த்4யானமே வரமைன க3ங்கா3 ஸ்நானமே 1மனஸா
அனுபல்லவி
வான நீட முனுக3 முனுக3 லோனி
வஞ்சன த்3ரோஹமனு கர 2போனா (த்4யா)
சரணம்
பர த4ன 3நாரீமணுலனு தூ3ரி
பர நிந்த3ல பர ஹிம்ஸல மீரி
த4ரனு வெலயு ஸ்ரீ ராமுனி கோரி
த்யாக3ராஜு தெலுஸுகொன்ன ராம (த்4யா)
பொருள் - சுருக்கம்
மனமே!
- தியானமே புனித கங்கை நீராடலாகுமே.
- மழை நீரில் நனைய நனைய, உள்ள, வஞ்சனை, துரோகமெனும் கறைகள் போமோ?
- பிறர் பொருள், பெண்மணிகளை வெறுத்து,
- பிறரைத் தூற்றல், பிறரை துன்புறுத்தலை மீறி,
- புவியில் ஒளிரும் இராமனை வேண்டி,
- மழை நீரில் நனைய நனைய, உள்ள, வஞ்சனை, துரோகமெனும் கறைகள் போமோ?
- தியாகராசன் தெரிந்துகொண்ட இராம தியானமே புனித கங்கை நீராடலாகுமே.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
த்4யானமே/ வரமைன/ க3ங்கா3/ ஸ்நானமே/ மனஸா/
தியானமே/ புனித/ கங்கை/ நீராடலாகுமே/ மனமே/
அனுபல்லவி
வான/ நீட/ முனுக3/ முனுக3/ லோனி/
மழை/ நீரில்/ நனைய/ நனைய/ உள்ள/
வஞ்சன/ த்3ரோஹமு/-அனு/ கர/ போனா/ (த்4யா)
வஞ்சனை/ துரோகம்/ எனும்/ கறைகள்/ போமோ/
சரணம்
பர/ த4ன/ நாரீமணுலனு/ தூ3ரி/
பிறர்/ பொருள்/ பெண்மணிகளை/ வெறுத்து/
பர/ நிந்த3ல/ பர/ ஹிம்ஸல/ மீரி/
பிறரை/ தூற்றல்/ பிறரை/ துன்புறுத்தலை/ மீறி/
த4ரனு/ வெலயு/ ஸ்ரீ ராமுனி/ கோரி/
புவியில்/ ஒளிரும்/ ஸ்ரீ ராமனை/ வேண்டி/
த்யாக3ராஜு/ தெலுஸுகொன்ன/ ராம/ (த்4யா)
தியாகராசன்/ தெரிந்துகொண்ட/ இராம/ தியானமே...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - மனஸா - ஓ மனஸா.
2 - போனா - போவுனா.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
3 - நாரீமணுலனு - பெண்மணிகளை - வரியின் முதலில் வரும், 'பர' (பிற) என்ற சொல், 'நாரீமணுலனு' (பெண்மணிகளை) என்ற சொல்லுக்கும் அடைமொழியென்று கருதுகின்றேன். ஆனால், தியாகராஜர், தியானத்திற்கு இடைஞ்சலென, மனைவியையும் சேர்த்து, 'பெண்மணிகளை' என்று பொதுவாகக் கூறுவதாகவும் கொள்ளலாம்
Top
Updated on 18 Oct 2010
No comments:
Post a Comment