Monday, November 17, 2008

பாஹி ராம ராமயனுசு - ராகம் க2ரஹர ப்ரிய - Paahi Rama Ramayanuchu - Raga Kharahara Priya

பல்லவி
பாஹி ராம ராமயனுசு ப4ஜன ஸேயவே

சரணம்
சரணம் 1
கனிகரம்பு3 கல்கி3 1ஸீதா காந்துனி கனகா3
மனஸு ரஞ்ஜில்ல பல்கே மத3ன ஜனகுடு3 (பா)

சரணம் 2
2வல்வலு தி3த்3தி3 ஸௌமித்ரி வலசி நில்வகா3
கலுவ ரேகுலனு கேரு கனுல ஜூசெனு (பா)

சரணம் 3
4ரதுடா3 வேள கரகி3 கரகி3 நில்வகா3
கரமு பட்டி கௌகி3லிஞ்சே வரது33ப்புடு3 (பா)

சரணம் 4
3சண்ட31த்ருக்4னு3ப்பு432ண்ட3 வ்ரு2த்திதோ-
நுண்ட3 ஸந்தஸில்லே கோத3ண்ட3 ராமுடு3 (பா)

சரணம் 5
மனஸு தெலிஸி கலஸி ஹனுமந்துடு3ண்ட3கா3
சனுவு மாடலாடு3சுண்டே3 ஸார்வபௌ4முடு3 (பா)

சரணம் 6
5வீரி கருண கலிகி3யெபுடு3 வெலஸியுந்து3னோ
ஸாரமைன ப4க்திசே ஸன்னுதிந்துனோ (பா)

சரணம் 7
64ர்மார்த2 காம 7மோக்ஷ 8தா3மேலனே
9மர்மமெருக3 லேனி 10இந்த்3ர ஸ1ர்மமேலனே (பா)

சரணம் 8
பா33 கருண ஜேஸியெபுடு34வ்யமொஸகு3னோ
த்யாக3ராஜு 11சேயி பட்டி த3யனு ப்3ரோசுனோ (பா)


பொருள் - சுருக்கம்
'காவாய் இராமா, இராமா' யென பஜனை செய்வாய்!

1. கனிவு கொண்டு சீதை கணவனை நோக்க, மனது களிக்கப் பகர்ந்தனன், காமனையீன்றோன்;
2. ஆடைகளை சீர்படுத்தி, இலக்குவன் அன்புடன் நிற்க, தாமரையிதழ்களைப் பழிக்கும் கண்களால் (அவனை இராமன்) நோக்கினான்;
3. பரதன் அவ்வமயம் (உள்ளம்) உருகியுருகி நிற்க, கைப் பற்றி அணைத்திட்டான், வரதன் அப்போழ்து;
4. கடிய, சத்துருக்கினன் அவ்வேளை அகண்ட விருத்தியில் இருக்க, மனது மகிழ்ந்தான், கோதண்டராமன்;
5. மனதறிந்து, கலந்து, அனுமனிருக்க, அன்பு மொழிகள் (அவனுடன்) பகர்ந்திருந்தான், அண்டமாள்வோன்;
6. இவரின் கருணை கிடைத் தெப்போழ்து திகழ்ந்திருப்பேனோ? சாரமான பக்தியுடன் நன்கு போற்றி செய்வேனோ?
7. அறம், பொருள், இன்பம், வீடெனும் பாகுபாடுகளேனோ? உட்பொருளறியா இந்திரப் பட்டமுமேனோ?
8. நன்கு கருணை கொண்டு எப்போது பேறருள்வானோ? தியாகராசனின் கைப்பற்றி, தயவுடன் காப்பானோ?

பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பல்லவி
பாஹி/ ராம/ ராம/-அனுசு/ ப4ஜன/ ஸேயவே/
'காவாய்/ இராமா/ இராமா/' என/ பஜனை/ செய்வாய்/


சரணம்
சரணம் 1
கனிகரம்பு3/ கல்கி3/ ஸீதா/ காந்துனி/ கனகா3/
கனிவு/ கொண்டு/ சீதை/ கணவனை/ நோக்க/,

மனஸு/ ரஞ்ஜில்ல/ பல்கே/ மத3ன/ ஜனகுடு3/ (பா)
மனது/ களிக்க/ பகர்ந்தனன்/ காமனை/ யீன்றோன்/


சரணம் 2
வல்வலு/ தி3த்3தி3/ ஸௌமித்ரி/ வலசி/ நில்வகா3/
ஆடைகளை/ சீர்படுத்தி/ இலக்குவன்/ அன்புடன்/ நிற்க/

கலுவ/ ரேகுலனு/ கேரு/ கனுல/ ஜூசெனு/ (பா)
தாமரை/ இதழ்களை/ பழிக்கும்/ கண்களால்/ நோக்கினான்/


சரணம் 3
4ரதுடு3/-ஆ வேள/ கரகி3/ கரகி3/ நில்வகா3/
பரதன்/ அவ்வமயம்/ உருகி/ உருகி/ நிற்க/

கரமு/ பட்டி/ கௌகி3லிஞ்சே/ வரது3டு3/-அப்புடு3/ (பா)
கை/ பற்றி/ அணைத்திட்டான்/ வரதன்/ அப்போழ்து/


சரணம் 4
சண்ட3/ ஸ1த்ருக்4னுடு3/-அப்புடு3/-அக2ண்ட3/ வ்ரு2த்திதோனு/-
கடிய/ சத்துருக்கினன்/ அவ்வேளை/ அகண்ட/ விருத்தியுடன்/

உண்ட3/ ஸந்தஸில்லே/ கோத3ண்ட3/ ராமுடு3/ (பா)
இருக்க/ மனது மகிழ்ந்தான்/ கோதண்ட/ ராமன்/


சரணம் 5
மனஸு/ தெலிஸி/ கலஸி/ ஹனுமந்துடு3-உண்ட3கா3/
மனது/ அறிந்து/ கலந்து/ அனுமனிருக்க/

சனுவு/ மாடலு/-ஆடு3சு-உண்டே3/ ஸார்வபௌ4முடு3/ (பா)
அன்பு/ மொழிகள்/ பகர்ந்திருந்தான்/ அண்டமாள்வோன்/


சரணம் 6
வீரி/ கருண/ கலிகி3/-எபுடு3/ வெலஸி/-உந்து3னோ/
இவரின்/ கருணை/ கிடைத்து/ எப்போழ்து/ திகழ்ந்து/ இருப்பேனோ/

ஸாரமைன/ ப4க்திசே/ ஸன்னுதிந்துனோ/ (பா)
சாரமான/ பக்தியுடன்/ நன்கு போற்றி செய்வேனோ/


சரணம் 7
4ர்ம/-அர்த2/ காம/ மோக்ஷ/ தா3னமு/-ஏலனே/
அறம்/ பொருள்/ இன்பம்/ வீடெனும்/ பாகுபாடுகள்/ ஏனோ/

மர்மமு/-எருக3 லேனி/ இந்த்3ர/ ஸ1ர்மமு/-ஏலனே/ (பா)
உட்பொருள்/ அறியா/ இந்திர/ பட்டமும்/ ஏனோ/


சரணம் 8
பா33/ கருண/ ஜேஸி/-எபுடு3/ ப4வ்யமு/-ஒஸகு3னோ/
நன்கு/ கருணை/ கொண்டு/ எப்போது/ பேறு/ அருள்வானோ/

த்யாக3ராஜு/ சேயி/ பட்டி/ த3யனு/ ப்3ரோசுனோ/ (பா)
தியாகராசனின்/ கை/ பற்றி/ தயவுடன்/ காப்பானோ/

குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஸீதா - ஸீத
4 - அக2ண்ட3 வ்ரு2த்திதோ - அக2ண்ட34க்திதோ - பிற்சொன்ன வேறுபாடு திணிக்கப்பட்டுள்ளதாகத் தோன்றுகின்றது
5 - வீரி - வாரி
11 - சேயி பட்டி த3யனு ப்3ரோசுனோ - சேயி பட்டே த3யனு ஜூதுனோ
Top
மேற்கோள்கள்
4 - அக2ண்ட3 வ்ரு2த்திதோ - அகண்ட விருத்தி - உருவமற்ற பரம்பொருளினில் நிலைத்தல். கீழ்க்கண்ட web site-களை நோக்கவும் - அகண்ட விருத்தி, பஞ்ச தஸி - அத்தியாயம் 5, தாயுமானவரின் அகண்ட யோகானுபூதி
Top

விளக்கம்
2 - வல்வலு தி3த்3தி3 - ஆடைகளை சீர் செய்து - இலக்குவன் எவ்வமயமும் இராமனின் ஆணைகளை நிறைவேற்றும் பணிகளில் ஈடுபட்டிருப்பதனால், கலைந்த ஆடைகளை சீர் செய்துகொண்டு ராமனைக் காண்பதாக.
3 - சண்ட31த்ருக்4னு - கடிய - சத்துருக்கினன் எதிரிகளுக்கு அச்சமூட்டுவதனால்.
6 - 4ர்மார்த2 காம மோக்ஷ - புருஷார்த்தங்கள் எனப்படும் அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு.
7 - மோக்ஷ - வீடு - தியாகராஜர் வீட்டினையும் விரும்பாது எவ்வமயமும் ராமனின் கீர்த்தனைகளைப் பாட விழைவதை பல பாடல்களில் காணலாம். சரணாகதி அடையும் வைணவர்களின் கோட்பாடும் அதுவே.
8 - தா3னமு - பொதுவாக இச்சொல்லுக்கு 'ஈதல்' என்று பொருள். ஆனால் இங்கு இந்த வடமொழிச் சொல்லுக்கு 'பாகுபாடு' என பொருள்படும்.
9 - மர்மமு - உட்பொருள் - தியாகராஜர் இச்சொல்லினை விளக்காவிடினும், - 'பக்தியே நெறியும், இலக்கும்' எனும் உட்பொருள்.
10 - இந்த்3ர ஸ1ர்மமு - இந்தரப் பட்டம் - இந்திரன் தனது பதவியை, தன்னைவிடத் தகுதியானவர் யாரேனும் பறித்துவிடுவார்களோ என எவ்வமயமும் அஞ்சுவதாக.
Top


No comments: