Thursday, February 19, 2009

தியாகராஜ கிருதி - ராம நாமம் ப4ஜரே - ராகம் மத்4யமாவதி - Rama Namam Bhajare - Raga Madhyamavati

பல்லவி
ராம நாமம் ப4ஜரே மானஸ

சரணம்
சரணம் 1
தொ3ங்க3 ரீதி திருக3ங்க3னேல ஸ்ரீ
ரங்க3னி பத3முல கௌகி3லிஞ்சுகொனி (ராம)


சரணம் 2
1எக்கடை3ன ஹரியொக்கட3னுசு மதி3
சக்க தனமு கனி ஸொக்கி ஸந்ததமு (ராம)


சரணம் 3
எந்து3 போக ராகேந்து3 முகு2னி 2தன-
யந்து3
ஜூசி 32லமந்து3 கோரி ஸ்ரீ (ராம)


சரணம் 4
தே3ஹமெத்தி ஸந்தே3ஹ பட3
4வைதே3ஹி பா4க்3யமா தே3ஹி தே3ஹியனி (ராம)


சரணம் 5
ஸாது4 ஸஜ்ஜனுல போ34 சேத ப4
பா34 மான வலெ ஸாத4கம்பு3தோ (ராம)


சரணம் 6
தீ3னுடை35பந்தா2னுடை3 வினுமு-
6அனுராக3முன மேனொஸங்கி3 ஸ்ரீ (ராம)


சரணம் 7
ராக3 ரஹித ஜன பா43தே4யுனி
வினா க3தியெவ்வரே த்யாக3ராஜ நுத (ராம)


பொருள் - சுருக்கம்
மனமே! எளியோனாயினும், மிக்கு வல்லோனாயினும், கேள்மின்!
  • தியாகராசனால் போற்றப் பெற்ற இராம நாமத்தினை பஜனை செய்வாய்;

  • திருடனைப்போன்று திரிவதேன்? திருவரங்கனின் திருவடிகளை யணைத்துக் கொண்டு இராம நாமத்தினை பஜனை செய்வாய்;

  • எங்காகிலும், அரி ஒருவனேயென்று, உள்ளத்தினில் தெளிவுறக் கண்டு, சொக்கி, எவ்வமயமும் இராம நாமத்தினை பஜனை செய்வாய்;

  • எங்கும் செல்லாது, முழுமதி முகத்தோனை தன்னுள் கண்டு, அங்கு (முத்திப்) பயனை விழைந்து, இராம நாமத்தினை பஜனை செய்வாய்;

  • உடலெடுத்து, ஐயப்படாது, 'வைதேகியின் பேறே! அருள்வாய், அருள்வாய்' என இராம நாமத்தினை பஜனை செய்வாய்;

  • சாதுக்கள், நல்லோரின் அறிவுறையுடன், பிறவிக்கடலின் தொல்லைகளைப் பொறுக்க வேணும்; விடாமுயற்சியுடன் இராம நாமத்தினை பஜனை செய்வாய்;

  • அனுராகத்துடன் (இறைவன் தொண்டுக்கு) உடலையளித்து இராம நாமத்தினை பஜனை செய்வாய்;

  • பற்றற்ற மக்களுக்கு உற்றவை யருள்வோனை அன்றி போக் கெவரே? இராம நாமத்தினை பஜனை செய்வாய்.பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ நாமம்/ ப4ஜரே/ மானஸ/
இராம/ நாமத்தினை/ பஜனை செய்வாய்/ மனமே/


சரணம்
சரணம் 1
தொ3ங்க3/ ரீதி/ திருக3ங்க3னு/-ஏல/
திருடனை/ போன்று/ திரிவது/ ஏன்/

ஸ்ரீ ரங்க3னி/ பத3முல/ கௌகி3லிஞ்சுகொனி/ (ராம)
திருவரங்கனின்/ திருவடிகளை/ யணைத்துக் கொண்டு/ இராம...


சரணம் 2
எக்கடை3ன/ ஹரி/ ஒக்கடு3/-அனுசு/ மதி3/
எங்காகிலும்/ அரி/ ஒருவனே/ யென்று/ உள்ளத்தினில்/

சக்க தனமு/ கனி/ ஸொக்கி/ ஸந்ததமு/ (ராம)
தெளிவுற/ கண்டு/ சொக்கி/ எவ்வமயமும்/ இராம...


சரணம் 3
எந்து3/ போக/ ராகா-இந்து3/ முகு2னி/
எங்கும்/ செல்லாது/ முழு மதி/ முகத்தோனை/

தன-அந்து3/ ஜூசி/ ப2லமு/-அந்து3/ கோரி/ ஸ்ரீ/ (ராம)
தன்னுள்/ கண்டு/ (முத்திப்) பயனை/ அங்கு/ விழைந்து/ ஸ்ரீ ராம...


சரணம் 4
தே3ஹமு/-எத்தி/ ஸந்தே3ஹ பட3க/
உடல்/ எடுத்து/ ஐயப்படாது/

வைதே3ஹி/ பா4க்3யமா/ தே3ஹி/ தே3ஹி/-அனி/ (ராம)
'வைதேகியின்/ பேறே/ அருள்வாய்/ அருள்வாய்'/ என/ இராம...


சரணம் 5
ஸாது4/ ஸஜ்ஜனுல/ போ34 சேத/ ப4வ/
சாதுக்கள்/ நல்லோரின்/ அறிவுறையுடன்/ பிறவிக்கடலின்/

பா34/ மான/ வலெ/ ஸாத4கம்பு3தோ/ (ராம)
தொல்லைகளை/ பொறுக்க/ வேணும்/ விடாமுயற்சியுடன்/ இராம...


சரணம் 6
தீ3னுடு3/-ஐன/ பந்தா2னுடு3/-ஐன/ வினுமு/-
எளியோன்/ ஆயினும்/ மிக்கு வல்லோன்/ ஆயினும்/ கேள்மின்/

அனுராக3முன/ மேனு/-ஒஸங்கி3/ ஸ்ரீ/ (ராம)
அனுராகத்துடன்/ (இறைவன் தொண்டுக்கு) உடலை/ யளித்து/ ஸ்ரீ ராம...


சரணம் 7
ராக3/ ரஹித/ ஜன/ பா43தே4யுனி/
பற்று/ அற்ற/ மக்களுக்கு/ உற்றவை யருள்வோனை/

வினா/ க3தி/-எவ்வரே/ த்யாக3ராஜ/ நுத/ (ராம)
அன்றி/ போக்கு/ எவரே/ தியாகராசனால்/ போற்றப் பெற்ற/ இராம...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - தனயந்து3 - நீயந்து3

3 - 2லமந்து3 கோரி - ப2லமந்து3 கோரு - ப2லமந்து3 கோர : அனைத்து சரணங்களும் (கடைசி சரணத்தைத் தவிர) பல்லவியுடன், சரணத்தின் கடைசி சொல்லினால் இணைக்கப்படுகின்றது. அதன்படி, 'கோரி' என்ற சொல்மட்டுமே இச்சரணத்தினை பல்லவியுடன் இணைக்கும். எனவே 'ப2லமந்து3 கோரி' ஏற்கப்பட்டது.

4 - பா4க்3யமா - எல்லா புத்தகங்களிலும் இப்படித்தான் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எனது சிற்றறிவுக்குத் தெரிந்தவரை இது 'பா4க்3யமு தே3ஹி தே3ஹியனி' என்றிருக்கவேண்டும் (வைதேகியின் பேற்றினை அருள்வாய் அருள்வாய் என..). அன்றேல், கடைசியில் வரும் 'தே3ஹி தே3ஹியனி' (அருள்வாய் அருள்வாயென) என்ற சொற்களின் பொருள் முழுமையாக இல்லை. இதுபற்றி மேலும் விளக்கம் கீழே நோக்கவும்.

5 - பந்தா2னுடை3 - பந்தா4னுடை3ன : 'பந்தா2னுடை3ன' - சரியான சொல்லாகும்.

Top

மேற்கோள்கள்
1 - எக்கடை3ன ஹரியொக்கட3னுசு - எங்கும் அரியொருவனே என்று - பகவத்-கீதையில் கண்ணன் (அத்தியாயம் 7, செய்யுள் 19) பகர்ந்த சொற்களினை எதிரொலிக்கின்றார் -

"பல பிறவிகளுக்குப் பின்னர், மெய்யறிவுடையோன், யாவும் வாசுதேவன் (உள்ளுறை இயக்கம்) என்றுணர்ந்து, என்னிடம் அடைக்கல் புகுகின்றான். அத்தகைய சீவன் மிக்கரிதாகும்." (ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.)

6 - அனுராக3முன - அனுராகம் - இறைவனிடம் கொள்ளும் காதல் - இச்சொல் நாரத பக்தி சூத்திரங்களில் விவரிக்கப்பட்டுள்ளது.

Top

விளக்கம்
4 - வைதே3ஹி பா4க்3யமா - தியாகராஜர் தன்னுடைய 'ஏ வரமடு3கு3து3ரா' என்ற கல்யாணி ராக கீர்த்தனையில் வைதேகியின் பேற்றினை வருணிக்கின்றார் -

"உன்னை எவ்வமயமும் (தனது) இதயக் கோயிலினில் கண்டு, தீய விழைவுகளைக் கைவிட்டு, நீ அவளுக்கு மணாளன் என்ற மோகத்தினையும் மறந்து, 'ஸோஹம்' (அவன் நானே) என்னும் சுகம் வைதேகியின் பாலிருக்க...." (ராமனை, தனக்கு மட்டுமே உரித்தான, கணவனாக அன்றி அனைத்துயிர்களுக்கும் கணவனான பரம்பொருளாக நோக்கும் நிலை)

Top


Updated on 20 Feb 2009

No comments: