Thursday, October 30, 2008

மோக்ஷமு க3லதா3 - ராகம் ஸாரமதி - Mokshamu Galada - Raga Saramati

பல்லவி
1மோக்ஷமு3லதா3 பு4விலோ
ஜீவன்முக்துலு கானி வாரலகு

அனுபல்லவி
2ஸாக்ஷாத்கார நீ 3ஸத்34க்தி
ஸங்கீ3த ஞான விஹீனுலகு (மோ)

சரணம்
ப்ராணானல ஸம்யோக3மு வல்ல
4ப்ரணவ நாத3மு ஸப்த-ஸ்வரமுலை பரக3
வீணா வாத3ன லோலுடௌ3 5ஸி1வ மனோ-
வித4
மெருக3ரு த்யாக3ராஜ வினுத (மோ)



பொருள் - சுருக்கம்
சாட்சாத்காரமே! தியாகராசனால் போற்றப்பெற்றோனே!
புவியில் சீவன் முத்தர் ஆகாதவர்களுக்கு முத்தி உண்டாமோ?

உனது தூய பத்தி (கலந்த) இசை அறிவற்றோருக்கு முத்தி உண்டாமோ?

(உயிர்)மூச்சு மற்றும் (உடல்) வெம்மையின் சேர்க்கையினால்,
பிரணவ நாதம் ஏழ் பதங்களாகித் திகழ, வீணையிசையில்
திளைக்கும் சிவனின் உள்ளப் பாங்கினையறியார்;



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மோக்ஷமு/ க3லதா3/ பு4விலோ/
முத்தி/ உண்டாமோ/ புவியில்/

ஜீவன்/ முக்துலு/ கானி வாரலகு/
சீவன்/ முத்தர்/ ஆகாதவர்களுக்கு/


அனுபல்லவி
ஸாக்ஷாத்கார/ நீ/ ஸத்3/-ப4க்தி/
சாட்சாத்காரமே/ உனது/ தூய/ பத்தி/

ஸங்கீ3த/ ஞான/ விஹீனுலகு/ (மோ)
(கலந்த) இசை/ அறிவு/ அற்றோருக்கு/ முத்தி...

சரணம்
ப்ராண/-அனல/ ஸம்யோக3மு வல்ல/
(உயிர்)மூச்சு/ (உடல்) வெம்மையின்/ சேர்க்கையினால்/

ப்ரணவ/ நாத3மு/ ஸப்த/-ஸ்வரமுலை/ பரக3/
பிரணவ/ நாதம்/ ஏழ்/ பதங்களாகி/ திகழ/

வீணா/ வாத3ன/ லோலுடௌ3/ ஸி1வ/ மனோ/-
வீணை/ இசையில்/ திளைக்கும்/ சிவனின்/ உள்ள/

வித4மு/-எருக3ரு/ த்யாக3ராஜ/ வினுத/ (மோ)
பாங்கினை/ அறியார்/ தியாகராசனால்/ போற்றப்பெற்றோனே/

குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
4ப்ரணவ நாத3மு ஸப்த-ஸ்வரமுலை பரக3 - தியாகராஜர் 'வர ராக3 லயக்3ஞுலு' எனும் பாடலில் 'உடலிலிருந்து எழும் நாதம்' என்றும் 'ஸ்வர ராக3 ஸுதா4' என்ற பாடலில் 'மூலாதாரத்தினின்று எழும் நாதம்' என்றும் கூறுகிறார். உடலிலிருந்து (மூலாதாரத்திலிருந்து) எழும் நாதம் நான்கு நிலைகளில் நாம் உணரும் ஓசையாக வெளிப்படுகின்றது. இதையே லலிதா ஸஹஸ்ர நாமத்தில் அம்மைக்கு 'பரா', 'பஸ்1யந்தி', 'மத்4யமா', 'வைக2ரீ' என்னும் பெயர்களினால் விளக்கப்படுகிறது. இச்சொற்களுக்கு காஞ்சி முனிவரின் ஸௌந்தர்ய லஹரி விளக்கத்தினை நோக்கவும்.
Top

விளக்கம்
1மோக்ஷமு - முத்தி - சீவன் முத்தருக்கு உடல் வீழ்ந்தபின் நண்ணும் கைவல்யம் : சீவன் முத்தி - உயிருடனிருக்கையிலேயே முத்தி (கைவல்யத்திற்கு முற்பட்ட நிலை)

2ஸாக்ஷாத்கார - சாட்சாத்காரம் - கருவி, கரணாதிகட் கெல்லாஞ் சாட்சி- கண்கண்ட தெய்வம் : கருவி-கரணம் - பொறிகளும், அந்தக்கரணமும் : அந்தக் கரணம் - மனது

3ஸத்34க்தி - பக்தியற்ற இசையறிவு நன்னெறியல்ல

5ஸி1வ மனோவித4மு - சிவனின் உள்ளப் பாங்கு - நாதோங்காரம் எனப்படும் சதாசிவ நிலை

உடல் வெம்மை - ஆற்றல் என்றும் கொள்ளலாம்

பிரணவம் - ஓங்காரம்

நாதம் - ஓசை
Top


1 comment:

Govindaswamy said...

அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
பல்லவி,அனுபல்லவிகளின் இறுதியில் ’ஜீவன்முக்துலு கானி வாரலகு’
என்றும் ’ஸங்கீ3த ஞான விஹீனுலகு’ என்றும் உள்ளன. ஆனால் சரணத்தின் கடைசியில் உள்ள ’ஸி1வ மனோவித4மெருக3ரு’ என்பது பல்லவியின் தொடக்கத்தோடு சேருவதில்லையே.
வணக்கம்
கோவிந்தசாமி