ஸ்வர ராக3 ஸுதா4 ரஸ யுத ப4க்தி
1ஸ்வர்கா3பவர்க3முரா ஓ மனஸா
அனுபல்லவி
பரமானந்த3மனே கமலமுபை
2ப3க பே4கமு செலகி3யேமி ஓ மனஸா (ஸ்வ)
சரணம்
சரணம் 1
3மூலாதா4ரஜ நாத3மெருகு3டே
முத3மகு3 மோக்ஷமுரா
கோலாஹல 4ஸப்த ஸ்வர க்3ரு2ஹமுல
கு3ருதே மோக்ஷமுரா ஓ மனஸா (ஸ்வ)
சரணம் 2
5ப3ஹு ஜன்மமுலகு பைனி ஞானியை
பரகு3ட மோக்ஷமுரா
6ஸஹஜ ப4க்திதோ ராக3 ஞான
ஸஹிதுடு3 7முக்துடு3ரா ஓ மனஸா (ஸ்வ)
சரணம் 3
8மர்த3ல 9தாள க3துலு தெலியகனே
மர்தி3ஞ்சுட ஸுக2மா
ஸு1த்3த4 மனஸு லேக பூஜ ஜேயுட
ஸூகர வ்ரு2த்திரா ஓ மனஸா (ஸ்வ)
சரணம் 4
ரஜத கி3ரீஸு1டு3 நக3ஜகு தெல்பு
10ஸ்வரார்ணவ மர்மமுலு
விஜயமு க3ல த்யாக3ராஜுடெ3ருகே3
விஸ்1வஸிஞ்சி தெலுஸுகோ ஓ மனஸா (ஸ்வ)
பொருள் - சுருக்கம்
ஏ மனமே!
- சுர, ராக அமுதச் சாறு கூடின பக்தி வானுலகமும், மோக்கமுமாகுமடா;
- பேரானந்தமெனும் கமலத்தின் மீது கொக்கும், தவளையும் திகழ்ந்தென்ன (பயன்)?
- மூலாதாரத்திலெழும் நாதத்தினையறிதலே களிப்புடை மோக்கமடா;
- (உடலில்) கோலாகலமான ஏழு சுரங்களின் இருப்பிடங்களைத் தெரிதலே மோக்கமடா;
- பல பிறவிகளுக்குப் பின்னர் ஞானியாகித் திகழ்தல் மோக்கமடா;
- உடன் பிறந்த பக்தியுடன், ராக ஞானமும் உடையோன் முத்தனடா;
- மத்தளத்தின் தாள நடைகளறியாமலே (மத்தளத்தினை) அடித்தல் சுகமா? (அங்ஙனமே) தூய உள்ளமின்றி வழிபாடு செய்தல் பன்றியொழுக்கமடா;
- பனி மலையீசன் மலைமகளுக்குத் தெரிவிக்கும், சுரக்கடலின் மருமங்கள், வெற்றியுடைத் தியாகராசன் அறிவானே;
நம்பித் தெரிந்துகொள்வாய்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்வர/ ராக3/ ஸுதா4/ ரஸ/ யுத/ ப4க்தி/
சுர/ ராக/ அமுத/ சாறு/ கூடின/ பக்தி/
ஸ்வர்க3/-அபவர்க3முரா/ ஓ மனஸா/
வானுலகமும்/ மோக்கமுமாகுமடா/ ஏ மனமே/
அனுபல்லவி
பரமானந்த3மு/-அனே/ கமலமுபை/
பேரானந்தம்/ எனும்/ கமலத்தின் மீது/
ப3க/ பே4கமு/ செலகி3/-ஏமி/ ஓ மனஸா/ (ஸ்வ)
கொக்கும்/ தவளையும்/ திகழ்ந்து/ என்ன (பயன்)/ ஏ மனமே/
சரணம்
சரணம் 1
மூலாதா4ரஜ/ நாத3மு/-எருகு3டே/
மூலாதாரத்திலெழும்/ நாதத்தினை/ அறிதலே/
முத3மகு3/ மோக்ஷமுரா/
களிப்புடை/ மோக்கமடா/
கோலாஹல/ ஸப்த/ ஸ்வர/ க்3ரு2ஹமுல/
(உடலில்) கோலாகலமான/ ஏழு/ சுரங்களின்/ இருப்பிடங்களை/
கு3ருதே/ மோக்ஷமுரா/ ஓ மனஸா/ (ஸ்வ)
தெரிதலே/ மோக்கமடா/ ஏ மனமே/
சரணம் 2
ப3ஹு/ ஜன்மமுலகு/ பைனி/ ஞானியை/
பல/ பிறவிகளுக்கு/ பின்னர்/ ஞானியாகி/
பரகு3ட/ மோக்ஷமுரா/
திகழ்தல்/ மோக்கமடா/
ஸஹஜ/ ப4க்திதோ/ ராக3/ ஞான/
உடன் பிறந்த/ பக்தியுடன்/ ராக/ ஞானமும்/
ஸஹிதுடு3/ முக்துடு3ரா/ ஓ மனஸா/ (ஸ்வ)
உடையோன்/ முத்தனடா/ ஏ மனமே/
சரணம் 3
மர்த3ல/ தாள/ க3துலு/ தெலியகனே/
மத்தளத்தின்/ தாள/ நடைகள்/ அறியாமலே/
மர்தி3ஞ்சுட/ ஸுக2மா/
(மத்தளத்தினை) அடித்தல்/ சுகமா/
ஸு1த்3த4/ மனஸு/ லேக/ பூஜ/ ஜேயுட/
தூய/ உள்ளம்/ இன்றி/ வழிபாடு/ செய்தல்/
ஸூகர/ வ்ரு2த்திரா/ ஓ மனஸா/ (ஸ்வ)
பன்றி/ ஒழுக்கமடா/ ஏ மனமே/
சரணம் 4
ரஜத/ கி3ரி/-ஈஸு1டு3/ நக3ஜகு/ தெல்பு/
பனி/ மலை/ ஈசன்/ மலைமகளுக்கு/ தெரிவிக்கும்/
ஸ்வர/-அர்ணவ/ மர்மமுலு/
சுர/ கடலின்/ மருமங்கள்/
விஜயமு/ க3ல/ த்யாக3ராஜுடு3/-எருகே3/
வெற்றி/ உடை/ தியாகராசன்/ அறிவானே/
விஸ்1வஸிஞ்சி/ தெலுஸுகோ/ ஓ மனஸா/ (ஸ்வ)
நம்பி/ தெரிந்துகொள்வாய்/ ஏ மனமே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
8 - மர்த3ல - மத்3த3ள : 'மத்தளம்' என்னும் தமிழ்ச் சொல், தெலுங்கு மொழியில் 'மர்த3ல' அல்லது 'மத்3தெ3ல' என்று வழங்கும். இச்சொல், 'மர்த3ல' என்ற ஸம்ஸ்கிருதச் சொல்லின் தெலுங்கு திரிபாகும். எனவே,'மர்த3ல' என்பது இங்கு ஏற்கப்பட்டது.
Top
மேற்கோள்கள்
3 - மூலாதா4ர - மூலாதாரம் - ஆறு ஆதாரத்திலொன்று - குதத்தானம் - உடல் சக்கரங்களின் வரைபடங்கள்
5 - ப3ஹு ஜன்மமுலகு - பல பிறவிகளுக்குப் பின்னர் - கீதையில் கண்ணன் உரைத்ததனை (7-வது அத்தியாயம், 19-வது செய்யுள்), தியாகராஜர் இங்கு குறிப்பிடுகின்றார் -
"பல பிறவிகளுக்குப் பின்னர், மெய்யறிவுடைவன், யாவுமே 'வாசுதேவன்' (உள்ளுறை இறைவன்) என்றுணர்ந்து, என்னிடம் புகலடைகின்றான். அப்படிப்பட்ட சான்றோன் மிக்கு அரிதாவான்."
9 - தாள க3துலு - தாள, நடைகள்
Top
விளக்கம்
1 - அபவர்க3 - இச்சொல், 'மோக்க'மென்று பொருள்படும். இச்சொல் குறித்த விளக்கத்தினை, தியாகராஜரின் 'க்ரு2பாலவால' என்ற 'நாதவராங்கிணி' கீர்த்தனையினில் நோக்கவும்.
