ப4ஜன ஸேயவே மனஸா பரம ப4க்திதோ
அனுபல்லவி
அஜ ருத்3ராது3லகு பூ4-ஸுராது3லகருதை3ன ராம (ப4)
சரணம்
1நாத3 ப்ரணவ ஸப்த ஸ்வர வேத3 வர்ண ஸா1ஸ்த்ர
புராணாதி3 2சதுஷ்-ஷஷ்டி களல பே4த3மு கலிகே3
மோத3கர ஸ1ரீரமெத்தி முக்தி மார்க3முனு தெலியனி
வாத3 தர்கமேல 3ஸ்ரீமதா3தி3 த்யாக3ராஜ நுதுனி (ப4)
பொருள் - சுருக்கம்
- மனமே!
- பஜனை செய்வாயடி, பரம பக்தியுடன்;
- பிரமன், உருத்திராதியருக்கு, அந்தணர் ஆகியோருக்கும் அரிதான, ஆதி தியாகராசன் போற்றுவோனாகிய, இராம பஜனை செய்வாயடி, பரம பக்தியுடன்;
- நாதோங்கார ஏழ் சுரம், மறை, மொழி, சாத்திரம், புராணம் ஆகிய அறுபத்து நான்கு கலைகள் மலரும், மகிழ்வூட்டும் (மனித) உடலெடுத்து, முத்தி நெறி தெரியாத வாத, தருக்கமேன்?
- பஜனை செய்வாயடி, பரம பக்தியுடன்;
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ப4ஜன/ ஸேயவே/ மனஸா/ பரம/ ப4க்திதோ/
பஜனை/ செய்வாயடி/ மனமே/ பரம/ பக்தியுடன்/
அனுபல்லவி
அஜ/ ருத்3ர/-ஆது3லகு/ பூ4-ஸுர/-ஆது3லகு/-அருதை3ன/ ராம/ (ப4)
பிரமன்/ உருத்திரன்/ ஆதியருக்கு/ அந்தணர்/ ஆகியோருக்கும்/ அரிதான/ இராம/ பஜனை...
சரணம்
நாத3/ ப்ரணவ/ ஸப்த/ ஸ்வர/ வேத3/ வர்ண/ ஸா1ஸ்த்ர/
நாத/ ஓங்கார/ ஏழ்/ சுரம்/ மறை/ மொழி/ சாத்திரம்/
புராண/-ஆதி3/ சதுஷ்-ஷஷ்டி/ களல/ பே4த3மு/ கலிகே3/
புராணம்/ ஆகிய/ அறுபத்து நான்கு/ கலைகள்/ மலரும்/
மோத3கர/ ஸ1ரீரமு/-எத்தி/ முக்தி/ மார்க3முனு/ தெலியனி/
மகிழ்வூட்டும்/ (மனித) உடல்/ எடுத்து/ முத்தி/ நெறி/ தெரியாத/
வாத3/ தர்கமு/-ஏல/ ஸ்ரீமத்/-ஆதி3/ த்யாக3ராஜ/ நுதுனி/ (ப4)
வாத/ தருக்கம்/ ஏன்/ உயர்/ ஆதி/ தியாகராசன்/ போற்றுவோனின்/ பஜனை...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
2 - சதுஷ்-ஷஷ்டி கள - அறுபத்து நான்கு கலைகள் - இவற்றின் விவரம் பலவிதமாகக் காணப்படுகின்றது. அறுபத்து நான்கு கலைகள்.
Top
விளக்கம்
1 - நாத3 ப்ரணவ - இதனை, 'நாதம்' என்றும் 'ஓங்காரம்' என்றும் தனித்தனியாகவும் பொருள் கொள்ளலாம். ஆனால், இதனை அடுத்து வரும், 'ஸப்த ஸ்வர' (ஏழு சுரங்கள்) எனும் சொற்களினால், ஏழு சுரங்கள் எழும், நாதோங்காரத்தினை, தியாகராஜர் குறிப்பிடுவதாகக் கருதுகின்றேன். தியாகராஜரின் 'ராக3 ஸுதா4 ரஸ' என்ற ஆந்தோ3ளிகா ராக கீர்த்தனையினையும் நோக்கவும்.
3 - ஸ்ரீமதா3தி3 த்யாக3ராஜ நுதுனி - ஓரு புத்தகத்தினில், 'ஆதி தியாகராஜ' என்பது சிவனைக் குறிப்பிடுவதாகக் கொள்ளப்பட்டுள்ளது. திருவாரூரில், இறைவனுக்கு, 'தியாகராஜன்' என்றும் பெயர். 'திருக்கார வாசல்' எனப்படும் ‘திருக்காராயில்’ ஏழு விடங்கத் தலங்களில் ஒன்று. அங்கு இறைவனுக்கு 'ஆதி தியாகராஜன்' என்று பெயர்.
Top
உருத்திரன் - சிவன்
நாதோங்கார ஏழ் சுரம் - நாத ஓங்காரத்தினின்று தோன்றும் ஏழு சுரங்கள்.
ஆதி தியாகராசன் - சிவனைக் குறிக்கும்
ஆதி தியாகராசன் போற்றுவோன் - இராமன்
Top
Updated on 13 Jun 2010
No comments:
Post a Comment