Tuesday, March 31, 2009

தியாகராஜ கிருதி - கு3ரு லேக - ராகம் கௌ3ரி மனோஹரி - Guru Leka - Raga Gauri Manohari

பல்லவி
கு3ரு லேகயெடுவண்டி கு3ணிகி தெலியக3 போது3

அனுபல்லவி
கருகைன 1ஹ்ரு2த்3-ரோக33ஹனமுனு கொட்டனு ஸத்3-(கு3ரு)

சரணம்
தனுவு ஸுத த4ன தா32தா3யாதி3 பா3ந்த4வுலு
3ஜனியிஞ்சி செத3ரு ஜாலினி கருணதோ
மனுஸுனண்டக ஸேயு மந்த3னுசு தத்வ
போ34ன ஜேஸி 4காபாடு3 5த்யாக3ராஜாப்துட3கு3 (கு3ரு)


பொருள் - சுருக்கம்
  • குருவின்றி, எப்படிப்பட்ட குணமுடைத்தோனுக்கும், தெரியவராது

  • கூர்மையான, இதய நோயெனும் முட்புதரினை அழிப்பதற்கு, நற்குருவின்றி, எப்படிப்பட்ட குணமுடைத்தோனுக்கும், தெரியவராது

  • உடல், மக்கள், செல்வம், மனையாள், பங்காளிகள் முதலான உறவினர்கள் பிறந்து, சிதறும் துயரினை, கருணையுடன், மனத்தினைத் தீண்டாமற் செய்யும் மருந்தென, தத்துவ போதனை செய்து காக்கும், தியாகராசனின் நற்றுணை போலும் குருவின்றி, எப்படிப்பட்ட குணமுடைத்தோனுக்கும், தெரியவராது



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கு3ரு/ லேக/-எடுவண்டி/ கு3ணிகி/ தெலியக3/ போது3/
குரு/ இன்றி/ எப்படிப்பட்ட/ குணமுடைத்தோனுக்கும்/ தெரிய/ வராது/


அனுபல்லவி
கருகைன/ ஹ்ரு2த்3/-ரோக3/ க3ஹனமுனு/ கொட்டனு/ ஸத்3/-(கு3ரு)
கூர்மையான/ இதய/ நோயெனும்/ முட்புதரினை/ அழிப்பதற்கு/ நற்/ குருவின்றி..


சரணம்
தனுவு/ ஸுத/ த4ன/ தா3ர/ தா3ய/-ஆதி3/ பா3ந்த4வுலு/
உடல்/ மக்கள்/ செல்வம்/ மனையாள்/ பங்காளிகள்/ முதலான/ உறவினர்கள்/

ஜனியிஞ்சி/ செத3ரு/ ஜாலினி/ கருணதோ/
பிறந்து/ சிதறும்/ துயரினை/ கருணையுடன்/

மனுஸுன/-அண்டக/ ஸேயு/ மந்து3/-அனுசு/ தத்வ/
மனத்தினை/ தீண்டாமற்/ செய்யும்/ மருந்து/ என/ தத்துவ/

போ34ன/ ஜேஸி/ காபாடு3/ த்யாக3ராஜ/-ஆப்துட3கு3/ (கு3ரு)
போதனை/ செய்து/ காக்கும்/ தியாகராசனின்/ நற்றுணை போலும்/ குருவின்றி...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
4 - காபாடு3 - காபாட3

5 - த்யாக3ராஜாப்துட3கு3 - த்யாக3ராஜாப்துட3னு : 'த்யாக3ராஜாப்துட3கு3' சரியாகும்

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - ஹ்ரு2த்3ரோக3 - இதய நோய் - மூவாசை அல்லது முவ்வெம்மைகளைக் குறிக்கும்

2- தா3யாதி3 - 'தா3ய' என்றாலும் 'தா3யாதி3' என்றாலும் 'பங்காளி' என்று பொருளாகும். இவ்விடத்தில் இச்சொல்லினை 'தா3ய' + 'ஆதி3' என்ற பிரித்து 'பங்காளிகள் முதலான' என்று பொருள் கொள்ளல் பொருந்தும்.

3 - ஜனியிஞ்சி செத3ரு - 'ஜனியிஞ்சி' என்பதற்கு 'பிறப்பித்து' அல்லது 'பிறந்து' என்று பொருளாகும். இங்கு அடுத்து வரும் சொல்லாகிய 'செத3ரு' என்பதற்கு 'சிதறும்' என்று பொருளாககும். 'பிறப்பித்து - சிதறடித்து' என்றோ, அல்லது 'பிறந்து - சிதறும்' என்றோ இருக்கவேண்டும். 'செத3ரு' என்ற சொல்லுக்கு 'சிதறடித்து' என்று பொருளில்லை. எனவே 'பிறந்து - சிதறும்' என்று பொருள் கொள்ளப்பட்டது.

தியாகராசனின் நற்றுணை - நாரதரைக் குறிக்கும்

Top


Updated on 01 Apr 2009

No comments: