Sunday, June 28, 2009

தியாகராஜ கிருதி - எந்து3கோ பா3க3 - ராகம் மோஹனம் - Enduko Baaga - Raga Mohanam

பல்லவி
எந்து3கோ பா33 தெலியது3

அனுபல்லவி
அந்த3கா33 1ஸ்ரீ ராம ஈ தனு-
வஸ்தி2ரமனியீ கலி மானவுல(கெந்து3கோ)

சரணம்
சரணம் 1
3ட்டிக3 ராள்ளனு கட்டின 2க்3ரு2ஹமுலு
மட்டு மிதமு லேனட்டி 3பரிஜனுலு
சுட்டுகொன்ன நிஜ சுட்டாலகொருல
பட்டுலகதி2துலகு
பெட்ட லேக தம பொட்ட ஸாகு-
கொன்னட்டி 4தே3ஹமுலு ரெட்டு ஸஞ்சுலனு
கட்டின த4னமுல பெட்டெல தோட3னு
பெட்டி பொய்யே மட்டு கனுங்கொ3னி (எந்து3கோ)


சரணம் 2
கல்லலாடி3 கடு3பு பல்லமு நிம்புட-
கெல்லவாரி த4னமெல்ல ஜேர்சுகொனி
பல்லவாத4ருலனெல்ல கனி 5ஸு1னகபு
பில்லல வலெ திரிகி3-
வொள்ள ரோக3முலு கொள்ளகா3 தக3
தொல்லி பைகமுலு மெல்ல ஜார ஜனு-
லெல்ல தூ3ர பரமெல்ல பார பு4வி
மள்ளி புட்டு ப2லமெல்ல கனுங்கொ3னி (எந்து3கோ)


சரணம் 3
வஞ்சகுலனனுஸரிஞ்சினயலமட-
யிஞ்சுகைன ஸைரிஞ்ச லேக தம
ஸஞ்சித கர்மமுலஞ்சு தெலிஸி
6வேரெஞ்சு வாரல ஜூசி
7மஞ்சு வலெ ப்ரதி-ப2லிஞ்சு ஸம்பத3-
லஞ்சு கோரகனு மஞ்சி த்யாக3-
ராஜஞ்சிதமுக3 பூஜிஞ்சு நுதிஞ்சு
ப்ரபஞ்ச நாது2னி ப4ஜிஞ்சுதா3மனுசு (எந்து3கோ)


பொருள் - சுருக்கம்
அழகனே, இராமா!
  • ஏனோ நன்கு தெரியாது?
  • இவ்வுடல் நிலையற்றதென இக்கலி மானிடர்களுக்கு ஏனோ நன்கு தெரியாது?


    • கெட்டியாக கற்களினால் கட்டிய வீடுகளும்,

    • மட்டு மிதமற்றதெனும் பரிசனங்களும்,

    • சூழ்ந்துள்ள உண்மையான சுற்றத்தினருக்கும், பிறர் மக்களுக்கும், விருந்தினருக்கும் ஈயாது, தமது வயிற்றினை நிரப்பி வளர்த்த அத்தகைய உடலும்,

    • சாக்குப் பைகளில் கட்டிய செல்வப் பெட்டகங்களுடனும்,

  • விட்டு வைத்து ஏகும் வரையினைக் கண்டுகொண்டும், ஏனோ நன்கு தெரியாது?


    • பொய்ப் பகன்று, வயிற்றுக் குழியினை நிரப்புதற்கு, பிறர் சொத்துக்களையெல்லாம் சேர்த்துக்கொண்டு,

    • மொட்டிதழ் பெண்டிரைக் கண்டு, நாய்க் குட்டிகளைப் போன்று திரிந்து,

      • உடலை நோய்கள் கொள்ளையாகப் பீடிக்க,

      • முந்தைய சொத்துக்களெல்லாம் மெள்ள கரைய,

      • மக்கள் யாவரும் தூற்ற,

      • பரமெல்லாம் நழுவ,

  • புவியில் மீண்டும் பிறக்கும் பயன்களைக் கண்டுகொண்டும், ஏனோ நன்கு தெரியாது?


    • வஞ்சகர்களை அனுசரித்தலின் துன்பத்தினைக் கொஞ்சமும் தாளாது,

    • தமது முந்தைய வினைகளெனத் தெரிந்து,

    • வேறெண்ணுவோரை நோக்கி,

    • பனித்துளி போன்று பிரதிபலிக்கும் சம்பத்துக்கள் என, (அவற்றினை) விழையாது,

  • சீரிய தியாகராசன் பணிவுடன் தொழும், போற்றும் உலகத் தலைவனை (நாமும்) வழிபடுவோமென, ஏனோ நன்கு தெரியாது?



பல்லவி
எந்து3கோ/ பா33/ தெலியது3/
ஏனோ/ நன்கு/ தெரியாது/


அனுபல்லவி
அந்த3கா33/ ஸ்ரீ ராம/ ஈ/ தனுவு/-
அழகனே/ ஸ்ரீ ராமா/ இந்த/ உடல்/

அஸ்தி2ரமு/-அனி/-ஈ/ கலி/ மானவுலகு/-(எந்து3கோ)
நிலையற்றது/ என/ இந்த/ கலி/ மானிடர்களுக்கு/ ஏனோ...


சரணம்
சரணம் 1
3ட்டிக3/ ராள்ளனு/ கட்டின/ க்3ரு2ஹமுலு/
கெட்டியாக/ கற்களினால்/ கட்டிய/ வீடுகளும்/

மட்டு/ மிதமு/ லேனி/-அட்டி/ பரிஜனுலு/
மட்டு/ மிதம்/ அற்றது/ எனும்/ பரிசனங்களும்/

சுட்டுகொன்ன/ நிஜ/ சுட்டாலகு/-ஒருல/
சூழ்ந்துள்ள/ உண்மையான/ சுற்றத்தினருக்கும்/ பிறர்/

பட்டுலகு/-அதி2துலகு/
மக்களுக்கும்/ விருந்தினருக்கும்/

பெட்ட லேக/ தம/ பொட்ட/ ஸாகு-கொன்ன-/
ஈயாது/ தமது/ வயிற்றினை/ நிரப்பி வளர்த்த/

அட்டி/ தே3ஹமுலு/ ரெட்டு/ ஸஞ்சுலனு/
அத்தகைய/ உடலும்/ சாக்கு/ பைகளில்/

கட்டின/ த4னமுல/ பெட்டெல தோட3னு/
கட்டிய/ செல்வ/ பெட்டகங்களுடனும்/

பெட்டி/ பொய்யே/ மட்டு/ கனுங்கொ3னி/ (எந்து3கோ)
விட்டு வைத்து/ ஏகும்/ வரையினை/ கண்டுகொண்டும்/ ஏனோ...


சரணம் 2
கல்லலு/-ஆடி3/ கடு3பு/ பல்லமு/ நிம்புடகு/-
பொய்/ பகன்று/ வயிற்று/ குழியினை/ நிரப்புதற்கு/

எல்லவாரி/ த4னமு/-எல்ல/ ஜேர்சுகொனி/
பிறர்/ சொத்துக்களை/ யெல்லாம்/ சேர்த்துக்கொண்டு/

பல்லவ-அத4ருலனு/-எல்ல/ கனி/ ஸு1னகபு/
மொட்டிதழ் பெண்டிரை/ எல்லாம்/ கண்டு/ நாய்/

பில்லல/ வலெ/ திரிகி3/-
குட்டிகளை/ போன்று/ திரிந்து/

ஒள்ள/ ரோக3முலு/ கொள்ளகா3/ தக3ல/
உடலை/ நோய்கள்/ கொள்ளையாக/ பீடிக்க/

தொல்லி/ பைகமுலு/ மெல்ல/ ஜார/ ஜனுலு/
முந்தைய/ சொத்துக்களெல்லாம்/ மெள்ள/ கரைய/ மக்கள்/

எல்ல/ தூ3ர/ பரமு/-எல்ல/ பார/ பு4வி/
யாவரும்/ தூற்ற/ பரம்/ எல்லாம்/ நழுவ/ புவியில்/

மள்ளி/ புட்டு/ ப2லமு/-எல்ல/ கனுங்கொ3னி/ (எந்து3கோ)
மீண்டும்/ பிறக்கும்/ பயன்களை/ எல்லாம்/ கண்டுகொண்டும்/ ஏனோ...


