Wednesday, December 17, 2008

அதடே3 த4ன்யுடு3 - ராகம் காபி - Atade Dhanyudu - Raga Kaapi

பல்லவி
அதடே34ன்யுடு3ரா ஓ மனஸா

அனுபல்லவி
1ஸதத யான ஸுத த்4ரு2தமைன ஸீதா
பதி பாத3 யுக3முல ஸததமு ஸ்மரியிஞ்சு (அ)

சரணம்
சரணம் 1
வெனுக தீக தன மனஸு ரஞ்ஜில்லக3
4னமைன நாம கீர்தன பருடை3னட்டி (அ)

சரணம் 2
தும்பு3ரு வலெ தன தம்பு3ர பட்டி
3யாம்பு3தி4 ஸன்னிதா4னம்பு3ன நடியிஞ்சு (அ)

சரணம் 3
ஸாயகு ஸுஜனுல பா3யக தானு-
நுபாயமுனனு ப்ரொத்3து3 ஹாயிக3 23டி3பின (அ)

சரணம் 4
உல்லபு 3தாபமு சல்ல ஜேஸி அன்னி
கல்லலனியெஞ்சி 4ஸல்லாபமுனனுண்டு3 (அ)

சரணம் 5
கரி வரது3னி தத்வமெருக3னு மரிகி3ஞ்சு
அரி ஷட்3வர்க3முலந்து3 பரவ லேக திருகு3 (அ)

சரணம் 6
ஆர்தினி மரியு 5ப்ரவ்ரு2த்தினி தொலகி3ஞ்சே
கீர்தி கல்கி3ன ராம மூர்தினி நெர நம்மு (அ)

சரணம் 7
கலக3னி நிஜ விப்ர குலமுன ஜன்மிஞ்சி
நிலுவரமகு3 முக்தி ப2லமுனு ஜேகொன்ன (அ)

சரணம் 8
கர்ம நிஷ்டு2டை3ன த4ர்ம ஸீ1லுடை3
1ர்ம ராம நாம மர்மமு தெலிஸின (அ)

சரணம் 9
காஸு 6வீஸமுல கோஸமு ஆஸதோ
வேஸமு 74ரிஞ்சி மோஸமு ஜெந்த3னி (அ)

சரணம் 10
அந்த3முகா3 நாமமந்த3ரு ஜேஸின
ஸுந்த3ர ராமுனியந்து3 லக்ஷ்யமு பெட்டு (அ)

சரணம் 11
இன்னி பாடுலகு 8ஸர்வோன்னதமௌ ஸுக2மு
முன்னயனுப4விஞ்சுகொன்ன வாடெ3வடோ3
(அ)

சரணம் 12
ராஜஸ ஜனுலதோ தா ஜத கூ33
ராஜில்லு ஸ்ரீ த்யாக3ராஜ நுதினி நம்மு (அ)


பொருள் - சுருக்கம்
ஓ மனமே! அவனே பேறு பெற்றவனடா!

  • வாயு மைந்தன் பற்றும், சீதைக் கேள்வனின் திருவடிகளையெவ்வமயமும் நினைக்கும் அவனே..

  • பின் வாங்காது, தனது மனது களிக்க, மேலான, நாம கீர்த்தனையிலாழ்ந்தோனாகிய அவனே..

  • தும்புரு போன்று, தனது தம்புரா பிடித்து, கருணைக் கடலின் சன்னிதியில் நடமிடும் அவனே..

  • உதவிக்கு நல்லோரை யகலாது, தானும் விழிப்புடன், பொழுதை கவலையின்றி கழிக்கும் அவனே..

  • உள்ளத்தின் வெம்மையை தணித்து, யாவும் பொய்யென எண்ணி, (இறைவனுடன்) குலவியிருக்கும் அவனே..

  • கரி வரதனின் தத்துவத்தினையறியா வண்ணம் திரையிடும் உட்பகையாறினில் சிக்காமல் வாழும் அவனே..

  • துன்பங்களையும், மறு பிறப்பினையும் களையும் புகழுடை இராமமூர்த்தியினை முழுமையாக நம்பும் அவனே..

  • கிடைத்தற்கரிய உயர் அந்தண குலத்தினில் தோன்றி, நிலைபெறு முத்திப் பயனையுற்ற அவனே..

  • கருமங்களில் ஈடுபட்டோனாகிலும், அறநெறி நிற்போனாகிலும், இராம நாம இன்பத்தின் மருமமறிந்த அவனே..

  • அணா காசுக்கென, ஆசை கொண்டு, வேடமிட்டு, மோசமுறாத அவனே..

  • அழகாக, நாமத்தினை யாவரும் செபித்த, சுந்தரராமனில் இலக்கினை வைக்கும் அவனே..

  • இத்தனை பாடுகளுக்கு, மிக்குயர் சுகத்தினை முன்னம் அனுபவித்தவன் எவனோ அவனே..

  • இராசத மனிதர்களுடன் தான் கூட்டு சேராது, மிளிரும் தியாகராசனால் போற்றப்பெற்றோனை நம்பும் அவனே..


பேறு பெற்றவனடா!


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
அதடே3/ த4ன்யுடு3ரா/ ஓ மனஸா/
அவனே/ பேறு பெற்றவனடா/ ஓ மனமே/


அனுபல்லவி
ஸதத யான/ ஸுத/ த்4ரு2தமைன/ ஸீதா/
வாயு/ மைந்தன்/ பற்றும்/ சீதை/

பதி/ பாத3/ யுக3முல/ ஸததமு/ ஸ்மரியிஞ்சு/ (அ)
கேள்வனின்/ திருவடி/ இணையினை/ எவ்வமயமும்/ நினைக்கும்/ அவனே..


சரணம்
சரணம் 1
வெனுக/ தீக/ தன/ மனஸு/ ரஞ்ஜில்லக3/
பின்/ வாங்காது/, தனது/ மனது/ களிக்க/,

4னமைன/ நாம/ கீர்தன/ பருடை3ன-அட்டி/ (அ)
மேலான/, நாம/ கீர்த்தனையில்/ ஆழ்ந்தோனாகிய/ அவனே...


சரணம் 2
தும்பு3ரு/ வலெ/ தன/ தம்பு3ர/ பட்டி/
தும்புரு/ போன்று/, தனது/ தம்புரா/ பிடித்து/,

3யா/-அம்பு3தி4/ ஸன்னிதா4னம்பு3ன/ நடியிஞ்சு/ (அ)
கருணை/ கடலின்/ சன்னிதியில்/ நடமிடும்/ அவனே..


சரணம் 3
ஸாயகு/ ஸுஜனுல/ பா3யக/ தானு/-
உதவிக்கு/ நல்லோரை/ யகலாது/, தானும்/

உபாயமுனனு/ ப்ரொத்3து3/ ஹாயிக3/ க3டி3பின/ (அ)
விழிப்புடன்/, பொழுதை/ கவலையின்றி/ கழித்த/ அவனே..


சரணம் 4
உல்லபு/ தாபமு/ சல்ல ஜேஸி/ அன்னி/
உள்ளத்தின்/ வெம்மையை/ தணித்து/, யாவும்/

கல்லலு/-அனி/-எஞ்சி/ ஸல்லாபமுன-உண்டு3/ (அ)
பொய்/ என/ எண்ணி/ (இறைவனுடன்) குலவியிருக்கும்/ அவனே..


சரணம் 5
கரி/ வரது3னி/ தத்வமு/-எருக3னு/ மரிகி3ஞ்சு/
கரி/ வரதனின்/ தத்துவத்தினை/ அறியா வண்ணம்/ திரையிடும்/

அரி/ ஷட்3வர்க3முல-அந்து3/ பரவ லேக/ திருகு3/ (அ)
(உட்)பகைவர்/ அறுவரில்/ சிக்காமல்/ வாழும்/ அவனே..


சரணம் 6
ஆர்தினி/ மரியு/ ப்ரவ்ரு2த்தினி/ தொலகி3ஞ்சே/
துன்பங்களையும்/, மறு/ பிறப்பினையும்/ களையும்/

கீர்தி கல்கி3ன/ ராம/ மூர்தினி/ நெர/ நம்மு/ (அ)
புகழுடை/ இராம/ மூர்த்தியினை/ முழுமையாக/ நம்பும்/ அவனே..


சரணம் 7
கலக3னி/ நிஜ/ விப்ர/ குலமுன/ ஜன்மிஞ்சி/
கிடைத்தற்கரிய/ உயர்/ அந்தண/ குலத்தினில்/ தோன்றி/,

நிலுவரமகு3/ முக்தி/ ப2லமுனு/ ஜேகொன்ன/ (அ)
நிலைபெறு/ முத்தி/ பயனை/ உற்ற/ அவனே..


சரணம் 8
கர்ம/ நிஷ்டு2டு3/-ஐன/ த4ர்ம/ ஸீ1லுடு3/-ஐன/
கருமங்களில்/ ஈடுபட்டோன்/ ஆகிலும்/, அற/ நெறி நிற்போன்/ ஆகிலும்/,

1ர்ம/ ராம/ நாம/ மர்மமு/ தெலிஸின/ (அ)
இன்பமான/ இராம/ நாம/ மருமம்/ அறிந்த/ அவனே..


சரணம் 9
காஸு/ வீஸமுல கோஸமு/ ஆஸதோ/
காசு/ அணாக்களுக்கென/, ஆசை கொண்டு/,

வேஸமு/ த4ரிஞ்சி/ மோஸமு/ ஜெந்த3னி/ (அ)
வேடம்/ இட்டு/, மோசம்/ உறாத/ அவனே..


சரணம் 10
அந்த3முகா3/ நாமமு/-அந்த3ரு/ ஜேஸின/
அழகாக/, நாமத்தினை/ யாவரும்/ செபித்த/,

ஸுந்த3ர/ ராமுனி-அந்து3/ லக்ஷ்யமு/ பெட்டு/ (அ)
சுந்தர/ ராமனில்/ இலக்கினை/ வைக்கும்/ அவனே..


சரணம் 11
இன்னி/ பாடுலகு/ ஸர்வ/-உன்னதமௌ/ ஸுக2மு/
இத்தனை/ பாடுகளுக்கு/, மிக்கு/ உயர்/ சுகத்தினை/

முன்ன/-அனுப4விஞ்சுகொன்ன வாடு3/-எவடோ3/ (அ)
முன்னம்/ அனுபவித்தவன்/ எவனோ/ அவனே..


சரணம் 12
ராஜஸ/ ஜனுலதோ/ தா/ ஜத/ கூ33க/
இராசத/ மனிதர்களுடன்/ தான்/ கூட்டு/ சேராது/,

ராஜில்லு/ ஸ்ரீ த்யாக3ராஜ/ நுதினி/ நம்மு/ (அ)
மிளிரும்/ ஸ்ரீ தியாகராசனால்/ போற்றப்பெற்றோனை/ நம்பும்/ அவனே..


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - 3டி3பின - க3டு3பு

5 - ப்ரவ்ரு2த்தினி - ப்ரவர்தினி - 'ப்ரவ்ரு2த்தி' எனும் வடமொழி சொல்லின் தெலுங்கு வடிவு 'ப்ரவர்தி' யாகும்

7 - 4ரிஞ்சி - த4ரியிஞ்சி : 'த4ரியிஞ்சி' இங்கு பொருந்தாது.

8 - ஸர்வோன்னதமௌ - ஸர்வோன்னத
Top

மேற்கோள்கள்
3 - தாபமு - உள்ளத்தின் (முவ்)வெம்மை - அத்தியாத்துமிகம், ஆதிபௌதிகம், ஆதிதைவிகம்
Top

விளக்கம்
1 - ஸதத யான - எவ்வமயமும் வீசுவது - காற்று - வாயு

4 - ஸல்லாபமுனனுண்டு3 - பொதுவாக இச்சொல்லுக்கு 'உரையாடல்' என்று பொருள். இவ்விடத்தில் இதற்கு 'இறைவனுடன் உரையாடுதல்' என்று பொருள்படும் என தோன்றுகின்றது.

5 - ப்ரவ்ரு2த்தினி - பொதுவாக இச்சொல்லுக்கு 'செயத்தகு' என்று பொருள். ஆனால் இச்சொல்லுக்கு முன் வரும் 'மரியு' (மறு - திரும்ப) என்ற சொல்லினாலும், பின் வரும் 'தொலகி3ஞ்சே' (களையும்) என்ற சொல்லினாலும் இங்கு 'மறு பிறப்பு' என பொருள் கூறப்பட்டது.

6 - வீஸமுல - பதினாறில் ஒரு பாகம். இதற்கு முன் வரும் 'காசு' என்ற சொல்லினால், இங்கு 'அணா காசு' - என்று பொருள் கொள்ளப்பட்டது - 16 அணா = 1 ரூபாய்; முந்தைய செலவாணி

8 - ஸர்வோன்னதமௌ ஸுக2மு முன்னயனுப4விஞ்சுகொன்ன வாடெ3வடோ3 - மிக்குயர் சுகத்தினை முன்னம் அனுபவித்தவன் எவனோ - இது அனுமனை குறிக்கும் என்று தோன்றுகின்றது.

நடமிடும் - களிப்பினால்
கரி வரதன் - அரி
உட்பகை யாறு - காமம் முதலானவை
கருமங்கள் - வைதிக நெறி
பாடு - கடின உழைப்பு
இராசதம் - முக்குணங்களிலொன்று
Top



Updated on 17 Dec 2008

No comments: