Sunday, March 29, 2009

தியாகராஜ கிருதி - நாம குஸும - ராகம் ஸ்ரீ ராகம் - Naama Kusuma - Raga Sri Ragam

பல்லவி
நாம குஸுமமுலசே பூஜிஞ்சே
நர ஜன்மமே ஜன்மமு மனஸா

அனுபல்லவி
ஸ்ரீமன்-மானஸ கனக பீட2முன
செலக3 ஜேஸிகொனி வர 1ஸி1வ ராம (நாம)

சரணம்
2நாத3 ஸ்வரமனே வர நவ ரத்னபு
வேதி3கபை ஸகல லீலா
வினோது3னி பரமாத்முனி ஸ்ரீ ராமுனி
பாத3முலனு த்யாக3ராஜ ஹ்ரு2த்3-பூ4ஷணுனி (நாம)


பொருள் - சுருக்கம்
மனமே!
  • (இறைவனின்) நாமமெனும் மலர்கொடு வழிபடும் மனிதப் பிறவியே பிறவியாகும்;

  • சிறந்த, மனமெனும் பொற்பீடத்தினில் (இறைவனை) ஒளிரச்செய்து,

    • புனித, மங்களமான இராம நாமமெனும் மலர்கொடு வழிபடும் மனிதப் பிறவியே பிறவியாகும்;

  • நாதம், சுரமெனும் உயர், நவரத்தின வேதிகையின்மீது,

    • அனைத்து திருவிளையாடல்களில் களிப்போனின், பரம்பொருளினின், இராமனின் திருவடிகளை,

    • தியாகராசனின் இதய-அணிகலனின் நாமமெனும் மலர்கொடு வழிபடும் மனிதப் பிறவியே பிறவியாகும்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நாம/ குஸுமமுலசே/ பூஜிஞ்சே/
நாமமெனும்/ மலர்கொடு/ வழிபடும்/

நர/ ஜன்மமே/ ஜன்மமு/ மனஸா/
மனித/ பிறவியே/ பிறவியாகும்/ மனமே/


அனுபல்லவி
ஸ்ரீமன்/-மானஸ/ கனக/ பீட2முன/
சிறந்த/ மனமெனும்/ பொற்/ பீடத்தினில்/

செலக3/ ஜேஸிகொனி/ வர/ ஸி1வ/ ராம/ (நாம)
(இறைவனை) ஒளிர/ செய்து/ புனித/ மங்களமான/ இராம/ நாமமெனும்...


சரணம்
நாத3/ ஸ்வரமு/-அனே/ வர/ நவ/ ரத்னபு/
நாதம்/ சுரம்/ எனும்/ உயர்/ நவ/ ரத்தின/

வேதி3கபை/ ஸகல/ லீலா/
வேதிகையின்மீது/ அனைத்து/ திருவிளையாடல்களில்/

வினோது3னி/ பரமாத்முனி/ ஸ்ரீ ராமுனி/
களிப்போனின்/ பரம்பொருளினின்/ ஸ்ரீ ராமனின்/

பாத3முலனு/ த்யாக3ராஜ/ ஹ்ரு2த்3/-பூ4ஷணுனி/ (நாம)
திருவடிகளை/ தியாகராசனின்/ இதய/-அணிகலனின்/ நாமமெனும்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
1 - ஸி1வ ராம - சில புத்தகங்களில், 'சிவ' என்பதனை 'சிவன்' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில், இதற்கு, 'மங்களமான' என்ற பொருளாகும்.

2 - நாத3 ஸ்வர - 'மோக்ஷமு க3லதா3' என்ற கீர்த்தனையில், தியாகராஜர் கூறுவது 'ஓங்கார நாதமே ஏழு சுரங்களாகத் திகழ்கின்றன' என.

வேதிகை - மேடை
இதய-அணிகலன் - இராமன்

Top


Updated on 29 Mar 2009

No comments: