ரூகலு பதி3 வேலுன்ன சேரெடு3
நூகலு க3தி கானி ஓ மனஸா
அனுபல்லவி
கோகலு வெய்யுன்ன
1கட்டுகொனுடகொகடி கானி ஓ மனஸா (ரூ)
சரணம்
ஊரேலின தா 2பண்டு3ட மூடு3 மூர தாவு கானி
நூரு ப4க்ஷணமுலப்3பி3ன எந்தோ நோடிகந்த கானி
ஏரு நிண்டு3க3 பாரின பாத்ரகு தகு3 நீரு வச்சு கானி
ஸாரதருனி ஹரினி த்யாக3ராஜ ஸன்னுதுனி மரவகே மனஸா (ரூ)
பொருள் - சுருக்கம்
- ஓ மனமே!
- பணம் பத்தாயிரம் இருந்தாலும், கையளவு நொய்யே கதியன்றோ?
- ஆடைகள் ஆயிரம் இருந்தாலும், உடுத்துக்கொள்வதற்கு ஒன்றேயன்றோ?
- ஊராண்டாலும், தான் படுத்தல் மூன்று முழ இடமேயன்றோ?
- நூறு உண்டிகள் கிடைத்தாலும், எத்தனையோ வாய்க்கு அத்தனையேயன்றோ?
- ஆறு நிரம்பிப் பாய்ந்தாலும், பாத்திரத்தளவே நீர் கொள்ளுமன்றோ?
- பணம் பத்தாயிரம் இருந்தாலும், கையளவு நொய்யே கதியன்றோ?
- பெருந்தகையினை, அரியினை, தியாகராசன் போற்றுவோனை மறவாதே.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ரூகலு/ பதி3 வேலு/-உன்ன/ சேரெடு3/
பணம்/ பத்தாயிரம்/ இருந்தாலும்/ கையளவு/
நூகலு/ க3தி/ கானி/ ஓ மனஸா/
நொய்யே/ கதி/ யன்றோ/ ஓ மனமே/
அனுபல்லவி
கோகலு/ வெய்யி/-உன்ன/
ஆடைகள்/ ஆயிரம்/ இருந்தாலும்/
கட்டுகொனுடகு/-ஒகடி/ கானி/ ஓ மனஸா/ (ரூ)
உடுத்துக்கொள்வதற்கு/ ஒன்றே/ யன்றோ/ ஓ மனமே/
சரணம்
ஊரு/-ஏலின/ தா/ பண்டு3ட/ மூடு3/ மூர/ தாவு/ கானி/
ஊர்/ ஆண்டாலும்/ தான்/ படுத்தல்/ மூன்று/ முழ/ இடமே/ யன்றோ/
நூரு/ ப4க்ஷணமுலு/-அப்3பி3ன/ எந்தோ/ நோடிகி/-அந்த/ கானி/
நூறு/ உண்டிகள்/ கிடைத்தாலும்/ எத்தனையோ/ வாய்க்கு/ அத்தனையே/ யன்றோ/
ஏரு/ நிண்டு3க3/ பாரின/ பாத்ரகு தகு3/ நீரு/ வச்சு/ கானி/
ஆறு/ நிரம்பி/ பாய்ந்தாலும்/ பாத்திரத்தளவே/ நீர்/ கொள்ளும்/ அன்றோ/
ஸாரதருனி/ ஹரினி/ த்யாக3ராஜ/ ஸன்னுதுனி/ மரவகே/ மனஸா/ (ரூ)
பெருந்தகையினை/ அரியினை/ தியாகராசன்/ போற்றுவோனை/ மறவாதே/ மனமே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஒகடி கானி - ஒகடே கானி.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
2 - பண்டு3ட - படுத்தல். இது சாவினையும் குறிக்கும்.
Top
Updated on 20 Sep 2010
No comments:
Post a Comment