Friday, January 1, 2010

தியாகராஜ கிருதி - தெலிஸி ராம - ராகம் பூர்ண சந்த்3ரிக - Telisi Rama - Raga Purna Chandrika

பல்லவி
தெலிஸி ராம சிந்தனதோ நாமமு
ஸேயவே ஓ மனஸா

அனுபல்லவி
தலபுலன்னி நிலிபி நிமிஷமைன
தாரக ரூபுனி நிஜ தத்வமுலனு (தெ)

சரணம்
சரணம் 1
1ராமாயன சபலாக்ஷுல பேரு
2காமாது3 3போரு வாரு வீரு
1ராமாயன ப்3ரஹ்மமுனகு பேரு
ஆ மானவ ஜனனார்துலு தீரு (தெ)


சரணம் 2
அர்கமனுசு 4ஜில்லெடு3 தரு பேரு
மர்கட பு3த்3து4லெட்டு தீரு
அர்குட3னுசு பா4ஸ்கருனிகி பேரு
கு-தர்கமனே அந்த4காரமு தீரு (தெ)


சரணம் 3
அஜமனுசு மேஷமுனகு பேரு
நிஜ கோரிகலேலாகீ3டே3ரு
அஜுட3னி வாகீ3ஸ்1வருனிகி பேரு
விஜயமு கல்கு3னு த்யாக3ராஜ நுதுனி (தெ)


பொருள் - சுருக்கம்
ஓ மனமே!
  • தெரிந்து, இராமனின் சிந்தனையுடன் (அவன்) நாமத்தினை செபிப்பாய்;
  • நினைப்புகளனைத்தினையும் நிறுத்தி, (ஒரு) நிமிடமாவது தாரக உருவத்தோனின் உண்மையான தத்துவங்களைத் தெரிந்து, இராமனின் சிந்தனையுடன் (அவன்) நாமத்தினை செபிப்பாய்;

    • 'ராமா'யென, அலையும் கண்களுடையோரின் பெயராகும்; காமம் முதலானவற்றுடன் போராடுவர் இவ்விதம் எண்ணுவோர்;
    • 'ராமா'யென பரம்பொருளுக்கும் பெயராகும்; இவ்விதம் எண்ணும் அம்மானவர்களின் பிறவித்துயர்கள் தீரும்;

    • 'அர்க்க'மென எருக்கஞ்செடிக்குப் பெயராகும்; இவ்விதம் எண்ண, குரங்குத் தன்மை எப்படி தீரும்?
    • 'அர்க்க'னெனப் பகலவனுக்கும் பெயராகும்; இவ்விதம் எண்ண, குதர்க்கமெனும் இருள் நீங்கும்;

    • 'அஜம்' என ஆட்டுக்கடாவிற்குப் பெயராகும்; இவ்விதம் எண்ண, நிசமான கோரிக்கைகள் எங்ஙனம் ஈடேறும்?
    • 'அஜன்' எனக் கலைமகள் கேள்வனுக்கும் பெயராகும்; இவ்விதம் எண்ண, வெற்றியுண்டாகும்;


  • தியாகராசன் போற்றுவோனைத் தெரிந்து, இராமனின் சிந்தனையுடன் (அவன்) நாமத்தினை செபிப்பாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தெலிஸி/ ராம/ சிந்தனதோ/ நாமமு/
தெரிந்து/ இராமனின்/ சிந்தனையுடன்/ (அவன்) நாமத்தினை/

ஸேயவே/ ஓ மனஸா/
(செய்வாய்) செபிப்பாய்/ ஓ மனமே/


அனுபல்லவி
தலபுலு/-அன்னி/ நிலிபி/ நிமிஷமைன/
நினைப்புகள்/ அனைத்தினையும்/ நிறுத்தி/ (ஒரு) நிமிடமாவது/

தாரக/ ரூபுனி/ நிஜ/ தத்வமுலனு/ (தெ)
தாரக/ உருவத்தோனின்/ உண்மையான/ தத்துவங்களை/ தெரிந்து...


சரணம்
சரணம் 1
ராமா/-அன/ சபல/-அக்ஷுல/ பேரு/
'ராமா'/ யென/ அலையும்/ கண்களுடையோரின்/ பெயராகும்/

காம/-ஆது3ல/ போரு/ வாரு/ வீரு/
காமம்/ முதலானவற்றுடன்/ போராடுவர்/ இவர் (இவ்விதம் எண்ணுவோர்)

ராமா/-அன/ ப்3ரஹ்மமுனகு/ பேரு/
'ராமா'/ யென/ பரம்பொருளுக்கும்/ பெயராகும்/

ஆ/ மானவ/ ஜனன/-ஆர்துலு/ தீரு/ (தெ)
(இவ்விதம் எண்ணும்) அந்த/ மானவர்களின்/ பிறவி/ துயர்கள்/ தீரும்/


சரணம் 2
அர்கமு/-அனுசு/ ஜில்லெடு3/ தரு/ பேரு/
'அர்க்கம்'/ என/ எருக்கஞ்/ செடிக்கு/ பெயராகும்/

மர்கட/ பு3த்3து4லு/-எட்டு/ தீரு/
(இவ்விதம் எண்ண) குரங்கு/ தன்மை/ எப்படி/ தீரும்/

அர்குடு3/-அனுசு/ பா4ஸ்கருனிகி/ பேரு/
'அர்க்கன்'/ என/ பகலவனுக்கும்/ பெயராகும்/

கு-தர்கமு/-அனே/ அந்த4காரமு/ தீரு/ (தெ)
(இவ்விதம் எண்ண) குதர்க்கம்/ எனும்/ இருள்/ நீங்கும்/


சரணம் 3
அஜமு/-அனுசு/ மேஷமுனகு/ பேரு/
'அஜம்'/ என/ ஆட்டுக்கடாவிற்கு/ பெயராகும்/

நிஜ/ கோரிகலு/-ஏலாகு3/-ஈடே3ரு/
(இவ்விதம் எண்ண) நிசமான/ கோரிக்கைகள்/ எங்ஙனம்/ ஈடேறும்/

அஜுடு3/-அனி/ வாக்3/-ஈஸ்1வருனிகி/ பேரு/
'அஜன்'/ என/ கலைமகள்/ கேள்வனுக்கும்/ பெயராகும்/

விஜயமு/ கல்கு3னு/ த்யாக3ராஜ/ நுதுனி/ (தெ)
(இவ்விதம் எண்ண) வெற்றி/ உண்டாகும்/ தியாகராசன்/ போற்றுவோனை/ தெரிந்து...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - போரு வாரு வீரு - போரு வாரு வேரு : இவ்விடத்தில் 'போரு வாரு வீரு' என்பதே பொருந்தும்.

Top

மேற்கோள்கள்
2 - காமாது3 - காமம் எனப்படும் இச்சை, சினம், பேராசை, மோகம் எனப்படும் மயக்கம், செருக்கு.

4 - ஜில்லெடு3 தரு - ‘calotropis gigantea’ எனப்படும் எருக்கஞ்செடி.

Top

விளக்கம்
1 - ராமாயன - எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற சரணங்களில் கொடுத்துள்ளவற்றை நோக்கில், இங்கு 'ராமா அனி' (ராமாயனி) என்றிருக்கவேண்டும் என்று தோன்றுகின்றது.

தாரக உருவம் - 'இராமா' யெனும் நாமம் பிறவிக்கடலைத் தாண்டுவிப்பது
அலையும் கண்களுடையோர் - அலையும் கண்களுடைய வனிதையரென

குதர்க்கம் - முறையற்ற வாது
கலைமகள் கேள்வன் - பிரமன்

Top


Updated on 02 Jan 2010

4 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களுக்கு

வேறுபாடுகள் - (Pathanthara)
”போரு வாரு வீரு - போரு வாரு வீரு : இவ்விடத்தில் 'போரு வாரு வீரு' என்பதே பொருந்தும். ” என்று கொடுத்துள்ளீர். வேறுபாடு என்ன?
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

இரண்டாவதாகக் குறிப்பிட்டது, 'போரு வாரு வேரு' என்றிருக்க வேண்டும். தவற்றினைத் திருத்திவிட்டேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

வணக்கம்,
கோவிந்தன்

Govindaswami said...

அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
இந்தப் பாடலில் தியாகராஜர் இரு பொருள்களுள்ள ராமா, அர்கமு, அஜ என்னும் மூன்று சொற்களை எடுத்துக்கொண்டு அவற்றுள் எவற்றைப் பின்பற்றவேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
இவற்றுள் முதலில் கூறப்பட்ட ராமா எனக்குச் சிறிது குழப்பத்தைத் தருகிறது.
ராமா என்பது அலையும் கண்களுடைய வனிதையரென்பது முறையற்ற வாதம் என்று நீர் கூறுகிறீர். முதற்கண் ரமா என்பது தானே பெண்களின் பெயர். (என் மனைவியின் பெயர் இதுவே). ராமா என்பது இத்தகைய பெண்களைக் குறிக்கும் என்று எண்ணுபவர்கள் காமத்திலே உழல்பவர்களா அல்லது காமத்தோடு போராடுபவர்களா.
வணக்கம்
கோவிந்தஸ்வாமி

V Govindan said...

திரு கோவிந்தஸ்வாமி அவர்களுக்கு,

'குதர்க்கம்' என்ற சொல்லுக்கு விளக்கம் கொடுத்துள்ளேன். அதனை அதற்குமுன் கூறிய வாக்கியத்துடன் இணைக்க வேண்டாம். அங்கு ஒரு இடைவெளி (space) இருக்கவேண்டும். நான் திருத்திவிட்டேன்.

வணக்கம்
கோவிந்தன்.