சரணம் 3
வஞ்சகுலனு/-அனுஸரிஞ்சின/-அலமட/-
வஞ்சகர்களை/ அனுசரித்தலின்/ துன்பத்தினை/

இஞ்சுகைன/ ஸைரிஞ்ச லேக/ தம/
கொஞ்சமும்/ தாளாது/ தமது/

ஸஞ்சித/ கர்மமுலு/அஞ்சு/ தெலிஸி/
முந்தைய/ வினைகள்/ என/ தெரிந்து/

வேரு/-எஞ்சு வாரல/ ஜூசி/
வேறு/ எண்ணுவோரை/ நோக்கி/

மஞ்சு/ வலெ/ ப்ரதி-ப2லிஞ்சு/ ஸம்பத3லு/-
பனித்துளி/ போன்று/ பிரதிபலிக்கும்/ சம்பத்துக்கள்/

அஞ்சு/ கோரகனு/ மஞ்சி/ த்யாக3ராஜு/-
என/ (அவற்றினை) விழையாது/ சீரிய/ தியாகராசன்/

அஞ்சிதமுக3/ பூஜிஞ்சு/ நுதிஞ்சு/
பணிவுடன்/ தொழும்/ போற்றும்/

ப்ரபஞ்ச/ நாது2னி/ ப4ஜிஞ்சுதா3மு/-அனுசு/ (எந்து3கோ)
உலக/ தலைவனை/ (நாமும்) வழிபடுவோம்/ என/ ஏனோ...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஸ்ரீ ராம - ஸ்ரீ ராம ஸ்ரீ ராம

2 - க்3ரு2ஹமுலு - க்3ரு2ஹமுல

3 - பரிஜனுலு - பரிஜனுல

4 - தே3ஹமுலு - தே3ஹமுல

5 - ஸு1னகபு - ஸு1னக

Top

மேற்கோள்கள்

விளக்கம்
6 - வேரெஞ்சு வாரல - வேறெண்ணுவோர் - உலகோரினின்றும் மாறுபட்ட முறையில் எண்ணும் இறைவனின் தொண்டர்கள்

7 - மஞ்சு வலெ ப்ரதி-ப2லிஞ்சு - பனி போன்று பிரதிபலிக்கும் - சூரியன் எழுந்த சிறிது நேரத்திலேயே அந்த பனி விலகும் தன்மையது. அது போன்றே நிலையற்றது செல்வமும்.

பரிசனம் - சுற்றம், சேவகர்.

மக்கள் - குழந்தைகள்

விட்டு வைத்து ஏகும் - விட்டு வைத்து உடல் நீக்கும்

பரம் - கடவுள், அவ்வுலகம்

Top


Updated on 28 Jun 2009

1 comment:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே

சரணம் 1
க3ட்டிக3/ ராள்ளனு/ கட்டின- ராள்ளனு என்பதற்கு ‘கற்களை’ என்று பொருள் அல்லவா? ராள்ளதோ என்பது கற்களால் என்று பொருள் தருமல்லவா?

பொய்யேமட்டு என்பதற்கு , ஏகும் வரையினை என்பதற்குப் பதிலாக ஏகும் வரை என்று பொருள் கொள்ளலாமே.

மிதமற்றதெனும் பரிசனங்களும்- பரிசனங்களுக்கு என்பது சரியாக இருக்கும்.

”அத்தகைய உடலும், சாக்குப் பைகளில் கட்டிய செல்வப் பெட்டகங்களுடனும், விட்டு வைத்து ஏகும் வரையினைக் கண்டுகொண்டும்” உடலையும் செல்வத்தையும் விட்டு வைத்து என்று தவறாகப் பொருள் கொள்ளமுடியும்.

தேஹமுலு என்றால் உடல்கள் என்றும் தேஹமுல என்றால் உடல்களை என்று பொருள் தரும். தேஹமுல எனும் சொல்லை கனுங்கொனியோடு சேர்த்து உடலைப் பார்த்துக்கொண்டு (பேணிக்கொண்டு) என்று எடுத்துக்கொண்டு கீழ் வருமாறு பதம் பிரித்தால்,

”கெட்டியாக கற்களினால் கட்டிய வீடுகளை, மட்டு மிதமற்றதெனும் பரிசனங்களுக்கும், சூழ்ந்துள்ள உண்மையான சுற்றத்தினருக்கும், பிறர் மக்களுக்கும், விருந்தினருக்கும் ஈயாது, சாக்குப் பைகளில் கட்டிய செல்வப் பெட்டகங்களுடனும், விட்டு வைத்து ஏகும் வரையில், தமது வயிற்றினை நிரப்பி வளர்த்த அத்தகைய உடலை கண்டுகொண்டும், ஏனோ நன்கு தெரியாது?”.
என்று பொருள் கிடைக்கிறது.

இவ்வாறு பதம் பிரித்தால் -வீடுகளை செல்வப்பெட்டகங்களுடன் விட்டு விட்டு என்று பொருள் தருகிறது.
வணக்கம்
கோவிந்தசாமி