Monday, December 14, 2009

தியாகராஜ கிருதி - தனலோனே த்4யானிஞ்சி - ராகம் தே3வ கா3ந்தா4ரி - Tanalone Dhyaninci - Raga Deva Gandhari - Prahlada Bhakti Vijayam

பல்லவி
தன லோனே த்4யானிஞ்சி 1தன்மயமே காவலெரா

அனுபல்லவி
தன கு3ஹலோ தானுண்டெ3டு3 தாவுனு தெலியக3 வலெரா (த)

சரணம்
சரணம் 1
நீ மர்மமா க்ஷணமே நிஸ்1சயமை தெலுஸுனுரா (த)


சரணம் 2
ஏனனு மாயா 2வேளனே வங்கோ தெலியது3ரா (த)


சரணம் 3
தொலி கர்மமே ப3லமு தோய கூட3து3 விதி4கி (த)


சரணம் 4
3ப்ரக்ரு2தி ஸ்வபா4வமுலு ப்ரஜ்வலிஞ்சுசுனுண்டு3 (த)


சரணம் 5
லக்ஷ்யமு ஜேயரு மதி3லோ லக்ஷாந்தரமுலகைன (த)


சரணம் 6
4ம்ரிங்கி3ன கள்ளகு ருசுல மேலு கனே வாரெவரு (த)


சரணம் 7
பூ4தமுலைது3னு நீவு 5பொரல ஜேயுசுன்னாவு (த)


சரணம் 8
6நிரவதி41ய்யபை நீவு நித்யானந்த3முனுன்னாவு (த)


சரணம் 9
ஸ்ரீ த்யாக3ராஜுனி 7சே பட்டி ரக்ஷிஞ்செத3வு (த)


பொருள் - சுருக்கம்
 • தன்னுள்ளே தியானித்து, தன்மயமேயாக வேண்டுமய்யா;

 • தனது குகையினில் தானிருக்குமிடத்தினை அறியவேண்டுமய்யா;
 • உனது மருமம், அந்நொடியே உறுதியாகத் தெரியுமய்யா;
 • 'நான்' எனும் மாயை, அவ்வேளை, எம்மூலையிலோ, தெரியாதய்யா;

 • முன்வினையே (என்னை) வலிய தள்ளக்கூடாது, விதிக்கு;

 • இயற்கைத் தன்மைகள் சுடர்விட்டுக்கொண்டிருக்கும்;
 • (ஆயினும் தியானத்திலுள்ளோர்) சட்டை செய்யார், மதியினில், இலட்சம் இடைவெளிகளாயினும்;

 • விழுங்கிய கண்களுக்கு, சுவைகளின் மேன்மையைக் காண்பவர் யாரே?
 • (ஏனெனில்) பூதங்களைந்தினையும் நீ புரளச் செய்கின்றாய்;

 • அனந்த அணையின்மீது நீ அழிவற்ற ஆனந்தத்தினிலுள்ளாய்;
 • தியாகராசனைக் கைப்பற்றிக் காத்தனை.பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தன/ லோனே/ த்4யானிஞ்சி/ தன்மயமே/ காவலெரா/
தன்/ உள்ளே/ தியானித்து/ தன்மயமேயாக/ வேண்டுமய்யா/


அனுபல்லவி
தன/ கு3ஹலோ/ தானு/-உண்டெ3டு3/ தாவுனு/ தெலியக3/ வலெரா/ (த)
தனது/ குகையினில்/ தான்/ இருக்கும்/ இடத்தினை/ அறிய/ வேண்டுமய்யா/


சரணம்
சரணம் 1
நீ/ மர்மமு/-ஆ/ க்ஷணமே/ நிஸ்1சயமை/ தெலுஸுனுரா/ (த)
உனது/ மருமம்/ அந்த/ நொடியே/ உறுதியாக/ தெரியுமய்யா/


சரணம் 2
ஏனு/-அனு/ மாய/-ஆ/ வேளனு/-ஏ/ வங்கோ/ தெலியது3ரா/ (த)
'நான்'/ எனும்/ மாயை/ அந்த/ வேளை/ எந்த/ மூலையிலோ/ தெரியாதய்யா/


சரணம் 3
தொலி/ கர்மமே/ ப3லமு/ தோய/ கூட3து3/ விதி4கி/ (த)
முன்/ வினையே/ (என்னை) வலிய/ தள்ள/ கூடாது/ விதிக்கு/


சரணம் 4
ப்ரக்ரு2தி/ ஸ்வபா4வமுலு/ ப்ரஜ்வலிஞ்சுசுனு/-உண்டு3/ (த)
இயற்கை/ தன்மைகள்/ சுடர்விட்டுக்கொண்டு/ இருக்கும்/


சரணம் 5
லக்ஷ்யமு/ ஜேயரு/ மதி3லோ/ லக்ஷ/-அந்தரமுலகைன/ (த)
(ஆயினும் தியானத்திலுள்ளோர்) சட்டை/ செய்யார்/ மதியினில்/ இலட்சம்/ இடைவெளிகளாயினும்/


சரணம் 6
ம்ரிங்கி3ன/ கள்ளகு/ ருசுல/ மேலு/ கனே வாரு/-எவரு/ (த)
விழுங்கிய/ கண்களுக்கு/ சுவைகளின்/ மேன்மையை/ காண்பவர்/ யாரே/


சரணம் 7
பூ4தமுலு/-ஐது3னு/ நீவு/ பொரல/ ஜேயுசு-உன்னாவு/ (த)
(ஏனெனில்) பூதங்கள்/ ஐந்தினையும்/ நீ/ புரள/ செய்கின்றாய்/


சரணம் 8
நிரவதி4/ ஸ1ய்யபை/ நீவு/ நித்ய/-ஆனந்த3முன/-உன்னாவு/ (த)
அனந்த/ அணையின்மீது/ நீ/ அழிவற்ற/ ஆனந்தத்தினில்/ உள்ளாய்/


சரணம் 9
ஸ்ரீ த்யாக3ராஜுனி/ சே/ பட்டி/ ரக்ஷிஞ்செத3வு/ (த)
ஸ்ரீ தியாகராசனை/ கை/ பற்றி/ காத்தனை/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
3 - ப்ரக்ரு2தி ஸ்வபா4வமுலு ப்ரஜ்வலிஞ்சுசுனுண்டு3 - இயற்கைத் தன்மைகள் சுடர்விட்டுக்கொண்டிருக்கும் - கீதையில் (18-வது அத்தியாயம், 11-வது செய்யுள்) கண்ணன் கூறியது -

"உடலெடுத்தோனால் கருமங்களை முழுவதுமாகத் துறக்கவியலாது.
ஆனால் கருமங்களின் பலன்களை எவன் துறக்கின்றானோ அவன் 'தியாகி' எனப்படுவான்."

Top

4 - ம்ரிங்கி3ன கள்ளகு - விழுங்கிய கண்களுக்கு - பகுதி மூடிய கண்களுடன் தியானத்தில் மூழ்கியோர் - கீதையில் (6-வது அத்தியாயம், 13-வது செய்யுள்) கண்ணன் கூறுவது -

(தியானம் செய்பவன்)
"உடல், தலை மற்றும் கழுத்தினை நேராக வைத்துக்கொண்டு, அசையாது, நிலையாக இருக்கட்டும்.
கண்களை நாசியின் நுனியில் கோர்த்து, தான் அங்கும் இங்கும் நோக்காதிருக்கட்டும்."
(கண்கள், தியானத்தில், பகுதி மூடி, விழிகள் அசையாதிருந்தால், பார்வை நாசியின் நுனியில் நிலைக்கும்.)

Top

5 - பொரல ஜேயுசுன்னாவு - புரளச் செய்தல் - ஆட்டுவித்தல் - கீதையில் (9-வது அத்தியாயம், 10-வது செய்யுள்) கண்ணன் கூறுவது -

"என்னுடைய அண்மையினால் பிரகிருதி (இயற்கை) சராசரங்களை அசைவிக்கின்றது.
குந்தி மகனே! அந்த காரணத்தினால்தான் இவ்வுலகம் சுழல்கின்றது."
(ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கங்களின் தமிழாக்கம்.)

Top

விளக்கம்
1 - தன்மயமே - தன்மயம் - வழிபடும் உருவத்துடன் ஒன்றுதல்

2 - ஏ வங்கோ தெலியது3ரா - எம்மூலையிலோ தெரியாது - தியானத்தில் ஆழ்ந்தவன், தியானத்தின் இலக்குடன் ஒன்றுவதனால், அவனுடைய அகங்காரம் செயலிழக்கின்றது. ஆனால், தியானம் முடிந்தபின்னர், அகங்காரம் மறுபடியும் எழுகின்றது. இதனை, தியாகராஜர் 'அகங்காரம் எந்த மூலையிலோ' என்று கூறுகின்றார்.

6 - நிரவதி41ய்ய - 'நிரவதி4' என்ற சொல்லுக்கு,'கால வரையற்ற' (அனந்த) என்று பொருளாகும். அதனால், இவ்விடத்தில் 'நிரவதி4' என்ற சொல் 'அனந்த சேடன்' எனும் அணையினைக் குறிக்கும்.
Top

7 - சே பட்டி - கைப் பற்றி - கைப்பற்றுதல் என்பது திருமணத்தினைக் குறிக்கும். இது நாயகி பாவமாகும்.

அனுபல்லவி மற்றும் சரணங்கள் 1 மற்றும் 2-னைச் சேர்த்தாலே, சரியான பொருள் கொள்ளவியலும்.

அங்ஙனமே, சரணங்கள் 4 மற்றும் 5-னை சேர்த்தே பொருள் கொள்ளவியலும். சரணங்கள் 6 மற்றும் 7-ம் அப்படியே.

சரணங்கள் 3 முதல் 6-வரை மிகவும் சுருக்கமாக இயற்றப்பட்டுள்ளன. அதனால், இவற்றின் பொருள் சரிவர கொள்ளப்பட்டுள்ளதா, என ஐயம் உள்ளது. தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.

Top

இப்பாடல், 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற நாட்டிய நாடகத்தின் அங்கமாகும். இப்பாடல், பிரகலாதன், இறைவனை நோக்கிப் பாடுவதாக.

குகை - உடல் எனும் குகை
தானிருக்குமிடத்தினை - உள்ளுறை இறைவன் இருக்குமிடம்.
விதி - பிரமன்
இயற்கை - ஐம்பூதங்கள், மனம் முதலானவை
சுவைகள் - புலன் நுகர்ச்சியின் சுவை

Top


Updated on 15 Dec 2009

No comments: