Tuesday, December 14, 2010

தியாகராஜ கிருதி - க்3ரஹ ப3லமேமி - ராகம் ரேவகு3ப்தி - Graha Balamemi - Raga Revagupti

பல்லவி
1க்3ரஹ ப3லமேமி ஸ்ரீ
ராமானுக்3ரஹ ப3லமே ப3லமு

அனுபல்லவி
க்3ரஹ ப3லமேமி தேஜோ-மய
விக்3ரஹமுனு த்4யானிஞ்சு வாரிகி நவ (க்3ரஹ)

சரணம்
க்3ரஹ பீட32பஞ்ச பாபமுல-
3நாக்3ரஹமுலு க3ல காமாதி3 ரிபுல
நிக்3ரஹமு ஜேயு ஹரினி ப4ஜிஞ்சு
த்யாக3ராஜுனிகி ரஸிகாக்3ரேஸருலகு (க்3ரஹ)


பொருள் - சுருக்கம்
  • கோள்களின் வலிமையெம்மாத்திரம்?

  • இராமனின் அருள் வலிமையே வலிமை.

  • ஒளிமயமான (இராமனின்) திருவுருவத்தைத் தியானிப்போருக்கு, ஒன்பது கோள்களின் வலிமையெம்மாத்திரம்?

    • கோள்களின் பீடைகளை,
    • ஐம்பாதகங்களை,
    • விட்டகலாத, இச்சை முதலான உட்பகைவரை அழியச் செய்யும்

  • அரியினைத் தொழும், இத்தியாகராசனுக்கும், ரசிகரில் தலைசிறந்தோருக்கும் கோள்களின் வலிமையெம்மாத்திரம்?

  • இராமனின் அருள் வலிமையே வலிமை.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
க்3ரஹ/ ப3லமு/-ஏமி/ ஸ்ரீ ராம/
கோள்களின்/ வலிமை/ எம்மாத்திரம்/ ஸ்ரீ ராமனின்/

அனுக்3ரஹ/ ப3லமே/ ப3லமு/
அருள்/ வலிமையே/ வலிமை/


அனுபல்லவி
க்3ரஹ/ ப3லமு/-ஏமி/ தேஜோ/-மய/
கோள்களின்/ வலிமை/ எம்மாத்திரம்/ ஒளி/ மயமான/

விக்3ரஹமுனு/ த்4யானிஞ்சு வாரிகி/ நவ/ (க்3ரஹ)
(இராமனின்) திருவுருவத்தை/ தியானிப்போருக்கு/ ஒன்பது/ கோள்களின்...


சரணம்
க்3ரஹ/ பீட3ல/ பஞ்ச/ பாபமுலனு/
கோள்களின்/ பீடைகளை/ ஐந்து/ பாதகங்களை/

ஆக்3ரஹமுலு க3ல/ காம/-ஆதி3/ ரிபுல/
விட்டகலாத/ இச்சை/ முதலான/ (உட்)பகைவரை/

நிக்3ரஹமு/ ஜேயு/ ஹரினி/ ப4ஜிஞ்சு/
அழிய/ செய்யும்/ அரியினை/ தொழும்/

த்யாக3ராஜுனிகி/ ரஸிக/-அக்3ரேஸருலகு/ (க்3ரஹ)
(இத்)தியாகராசனுக்கும்/ ரசிகரில்/ தலைசிறந்தோருக்கும்/ கோள்களின்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - க்3ரஹ ப3லமேமி - கோள்களின் வலிமையென்ன? இது குறித்து, புரந்தர தாசரின் 'ஸகல க்3ரஹ ப3ல நீனே ஸரஸிஜாக்ஷ' என்ற கீர்த்தனையினையும், திருஞான சம்பந்தரின் 'கோளறு பதிக'த்தினையும் நோக்கவும்.

2 - பஞ்ச பாபமுல - ஐந்து பாவங்கள். இவ்விடத்தில், தியாகராஜர், 'ஐம்பாதக'ங்களை இங்ஙனம் குறிப்பிடுகின்றார் என்று நினைக்கின்றேன். ஐம்பாதகங்களாவன - கொலை, பொய், திருடு, கள்ளருந்தல், குரு நிந்தை

Top

விளக்கம்
3 - ஆக்3ரஹமு - இந்த சம்ஸ்கிருதச் சொல்லுக்கு, 'பிடிவாதமான' என்று பொருளாகும். இதே தெலுங்கு சொல்லுக்கு, 'சினம்' என்றும் பொருள் உண்டு. இவ்விடத்தில், 'பிடிவாதமான' என்ற பொருளே பொருந்துமாதலால், அங்ஙனமே ஏற்கப்பட்டது.

உட்பகைவர் - இச்சை, சினம், கருமித்தனம், மோகம், செருக்கு, காழ்ப்பு.
ரசிகர் - இசை நுகர்வோர்

Top


Updated on 14 Dec 2010

No comments: