Thursday, January 21, 2010

தியாகராஜ கிருதி - இந்தகன்னானந்த3 - ராகம் பி3லஹரி - Intakanna Ananda - Raga Bilahari

பல்லவி
1இந்தகன்னானந்த3மேமி ஓ ராம ராம

அனுபல்லவி
2ஸந்த ஜனுலகெல்ல 3ஸம்மதியையுண்டு3 கானி (இ)

சரணம்
சரணம் 1
ஆடு3சு நாத3முன பாடு3சு எது3ட ரா
வேடு3சு மனஸுன 4கூடி3யுண்டு3 சாலு (இ)


சரணம் 2
ஸ்ரீ ஹரி கீர்தனசே தே3ஹாதி3 இந்த்3ரிய
ஸமூஹமுல மரசி 5ஸோஹமைனதே3 சாலு (இ)


சரணம் 3
நீ ஜபமுலு வேளனீ ஜக3முலு நீவை
ராஜில்லுனய த்யாக3ராஜ நுத 6சரித்ர (இ)


பொருள் - சுருக்கம்
ஓ இராமா! தியாகராசனால் போற்றப் பெற்ற சரிதத்தோனே!

  • இத்தனைக்கு மேலான ஆனந்தமென்ன?
  • சான்றோர் யாவருக்கும் ஒப்புதல் இருக்குமன்றோ!

    • ஆடிக்கொண்டு, நாதத்துடன் பாடிக்கொண்டு, எதிரில் வர வேண்டிக்கொண்டு, உள்ளத்தினில் கூடியிருத்தலே போதும்; இத்தனைக்கு மேலான ஆனந்தமென்ன?
    • அரியின் கீர்த்தனையுடன், உடல் முதலாக புலன்கள் அனைத்தினையும் மறந்து, நான் அவனானதே போதும்; இத்தனைக்கு மேலான ஆனந்தமென்ன?
    • உனது செபம் இயற்றும் வேளை, இவ்வுலகங்கள் நீயாகி ஒளிருமய்யா; இத்தனைக்கு மேலான ஆனந்தமென்ன?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
இந்த/ கன்ன/-ஆனந்த3மு/-ஏமி/ ஓ ராம/ ராம/
இத்தனைக்கு/ மேலான/ ஆனந்தம்/ என்ன/ ஓ இராமா/ இராமா/


அனுபல்லவி
ஸந்த/ ஜனுலகு-எல்ல/ ஸம்மதியை/-உண்டு3/ கானி/ (இ)
சான்றோர்/ யாவருக்கும்/ ஒப்புதல்/ இருக்கும்/ அன்றோ/


சரணம் 1
ஆடு3சு/ நாத3முன/ பாடு3சு/ எது3ட/ ரா/
ஆடிக்கொண்டு/ நாதத்துடன்/ பாடிக்கொண்டு/ எதிரில்/ வர/

வேடு3சு/ மனஸுன/ கூடி3/-உண்டு3ட/ சாலு/ (இ)
வேண்டிக்கொண்டு/ உள்ளத்தினில்/ கூடி/ இருத்தலே/ போதும்/


சரணம் 2
ஸ்ரீ ஹரி/ கீர்தனசே /தே3ஹ/-ஆதி3/ இந்த்3ரிய/
ஸ்ரீ ஹரியின்/ கீர்த்தனையுடன்/ உடல்/ முதலாக/ புலன்கள்/

ஸமூஹமுல/ மரசி/ ஸோஹம்/-ஐனதே3/ சாலு/ (இ)
அனைத்தினையும்/ மறந்து/ நான்-அவன்/ ஆனதே/ போதும்/


சரணம் 3
நீ/ ஜபமுலு/ வேளனு/-ஈ/ ஜக3முலு/ நீவை/
உனது/ செபம் இயற்றும்/ வேளை/ இந்த/ உலகங்கள்/ நீயாகி/

ராஜில்லுனு/-அய/ த்யாக3ராஜ/ நுத/ சரித்ர/ (இ)
ஒளிரும்/ அய்யா/ தியாகராசனால்/ போற்றப் பெற்ற/ சரிதத்தோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - இந்தகன்னானந்த3 - இந்தகன்னயானந்த3.

3 - ஸம்மதியையுண்டு3 - ஸம்மதியையுண்டே : இவ்விடத்தில் 'ஸம்மதியையுண்டு3' என்பதே பொருந்தும்.

4 - கூடி3யுண்டு3 - கூடி3யுண்டே3தி3.

6 - சரித்ர - சரித.

Top

மேற்கோள்கள்
5 - ஸோஹம் ஐனதே3 - 'நான்-அவன்' ஆகுதல் - சீவான்மா பரமான்மாவுடன் ஒன்றுதல். சதாசிவ பிரமேந்திரர் என்ற அவதூதத் துறவி, 'கே2லதி பிண்டா3ண்டே3' என்ற தனது பாடலில், 'ஹம்ஸஸ்-ஸோஹம்-ஸோஹம்-ஹம்ஸம்-இதி' என்று பாடுகின்றார். இது, உபநிடதங்களில் கூறப்படும் மஹா வாக்கியங்கிளில் ஒன்றாகும். இதுவே 'அஜபா கா3யத்ரி' (ஜெபிக்கப்படாத கா3யத்ரி) என்றும் வழங்கும். 'ஸோஹம்' என்புதன் பொருள்..

Top

விளக்கம்
2 - ஸந்த - இச்சொல், ஹிந்தி வழக்கான 'ஸாது3 ஸந்த்' (சாது மற்றும் ஆங்கில சொல் saint-க்கு ஈடான 'ஸந்த்') ஆகும். அதே தெலுங்கு சொல் (ஸந்த) என்பதற்கு 'சந்தை'யென்று பொருளாகும். எனவே, இதனை 'சான்றோர்' என்று மொழிபெயர்க்கப்பட்டது.

எதிரில் வர - இறைவனைக் குறிக்கும்
கீர்த்தனை - இசையுடன் இறைவன் புகழ்பாடுதல்
மறந்து - அவற்றின் உணர்வு ஒழிந்து

Top


Updated on 21 Jan 2010

No comments: