Thursday, June 25, 2009

தியாகராஜ கிருதி - ராமா ஸீதா ராம - ராகம் ப3லஹம்ஸ - Rama Sita Rama - Raga Balahamsa

பல்லவி
ராம ஸீதா ராம ராம ராஜ தனய ராம த31ரத2
ராம ஸீதா ராம ராம ரகு4 குலாப்3தி4 ஸோம

சரணம்
சரணம் 1
உரக3முலு பெனகி3னட்லுன்னதி3 நா மனஸு
கருண ஜேஸி கண்ட ஜூசி கரமு பட்டு ராம (ராம)


சரணம் 2
ஸத்ஸதி பதி ஸேவ ஸேயு 1சந்த3முன நா மனஸு
உத்ஸவமுலு 2ஸேயுடகுப்பொங்கெ3னு ராம (ராம)


சரணம் 3
3கல்ப பூ4முன தீக3 4கட்டு ரீதி மனஸு
5கல்பமுலென்னைன விடி3சி 6கத3லது3 ஸ்ரீ ராம (ராம)


சரணம் 4
7அத்3வைத ஸாம்ராஜ்யமுலப்3பி3னட்டு ராம
8ஸத்3வைராக்3யமுனிதி3யு 9ஸாயுஜ்யமே ராம (ராம)


சரணம் 5
ஆக3ம நிக3மமுலகுனர்த2மிதி3 ராம
10த்யாக3ராஜுசே சேயிஞ்சி 11போ43மந்து3 ராம (ராம)


பொருள் - சுருக்கம்
இராமா! சீதாராமா! இளவரசே! தசரத ராமா! இரகு குலக்கடலிலுத்த மதியே!
  • அரவுகள் பிணைத்தது போன்றுள்ளது எனது மனம்; கருணை புரிந்து, கண்ணால் நோக்கி, கைப்பற்றுவாய்;

  • உண்மையான மனைவி, கணவன் சேவை செய்தற் போன்று, எனது மனம் திருவிழா கொண்டாடப் பொங்கியது;

  • கற்ப தருவினை கொடிகள் பிணைத்தாற் போன்று, (எனது) மனம் கற்பங்கள் எத்தனையாகினும் (உன்னை) விட்டகலாது;

  • இரண்டன்மைப் பேரரசினை யடைதல் போன்று, உண்மையான பற்றறுத்தலும்; இஃதும் சாயுச்சியமே;

  • ஆகமங்கள், மறைகளின் பொருளிதுவே;

  • தியாகராசனால் சேவை செய்வித்து, களிப்பெய்துவாய்.பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ ஸீதா/ ராம/ ராம/ ராஜ/ தனய/ ராம/ த31ரத2/
இராமா/ சீதா/ ராமா/ இராமா/ மன்னன்/ மகனே (இளவரசே)/ இராமா/ தசரத/

ராம/ ஸீதா/ ராம/ ராம/ ரகு4/ குல/-அப்3தி4/ ஸோம/
ராமா/ சீதா/ ராமா/ இராமா/ இரகு/ குல/ கடலில் (உதித்த)/ மதியே/


சரணம்
சரணம் 1
உரக3முலு/ பெனகி3ன/-அட்லு/-உன்னதி3/ நா/ மனஸு/
அரவுகள்/ பிணைத்தது/ போன்று/ உள்ளது/ எனது/ மனம்/

கருண/ ஜேஸி/ கண்ட/ ஜூசி/ கரமு/ பட்டு/ ராம/ (ராம)
கருணை/ புரிந்து/ கண்ணால்/ நோக்கி/ கை/ பற்றுவாய்/ இராமா/


சரணம் 2
ஸத்/-ஸதி/ பதி/ ஸேவ/ ஸேயு/ சந்த3முன/ நா/ மனஸு/
உண்மையான/ மனைவி/ கணவன்/ சேவை/ செய்தற்/ போன்று/ எனது/ மனம்/

உத்ஸவமுலு/ ஸேயுடகு/-உப்பொங்கெ3னு/ ராம/ (ராம)
திருவிழா/ கொண்டாட/ பொங்கியது/ இராமா/


சரணம் 3
கல்ப/ பூ4ஜமுன/ தீக3/ கட்டு/ ரீதி/ மனஸு/
கற்ப/ தருவினை/ கொடிகள்/ பிணைத்தாற்/ போன்று/ (எனது) மனம்/

கல்பமுலு/-என்னி/-ஐன/ விடி3சி/ கத3லது3/ ஸ்ரீ ராம/ (ராம)
கற்பங்கள்/ எத்தனை/ ஆகினும்/ (உன்னை) விட்டு/ அகலாது/ ஸ்ரீ ராமா/


