Tuesday, December 9, 2008

எவரனி நிர்ணயிஞ்சிரி - ராகம் தேவாம்ரு2த வர்ஷிணி - Evarani Nirnayinchiri - Raga Devaamrta Varshini

பல்லவி
எவரனி நிர்ணயிஞ்சிரிரா
நின்னெட்லாராதி4ஞ்சிரிரா 1நர வரு(லெவரனி)

அனுபல்லவி
ஸி1வுட3னோ மாத4வுட3னோ 2கமல
4வுட3னோ
பர-ப்3ரஹ்மமனோ நி(ன்னெவரனி)

சரணம்
ஸி1வ மந்த்ரமுனகு 3ம ஜீவமு
மாத4வ மந்த்ரமுனகு ரா ஜீவமுயீ
விவரமு தெலிஸின க4னுலகு ம்ரொக்கெத3
விதரண கு34த்யாக3ராஜ வினுத (எ)


பொருள் - சுருக்கம்
தாராள குணத்தோனே! தியாகராசனால் போற்றப்பெற்றோனே!
மனிதரிற் சிறந்தோர், உன்னை எவரென நிர்ணயித்தனரய்யா? எவ்விதம் வழிபட்டனரய்யா?
சிவனென்றோ? மாதவனென்றோ? கமலத்தினில் உறைபவனென்றோ? பரம்பொருளென்றோ?
சிவ மந்திரத்திற்கு, 'ம' உயிராகும்; மாதவ மந்திரத்திற்கு, 'ரா' உயிராகும்; இந்த விவரத்தினையறிந்த சான்றோரை வணங்குகின்றேன்.


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எவரு/-அனி/ நிர்ணயிஞ்சிரிரா/ நின்னு/-
எவர்/ என/ நிர்ணயித்தனரய்யா/ உன்னை/

எட்ல/-ஆராதி4ஞ்சிரிரா/ நர/ வருலு/-(எவரனி)
எவ்விதம்/ வழிபட்டனரய்யா/ மனிதரிற்/ சிறந்தோர்/


அனுபல்லவி
ஸி1வுடு3/-அனோ/ மாத4வுடு3/-அனோ/ கமல/
சிவன்/ என்றோ/ மாதவன்/ என்றோ/ கமலத்தினில்/

4வுடு3/-அனோ/ பர-ப்3ரஹ்மமு/-அனோ/ நின்னு/-(எவரனி)
உறைபவன்/ என்றோ/ பரம்பொருள்/ என்றோ/ உன்னை/ எவரென...


சரணம்
ஸி1வ/ மந்த்ரமுனகு/ ம/ ஜீவமு/
சிவ/ மந்திரத்திற்கு/ 'ம'/ உயிராகும்/

மாத4வ/ மந்த்ரமுனகு/ ரா/ ஜீவமு/-ஈ/
மாதவ/ மந்திரத்திற்கு/ 'ரா'/ உயிராகும்/ இந்த/

விவரமு/ தெலிஸின/ க4னுலகு/ ம்ரொக்கெத3/
விவரத்தினை/ யறிந்த/ சான்றோரை/ வணங்குகின்றேன்/

விதரண/ கு3ண/ த்யாக3ராஜ/ வினுத/ (எ)
தாராள/ குண/ தியாகராசனால்/ போற்றப்பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நர வரு(லெவரனி) - நர வரு(எவரனி) - நர வர(எவரனி). தியாகராஜரின் காலத்தினில் வாழ்ந்த தமிழ்க் கவி கோபாலகிருஷ்ண பாரதி, தியாகராஜரை ஒரு சமயம் சென்று கண்டதாகவும், அவர் (பாரதி) அச்சமயம், சிவனைப் போற்றி 'சபாபதிக்கு வேறு தெய்வம்' என்ற பாடல் பாடியதாகவும், அப்பாடலைக் கேட்டு, தியாகராஜர், அவர் முன்னிலையிலேயே, இந்த பாடலை இயற்றி, பாடியதாக ஒரு கதையுண்டு. அஃது உண்மையானால் 'நர வருலெவரனி' என்பது சரியாகும்.

2 - கமல ப4வுடு3 - கமலா ப4
வுடு3 : கமலா ப4வுடு3- தவறாகும்

3 - ம ஜீவமு - மா ஜீவமு : மா ஜீவமு - தவறாகும்.

4 - த்யாக3ராஜ வினுத - த்யாக3ராஜ வினுத நின்னு
Top

மேற்கோள்கள்
சிவ மந்திரம் - (ஓம்) நமச்சிவாய - 'ம' - உயிராகும்; மாதவ மந்திரம் - (ஓம் நமோ) நாராயணாய - 'ரா' - உயிராகும்; இவையிணைய 'ராம' வாகும். இது குறித்து காஞ்சி மாமுனிவரின் சொற்பொழிவினை நோக்கவும்
Top

விளக்கம்
ராமாயண காவியத்தினை இயற்றிய வால்மீகி முனி முன்னம் வேடனாக இருந்தவர். அவருக்கு நாரதர் 'ராம' மந்திரத்தினை உபதேசித்தார். ஆனால் அந்த வேடனின் வாயில் 'ராம' என்ற சொல் சரிவர நுழையாததனால் அதனை மாற்றி 'மரா' என்று உபதேசித்தாராம். மரா-வை திரும்பத்திரும்ப சொன்னால் ராம-வாகும். நாரதரின் உபதேசம் (Invoke 'Dhyana')

கமலத்தினில் உறைபவன் - பிரமன்
தாராள குண - இறைவனைக் குறிக்கும்
Top



Updated on 10 Dec 2008

No comments: