Sunday, September 13, 2009

தியாகராஜ கிருதி - மனஸு ஸ்வாதீ4ன - ராகம் ஸ1ங்கராப4ரணம் - Manasu Svadhina - Raga Sankarabharanam

பல்லவி
மனஸு ஸ்வாதீ4னமைனயா க4னுனிகி
மரி மந்த்ர தந்த்ரமுலேல

அனுபல்லவி
தனுவு தானு காத3னியெஞ்சு வானிகி
தபஸு சேயனேல த31ரத2 பா3ல (ம)

சரணம்
சரணம் 1
அன்னி நீவனுசுயெஞ்சின வானிகி
1ஆஸ்1ரம பே43முலேல
கன்னு கட்டு மாயலனியெஞ்சு வானிகி
காந்தல ப்4ரமலேல த31ரத2 பா3ல (ம)


சரணம் 2
ஆஜன்மமு து3ர்விஷய ரஹிதுனிகி
23தாக3மிகயேல
ராஜ ராஜேஸ1 நிரஞ்ஜன நிருபம
ராஜ வத3ன த்யாக3ராஜ வினுத (ம)


பொருள் - சுருக்கம்
தசரதன் மைந்தா! பேரரசர்க்கும் அரசனே! களங்கமற்றோனே! நிகரற்றோனே! மதி வதனத்தோனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
  • மனது தன்வயப்பட்ட அச்சான்றோனுக்கு, பின்னர், மந்திர, தந்திரங்களேனோ?

  • உடல் தானல்ல என்றெண்ணுவோனுக்கு தவமியற்றலேன்?

  • அனைத்தும் நீயென்று எண்ணியவனுக்கு ஆச்சிரம வேறுபாடுகளேனோ?

  • கண்கட்டு மாயையென்று எண்ணுவோனுக்குப் பெண்களால் திகைப்பேனோ?

  • வாழ்நாள் முழுதும் தீய விடயங்களற்றோனுக்கு போக்கும் வரவும் இனியேனோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மனஸு/ ஸ்வாதீ4னமு/-ஐன/-ஆ/ க4னுனிகி/
மனது/ தன்வயம்/ பட்ட/ அந்த/ சான்றோனுக்கு/

மரி/ மந்த்ர/ தந்த்ரமுலு/-ஏல/
பின்னர்/ மந்திர/ தந்திரங்கள்/ ஏனோ/


அனுபல்லவி
தனுவு/ தானு/ காது3/-அனி/-எஞ்சு வானிகி/
உடல்/ தான்/ அல்ல/ என்று/ எண்ணுவோனுக்கு/

தபஸு/ சேயனு/-ஏல/ த31ரத2/ பா3ல/ (ம)
தவம்/ இயற்றல்/ ஏன்/ தசரதன்/ மைந்தா/


சரணம்
சரணம் 1
அன்னி/ நீவு/-அனுசு/-எஞ்சின வானிகி/
அனைத்தும்/ நீ/ என்று/ எண்ணியவனுக்கு/

ஆஸ்1ரம/ பே43முலு/-ஏல/
ஆச்சிரம/ வேறுபாடுகள்/ ஏனோ/

கன்னு/ கட்டு/ மாயலு/-அனி/-எஞ்சு வானிகி/
கண்/ கட்டு/ மாயை/ என்று/ எண்ணுவோனுக்கு/

காந்தல/ ப்4ரமலு/-ஏல/ த31ரத2/ பா3ல/ (ம)
பெண்களால்/ திகைப்பு/ ஏனோ/ தசரதன்/ மைந்தா/


சரணம் 2
ஆஜன்மமு/ து3ர்விஷய/ ரஹிதுனிகி/
வாழ்நாள் முழுதும்/ தீய/ விடயங்கள்/ அற்றோனுக்கு/

3த/-ஆக3தமு/-இக/-ஏல/
போக்கும்/ வரவும்/ இனி/ ஏனோ/

ராஜ ராஜ/-ஈஸ1/ நிரஞ்ஜன/ நிருபம/
பேரரசர்க்கும்/ அரசனே/ களங்கமற்றோனே/ நிகரற்றோனே/

ராஜ/ வத3ன/ த்யாக3ராஜ/ வினுத/ (ம)
மதி/ வதனத்தோனே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - ஆஸ்1ரம - ஆச்சிரமம்-முறையே நான்கு- கல்வி, இல்லறம், அடவியில் தவமியற்றல், துறவு

Top

விளக்கம்
2 - 3தாக3தமு - போக்கு வரவு - இறத்தல், மறுபடியும் பிறத்தல்

கண்கட்டு மாயை - பெண்களை அல்லது உலகத்தினைக் குறிக்கும்

விடயங்கள் - புலன் நுகர்ச்சி

Top


Updated on 14 Sep 2009

No comments: