எந்நாள்ளு நீ 1த்ரோவ ஜூது ராம
ஏமனி நே ப்ரொத்3து3 த்ரோது
சரணம்
சரணம் 1
நீகே மனஸிச்சி 2நேனு ராம
நீ மேனனி பெஞ்சினானு (எ)
சரணம் 2
த4ரனு கர்மமுலனு கோரியுண்டி
தலசுகொன்னதி3 வேரே தா3ரி (எ)
சரணம் 3
அந்த3ரி வலெ நேனீ பு4விலோ பொ3ம்ம-
லாடலாடு3து3 கானி மதி3லோ (எ)
சரணம் 4
ராமய்ய நலுகு3ரி லோன நா லோ
மர்மமுலு தெல்ப வலெனா (எ)
சரணம் 5
ரஸிகுலகே ஸரி போனு வட்டி
தஸுகுலகே ஹாஸ்யமௌனு (எ)
சரணம் 6
தொலி ப4க்துல வத்3த3 கொலுவோ 3ராவோ
கலுகு3 த4னமுலகு ஸெலவோ (எ)
சரணம் 7
எந்து3கு இந்த பராகு ராம
இகனு தப்பு பெட்ட போகு (எ)
சரணம் 8
எந்தனி ரால்து கன்னீரு ஜாலி-
நெவரிதோ தெலிபிதே தீரு (எ)
சரணம் 9
தனகே புட்டினயில்லு நீவு
தப்பக நீ க்ரு2ப செல்லு (எ)
சரணம் 10
ஆஸிஞ்சினதே3 தப்பா நீ-
கா பு3த்3தி4 வத்3து3 மாயப்பா (எ)
சரணம் 11
கலி மர்மமு தெலிய லேனி நா
வலெ தீ3னுடி3ல லோனு கலடா3 (எ)
சரணம் 12
பலுமாரு நினு தூ3ருகொண்டி ஆ
ப2லமுனனுப4விஞ்சுகொண்டி (எ)
சரணம் 13
தொலி கர்மமு ராக போனா ப4க்தி
வெலுகு3சே தீரக போனா (எ)
சரணம் 14
பூலம்மி ப்3ரதிகின வாரு ராம
புல்லலம்ம பில்வ ராரு (எ)
சரணம் 15
4ஆ சுலகன நீகு காதா3 ராம
ஏசு பு3த்3தி4 விட3 ராதா3 (எ)
சரணம் 16
ஓ ஜக3தீ3ஸ1 5க2ராரே த்யாக3-
ராஜு நீவாட3னி பேரே (எ)
பொருள் - சுருக்கம்
- இராமா? இராமய்யா! எமதப்பா! அண்டமாள்வோனே! கரனுக்கு எதிரியே!
- எத்தனை நாள் உனது வழி நோக்குவேன்? என்னவென்று நான் பொழுதைக் கழிப்பேன்?
- உனக்கே மனதையளித்து, நான் உனதுடம்பென வளர்த்தேன்.
- புவியில் கருமங்களைக் கோரியிருந்தேன்; (ஆனால்) எண்ணியதென்னவோ வேறு வழி.
- எல்லோரையும் போன்று நானும் இப்புவியில், பொம்மலாட்டம் ஆடுவேன்; ஆயினும் மனதினில் எத்தனை நாள் உனது வழி நோக்குவேன்?
- நால்வரில் எனது உள் மருமங்களை (நீ) அம்பலப்படுத்தவேண்டுமா?
- இரசிகர்களுக்கு சரி போகும்; ஆனால் வெற்று வம்பர்களுக்கு நகைப்பாகும்.
- முந்தைய பத்தர்களிடம் கொலுவோ? வாராயோ? உள்ள செல்வத்திற்குச் செலவோ?
- ஏனித்தனை அசட்டை? இன்னும் தவறுகள் காணப் போகாதே.
- எவ்வளவு கண்ணீருகுப்பேன்? துயரினை யாரிடம் தெரிவித்தால் தீரும்?
- உனக்கே பிறந்த உடம்பு (வீடு); நீ (குடிகொள்ள) தவறாதே; உனது கிருபை செல்லும்.
- (உன்னை) ஆசைப்பட்டதே தவறா? உனக்கு அந்த புத்தி வேண்டாம்.
- கலியின் மருமம் அறியாத என்னைப் போன்ற எளியவன் உலகத்திலுள்ளனா?
- பன்முறை உன்னைத் தூற்றினேன்; அந்த பயனை அனுபவிக்கின்றேன்.
- முன் வினை வாராமற்போகுமா? (ஆயினும்) பத்தியெனும் வெளிச்சத்தினால் தீராமற்போகுமா?
- பூ விற்றுப் பிழைத்தவர், விறகு விற்க அழைத்தாலும் வாரார்; (அங்ஙனமானால்) அந்த கேவலம் உனக்கன்றோ? ஏமாற்றும் புத்தியை விடலாகாதா?
- தியாகராசன் உன்னவனெனப் பெயரே.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எந்நாள்ளு/ நீ/ த்ரோவ/ ஜூது/ ராம/
எத்தனை நாள்/ உனது/ வழி/ நோக்குவேன்/ இராமா/
ஏமனி/ நே/ ப்ரொத்3து3/ த்ரோது/
என்னவென்று/ நான்/ பொழுதை/ கழிப்பேன்/
சரணம்
சரணம் 1
நீகே/ மனஸு/-இச்சி/ நேனு/ ராம/
உனக்கே/ மனதை/ யளித்து/ நான்/ இராமா/
நீ/ மேனு/-அனி/ பெஞ்சினானு/ (எ)
உனது/ உடம்பு/ என/ வளர்த்தேன்/
சரணம் 2
த4ரனு/ கர்மமுலனு/ கோரி/-உண்டி/
புவியில்/ கருமங்களை/ கோரி/ இருந்தேன்/
தலசுகொன்னதி3/ வேரே/ தா3ரி/ (எ)
எண்ணியதென்னவோ/ வேறு/ வழி/
சரணம் 3
அந்த3ரி/ வலெ/ நேனு/-ஈ/ பு4விலோ/
எல்லோரையும்/ போன்று/ நானும்/ இந்த/ புவியில்/
பொ3ம்மலு-ஆடலு/-ஆடு3து3/ கானி/ மதி3லோ/ (எ)
பொம்மலாட்டம்/ ஆடுவேன்/ ஆயினும்/ மனதில்/ எத்தனை..
சரணம் 4
ராமய்ய/ நலுகு3ரி லோன/ நா/ லோ/
இராமய்யா/ நால்வரில்/ எனது/ உள்/
மர்மமுலு/ தெல்ப/ வலெனா/ (எ)
மருமங்களை/ அம்பலப்படுத்த/ வேண்டுமா/
சரணம் 5
ரஸிகுலகே/ ஸரி/ போனு/ வட்டி/
இரசிகர்களுக்கு/ சரி/ போகும்/ வெற்று/
தஸுகுலகே/ ஹாஸ்யமௌனு/ (எ)
வம்பர்களுக்கு/ நகைப்பாகும்/
சரணம் 6
தொலி/ ப4க்துல வத்3த3/ கொலுவோ/ ராவோ/
முந்தைய/ பக்தர்களிடம்/ கொலுவோ/ வாராயோ/
கலுகு3/ த4னமுலகு/ ஸெலவோ/ (எ)
உள்ள/ செல்வத்திற்கு/ செலவோ/
சரணம் 7
எந்து3கு/ இந்த/ பராகு/ ராம/
ஏன்/ இத்தனை/ அசட்டை/ இராமா/
இகனு/ தப்பு/ பெட்ட/ போகு/ (எ)
இன்னும்/ தவறுகள்/ காண/ போகாதே/
சரணம் 8
எந்தனி/ ரால்து/ கன்னீரு/ ஜாலினி/-
எவ்வளவு/ உகுப்பேன்/ கண்ணீர்/ துயரினை/
எவரிதோ/ தெலிபிதே/ தீரு/ (எ)
யாரிடம்/ தெரிவித்தால்/ தீரும்/
சரணம் 9
தனகே/ புட்டின/-இல்லு/ நீவு/
உனக்கே/ பிறந்த/ வீடு/ நீ/
தப்பக/ நீ/ க்ரு2ப/ செல்லு/ (எ)
(குடிகொள்ள) தவறாதே/ உனது/ கிருபை/ செல்லும்/
சரணம் 10
ஆஸிஞ்சினதே3/ தப்பா/ நீகு/-
(உன்னை) ஆசைப்பட்டதே/ தவறா/ உனக்கு/
ஆ/ பு3த்3தி4/ வத்3து3/ மா-அப்பா/ (எ)
அந்த/ புத்தி/ வேண்டாம்/ எமதப்பா/
சரணம் 11
கலி/ மர்மமு/ தெலிய லேனி/ நா/
கலியின்/ மருமம்/ அறியாத/ என்னை/
வலெ/ தீ3னுடு3/-இல லோனு/ கலடா3/ (எ)
போன்ற/ எளியவன்/ உலகத்தில்/ உள்ளனா/
சரணம் 12
பலுமாரு/ நினு/ தூ3ருகொண்டி/ ஆ/
பன்முறை/ உன்னை/ தூற்றினேன்/ அந்த/
ப2லமுனு/-அனுப4விஞ்சுகொண்டி/ (எ)
பயனை/ அனுபவிக்கின்றேன்/
சரணம் 13
தொலி/ கர்மமு/ ராக/ போனா/ ப4க்தி/
முன்/ வினை/ வாராமற்/ போகுமா/ (ஆயினும்) பக்தியெனும்/
வெலுகு3சே/ தீரக/ போனா/ (எ)
வெளிச்சத்தினால்/ தீராமற்/ போகுமா/
சரணம் 14
பூலு/-அம்மி/ ப்3ரதிகின வாரு/ ராம/
பூ/ விற்று/ பிழைத்தவர்/ இராமா/
புல்லலு/-அம்ம/ பில்வ/ ராரு/ (எ)
விறகு/ விற்க/ அழைத்தாலும்/ வாரார்/
சரணம் 15
ஆ/ சுலகன/ நீகு/ காதா3/ ராம/
அந்த/ கேவலம்/ உனக்கு/ அன்றோ/ இராமா/
ஏசு/ பு3த்3தி4/ விட3 ராதா3/ (எ)
ஏமாற்றும்/ புத்தியை/ விடலாகாதா/
சரணம் 16
ஓ/ ஜக3த்3/-ஈஸ1/ க2ர/-அரே/
ஓ/ அண்டம்/ ஆள்வோனே/ கரனுக்கு/ எதிரியே/
த்யாக3ராஜு/ நீவாடு3/-அனி/ பேரே/ (எ)
தியாகராசன்/ உன்னவன்/ என/ பெயரே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - த்ரோவ - தோ3வ
3 - ராவோ - ராவு
மேற்கோள்கள்
5 - க2ராரே - கரன் - இராமனால் கொல்லப்பட்ட அரக்கன்
Top
விளக்கம்
2 - நேனு நீ மேனனி பெஞ்சினானு - நான் உனதுடம்பென வளர்த்தேன் - 9-வது சரணத்தில் 'உனக்காகவே பிறந்த வீடு (உடம்பு)' என்று தியாகராஜர் கூறுகின்றார். எனவே 'நான், நீ குடியிருக்கும் உடம்பென்று இதனை வளர்த்தேன்' என்றோ அல்லது 'நானே உனதுடம்பென வளர்த்தேன்' என்றோ மொழி பெயர்க்கலாம்.
4 - ஆ சுலகன - அந்த கேவலம் - 2-வது சரணத்தினல் 'நான் கருமங்களைக் கோரியிருந்தேன் ஆனால் எண்ணியதென்னவோ வேறு' என்கிறார் தியாகராஜர். 13-வது சரணத்தில் 'முன்வினை வாராமற் போகுமா? ஆனால், பக்தியெனும் வெளிச்சத்தினால் தீராமற் போகுமா?' என்கிறார். இவ்விரண்டு சரணங்களையும் சேர்த்து நோக்குகையில், பக்தி நெறியில் செல்பவனை 'பூ விற்றுப் பிழைத்தவன்' என்று மேற்கோள் காட்டுவது விளங்கும். எனவே 'நான் பக்தி நெறியினின்றும் தவறமாட்டேன்' என்று அறுதியிட்டுச் சொல்வது 'விறகு விற்க வரமாட்டான்' என்ற மேற்கோளால் தெரிகின்றது. 'நான் அப்படி நெறி மாறினால் அஃதுனது புகழுக்கு இழுக்காகும்' என்பதனை இங்கு தியாகராஜர் தெரிவிக்கின்றார்.
நால்வரில் - பிறர் முன்னிலையில்
Top
Updated on 20 Dec 2008
No comments:
Post a Comment