Monday, January 11, 2010

தியாகராஜ கிருதி - நாதோ3பாஸன - ராகம் பே3க3ட3 - Nadopasana - Raga Begada

பல்லவி
1நாதோ3பாஸனசே ஸ1ங்கர
நாராயண விது4லு வெலஸிரி ஓ மனஸா

அனுபல்லவி
2வேதோ3த்3தா4ருலு 3வேதா3தீதுலு
4விஸ்1வமெல்ல நிண்டி3யுண்டே3 வாரலு (நா)

சரணம்
மந்த்ராத்முலு யந்த்ர தந்த்ராத்முலு மரி
5மன்வந்தரமுலென்னோ கல வாரலு
6தந்த்ரீ லய ஸ்வர ராக3 விலோலுலு
த்யாக3ராஜ வந்த்3யுலு ஸ்வதந்த்ருலு (நா)


பொருள் - சுருக்கம்
ஓ மனமே!

  • நாத வழிபாட்டினால் (மும்மூர்த்திகள்) சங்கரன், நாராயணன் மற்றும் நான்முகன் ஒளிர்ந்தனர்;

    • மறைகளைக் காத்தோர்,
    • மறைகளைக் கடந்தோர்,
    • உலகனைத்தும் நிறைந்திருப்போராக

  • நாத வழிபாட்டினால் (மும்மூர்த்திகள்) சங்கரன், நாராயணன் மற்றும் நான்முகன் ஒளிர்ந்தனர்;

    • மந்திர, இயந்திர, தந்திரங்களின் ஆன்மாவானோர்,
    • மன்வந்தரங்களெத்தனையோ உடையோர், அன்றி
    • நரம்பு, தோற்கருவிகள், சுரம் மற்றும் ராகத்தினில் வல்லுனர்கள்,
    • தியாகராசன் வணங்குவோர், மற்றும்
    • தன்னிச்சையாக இருப்போராக

  • நாத வழிபாட்டினால் (மும்மூர்த்திகள்) சங்கரன், நாராயணன் மற்றும் நான்முகன் ஒளிர்ந்தனர்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நாத3/-/உபாஸனசே/ ஸ1ங்கர/
நாத/ வழிபாட்டினால்/ (மும்மூர்த்திகள்) சங்கரன்/

நாராயண/ விது4லு/ வெலஸிரி/ ஓ மனஸா/
நாராயணன்/ மற்றும் நான்முகன்/ ஒளிர்ந்தனர்/ ஓ மனமே/


அனுபல்லவி
வேத3/-உத்3தா4ருலு/ வேத3/-அதீதுலு/
மறைகளை/ காத்தோர்/ மறைகளை/ கடந்தோர்/

விஸ்1வமு/-எல்ல/ நிண்டி3-உண்டே3 வாரலு/ (நா)
உலகு/ அனைத்தும்/ நிறைந்திருப்போராக/ நாத...


சரணம்
மந்த்ர/-ஆத்முலு/ யந்த்ர/ தந்த்ர/-ஆத்முலு/ மரி/
மந்திர/ ஆன்மா/ இயந்திர/ தந்திரங்களின்/ ஆன்மாவானோர்/ அன்றி/

மன்வந்தரமுலு/-என்னோ/ கல வாரலு/
மன்வந்தரங்கள்/ எத்தனையோ/ உடையோர்/

தந்த்ரீ/ லய/ ஸ்வர/ ராக3/ விலோலுலு/
நரம்பு/ தோற்கருவிகள்/ சுரம்/ மற்றும்/ ராகத்தினில்/ வல்லுனர்கள்/

த்யாக3ராஜ/ வந்த்3யுலு/ ஸ்வதந்த்ருலு/ (நா)
தியாகராசன்/ வணங்குவோர்/ மற்றும் தன்னிச்சையாக இருப்போராக/ நாத...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
5 - மன்வந்தரமுலென்னோ கல வாரலு - மந்தரமுலென்னி கல வாரலு.

5 - மன்வந்தர - மன்வந்த்ர : 'மன்வந்தர' என்பதே சரியாகும்.

6 - விலோலுலு - விலோலுரு.
Top

மேற்கோள்கள்
1 - உபாஸன - வழிபாடு. 'வழிபட வழிபட அங்ஙனமே ஆவாய்' - ப்3ரு2ஹதா3ரண்யக உபநிடதம், 1-வது அத்தியாயம், 5-வது ப்3ராஹ்மண - ஸ்வாமி கிருஷ்ணானந்தாவின் விளக்கவுரை நோக்கவும்.

5 - மன்வந்தர - மன்வந்தரம் - மனுவின் காலவரை - 71 மகா யுகங்கள், அதாவது 12,000 தேவர்களின் ஆண்டுகள், அதாவது 4,320,000 மனிதரின் ஆண்டுகள் - பிரமனின் 1/14-வது நாள் ஆகும். இந்த காலத்திற்கு, ஒரு மனு தலைமை தாங்குவதாக. அத்தகைய 6 மனுக்களின் காலம் முடிந்து, தற்போது 'வைவஸ்வத மனு' எனப்படும் 7-வது மனுவின் காலம் நடைபெறுவதாக - இன்னும் அத்தகைய 7 மனுக்களின் (மொத்தம் 14 மனுக்களின்) காலவரை பிரமனின் ஒரு நாளாகும். (மோனியர்ஸ் சம்ஸ்கிருத அகராதி நோக்கவும்)

'நாதோபாஸனை' எனப்படும் நாத வழிபாடு பற்றி அறிய

Top

விளக்கம்
2 - வேதோ3த்3தா4ருலு - மறைகளைக் காத்தோர் - ஹயக்2ரீவர் அல்லது விஷ்ணுவின் மீன் அவதாரத்தினைக் குறிக்கலாம்.

2 - வேதோ3த்3தா4ருலு - அனுபல்லவியிலும் மற்றும் சரணத்திலும் கூறப்பட்ட இத்தகைய சொற்கள் மரியாதைப் பன்மையாகும்.

3 - வேதா3தீதுலு - மறைகளைக் கடந்தோர் - பதஞ்சலி யோக சூத்திரத்தினில் (I.24 - 27) கூறப்படும் 'ஈசுவரன்' என்பதாகக் கொள்ளலாம்.

4 - விஸ்1வமெல்ல நிண்டி3யுண்டே3 வாரலு - உலகனைத்தும் நிறைந்திருப்போர் - 'விஷ்ணு' என்ற பெயரின் விளக்கமாகும்.

Top

5 - மன்வந்தரமுலென்னோ கல வாரலு - மன்வந்தரங்களெத்தனையோ உடையோர் - பிரமனைக் குறிக்கலாம்.

6 - தந்த்ரீ லய விலோலுலு - நரம்பு மற்றும் தோற்கருவிகளில் வல்லுநர்கள் - இது நாரதர், தும்புரு, சரஸ்வதி மற்றும் நந்தி ஆகியோரைக் குறிக்கலாம்.

பல்லவியில் சங்கரன், நாராயணன் மற்றும் பிரமன் என மும்மூர்த்திகளை நேரடியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அனுபல்லவி மற்றும் சரணத்தில் கூறப்பட்டுள்ளவை யாரைப்பற்றி என சரிவர விளங்கவில்லை. புத்தகங்களில் இவையும் மும்மூர்த்திகளையே குறிப்பதாகக் கொள்ளப்பட்டுள்ளது. அங்ஙனமே இங்கும் பொருள் கொள்ளப்பட்டது.

இயந்திரம், தந்திரம் - தெய்வ வழிபாட்டின் சில முறைகள்

Top


Updated on 12 Jan 2010

No comments: