடைவிடாது, அனைத்து விடய (துய்ப்பின்) துன்பத் தொடரினால் (உடல்) மெலிய,
      • மனத்தினில், தீய முடிவுடைய, இச்சை, செருக்கு (ஆகியவை) தாக்க,
      • தீயவுள்ளத்தோராகினர்.
    (virAja turaga - balahaMsa) Top
    • அத்3வைத ஸாம்ராஜ்யமுலு அப்3பி3னட்டு, ஸத்3-வைராக்3யமுனு; இதி3யு ஸாயுஜ்யமே; ஆக3ம நிக3மமுலகுனு அர்த2மிதி3
    • இரண்டன்மை (அத்துவைத) பேரரசினை யடைதல் போன்று, உண்மையான பற்றறுத்தலும்; இஃதும் சாயுச்சியமே; ஆகமங்கள், மறைகளின் பொருளிதுவே.
    (rAma sItA rAma - balahaMsa) Top
    • த்யாக3ராஜ ஹ்ரு2த்3-தா4ம! வினு!
    • கனுலகு சலுவ, செவுலகம்ரு2தமு, ரஸனகு ருசி, மனஸுகு ஸுக2மு, தனுவுகானந்த3முனு கல்க3 ஜேஸே நினு பா3ஸியெடுலுந்து3ரோ நிர்மலாத்முலௌ ஜனுலு!
    • தியாகராசனின் இதயத்துறையே! கேளாய்!
    • கண்களுக்குக் குளிர்ச்சியும், செவிகளுக்கு அமிழ்தும், நாவிற்குச் சுவையும், மனதிற்குச் சுகமும், மெய்க்குக் களிப்பினையும் உண்டாகச் செய்யும், உன்னைப் பிரிந்து எப்படியிருப்பரோ, தூய உள்ளம் படைத்த மக்கள்!
    (ninu bAsi - balahaMsa) Top
    • மனஸா!
    • இக காவலஸினதே3மி? ஸுக2முனனுண்ட3வதே3மி?
      • அகி2லாண்ட3 கோடி ப்3ரஹ்மாண்ட3 நாது2டு3 அந்தரங்க3முன நெலகொனியுண்ட33...
      • முந்த3டி ஜன்மமுலனு ஜேஸின அக4 ப்3ரு2ந்த3 விபினமுலகு, ஆனந்த3 கந்து3டை3ன ஸீதா பதி நந்த3க யுதுடை3யுண்ட33...
      • காமாதி3 லோப4, மோஹ, மத3, ஸ்தோம தமம்முலகுனு, ஸோம ஸூர்ய நேத்ருடை3ன ஸ்ரீ ராமசந்த்3ருடே3 நீயந்து3ண்ட33...
      • க்ஷேமாதி3 ஸு14முலனு, த்யாக3ராஜ காமிதார்த2முலனு நேமமுனனிச்சு, த3யா நிதி4, ராமப4த்3ருடு3, நீயந்து3ண்ட33...
    • இக காவலஸினதே3மி? ஸுக2முனனுண்ட3வதே3மி?
    • மனமே!
    • இன்னும் வேண்டியதென்ன, சுகமாய் இராயேனோ?
      • அனைத்தண்ட கோடி பிரம்மாண்ட நாதன் அந்தரங்கத்தினில் நிலைபெற்றிருக்க...
      • முந்தைய பிறவிகளில் செய்த பாவங்களெனும் அடவியையழிக்க, ஆனந்தக் கிழங்கான சீதாபதி, நந்தகத்துடனிருக்க...
      • இச்சை, கருமித்தனம், மயக்கம், செருக்கு ஆகிய இருட்டினுக்கு, மதி, பரிதிகளைக் கண்களாயுடைய இராமசந்திரனே உன்னுள்ளிருக்க...
      • நிம்மதி ஆகிய நலன்களையும், தியாகராசன் விரும்பியவற்றினையும், தவறாது வழங்கும் கருணைக் கடலான இராம பத்திரன் உன்னுள்ளிருக்க...
    • இன்னும் வேண்டியதென்ன? சுகமாய் இராயேனோ?
    (ika kAvalasinadEmi-balahaMsa) Top
    • மனஸா!
    • ஸ்ரீ த்யாக3ராஜ நுதுனி தலசக, மனஸு விஷய நட விடுலகு ஒஸங்கி3தே, மா ராமுனி க்ரு2ப கலுகு3னோ?
    • தன தலுபு ஒகரிண்டிகி தீஸி பெட்டி, தா குக்கலு தோலு ரீதி காதோ3?
    • தவிடிகி ரங்காட3 போயி, கூடி தபிலெ, கோதி கொனிபோயினடு காதோ3?
    • செவிடிகி உபதே3ஸி1ஞ்சினடு காதோ3?
    • மனமே!
    • தியாகராசனால் போற்றப் பெற்றோனை நினையாது, மனத்தினை விடய களவொழுக்கத்தினருக்கு அளித்தால், எமது இராமனின் கிருபை யுண்டாகுமோ?
    • தன் கதவை பிறர் வீட்டிற்குப் பெயர்த்து வைத்து, தான், நாய்களை விரட்டுதல் போன்றாகாதோ?
    • தவிட்டுக்கு வேசியாடச் செல்ல, கூழ்ப் பானையை குரங்கு கொண்டுபோனது போன்றாகாதோ?
    • செவிடனுக்கு உபதேசித்தது போன்றாகாதோ?
    (manasu vishaya-nAtakuranji) Top
    • முல்லோகமுலு அல்லாடி3ன, இல்லே க3தி கானி
    • இலனந்தட கல வானகு, ஜலதே43தி கானி
    • கு3ணமுலலோன அணிகி3 உண்டே, கு3ணியே க3தி கானி
    • என்னி விதமுலுன்னானு, நின்னே சேரவலெ கானி
    • மூவுலகில் அலைந்தாலும் இல்லமே கதியன்றோ!
    • புவியெல்லாம் பெய்யும் மழைக்கு கடலே போக்கன்றோ!
    • குணங்களிலேயே அடங்கியிருந்தால் குணவானே கதியன்றோ!
    • எத்தனை நெறிகள் இருந்தாலும் உன்னையே யடையவேண்டுமன்றோ!
    (raghu nandana-kEdAragauLa) Top
    • நிஜமுக3 நீ மஹிம தெல்ப லேரு;
    • 4ஜன ஸேயுமனி பலிகிரி, கானி, அஜ - க3ஜ, ஸிம்ஹ - ஸ்ரு2கா3ல - அந்தரமனி நிஜமுக3 நீ மஹிம தெல்ப லேரு;
    • பு3த்3தி4யனு தல்லினி விஷய விடுலகு ப்ரொத்3து3ன ஒஸகி3 பைகமுலு ஆர்ஜிஞ்சே 'ஸித்3து4லு', ஸுஜனுல ஸப4கு ரா நேரனி 'பெத்33லு', நிஜமுக3 நீ மஹிம தெல்ப லேரு;
    • நிசமாக உனது மகிமையினைத் தெரிவிக்க மாட்டார்;
    • 'பஜனை செய்வீர்' எனப் பகர்ந்தனர்; ஆயின், ஆடு - யானை, சிங்கம் - ஓநாய்களின் வேறுபாடென, நிசமாக உனது மகிமையினைத் தெரிவிக்க மாட்டார்;
    • அறிவெனும் தாயினை விடயங்களெனும் காமுகர்களுக்கு காலைமுதல் அளித்து, பணம் தேட்டும் 'சித்தர்கள்', நல்லோரின் அவைக்கு வர நேராத 'பெரியோர்கள்', நிசமாக உனது மகிமையினைத் தெரிவிக்க மாட்டார்.
    nijamuga nI-SahAna) Top
    • ஸாரெகுனு, ஸம்ஸாரமுன ஜொச்சி, ஸாரமனியெஞ்சு வாரி மனஸுன, ஊரகே கல்கு3னா ராமுனி ப4க்தி?
    • ஆலு, ஸுதுலு, ஜுட்டாலு, வர ஸத3னாலு, காய ப3லாலு, கனக த4னாலு கல விப4வமுல கனி, அஸ்தி2ரமுலனே பா4க்3ய-ஸா1லுலகு கா3க, ஊரகே கல்கு3னா ராமுனி ப4க்தி?
    • மஞ்சி வாரினி பொட3கா3ஞ்சி, ஸந்ததமு ஸேவிஞ்சி, மனவினாலகிஞ்சி, ஆத3ரி ஸாதி4ஞ்சி, ஸர்வமு ஹரியஞ்சு தெலிஸி, பா4விஞ்சி, மதி3னி பூஜிஞ்சு வாரிகி கா3க ஊரகே கல்கு3னா ராமுனி ப4க்தி?
    • ராஜஸ கு3ண யுக்த பூஜலனொனரிஞ்சக, த்யாக3ராஜுனி ஜிஹ்வபை ராஜில்லு, வர மந்த்ர ராஜமுனு, ஸதா3 ஜபிஞ்சு, மஹராஜுலகு கா3க, ஊரகே கல்கு3னா ராமுனி ப4க்தி?
    • எவ்வமயமும் உலக வாழ்வினிலுழன்று, (அதனை) சாரமென எண்ணுவோரின் மனத்தினில் தானாகவே தோன்றுமோ இராமனின் பக்தி?
    • மனைவி, மக்கள், சுற்றம், உயர் மாளிகை, உடல் வலிமை, பொன், செல்வங்களுடைத்த கொண்டாட்டத்தினைக் கண்டு, நிலையற்றவை யெனும் பேறுடைத்தோருக்கன்றி, தானாகவே தோன்றுமோ இராமனின் பக்தி?
    • நன்மக்களை தரிசித்து, எவ்வமயமும் சேவித்து, (அவரது) வேண்டுகோளினைச் செவி மடுத்து, பணிவுடன் நிறைவேற்றி, யாவும் அரியென்றறிந்து, உணர்ந்து, மனதில் (இறைவனை) வழிபடுவோருக்கன்றி, தானாகவே தோன்றுமோ இராமனின் பக்தி?
    • இராசத குணமுடை பூசைகளை மேற்கொள்ளாது, தியாகராசனின் நாவினில் திகழும், உயர் மந்திரங்களில் தலைசிறந்த (தாரக நாமத்தினை), எவ்வமயமும் செபிக்கும், பெருந்தகைகளுக்கன்றி, தானாகவே தோன்றுமோ இராமனின் பக்தி?
    (UrakE kalgunA-SahAna) Top
    • ஸ்வர ஜாதி மூர்ச2ன பே43முல், ஸ்வாந்தமந்து3 தெலியகயுண்டி3ன, வர ராக3 லயக்3ஞுலு தாமனுசு வத3ரேரய்ய
    • தே3ஹோத்34வம்ப3கு3 நாத3முல் தி3வ்யமௌ ப்ரணவாகாரமனே தா3ஹம்பெ3ருக3னி மானவுல், வர ராக3 லயக்3ஞுலு தாமனுசு ஏசேரு
    • ஸ்வர ஜாதி மூர்ச்சன வேறுபாடுகளினை தமதுள்ளத்தில் உணராவிடினும், உயர் ராக, லய, விற்பன்னர் தாமெனப் பிதற்றுவரய்யா
    • உடலில் தோன்றும் நாதங்கள் திவ்வியமான பிரணவ வடிவெனும் தாகம் - (இதனை) அறியாத மனிதர்கள் உயர் ராக, லய, விற்பன்னர் தாமென ஏமாற்றுவர்
    (vara rAga-cencukAmbhOji) Top
    • மனஸா!
    • ஒக மாட, ஒக பா3ணமு, ஒக பத்னீ வ்ரதுடே3; ஒக சித்தமு-க3லவாடே3
    • சிர ஜீவித்வமு, நிர்ஜர வர மோக்ஷமு ஒஸங்கு3னே
    • 4ர ப3ரகே3 தே3வுடே3, த்யாக3ராஜ நுதுடு3
    • ஒக நாடு3னு மரவகவே
    • மனமே!
    • இராமன், ஓர் சொல், ஓரம்பு, ஓர்மனை விரதத்தோனடி; ஓர் சித்தமுடையவனடி;
    • நீண்டாயுளும், குன்றாத, உயர் வீடும் அளிப்பானடி;
    • புவியில் திகழும் தெய்வமடி, தியாகராசனால் போற்றப் பெற்றோன்;
    • ஒரு நாளும் மறவாதேடி.
    (oka mATa-harikAmbhOji) Top
    • மனஸா! க4னுடை3ன, ராம சந்த்3ருனி கருணாந்தரங்க3மு தெலிஸின, நா மனவினாலகிஞ்ச ராத3டே; மர்மமெல்ல தெல்பெத3னே
    • கர்ம காண்ட3 மதாக்ரு2ஷ்டுலை ப4வ க3ஹன சாருலை கா3ஸி ஜெந்த33 கனி மானவாவதாருடை3 கனிபிஞ்சினாடே3 நட3
    • மனமே! மேதகு இராமசந்திரனின் கருணை யுள்ளத்தினை யறிந்த எனது வேண்டுகோளைக் கேளாயோ அடியே? மருமத்தையெல்லாம் தெரிவிக்கின்றேனடி;
    • கருமத்துப் பாலின் கோட்பாடுகளினால் ஈர்க்கப்பட்டு, பிறவியெனும் அடவியில் உழன்று, (மக்கள்) துயரடையக் கண்டு, மனித அவதாரமெடுத்து, காண்பித்தானே நடத்தையினை.
    (manavinAlakinca-naLinakAnti) Top
    • மனஸா!
    • மாயா-மயமைன சான மேனு ஜூசி மோஸ போகவே; லோனி ஜாட3லீலாகு3 காதா3?
    • ஹீனமைன, மல, மூத்ர, ரக்தமுலகு இரவஞ்சு;
    • கனுலனேடி அம்ப-கோல சேத கு3ச்சி, சனுலனேடி கி3ருல ஸி1ரமுனுஞ்சி, பனுலு சேதுரட;
    • த்யாக3ராஜ நுதுனி பா33 நீவு ப4ஜன சேஸுகொம்மி.
    • மனமே!
    • மாயை மயமான பெண்டிர் மேனியைக் கண்டு மோசம் போகாதே; உட்குறிப்புக்கள் இவ்விதமன்றோ?
    • ஈனமான, மலம், மூத்திரம், குருதிகளுக்கு, உறுதியான கரையிட்டது;
    • கண்களெனும் அம்பினால் துளைத்து, மார்பகங்களெனும் குன்றுகளில் தலைவைத்து, பணிகள் செய்வராம்;
    • தியாகராசனால் போற்றப் பெற்றோனை நன்கு நீ வழிபாடு செய்வாயே.
    (mEnu jUci-sarasAngi) Top
    • கருகைன ஹ்ரு2த்3ரோக33ஹனமுனு கொட்டனு ஸத்3-கு3ரு லேகயெடுவண்டி கு3ணிகி தெலியக3 போது3
    • தனுவு ஸுத த4ன தா3ர தா3யாதி3 பா3ந்த4வுலு ஜனியிஞ்சி செத3ரு ஜாலினி கருணதோ மனுஸுனண்டக ஸேயு மந்த3னுசு தத்வ போ34ன ஜேஸி காபாடு3 த்யாக3ராஜாப்துட3கு3 கு3ரு லேகயெடுவண்டி கு3ணிகி தெலியக3 போது3
    • கூர்மையான, இதய நோயெனும் முட்புதரினை அழிப்பதற்கு, நற்குருவின்றி, எப்படிப்பட்ட குணமுடைத்தோனுக்கும், தெரியவராது
    • உடல், மக்கள், செல்வம், மனையாள், பங்காளிகள், முதலான உறவினர்கள் பிறந்து, சிதறும் துயரினை, கருணையுடன், மனத்தினைத் தீண்டாமற் செய்யும் மருந்தென, தத்துவ போதனை செய்து காக்கும், தியாகராசனின் நற்றுணை போலும் குருவின்றி, எப்படிப்பட்ட குணமுடைத்தோனுக்கும், தெரியவராது
    (guru lEka-gaurimanOhari) Top
    • ஸ்ரீமன்-மானஸ கனக பீட2முன, ஸகல லீலா வினோது3னி, பரமாத்முனி, செலக3 ஜேஸிகொனி,
    • நாத3 ஸ்வரமனே, வர நவ ரத்னபு வேதி3கபை,
    • வர ஸி1வ ராம நாம குஸுமமுலசே, ஸ்ரீ ராமுனி பாத3முலனு, பூஜிஞ்சே நர ஜன்மமே ஜன்மமு மனஸா
    • மனமே!
    • சிறந்த, மனமெனும் பொற்பீடத்தினில், அனைத்து திருவிளையாடல்களில் களிப்போனை, பரம்பொருளினை ஒளிரச்செய்து,
    • நாதம், சுரமெனும் உயர், நவரத்தின வேதிகையின்மீது,
    • புனித, மங்களமான இராம நாமமெனும் மலர்கொடு, இராமனின் திருவடிகளை, வழிபடும் மனிதப் பிறவியே பிறவியாகும்
    (nAma kusuma-SrIrAgaM) Top
    • நிக3ம ஸி1ரோர்த2மு கல்கி3ன, நிஜ வாக்குலதோ, ஸ்வர ஸு1த்34முதோ,
    • யதி, விஸ்1ரம, ஸத்34க்தி, விரதி, த்3ராக்ஷா ரஸ நவ-ரஸ, யுத க்ரு2திசே
    • ஸொக3ஸுகா3 ம்ரு23ங்க3 தாளமு ஜத கூர்சி நினு ஸொக்க ஜேயு தீ4ருடெ3வ்வடோ3
    • மறைமுடியின் பொருளுடைத்த, உண்மையான சொற்களுடனும், சுரத் தூய்மையுடனும்,
    • யதி, விஸ்ரமம், தூய பக்தி, (உலகப்) பற்றின்மை, திராட்சைச் சாறு (நிகர்) நவரசம் கூடிய பாடல்களுடன்
    • சொகுசாக, மிருதங்க தாளத்தினைச் சோடு கட்டி, உன்னை சொக்கவைக்கும் தீரனெவனோ!
