Tuesday, December 1, 2009

தியாகராஜ கிருதி - ராம நீபை தனகு - ராகம் கேதா3ரம் - Rama Nipai Tanaku - Raga Kedaram

பல்லவி
ராம நீபை தனகு ப்ரேம போது3 ஸீதா (ராம)

அனுபல்லவி
தாமரஸ நயன நீதே3மோ மாய கானி (ராம)

சரணம்
சரணம் 1
1மனஸு நீ பத3முலனே ஜேர கனுலு நீ ரூபமுனே கோர
2வினு நீ பேருலகே நோரூர 3தனபை இதி3 நீ 4கருணேரா (ராம)


சரணம் 2
ஜனனீ ஜனகாப்துலன்யுலு த4ன கனக கு3ரு வேல்புலு
தி3னமு 5நீவேயனி மாடலு 6அனக4 இவி நா பூ4ஷணமுலு (ராம)


சரணம் 3
போ4கா3னுப4வமுலந்து3 பா3கு33 பு3த்3தி4 நீயந்து3
த்யாக3ராஜுனி ஹ்ரு23யமந்து3 7வாகீ3ஸா1னந்த3மந்து3 (ராம)


பொருள் - சுருக்கம்
இராமா! சீதாராமா! கமலக்கண்ணா! பாவமற்றோனே!
 • கேளுமய்யா,
 • உன்மீது தனக்கு காதல் அகலாது;
 • உனது ஏதோ மாயையே யன்றோ.

  • மனது உனது திருவடிகளையே நாட,
  • கண்கள் உனதுருவத்தினையே விழைய,
  • உனது பெயர்களுக்கே நாவூர,

 • என்மீது இஃதுனது கருணையே அய்யா!

  • தாய், தந்தை, உற்றார் உறவினர், மற்றோர், செல்வம், பொன், குரு, தெய்வம் (ஆகியவை) என்றும் நீயேயெனும் சொற்கள் -

 • இவையேயெனது அணிகலன்களாகும்;

  • உலக இன்பங்களைத் துய்க்கும்போதும், நன்கு (எனது) அறிவு உன்னிடமே;

 • தியாகராசனின் இதயத்தினில் பேரானந்தம் எய்தும்.பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ நீபை/ தனகு/ ப்ரேம/ போது3/ ஸீதா/ (ராம)
இராமா/ உன்மீது/ தனக்கு/ காதல்/ அகலாது/ சீதா/ ராமா...


அனுபல்லவி
தாமரஸ/ நயன/ நீது3/-ஏமோ/ மாய/ கானி/ (ராம)
கமல/ கண்ணா/ உனது/ ஏதோ/ மாயையே/ யன்றோ/


சரணம்
சரணம் 1
மனஸு/ நீ/ பத3முலனே/ ஜேர/ கனுலு/ நீ/ ரூபமுனே/ கோர/
மனது/ உனது/ திருவடிகளையே/ நாட/ கண்கள்/ உனது/ உருவத்தினையே/ விழைய/

வினு/ நீ/ பேருலகே/ நோரு-ஊர/ தனபை/ இதி3/ நீ/ கருணேரா/ (ராம)
கேளுமய்யா/ உனது/ பெயர்களுக்கே/ நாவூர/ என்மீது/ இஃது/ உனது/ கருணையே அய்யா/!


சரணம் 2
ஜனனீ/ ஜனக/-ஆப்துலு/-அன்யுலு/ த4ன/ கனக/ கு3ரு/ வேல்புலு/
தாய்/ தந்தை/ உற்றார் உறவினர்/ மற்றோர்/ செல்வம்/ பொன்/ குரு/ தெய்வம் (ஆகியவை)/

தி3னமு/ நீவே/-அனி/ மாடலு/ அனக4/ இவி/ நா/ பூ4ஷணமுலு/ (ராம)
என்றும்/ நீயே/ யெனும்/ சொற்கள்/ பாவமற்றோனே/ இவையே/ யெனது/ அணிகலன்களாகும்/


சரணம் 3
போ43/அனுப4வமுலந்து3/ பா3கு33/ பு3த்3தி4/ நீயந்து3/
உலக இன்பங்களை/ துய்க்கும்போதும்/ நன்கு/ (எனது) அறிவு/ உன்னிடமே/

த்யாக3ராஜுனி/ ஹ்ரு23யமந்து3/ வாக்3-ஈஸ1-ஆனந்த3மு/-அந்து3/ (ராம)
தியாகராசனின்/ இதயத்தினில்/ (நாவரசி மணாளன்) பேரானந்தம்/ எய்தும்/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - வினு - வீனுல : 'வீனுல' என்ற சொல்லுக்கு 'காதுகளில்' என்று பொருளாகும். இச்சொல், இங்கு தனித்து நிற்பதனால், இவ்விடத்தில் பொருந்தாது எனக் கருதுகின்றேன்.

3 - தனபை - தனவை : 'தனவை' தவறாகும்.

4 - கருணேரா - கருணரா : 'கருணேரா' என்ற சொல் 'கருணையே' என்று அழுத்தமாகக் கூறுவதனால், சரியாக இருக்கலாம்.

5 - நீவேயனி - நீவேயனு.

6 - அனக4 - அனக3 : 'அனக3' என்ற சொல் இங்கு பொருந்தாது.

Top

மேற்கோள்கள்
1 - மனஸு - கனுலு - நோரு - மனது - கண்கள் - நாக்கு : ஆதி சங்கரர் இயற்றிய 'சிவானந்த லஹரி'யில் (41-வது செய்யுள்) கூறப்படுவது -

"நமனை வெல்வோனே! பாவங்களைக் களைவதற்கும், (வீடெனும்) பெரும் செல்வத்தினை அடைவதற்கும், உனது புகழ்பாட, உன்னை தியானிக்க, வணங்க, வலம் வர, தொழ, காண, உனது சரிதங்களைக் கேட்க, நா, உள்ளம், தலை, கைகள், கண்கள், செவிகள் (முறையே) என்னை வேண்டுகின்றன. (அங்ஙனமே) எனக்கு ஆணையிடுவாய்; திரும்பத்திரும்ப (அங்ஙனமே செய்ய) நினைவூட்டுவாய். (உனது தொழுகையை என்றும் செய்துகொண்டிருக்க) நான், நாவின் (மற்ற உடலுறுப்புகளுடையவும்) செயற்றிறன் இழக்காமலிருக்க அருள்வாய்." (ஸ்வாமி தபஸ்யானந்தரின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)

Top

விளக்கம்
7 - வாகீ3ஸா1னந்த3 - மிக்குயர்ந்த ஆனந்தம் 'பிரமானந்தம்' எனப்படும். இங்கு, 'பிரம' என்ற சொல்லினைத் தியாகராஜர் 'வாகீ31' (வாக்+ஈஸ1) 'நாவரசி மணாளன்' என்று கூறுகின்றார்.

உனது ஏதோ மாயையே யன்றோ - காதல் இறைவனின் மாயையினால் விளைந்தது என.

பெயர்களுக்கே - பெயர்களை பஜிக்க.

Top


Updated on 02 Dec 2009

No comments: