கத்3த3னு வாரிகி கத்3து3 கத்3த3னி மொரலனிடு3
பெத்3த3ல மாடலு நேட3ப3த்3த4மௌனோ
அனுபல்லவி
அத்3த3ம்பு செக்கிள்ளசே முத்3து3 காரு மோமு ஜூட3
பு3த்3தி4 கலிகி3னட்டி மா வத்3த3 ராவதே3மிரா (க)
சரணம்
நித்3து3ர நிராகரிஞ்சி முத்3து3க3 தம்பு3ர பட்டி
ஸு1த்3த4மைன மனஸுசே ஸு-ஸ்வரமுதோ
பத்3து3 தப்பக ப4ஜியிஞ்சு ப4க்த பாலனமு ஸேயு
தத்3த3ய-ஸா1லிவி நீவு த்யாக3ராஜ ஸன்னுத (க)
பொருள் - சுருக்கம்
- தியாகராசன் போற்றுவோனே!
- உண்டென்போருக்கு, உண்டுண்டென முறையிடும், பெரியோரின் சொற்கள் இன்று பொய்யாகுமோ?
- கண்ணாடிக் கன்னங்களுடன், எழில் வழியும் முகத்தினை நோக்க, எண்ணம் தோன்றியுள்ள, அத்தகைய எமதருகில், வாராயேனய்யா?
- உறக்கத்தினைப் புறக்கணித்து,
- அழகாக தம்புரா பிடித்து,
- தூய உள்ளத்துடனும்,
- இனிய சுரத்துடனும்,
- நியமம் தவறாது,
- உறக்கத்தினைப் புறக்கணித்து,
- பஜனை செய்யும் தொண்டர்களைப் பேணும் அக் கருணையுள்ளத்தோன் நீ.
- உண்டென்போருக்கு, உண்டுண்டென முறையிடும், பெரியோரின் சொற்கள் இன்று பொய்யாகுமோ?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கத்3து3/-அனு வாரிகி/ கத்3து3/ கத்3து3/-அனி/ மொரலனு/-இடு3/
உண்டு/ என்போருக்கு/ உண்டு/ உண்டு/ என/ முறை/ யிடும்/
பெத்3த3ல/ மாடலு/ நேடு3/-அப3த்3த4மு/-ஔனோ/
பெரியோரின்/ சொற்கள்/ இன்று/ பொய்/ ஆகுமோ/
அனுபல்லவி
அத்3த3ம்பு/ செக்கிள்ளசே/ முத்3து3/ காரு/ மோமு/ ஜூட3/
கண்ணாடி/ கன்னங்களுடன்/ எழில்/ வழியும்/ முகத்தினை/ நோக்க/
பு3த்3தி4/ கலிகி3ன/-அட்டி/ மா/ வத்3த3/ ராவு/-அதே3மிரா/ (க)
எண்ணம்/ தோன்றியுள்ள/ அத்தகைய/ எமது/ அருகில்/ வாராய்/ ஏனய்யா/
சரணம்
நித்3து3ர/ நிராகரிஞ்சி/ முத்3து3க3/ தம்பு3ர/ பட்டி/
உறக்கத்தினை/ புறக்கணித்து/ அழகாக/ தம்புரா/ பிடித்து/
ஸு1த்3த4மைன/ மனஸுசே/ ஸு-ஸ்வரமுதோ/
தூய/ உள்ளத்துடனும்/ இனிய சுரத்துடனும்/
பத்3து3/ தப்பக/ ப4ஜியிஞ்சு/ ப4க்த/ பாலனமு ஸேயு/
நியமம்/ தவறாது/ பஜனை செய்யும்/ தொண்டர்களை/ பேணும்/
தத்3/-த3ய-ஸா1லிவி/ நீவு/ த்யாக3ராஜ/ ஸன்னுத/ (க)
அக்/ கருணையுள்ளத்தோன்/ நீ/ தியாகராசன்/ போற்றுவோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
விளக்கம்
உண்டென்போர் - இறைவன் உண்டென்போர்
சுரம் - ஏழு சுரங்கள்
Top
Updated on 27 Aug 2010
No comments:
Post a Comment