சரணம் 4
அத்3வைத/ ஸாம்ராஜ்யமுலு/-அப்3பி3ன/-அட்டு/ ராம/
இரண்டன்மை/ பேரரசினை/ யடைதல்/ போன்று/ இராமா/

ஸத்3/-வைராக்3யமுனு/-இதி3யு/ ஸாயுஜ்யமே/ ராம/ (ராம)
உண்மையான/ பற்றறுத்தலும்/ இஃதும்/ சாயுச்சியமே/ இராமா/


சரணம் 5
ஆக3ம/ நிக3மமுலகுனு/-அர்த2மு/-இதி3/ ராம/
ஆகமங்கள்/ மறைகளின்/ பொருள்/ இதுவே/ இராமா/

த்யாக3ராஜுசே/ சேயிஞ்சி/ போ43மு/-அந்து3/ ராம/ (ராம)
தியாகராசனால்/ (சேவை) செய்வித்து/ களிப்பு/ எய்துவாய்/ இராமா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - சந்த3முன - சந்தா3ன : 'சந்த3முன' சரியான சொல்லாகும்.

2 - உப்பொங்கெ3னு - உப்பொங்கி3னி : 'உப்பொங்கெ3னு' சரியான சொல்லலாகும்.

4 - கட்டு ரீதி மனஸு - கட்டு ரீதி நா மனஸு.

6 - கத3லது3 - கத3லனு : 'கத3லது3' இவ்விடத்தில் சரியான சொல்லலாகும்.

8 - ஸத்3வைராக்3யமுனிதி3யு - ஸத்3வைராக்3யமு நிதி4யு : 'ஸத்3வைராக்3ய' என்றிருந்தால், 'நிதி4யு' சரியாக இருக்கலாம். ஆனால், எல்லா புத்தகங்களிலும், 'ஸத்3வைராக்3யமு' என்று கொடுக்கப்பட்டுள்ளதால் 'நிதி4யு' தவறாகும்.

11 - போ43மந்து3 - போ43மொந்து3 : தியாகராஜர் மற்ற கிருதிகளிலும் 'போ43மந்து3' என்று பயன்படுத்துகின்றார். எனவே, 'போ43மந்து3' ஏற்கப்பட்டது.

Top

மேற்கோள்கள்
3 - கல்ப பூ4 - கற்பதரு - விரும்பியதையருளும் வானோர் தரு. கற்ப தருவினை கொடிகள் சுற்றியுள்ளதாகக் கூறுவர்.

5 - கல்பமுலு - கற்பம் - ஆயிரங்கோடியாண்டுகள்

9 - ஸாயுஜ்ய - இறைவனுடன் ஒன்றுதல் - ஆதி சங்கரர் இயற்றிய 'சிவானந்தலஹரி'யில் (செய்யுள் 28) இறைவனுடன் ஒன்றுதலில் உள்ள நான்கு படிகளான 'சாலோகம்', 'சாமீபம்', 'சாரூபம்' மற்றும் 'சாயுச்சியம்' விளக்கப்பட்டுள்ளது.

திருமூலரின் திருமந்திரம் செய்யுள் 1507 முதல் 1513 நோக்கவும்.

Top

விளக்கம்
7 - அத்3வைத ஸாம்ராஜ்யமு - இரண்டன்மை - அத்துவைதம். சதாசிவ பிரமேந்திரர் என்ற மகானின் 'கே2லதி பிண்டா3ண்டே3' என்ற கீர்த்தனையில் கூறப்படும் 'ஹம்ஸஸ்ஸோஹம் ஸோஹம் ஹம்ஸ' என்ற மகாவாக்கியத்தின் நேரடி உணர்வு.

10 - த்யாக3ராஜுசே சேயிஞ்சி - தியாகராசனால் சேவை செய்வித்து - 'தியாகராசனின் கரங்களால் சேவை செய்வித்து' என்றும் பொருள் கொள்ளலாம். இறைவனுக்கு சேவை செய்வதற்கும் இறைவனுடைய அருள் வேண்டும். இதனை 'அனுக்ரஹம்' என்று சம்ஸ்கிருதத்தில் கூறவர். இதுகுறித்து காஞ்சி மாமுனிவரின் விளக்கத்தினை நோக்கவும்.

11 - போ43மந்து3 - களிப்பு எய்துவாய் - இரண்டாவது சரணத்தில் கூறியபடியான 'உண்மையான மனைவி கணவனுக்குச் செய்யும் சேவை'யைக் குறிக்கும். இதனை, 'நாரத பக்தி சூத்திர'த்தில் (82) 'காந்தாசக்தி' (இறைவனிடம் மனைவியைப் போன்றதான பற்று கொள்ளுதல்) என்று கூறப்படும்.

பற்றறுத்தல் - 'வைராக்கியம்' எனப்படும் உலக இன்பங்களத் துறந்த நிலை

Top


Updated on 25 Jun 2009

No comments: