1அனுராக3மு லேனி மனஸுன ஸு-ஞானமு ராது3
அனுபல்லவி
க4னுலைன 2அந்தர்-ஞானுலகெருகே கானி (அ)
சரணம்
வக3 வக3கா3 பு4ஜியிஞ்சே வாரிகி த்ரு2ப்தியௌ ரீதி
3ஸ-கு3ண த்4யானமு பைனி ஸௌக்2யமு த்யாக3ராஜ நுத (அ)
பொருள் - சுருக்கம்
- தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
- அனுராகமற்ற மனத்தினில் மெய்ஞ்ஞானம் வாராது;
- சான்றோராகிய உள்நோக்கு ஞானியருக்கே தெரியும்;
- வகை வகையாக புசிப்போருக்கு நிறைவுண்டாவது போன்று, சகுணத் தியானத்தினில் சௌக்கியமும்.
- அனுராகமற்ற மனத்தினில் மெய்ஞ்ஞானம் வாராது;
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
அனுராக3மு/ லேனி/ மனஸுன/ ஸு-ஞானமு/ ராது3/
அனுராகம்/ அற்ற/ மனத்தினில்/ மெய்ஞ்ஞானம்/ வாராது/
அனுபல்லவி
க4னுலைன/ அந்தர்/-ஞானுலகு/-எருகே/ கானி/ (அ)
சான்றோராகிய/ உள்நோக்கு/ ஞானியருக்கு/ தெரியுமே/ அன்றி/ அனுராகமற்ற...
சரணம்
வக3/ வக3கா3/ பு4ஜியிஞ்சே வாரிகி/ த்ரு2ப்தியௌ/ ரீதி/
வகை/ வகையாக/ புசிப்போருக்கு/ நிறைவுண்டாவது/ போன்று/
ஸ-கு3ண/ த்4யானமு பைனி/ ஸௌக்2யமு/ த்யாக3ராஜ/ நுத/ (அ)
சகுண/ தியானத்தினில்/ சௌக்கியமும்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - அந்தர்-ஞானுலகு - அந்தர-ஞானுலகு.
Top
மேற்கோள்கள்
1 - அனுராக3மு - அனுராகம் - இறைவனிடம் ஆழ்ந்த காதல். இது குறித்து 'நாரத பக்தி சூத்திர'ங்களில் கூறப்பட்டது -
அஃது பெருங் காதலின் தன்மையது, அழியாத் தன்மையது (2,3)
அதனை யடைந்து, மனிதன், சித்தனாக, அழியாதவனாக, நிறைவுடையவனாகத் திகழ்வான் (4)
அதனை அறிந்து, உன்மத்தனாக, திகைத்தவனாக, உள்ளத்துள் களித்திருப்பான் (6)
அஃது சொல்லுக்கு அப்பாற்பட்டது; காதல் வடிவானது (51)
அதனை (காதல் வடிவத்தினை) யடைந்து, அதனையே கண்டு, கேட்டு, பேசி, நினைத்திருப்பான் (55)
(ஸ்வாமி தியாகீஸானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)
'அனுராக'த்தினுக்கு, ராமகிருஷ்ண பரமஹம்ஸர், அனுமனை ஓர் உதாரணமாகக் கூறுவார். "ஓர் முறை அனுமன், சீதையையும், ராமனையும் காண துவாரகை வந்தடைந்தானாம். உடனே, கண்ணன், ருக்மிணியிடம், 'அனுமன், சீதை, ராமனைக் காண இங்கு வருகின்றான்; நீ, சீதையின் வேடமணிந்துகொள்; நான் ராமனாக மாறுகின்றேன்; இல்லையென்றால் அனுமனிடமிருந்து நாம் தப்பமுடியாது' என்றானாம்."
Top
விளக்கம்
3 - ஸ-கு3ண த்4யானமு பைனி ஸௌக்2யமு - சகுணத் தியானத்தினில் சௌக்கியம் - எப்படி வகை வகையான உண்டி யருந்தியவன், தனக்கு ஏற்பட்டுள்ள நிறைவினை விவரிக்க இயலாதோ, அங்ஙனமே இந்த சௌக்கியமும் என்கின்றார் தியாகராஜர். இதனையே, நாரத பக்தி சூத்திரத்தினில், 'சொல்லுக்கு அப்பாற்பட்டது' என்று கூறப்பட்டது.
'அனுராகமற்ற மனத்தினில், மெய்ஞ்ஞானம் வாராது' என்று தியாகராஜர் கூறுகின்றார். அத்துவதைத்தினில் தலைசிறந்த ஆதி சங்கரர், பிற்காலத்தில், பக்தி சொட்டும் ஸ்லோகங்கள் அனேகம் எழுதியுள்ளார். அதனால், வைணவர்கள், அவரை 'நடைமுறையில் வைணவர்' என்று கேலியாகக் கூறுவர். 'வைணவ தத்துவம்' பற்றிய கட்டுரை நோக்கவும்.
எனவே, எங்ஙனம் 'அனுராகமின்றி மெய்ஞ்ஞானம் வாராதோ', அங்ஙனமே 'மெய்ஞ்ஞானமின்றி, அனுராகமும் வாராது' என்பதும் உண்மையாகும். இதற்கு, மேற்கூறியபடி, ஆதி சங்கரரே உதாரணம். இதனைத்தான், தியாகராஜரும், அனுபல்லவியில் உறுதிப்படுத்துகின்றார் - 'சான்றோராகிய உள்நோக்கு ஞானியருக்கே தெரியும்' என்று. கீதையில் கூறப்படும் 'நிஷ்காம்ய கர்ம' (பற்றற்ற பணி), மெய்ஞ்ஞானத்தினின்றோ, அனுராகத்தினின்றோ பிறப்பதாகும். இவை மூன்றிற்கும் - மெய்ஞ்ஞானம், அனுராகம், பற்றற்ற பணி - இலக்கோ, நோக்கமோ ஏதும் கிடையாது.
Top
உள்நோக்கு - அட்டாங்க யோகமுறை கடைப் பிடித்தல்
சகுணத் தியானம் - உருவ வழிபாடு
நிர்குணத் தியானம் - அருவ வழிபாடு
அட்டாங்க யோகம் - முறையே - இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி
Top
Updated on 19 May 2010
No comments:
Post a Comment