Tuesday, November 4, 2008

கலிகி3யுண்டே கதா3 - ராகம் கீரவாணி - Kaligiyunte Kadaa - Raga Keeravani

பல்லவி
கலிகி3யுண்டே கதா3 கல்கு3னு
காமித ப2ல தா3யக

அனுபல்லவி
1கலினியிங்கி3தமெருக3 நின்னாடு3கொண்டி
சலமு சேயக நா தலனு சக்கனி வ்ராத (க)

சரணம்
பா43வதாக்3ரேஸருலகு3 நாரத3
ப்ரஹ்லாத3 2பராஸ1 3ராம தா3ஸுலு
பா3கு33 ஸ்ரீ ரகு4ராமுனி பத3முல
4க்தி ஜேஸின ரீதி த்யாக3ராஜுனிகிபுடு3 (க)



பொருள் - சுருக்கம்
விரும்பிய பயன்களை யளிப்போனே!

எனது தலையில் நல்லெழுத்து உண்டாயிருந்தாலன்றோ (விரும்பியது) கிடைக்கும்?

தலைசிறந்த பாகவதர்களாகிய நாரதர், பிரகலாதன், பராசரர், இராமதாசர் முதலானோர் நன்கு இரகுராமனின் திருவடிகளைப் பத்தி செய்த முறை தியாகராசனுக்கிப் போழ்து உண்டாயிருந்தாலன்றோ (விரும்பியது) கிடைக்கும்?

கலியின் இங்கிதமறியாது உன்னைக் குறைசொன்னேன்; பிடிவாதம் செய்யாதே.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கலிகி3யுண்டே/ கதா3/ கல்கு3னு/
உண்டாயிருந்தால்/ அன்றோ/ கிடைக்கும்/

காமித/ ப2ல/ தா3யக/
விரும்பிய/ பயன்களை/ அளிப்போனே/



அனுபல்லவி
கலினி/-இங்கி3தமு/-எருக3க/ நின்னு/-ஆடு3கொண்டி/
கலியின்/ இங்கிதம்/ அறியாது/ உன்னை/ குறைசொன்னேன்/

சலமு/ சேயக/ நா/ தலனு/ சக்கனி வ்ராத/ (க)
பிடிவாதம்/ செய்யாதே/ எனது/ தலையில்/ நல்லெழுத்து/ உண்டாயிருந்தாலன்றோ..



சரணம்
பா43வத/-அக்3ரேஸருலகு3/ நாரத3/
பாகவதர்களில்/ தலைசிறந்தோராகிய/ நாரதர்/

ப்ரஹ்லாத3/ பராஸ1ர/ ராம தா3ஸுலு/
பிரகலாதன்/ பராசரர்/ ராம தாசர் முதலானோர்/

பா3கு33/ ஸ்ரீ ரகு4ராமுனி/ பத3முல/
நன்கு/ ஸ்ரீ ரகுராமனின்/ திருவடிகளை/

4க்தி/ ஜேஸின/ ரீதி/ த்யாக3ராஜுனிகி/-இபுடு3/ (க)
பக்தி/ செய்த/ முறை/ தியாகராசனுக்கு/ இப்போழ்து/ உண்டாயிருந்தாலன்றோ..



குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
2 - பராஸ1 - வியாஸ முனிவரின் தந்தை
3 - ராம தா3ஸு - பத்ராசலத்தில் (ஆந்திரா) இராமனை வழிபட்டவர்
Top

விளக்கம்
1 - கலினி இங்கி3தமு - கலியுகத்தின் போக்கு அல்லது வழிமுறை - தியாகராஜர் இதனை விளக்காவிடினும், அவர் சரணத்தில் கூறியுள்ளபடி, நாரதர், பிரகலாதன், பராசரர் மற்றும் ராமதாசர் போன்றோர் ராமனின் திருவடிகளை நன்கு வழிபட்ட முறை தனக்கு அமையாதது குறித்து முறையிடுகின்றார்.

கலியுகத்தின் தீமைகளும் அவற்றிலிருந்த விடுபடும் முறைகளும் பாகவத புராணம், 12-வது புத்தகம், 2 மற்றும் 3-வது அத்தியாயங்களில் கொடுக்கப்பட்டுள்ளது.

உண்டாயிருந்தால் - நற்பேற்றினைக் குறிக்கும்

கிடைக்கும் - விரும்பிய பயன்கள்

தலையில் நல்லெழுத்து - நல்ல தலைவிதி

Top



No comments: