Sunday, August 9, 2009

தியாகராஜ கிருதி - எடுலைன ப4க்தி - ராகம் ஸா1ம - Etulaina Bhakti - Raga Saama

பல்லவி
எடுலைன ப4க்தி வச்சுடகே யத்னமு ஸேயவே

அனுபல்லவி
1மடு-மாய4வமுனு மனத3னி2யெஞ்சக
3வட பத்ர ஸ1யனுனி பாத3 யுக3முலந்து3 (எடு)

சரணம்
சரணம் 1
4வித்3யா க3ர்வமுலேல
5நீவவித்3யா வஸ1மு கானேல
62த்3யோதான்வய திலகுனி புரமேலு
7பு3த்3தி4யாஸு13 தோசதே3ல ஓ மனஸா (எடு)


சரணம் 2
ராம நாமமு ஸேய ஸிக்3கா3 காரா-
தே3மி பல்கவு புண்டி பு3க்3கா3
8பா4மல கர தா3டகயுண்டே 9ஜக்33
பாமர மேனு நம்மக 10நீடி பு3க்33 (எடு)


சரணம் 3
11போ43 பா4க்3யமுலந்து3 நிஜ
12பா43வதுலகௌ நீ பொந்து3
த்யாக3ராஜ வரது3னி நீயந்து3
பா3கு33 த்4யானிஞ்சு ப4வ ரோக3 மந்து3 (எடு)


பொருள் - சுருக்கம்
 • ஓ மனமே!

 • எப்படியாகிலும் பக்தி வருதற்கே முயற்சிப்பாய்

 • கண்கட்டு மாய உலக வாழ்வினை நமதென எண்ணாது, ஆலிலையிற் றுயில்வோனின் திருவடி இணையினில் எப்படியாகிலும் பக்தி வருதற்கே முயற்சிப்பாய்


  • கல்விச் செருக்கேனோ? நீ அவித்தையின் வயப்படுவதேனோ?

  • பரிதி குலத் திலகத்தின் நகர் செல்லும் எண்ணம் சடுதியில் தோன்றாததேனோ?


  • இராம நாம (செபம்) செய்ய நாணமோ? செய்யக் கூடாதோ? பேசமாட்டாயோ? புண் வாயோ?

  • பெண்டிர் கரை தாண்டாதிருந்தால், மிக்க நன்று;

  • அறிவிலியே! உடலை நம்பாதே; (அது) நீர்க் குமிழி


  • இன்பம், பேறு - இவற்றிற்கிடையும், உண்மையான தொண்டர்களுடன் இருக்கட்டும் உனது தொடர்பு;

  • தியாகராசனுக் கருள்வோனை உன்னுள் நன்கு தியானிப்பாய்;

  • உலக வாழ்வெனும் நோய்க்கு (அதுவே) மருந்து.பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எடுலைன/ ப4க்தி/ வச்சுடகே/ யத்னமு ஸேயவே/
எப்படியாகிலும்/ பக்தி/ வருதற்கே/ முயற்சிப்பாய்/


அனுபல்லவி
மடு-மாய/ ப4வமுனு/ மனதி3/-அனி/-எஞ்சக/
கண்கட்டு மாய/ உலக/ வாழ்வினை/ நமது/ என/ எண்ணாது/

வட/ பத்ர/ ஸ1யனுனி/ பாத3/ யுக3முலு-அந்து3/ (எடு)
ஆல்/ இலையில்/ துயில்வோனின்/ திருவடி/ இணையினில்/ எப்படியாகிலும்...


சரணம்
சரணம் 1
வித்3யா/ க3ர்வமுலு/-ஏல/ நீவு/-
கல்வி/ செருக்கு/ ஏனோ/ நீ/

அவித்3யா/ வஸ1மு கானு/-ஏல/
அவித்தையின்/ வயப்படுவது/ ஏனோ/

2த்3யோத/-அன்வய/ திலகுனி/ புரமு/-ஏலு/
பரிதி/ குல/ திலகத்தின்/ நகர்/ செல்லும்/

பு3த்3தி4/-ஆஸு13/ தோசது3/-ஏல/ ஓ மனஸா/ (எடு)
எண்ணம்/ சடுதியில்/ தோன்றாதது/ ஏனோ/ ஓ மனமே/


சரணம் 2
ராம/ நாமமு/ ஸேய/ ஸிக்3கா3/ காராது3-/
இராம/ நாம (செபம்)/ செய்ய/ நாணமோ/ செய்ய கூடாதோ/

ஏமி/ பல்கவு/ புண்டி/ பு3க்3கா3/
என்ன/ பேசமாட்டாயோ/ புண்/ வாயோ/

பா4மல/ கர/ தா3டக/-உண்டே/ ஜக்33/
பெண்டிர்/ கரை/ தாண்டாது/ இருந்தால்/ மிக்க நன்று/

பாமர/ மேனு/ நம்மக/ நீடி/ பு3க்33/ (எடு)
அறிவிலியே/ உடலை/ நம்பாதே/ (அது) நீர்/ குமிழி/


சரணம் 3
போ43/ பா4க்3யமுலு/-அந்து3/ நிஜ/
இன்பம்/ பேறு - இவற்றிற்கு/ இடையும்/ உண்மையான/

பா43வதுலகௌ/ நீ/ பொந்து3/
தொண்டர்களுடன் இருக்கட்டும்/ உனது/ தொடர்பு/

த்யாக3ராஜ/ வரது3னி/ நீ-அந்து3/
தியாகராசனுக்கு/ அருள்வோனை/ உன்னுள்/

பா3கு33/ த்4யானிஞ்சு/ ப4வ/ ரோக3/ மந்து3/ (எடு)
நன்கு/ தியானிப்பாய்/ உலக வாழ்வெனும்/ நோய்க்கு/ (அதுவே) மருந்து/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
7 - பு3த்3தி4யாஸு13 - பு3த்3த்4யாஸு1ன - பு3த்3த்4யாஸு13.

8 - பா4மல கர தா3டகுமண்டே - பா4மல கர தா3டகயுண்டே - பா4மல கர தா3டகயுண்டி3ன : அடுத்து வரும் 'ஜக்33' (நன்று) என்ற சொல்லையும், 'மேனு நீடி புக்33' (உடம்பு நீர்க்குமிழி) என்ற சொற்களையும் இணைத்து நோக்குகையில், 'பா4மல கர தா3டகுமண்டே' சரியெனப்படுகின்றது.

10 - நீடி பு3க்33 - நீர் பு3க்33 : இரண்டு சொற்களுக்கும் பொருள் ஒன்றே.

11 - போ43 பா4க்3யமுலந்து3 - போ43 பா4க்3யமுலயந்து3.

12 - பா43வதுலகௌ நீ பொந்து3 - பா43வதுலு கானி பொந்து3 ரோஸி : பிற்குறிப்பிட்ட வேறுபாட்டிற்குப் பொருளேதும் இருப்பதாகத் தோன்றவில்லை.

Top

மேற்கோள்கள்
3 - வட பத்ர ஸ1யன - ஆலிலையில் துயில்வோன் - பிரளய காலத்தில், இறைவன், நீரில், ஆலிலையில், குழந்தையாக, கால் விரலை சப்பிக்கொண்டு, மிதப்பதாக. இது குறித்து, பாகவத புராணம், 12-வது புத்தகம், 8-வது அத்தியாயம், 4-வது செய்யுள் மற்றும் பாகவத புராணம், 3-வது புத்தகம், 33-வது அத்தியாயம், 4-வது செய்யுள் (தேவஹூதியின் தோத்திரம்) நோக்கவும்

5 - அவித்3யா வஸ1மு கானேல - அவித்தை - மெய்யறிவின்மை - இச்சொல், முன் கூறிய 'வித்3யா' எனும் 'கல்வியறிவு' இன்மை என்று பொருளல்ல. 'பதஞ்சலி யோக சூத்திர'த்தி்ல் கூறியபடி -

"நிலையற்றதை நிலையானதென்றும், மாசினை தூயதென்றும், துன்பமளிப்பதனை இன்பமளிப்பதென்றும், ஆன்மா அல்லாததை ஆன்மா என்றும் கருதுதல் அவித்தையாகும்." (II.5)

இந்த நோக்கத்தில், முன்னம் கூறிய 'வித்3யா' எனும் கல்வியறிவு கூட 'அவித்தை'யையே சேரும். 'நாரத பக்தி சூத்திரம்' செய்யுள் 64-ல் கூறியபடி "செருக்கு, தற்பெருமை மற்றும் இதர தீமைகளைக் கைவிடல் வேண்டும்."

'வித்3யா - அவித்3யா' பற்றிய விளக்கத்தினை ஸ்வாமி விரேஷ்வரானந்தாவின் பிரம்ம சூத்திர விளக்கவுரையின் 12 - 16 பக்கங்களில் காணவும். ஸ்வாமி சிவானந்தாவின் பிரம்ம சூத்திர விளக்கவுரை (download)

Top

விளக்கம்
1 - மடு-மாய - கண்கட்டு மாயை.

2 - எஞ்சக - இதற்கு 'எண்ணாது' என்றோ, 'எண்ணாதே' என்றோ பொருள் கொள்ளலாம்.

4 - வித்3யா க3ர்வமு - இவ்விடத்தில் 'வித்3யா' என்ற சொல், அடுத்து வரும் 'கருவம்' என்ற சொல்லினால், 'கல்வி மற்றும் உலகவியல் அறிவினை'க் குறிக்கும்.

6 - 2த்3யோதான்வய திலகுனி புரமேலு - பரிதி குலத்திலகம் - இராமன் : பரிதி குலத்திலகத்தின் நகர் - அயோத்தி - இங்கு வைகுண்டத்தைக் குறிக்கும்

9 - ஜக்33 - 'ஜக்3கு3' என்ற சொல்லுக்கு 'நேர்த்தி' என்று பொருளாகும். ஆனால், இவ்விடத்தில் இச்சொல்லுக்குப் பொருள் சரிவர விளங்கவில்லை.

பெண்டிர் கரை தாண்டாதிருந்தால் - பெண்டிரின் இணக்கத்தினைத் தவிர்த்தல்

Top


Updated on 09 Aug 2009

3 comments:

Govindaswamy said...

அன்புள்ள கோவிந்தன் அவர்களே
பா4மல/ கர/ தா3டக/-உண்டே/ ஜக்3க3/- ’ட்சக்க’ (tcakka) என்பதற்கு ‘ஸுந்தரமு’ ‘ருஜுவு’ என்றும் ‘ட்ஜக்3கு3’ (tjaggu) என்பதற்கு ‘தளதள’ ப்ரகாஸி1ஞ்சுடயந்த3கு3 நனுகரணமு’ என்றும் பொருள்கள் கொடுக்கப் பட்டுள்ளன.
ட்சக்ககா என்பது வழக்கிலுள்ளது.
கோவிந்தசாமி

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே
பா4மல கர தா3டகுமண்டே - பா4மல கர தா3டகயுண்டே - பா4மல கர தா3டகயுண்டி3ன என்று மூன்று பாடாந்தரங்களைக் கொடுத்துள்ளீர் இவற்றுள் மூன்றாவது சரியென்று எனக்குத் தோன்றுகிறது பா4மல கர தா3டகயுண்டே3 என்பது சரியானபாடம் என்று நான் எண்ணுகிறேன்
நன்றி
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

'ஜக்3க3' என்ற சொல் எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. 'சக்க' என்ற சொல்லின் பொருள் இவ்விடத்தில் பொருந்தாது என்று நான் நினைக்கின்றேன்.

'தா3டகயுண்டி3ன' - இது சரியா, தவறா என்ற கூறுவது மிகவும் கடினமாக உள்ளது. எனது சிற்றறிவுக்கு எட்டியவரை நான் விளக்கம் கூறியுள்ளேன்.

வணக்கம்,
கோவிந்தன்.