பல்லவி
1ராமா நீயெட3 ப்ரேம ரஹிதுலகு
நாம ருசி தெலுஸுனா ஓ ஸீதா (ரா)
அனுபல்லவி
காமினி வேஷ தா4ரிகி ஸாத்4வீ நட3த-
லேமைன தெலுஸுனா ஆ ரீதி ஸீதா (ரா)
சரணம்
தன ஸௌக்2யமு தானெருக3கனொருலகு
தகு3 போ3த4ன ஸுக2மா
க4னமகு3 புலி கோ3 2ரூபமைதே த்யாக3-
ராஜ நுத 3ஸி1ஸு1வுகு பாலு கல்கு3னா (ரா)
பொருள் - சுருக்கம்
ஓ சீதாராமா! தியாகராசனால் போற்றப்பெற்றோனே!
பெண் வேடமணிவோனுக்குக் கற்பரசியின் நடத்தைகள் ஏதாகிலும் தெரியுமா? அவ்வகையில் சீதாராமா! உன்னிடம் காதலற்றோருக்கு (உனது) நாமச் சுவை தெரியுமா?
தனது சுகத்தினைத் தானே யுணராது, மற்றோருக்கு தக்க போதனை சுகமளிக்குமா?
கொடிய புலி பசு உருக்கொண்டால், கன்றுக்கு பாலும் சுரக்குமா?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராமா/ நீயெட3/ ப்ரேம/ ரஹிதுலகு/
இராமா/ உன்னிடம்/ காதல்/ அற்றோருக்கு/
நாம/ ருசி/ தெலுஸுனா/ ஓ ஸீதா (ரா)/
நாம/ சுவை/ தெரியுமா/ ஓ சீதாராமா/
அனுபல்லவி
காமினி/ வேஷ/ தா4ரிகி/ ஸாத்4வீ/ நட3தலு/-
பெண்/ வேடம்/ அணிவோனுக்கு/ கற்பரசியின்/ நடத்தைகள்/
ஏமைன/ தெலுஸுனா/ ஆ ரீதி/ ஸீதா (ரா)
ஏதாகிலும்/ தெரியுமா/ அவ்வகையில்/ சீதாராமா ..
சரணம்
தன/ ஸௌக்2யமு/ தானு/-எருக3கனு/-ஒருலகு/
தனது/ சுகத்தினை/ தானே/ யுணராது/ மற்றோருக்கு/
தகு3/ போ3த4ன/ ஸுக2மா/
தக்க/ போதனை/ சுகமளிக்குமா/
க4னமகு3/ புலி/ கோ3/ ரூபமைதே/ த்யாக3ராஜ/
கொடிய/ புலி/ பசு/ உருக்கொண்டால்/ தியாகராசனால்/
நுத/ ஸி1ஸு1வுகு/ பாலு/ கல்கு3னா/ (ரா)
போற்றப்பெற்றோனே/ கன்றுக்கு/ பாலும்/ சுரக்குமா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ராமா - ராம
2 - ரூபமைதே - ரூபமைன
3 - ஸி1ஸு1வுகு - ஸி1ஸு1வு
Top
மேற்கோள்கள்
விளக்கம்
குழவிக்கு - 'கன்றுக்கு' என்றும் கொள்ளலாம்
No comments:
Post a Comment