    (sogasugA mRdanga-SrI ranjani) Top
    • லீலா ஸ்ரு2ஷ்ட, ஜக3த்ரயமனே கோலாஹல, ராம ப4க்தி ஸாம்ராஜ்யமு ஏ மானவுலகப்3பெ3னோ!
    • ஆ மானவுல ஸந்த3ர்ஸ1னமு அத்யந்த ப்3ரஹ்மானந்த3மே;
    • ஈலாக3னி விவரிம்ப லேனு சால ஸ்வானுப4வ வேத்3யமே.
    • திருவிளையாடலாக, மூவுலகமெனும் பேராரவாரத்தினைப் படைத்த, இராமனின் பக்திப் பேரரசு எம்மானவருக்கு கிடைத்ததோ!
    • அம்மானவரை தரிசித்தல் (கூட) மட்டற்றப் பேரானந்தமே!
    • இவ்விதமென விவரிக்க இயலேன்; மிக்கு தான் துய்த்து உணர்வதுவே!
    (rAma bhakti-Suddha bangALa) Top
    • தனுவுகு லம்பட தப்பக3னே வச்சுனா நீ க்ரு2ப?
    • மெப்புலகை கொப்புலு-க3ல மேடி ஜனுல ஜூசி ப4ஜன தப்பக3னே வச்சுனா நீ க்ரு2ப?
    • த்யாக3ராஜ நுதுனி ப4ஜன தப்பக3னே வச்சுனா நீ க்ரு2ப?
    • உடலுக்கு ஆசையினை விடாமலே, வருமோ உனது கிருபை?
    • பெயருக்கென, கொப்புகளுடை மேன்மக்களைக் கண்டு (செய்யப்படும்), வழிபாட்டினை விடாமலே, வருமோ உனது கிருபை?
    • தியாகராசனால் போற்றப் பெற்றோனின் வழிபாட்டினை விட்டாலே, வருமோ (உனது) கிருபை?
    (tappaganE-Suddha bangALa) Top
    • பத3வி நீ ஸத்34க்தியு கல்கு3டே
    • சதி3வி, வேத3 ஸா1ஸ்த்ரோபனிஷத்துல ஸத்த தெலிய லேனிதி3 பத3வியா?
    • 4ன தா3ர ஸுதாகா3ர ஸம்பத3லு, த4ரணீஸு1ல செலிமியொக பத3வியா?
    • ஜப, தபாதி34யணிமாதி3 ஸித்3து4லசே, ஜக3முலனேசுடயதி3 பத3வியா?
    • ராக3 லோப4 யுத யக்3ஞாது3லசே, போ43முலப்3பு3டயதி3 பத3வியா?
    • த்யாக3ராஜ நுதுடௌ3 ஸ்ரீ ராமுனி தத்வமு தெலியனிதொ3க பத3வியா?
    • பதவி உனது தூய பற்றுண்டாகுதலே
    • கல்வி கற்று, மறைகள், சாத்திரங்கள், உபநிடதங்களின் உண்மை யறியாமை பதவியா?
    • செல்வம், மனைவி, மக்கள், வீடு ஆகிய சம்பத்துக்கள், புவியாள்வோரின் நட்பு பதவியா?
    • செபம், தவத்தினால் அணிமாதி சித்திகளுடன் உலகத்தை ஏய்த்தல் பதவியா?
    • இச்சை, கருமித்தனம் கூடிய வேள்வி ஆகியவற்றால் (புவி) இன்பங்களைப் பெறுதல் பதவியா?
    • தியாகராசனால் போற்றப் பெற்றோனாகிய இராமனின் தத்துவம் அறியாமை யொரு பதவியா?
    (padavi nI-sAlaka bhairavi) Top
    • கீ3ர்வாண, நாடகாலங்கார, வேத3, புராண, யக்3ஞ, ஜப, தபாது3ல ப2லமுலு க்ஷீணமை, திருக3 ஜன்மிஞ்சே ஸித்3தி4 மானுரா, ஓ மனஸா
    • பதி3லமைன, ஸத்-பத3முனொஸங்கே3 பா3ட, த்யாக3ராஜ வினுதுனி ப4ஜனரா
    • எதி3 ஜேஸின, ஜக3ன்னாது2டு3 ஸி1ரமுன, ஹ்ரு23யமுன வஹிஞ்சி, க்ஷீணமை, திருக3 ஜன்மிஞ்சே ஸித்3தி4 மானுரா
    • இயல், இசை, நாடகம், அணியிலக்கணம், மறைகள், புராணம், வேள்வி, செபம், தவம் ஆகியவற்றின் பயன்கள் தளர்ந்து, மீண்டும் பிறப்பிக்கும் சித்திகளைத் தவிர்ப்பாய், ஓ மனமே!
    • நிலையான நற்பதமளிக்கும் நெறி தியாகராசனால் போற்றப் பெற்றோனின் பஜனையடா!
    • உலக நாயகன் என்செயினும், தலையிலும், உள்ளத்திலும் வகித்து, தளர்ந்து, மீண்டும் பிறப்பிக்கும் சித்திகளைத் தவிர்ப்பாய்.
    (kshINamai-mukhAri) Top
    • த்யாக3ராஜு நேர்சின, ஸ்1ரு2ங்கா3ர ரஸாத்3யகி2ல ஸார பூரித, ராம கதா2னந்தா3ப்3தி4 யுத, ஸங்கீ3த ஸா1ஸ்த்ர ஞானமு, ஸாரூப்ய ஸௌக்2யத3மே, மனஸா
    • ப்ரேம ப4க்தி, ஸு-ஜன வாத்ஸல்யமு, ஸ்ரீமத்3-ரமா வர கடாக்ஷமு, நேம, நிஷ்ட2, யஸோ14னமொஸங்கு3னே; நேர்பு கல்கு3
    • தியாகராசன் கற்றறிந்த, சிங்கார ரசம் முதலான அனைத்து சாரங்களும் நிறைந்த, இராமனின் கதையெனும் ஆனந்தக் கடலுடன் கூடிய, சங்கீத சாத்திரத்தின் அறிவு சாரூப்பிய சௌக்கியத்தினை யருளுமே, மனமே
    • காதலுடன் கூடிய (இறைப்) பற்று, நல்லோரின் பரிவு, திருமகள் மணாளனின் கருணை, நியமம், நிட்டை, புகழ் ஆகிய செல்வங்களை வழங்குமே; திறமைகளுண்டாகும்.
    (sangIta Sastra-mukhAri) Top
    • ஸந்ததமு ஸுஜனுலெல்ல ஸத்34ஜன ஜேயுட ஜூசி சிந்திஸ்துன்னாடே3 யமுடு3
    • வாரிதி4 ஸோ1ஷிம்ப ஜேயு க்ரூர கும்ப4ஜுனி ரீதி கோ4ர நரகாது3லணசு தாரக நாமமுனு தலசி சிந்திஸ்துன்னாடே3 யமுடு3
    • தா3ரி தெலிய லேக திருகு3வாரலைன சாலுனண்டே ஸாரமனி த்யாக3ராஜு ஸங்கீர்தனமு பாடே3ரனுசு சிந்திஸ்துன்னாடே3 யமுடு3
    • எவ்வமயமும், நல்லோர் யாவரும், உயர் பஜனை செய்தல் கண்டு, கவலைப்படுகின்றானே எமன்!
    • கடலை வற்றச் செய்யும் கடும் கும்பமுனி போன்று, கொடிய நரகங்களினை அடக்கும் தாரக நாமத்தினை நினைத்து, கவலைப்படுகின்றானே எமன்!
    • வழியறியாது திரிவோராகிலும் போதுமென்றால், (அவரும்) சாரமென தியாகராசனின் சங்கீர்த்தனங்களைப் பாடுகின்றனரென, கவலைப்படுகின்றானே எமன்!
    (cintistunnADE-mukhAri) Top
    • நீ ஸேவகு லேக நீது3 செந்தகு ராக ஆஸ தா3ஸுடை3 அடுயிடு திருகு3டந்து3காயீ தனுவுனு பெஞ்சினதி3?
    • நிரதமு நீ த்3ரு2ஷ்டி நேனார்ஜிஞ்சக ஒருல பா4மலனு ஓர ஜூபுலு ஜூசுடந்து3காயீ தனுவுனு பெஞ்சினதி3?
    • ஸாரெகு நாம ஸ்மரணமு ஸேயக ஊரி மாடலெல்லனூரக வத3ருடந்து3காயீ தனுவுனு பெஞ்சினதி3?
    • கரமுலதோ பூஜ கா3விம்பக3 டா3சி த4ரலோன லேனி து3ர்தா3னமுலகு சாசுடந்து3காயீ தனுவுனு பெஞ்சினதி3?
    • வாரமு நீ க்ஷேத்ர வரமுல ஜுட்டக பூ4ரிகி முந்து33 பாரி பாரி திருகு3டந்து3காயீ தனுவுனு பெஞ்சினதி3?
    • நீவாட3னி பேருனிந்து3 வஹிஞ்சக நாவாட3னி யமுடு3 நவ்வுசு பா3தி4ஞ்சுடந்து3காயீ தனுவுனு பெஞ்சினதி3?
    • ராவய்ய, நின்னு பா4விஞ்சக ப்ரொத்3து3 பார-கொ3ட்டுகொனந்து3காயீ தனுவுனு பெஞ்சினதி3?
    • உனது சேவைக்கில்லாது, உன்னருகில் வாராது, ஆசைக்கடிமையாகி, அங்குமிங்கும் திரிவதற்கா இவ்வுடம்பை வளர்த்தது?
    • இடையறாது, உனது கண்ணோட்டத்தினை யீட்டாது, பிறர் மனைவியரை ஓரக்கண்ணால் நோக்குதற்கா இவ்வுடம்பை வளர்த்தது?
    • எவ்வமயமும் (உனது) நாமத்தினை நினைவு கூராது, ஊர்க்கதைகளைப் பயனின்றி பிதற்றுதற்கா இவ்வுடம்பை வளர்த்தது?
    • கரங்களினால் பூசை செய்வதற்கு மறைத்து, புவியில் இல்லாத தீய கொடைகளுக்கு (கரங்களை) நீட்டுதற்கா இவ்வுடம்பை வளர்த்தது?
    • நாளுமுனது புண்ணியத் தலங்களை வலம் வராது, பூரிதானத்திற்கு முன்னால் ஒடியோடித் திரிதற்கா இவ்வுடம்பை வளர்த்தது?
    • உன்னவனென பெயரிங்கு வகிக்காது, என்னவனென எமன் நகைத்துக்கொணடு துன்புறத்தற்கா இவ்வுடம்பை வளர்த்தது?
    • வாருமைய்யா, உன்னை யெண்ணாது பொழுது வீணாக்குதற்கா இவ்வுடம்பை வளர்த்தது?
    (indukA puTTincitivi-bhairavi) Top
    • தீ3னுடை3ன பந்தா2னுடை3ன வினுமு, த்யாக3ராஜ நுத, ராம நாமம் ப4ஜரே மானஸ
    • தொ3ங்க3 ரீதி திருக3ங்க3னேல ஸ்ரீ ரங்க3னி பத3முல கௌகி3லிஞ்சுகொனி (ராம)
    • எக்கடை3ன ஹரியொக்கட3னுச மதி3 சக்க தனமு கனி ஸொக்கி ஸந்ததமு (ராம)
    • எந்து3 போக ராகேந்து3 முகு2னி தனயந்து3 ஜூசி ப2லமந்து3 கோரி ஸ்ரீ (ராம)
    • தே3ஹமெத்தி ஸந்தே3ஹ பட3க வைதே3ஹி பா4க்3யமா தே3ஹி தே3ஹியனி (ராம)
    • ஸாது4 ஸஜ்ஜனுல போ34 சேத ப4வ பா34 மான வலெ ஸாத4கம்பு3தோ (ராம)
    • அனுராக3முன மேனொஸங்கி3 ஸ்ரீ (ராம)
    • ராக3 ரஹித ஜன பா43தே4யுனி வினா க3தியெவ்வரே? (ராம)
    • மனமே! எளியோனாயினும், மிக்கு வல்லோனாயினும், கேள்மின்! தியாகராசனால் போற்றப் பெற்ற இராம நாமத்தினை பஜனை செய்வாய்;
    • திருடனைப்போன்று திரிவதேன்? திருவரங்கனின் திருவடிகளை யணைத்துக் கொண்டு இராம நாமத்தினை பஜனை செய்வாய்;
    • எங்காகிலும், அரி ஒருவனேயென்று, உள்ளத்தினில் தெளிவுறக் கண்டு, சொக்கி, எவ்வமயமும் இராம நாமத்தினை பஜனை செய்வாய்;
    • எங்கும் செல்லாது, முழுமதி முகத்தோனை தன்னுள் கண்டு, அங்கு (முத்திப்) பயனை விழைந்து, இராம நாமத்தினை பஜனை செய்வாய்;
    • உடலெடுத்து, ஐயப்படாது, 'வைதேகியின் பேறே! அருள்வாய், அருள்வாய்' என இராம நாமத்தினை பஜனை செய்வாய்;
    • சாதுக்கள், நல்லோரின் அறிவுறையுடன், பிறவிக்கடலின் தொல்லைகளைப் பொறுக்க வேணும்; விடாமுயற்சியுடன் இராம நாமத்தினை பஜனை செய்வாய்;
    • அனுராகத்துடன் (இறைவன் தொண்டுக்கு) உடலையளித்து இராம நாமத்தினை பஜனை செய்வாய்;
    • பற்றற்ற மக்களுக்கு உற்றவை யருள்வோனை அன்றி போக் கெவரே? இராம நாமத்தினை பஜனை செய்வாய்.
    (rAma nAmaM bhajarE-madhyamAvati) Top
    (evarani nirNayinciri-dEvAmRta varshini) Top
    • மனஸு நில்ப ஸ1க்தி லேக போதே மது4ர க4ண்ட விருல பூஜேமி ஜேஸுனு?
    • மனதையடக்கத் திறமையின்றேல், இனிய மணி (மற்றும்) மலர்களின் பூசையென்ன செய்யும்?
    (manasu nilpa-AbhOgi) Top
    • ஸதத யான ஸுத த்4ரு2தமைன ஸீதா பதி பாத3 யுக3முல ஸததமு ஸ்மரியிஞ்சு அதடே34ன்யுடு3
    • வெனுக தீக தன மனஸு ரஞ்ஜில்லக34னமைன நாம கீர்தன பருடை3னட்டி அதடே34ன்யுடு3
    • தும்பு3ரு வலெ தன தம்பு3ர பட்டி த3யாம்பு3தி4 ஸன்னிதா4னம்பு3ன நடியிஞ்சு அதடே34ன்யுடு3
    • ஸாயகு ஸுஜனுல பா3யக தானுநுபாயமுனனு ப்ரொத்3து3 ஹாயிக33டி3பின அதடே34ன்யுடு3
    • உல்லபு தாபமு சல்ல ஜேஸி அன்னி கல்லலனியெஞ்சி ஸல்லாபமுனனுண்டு3 அதடே34ன்யுடு3
    • கரி வரது3னி தத்வமெருக3னு மரிகி3ஞ்சு அரி ஷட்3வர்க3முலந்து3 பரவ லேக திருகு3 அதடே34ன்யுடு3
    • ஆர்தினி மரியு ப்ரவ்ரு2த்தினி தொலகி3ஞ்சே கீர்தி கல்கி3ன ராம மூர்தினி நெர நம்மு அதடே34ன்யுடு3
    • கலக3னி நிஜ விப்ர குலமுன ஜன்மிஞ்சி நிலுவரமகு3 முக்தி ப2லமுனு ஜேகொன்ன அதடே34ன்யுடு3
    • கர்ம நிஷ்டு2டை3ன த4ர்ம ஸீ1லுடை3ன ஸ1ர்ம ராம நாம மர்மமு தெலிஸின அதடே34ன்யுடு3
    • காஸு வீஸமுல கோஸமு ஆஸதோ வேஸமு த4ரிஞ்சி மோஸமு ஜெந்த3னி அதடே34ன்யுடு3
    • அந்த3முகா3 நாமமந்த3ரு ஜேஸின ஸுந்த3ர ராமுனியந்து3 லக்ஷ்யமு பெட்டு அதடே34ன்யுடு3
    • இன்னி பாடுலகு ஸர்வோன்னதமௌ ஸுக2மு முன்னயனுப4விஞ்சுகொன்ன வாடெ3வடோ3 அதடே34ன்யுடு3
    • ராஜஸ ஜனுலதோ தா ஜத கூ33க ராஜில்லு ஸ்ரீ த்யாக3ராஜ நுதினி நம்மு அதடே34ன்யுடு3
    • வாயு மைந்தன் பற்றும், சீதைக் கேள்வனின் திருவடிகளையெவ்வமயமும் நினைக்கும் அவனே பேறு பெற்றவனடா!
    • பின் வாங்காது, தனது மனது களிக்க, மேலான, நாம கீர்த்தனையிலாழ்ந்தோனாகிய அவனே பேறு பெற்றவனடா!
    • தும்புரு போன்று, தனது தம்புரா பிடித்து, கருணைக் கடலின் சன்னிதியில் நடமிடும் அவனே பேறு பெற்றவனடா!
    • உதவிக்கு நல்லோரை யகலாது, தானும் விழிப்புடன், பொழுதை கவலையின்றி கழிக்கும் அவனே பேறு பெற்றவனடா!
    • உள்ளத்தின் வெம்மையை தணித்து, யாவும் பொய்யென எண்ணி, (இறைவனுடன்) குலவியிருக்கும் அவனே பேறு பெற்றவனடா!
    • கரி வரதனின் தத்துவத்தினையறியா வண்ணம் திரையிடும் உட்பகையாறினில் சிக்காமல் வாழும் அவனே பேறு பெற்றவனடா!
    • துன்பங்களையும், மறு பிறப்பினையும் களையும் புகழுடை இராமமூர்த்தியினை முழுமையாக நம்பும் அவனே பேறு பெற்றவனடா!
    • கிடைத்தற்கரிய உயர் அந்தண குலத்தினில் தோன்றி, நிலைபெறு முத்திப் பயனையுற்ற அவனே பேறு பெற்றவனடா!
    • கருமங்களில் ஈடுபட்டோனாகிலும், அறநெறி நிற்போனாகிலும், இராம நாம இன்பத்தின் மருமமறிந்த அவனே பேறு பெற்றவனடா!
    • அணா காசுக்கென, ஆசை கொண்டு, வேடமிட்டு, மோசமுறாத அவனே பேறு பெற்றவனடா!
    • அழகாக, நாமத்தினை யாவரும் செபித்த, சுந்தரராமனில் இலக்கினை வைக்கும் அவனே பேறு பெற்றவனடா!
    • இத்தனை பாடுகளுக்கு, மிக்குயர் சுகத்தினை முன்னம் அனுபவித்தவன் எவனோ அவனே பேறு பெற்றவனடா!
    • இராசத மனிதர்களுடன் தான் கூட்டு சேராது, மிளிரும் தியாகராசனால் போற்றப்பெற்றோனை நம்பும் அவனே பேறு பெற்றவனடா!
    (ataDE dhanyuDu-kApi) Top
    • தொலி கர்மமு ராக போனா ப4க்தி வெலுகு3சே தீரக போனா?
    • முன் வினை வாராமற்போகுமா? (ஆயினும்) பத்தியெனும் வெளிச்சத்தினால் தீராமற்போகுமா?
    (ennALLu nI trOva-kApi) Top
    • நீ ப4க்தி பா4க்3ய ஸுதா4 நிதி4னீதே3தே3 ஜன்மமு
    • பூ4-பா4ரமு கானி ஸுர பூ4-ஸுருலை ஜனிஞ்சின
    • வேதோ3க்தம்பௌ3 கர்மமு வெத க3ல்கு33தாக3தமௌ
    • எவ்வமயமும் உனது பத்திப்பேறெனும் அமிழ்தக் கடலினை நீந்துவதே (நிசப்) பிறவியாகும்
    • அன்றேல், புவிக்குச் சுமையே, வானோராகவோ அந்தணராகவோ பிறந்தாலும்;
    • மறைகள் பகரும் கருமங்கள் துயரளிக்கும் பிறப்பு-இறப்புச் சுழலாகும்
    (nI bhakti-jaya manOhari) Top
    • ஜீவாத்ம ஹிம்ஸ க3ல யக்3ஞாது3லு ஸுக2மனுவாரிகி ஸமுலக்3ஞானுலு க3லரா ஓ மனஸா
    • 3ஹு ஜன்மம்பு3ல வாஸன யுதுலை அஹி விஷ ஸம விஷயாக்ரு2ஷ்டுலை ப3ஹிரானனுலை ஸ்ரீ ராமுனி தெலியக யக்3ஞாது3லு....
    • பிராணிகளைத் துன்புறுத்தும் வேள்விகள் முதலானவை சுகமளிக்குமென்பவருக்கு ஈடான அறிவிலிகள் உளரோ, ஓ மனமே?
    • பல பிறவிகளின் வாசனைகளுடையோராகி, அரவு நச்சுக்கீடான விடயங்களால் ஈர்க்கப்பட்டோராகி, வெளி நோக்குடையோராகி, இராமனையறியாது, வேள்விகள் முதலானவை சுகமளிக்குமென்பவருக்கு ஈடான அறிவிலிகள் உளரோ?
    (yajnAdulu-jaya manOhari) Top
    • மத பே43மனே ஸெக3னார்சக3 ஸம்மத வாக்குலு பல்குட ஸுக2மா?
    • க்ஷிதிலோ ஸத்-ஸங்க3தி ஸௌக்2யமு
    • மத வேற்றுமையெனும் தழலினைத் தணிக்காது சம்மதச் சொற்கள் பகர்தல் சுகமா?
    • புவியிலே நல்லோரிணக்கம் இனிதன்றோ!
    (vinatA suta vAhana-jayanta sEna) Top
    • அபவர்க32ல காமமுலனு ஜூசி அட்33மை அணிமாதி3 ஸித்3து4ல மோஸ பு3ச்செத3ரய்ய
    • முத்திப் பயனின் இச்சைகளைக் கண்டு, குறுக்கிடும் அணிமாதி சித்திகளினால் வஞ்சிக்கப் பெற்றனரய்யா
    (kRpAlavAla-nAda varAngiNi) Top
    • தனுவொகசோ மனஸொகசோ தகி3ன வேஷமொகசோனிடி3 ஜனுலனேசு வாரிகி ஜயமௌனே
    • உடலோரிடமும், மனமோரிடமுமாக, தகுந்த வேடமோரிடத்திலுமிட்டு, மக்களை ஏய்ப்போருக்கு வெற்றி கிடைக்குமோ?
    • (நினைப்பு-சொல்-செயல் இவை மூன்றும் ஒருமித்து, ஒன்றுக்கொன்று முரண்பாடின்றி, இயங்குதலை 'திரிகரண சுத்தி' என்பர்)
    (kanugonu-nAyaki) Top
    • யாக3 யோக3 த்யாக3 போ432லமொஸங்கே3 ராக3 ஸுதா4 ரஸ பானமு ஜேஸி ரஞ்ஜில்லவே ஓ மனஸா
    • ஸதா3ஸி1வ மயமகு3 நாதோ3ங்கார ஸ்வர விது3லு ஜீவன்முக்துலு
    • ஓ மனமே! வேள்வி, யோகம், தியாகம் மற்றும் புவியின்பங்களின் பயனையளிக்கும் இராகமெனும் அமிழ்தச் சாற்றினைப் பருகி, களித்திடுவாய்;
    • சதாசிவ மயமான நாதோங்கார சுரத்தில் வல்லோர் சீவன் முத்தராவர்.
    (rAga sudhA-AndOLika) Top
    • நளின லோசன நின்னு கா3க அன்யுல நம்மி நர ஜன்மமீடே3ருனா?
    • கொங்க3வண்டி த்4யானமு ஜேஸிதே தன கோரிக கொன-ஸாகு3னா?
    • தொ3ங்க3 மக3னி ப4க்தி மீர நம்மிதே மஞ்சி த்3ரோவ ஜூப நேர்சுனா?
    • 3ங்க3 லோனி ஒட3னு நம்மி ப4வ ஸாக3ரமு தா3ட வச்சுனா?
    • நங்க3 நாசுல ஸ1ரணமனுட சேத அனங்கு3டு3 ஞானோபதே31மு ஜேஸுனா?
    • பரம வந்த்4யகு பாலு பெருகு3 போஸிதே சண்டி பாலு கலுக3 நேர்சுனா?
    • நெர த4னமுலு தா3யாது3லகிச்சிதே நெனரு மாட கல்கு3னா?
    • எருவு வேஸியூஸர பூ4மி வித்திதேநேமைன ப2லிஞ்சுனா?
    • வரமைன பேரு கலுகு33ங்க3-ராவிகி வந்த3னமொனரிஞ்சிதே ப்3ரோவ நேர்சுனா?
    • ஸொக3ஸைன பூ3ருகு3லனு பெஞ்சிதே ஸு-ரஸ ப2லமுலிச்சுனா?
    • பா4க்3யமு க3ல திருமஞ்ஜன விப4வமு பரிசாரகுலகப்3பு3னா?
    • ராக3 லோப4முலதோ தபமு ஜேஸிதே பர க3தி கலுக3 நேர்சுனா?
    • உன்னையன்றி மற்றவரை நம்பி மனிதப்பிறவி யீடேறுமா?
    • நாரை போன்ற தியானம் செய்தால், தனது கோரிக்கை நிறைவேறுமா?
    • கள்ளப் புருடனை மிக்கு பற்றுடன் நம்ப, நல்வழி காட்ட நேருமா?
    • கங்கையிலுள்ள ஓடத்தை நம்பி, பிறவிக் கடலைத் தாண்டலாகுமா?
    • பாசாங்காக, சரணமென்றவுடன், அனங்கனா ஞானோபதேசம் செய்வான்?
    • முற்றும் வந்திக்கு பாலும் தயிரும் ஊட்டினால், தாய்ப்பால் சுரக்க நேருமா?
    • மிக்கு செல்வம் பங்காளிகளுக்கு ஈய்ந்தாலும், கனிவான சொல் கிடைக்குமா?
    • எருவிட்டு, உவர் நிலத்தில் விதைத்தால், ஏதும் விளையுமா?
    • சிறந்த பெயருடைய, பூவரசத்திற்கு வந்தனம் செய்தால், அருள் புரியுமா?
    • சொகுசான இலவமரத்தினை வளர்த்தால், சாறு நிறைப் பழங்கள் தருமா?
    • பேறு நிறை, திருமஞ்சன விபவம், ஏவலாளிகளுக்கு நண்ணுமா?
    • பற்று மற்றும் கஞ்சத்தனங்களுடன் தவமியற்ற, பர கதி கிடைக்க நேருமா?
    (naLina lOcana-madhyamAvati) Top
    • ராம கதா2 ஸுதா4 ரஸ பானமொக ராஜ்யமு ஜேஸுனே
    • 4ர்மாத்3யகி2ல ப2லத3மே
    • தை4ர்யானந்த3 ஸௌக்2ய நிகேதனமே
    • கர்ம ப3ந்த4 ஜ்வலனாப்3தி4 நாவமே
    • கலி ஹரமே
    • இராமனின் காதையெனும் அமிழ்தச் சாற்றினைப் பருகலோர் அரசாட்சியாகுமே!
    • அறம் முதலாக அனைத்து பயன்களையுமளிக்குமே;
    • தைரியம், ஆனந்தம் மற்றும் சௌக்கியத்தின் இருப்பிடமாகுமே;
    • கருமங்களினால் கட்டுண்ட எரிகடலைக் கடக்கும் படகாகுமே;
    • கலியினை வெல்லுமே.
    (rAma kathA-madhyamAvati) Top
  • 1 comment:

    K.Nellaiyappan said...

    Excellent & sincere effort by the Rev.Author, presenting the Original Text of the
    Saint & the Musical Giant (Thyaaga Brahmam) and its meaning in Tamizh (தமிழ்). The Author
    deserves rich appreciation and encouragement. May GOD Bless You to continue your further
    efforts. Amazing quality displayed in providing equivalent தமிழ் meaning. You must really
    possess a Divine quality (trait) to undertake such a useful & meaningful Pious Task.
    I pray again, MAY GOD BLESS YOU.