2 - ப3க பே4க - கொக்கும், தவளையும் - கமலத்தின் அமுதச்சாற்றினை அருந்தும் தகுதி, தேன்வண்டுக்கே உண்டு. பல்லவியில், சுர, ராகம், அமுதச் சாற்றினிற்கு ஒப்பிடப்பட்டுள்ளது. எனவே, சுர, ராக அமுதச் சாறு கூடின பக்தியுடைய ஒருவன் அத்தகைய தேன்வண்டுக்கு ஈடாவான்.
எனவே, அத்தகைய 'சுர, ராக அமுதச் சாறு கூடின பக்தியுடைய ஒருவனே, பேரானந்தமெனும் கமலத்தின் தேனுண்டு, களிக்கவியலும்; அத்தகைய பக்தியற்றவன், இசையில் வல்லவனாகினும், பேரானந்தக் கமலத்தின் தேனை உண்ணவியலாது; ஒரு கொக்கு அல்லது தவளை போன்று இசையினைக் கவர்ந்தவனாவான்'. இந்த சொற்களின் (கொக்கு, தவளை) உட்பொருள் இதுவென்று எனது தாழ்மையான கருத்தாகும்.
ஒரு புத்தகத்தில், ரசிகனை வண்டுக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. தியாகராஜர், தனது 'ராம நீயெட3' என்னும் க2ரஹரப்ரிய ராக கீர்த்தனையில், 'தனது சௌக்கியத்தினைத் தானே அறியாமல் மற்றவருக்கு உணர்த்த முடியுமா?' என்று கேட்கின்றார். பேரானந்தம் அருளும், சுர-ராகமெனும் அமுதச்சாற்றினை அருந்தி, தான் களிக்க இயலாத பாடகன், ரசிகனை எங்ஙனம் அங்கு உயர்த்த இயலும்? எனினும், ஒரு ரசிகன், பேரானந்தமெனும் கமலத்தினை, கொக்கும், தவளையும் போன்று, கவர்வதில்லை.
3 - மூலாதா4ரஜ நாத3மு - "மூலாதாரமே பர நாதத்தின் இருப்பிடமாகும்..." - பர நாதம்
"'அனாஹத' (உண்டாக்கப்படாத) நாத ஒலிகளை, நாத யோகியரே உணரவல்லர்." - குண்டலினி யோகம் - ஸ்வாமி சிவானந்தர் - (download)
Top
4 - ஸப்த ஸ்வர க்3ரு2ஹமுல - ஏழு சுரங்களின் இருப்பிடங்கள் - தியாகராஜர் குறிப்பிடும் இருப்பிடங்கள் எவையென விளங்கவில்லை. குண்டலியின் ஏழு சக்கரங்களும், ஏழு சுரங்களின் இருப்பிடமானால், 'மூலாதாரம்' தொடங்கி, 'ஸஹஸ்ராரம்' வரையுள்ள ஏழு சக்கரங்கள், முறையே 'ஸ', 'ரி', 'க', 'ம', 'ப', 'த', 'நி' என்ற ஏழு சுரங்களின் இருப்பிடமாக இருக்கலாம்.
தியாகராஜர் தனது 'ஸோ1பி4ல்லு ஸப்த ஸ்வர' என்ற ஜக3ன்மோஹினி கீர்த்தனையில், இசையொலி, உடலில், 'நாபி4, ஹ்ரு2த், கண்ட2, ரஸன, நாஸ' - தொப்புள், இதயம், தொண்டை, வாய், மூக்கு என்ற பாதையினில் வெளிப்படுவதாகக் குறிப்பிடுகின்றார்.
"நாதம், தொப்புள் பகுதியில் தோன்றி, மேல் நோக்கி, ஒலிக்கருவிகளான, வாய், நாக்கு, உதடுகள் மூலமாக ஒலியாக வெளிப்படுவதனை 'நாத யோகம்' என்று கூறுவர். இப்படி வெளிப்படும் ஒலி, 'பரா', 'பஸ்1யந்தி', 'மத்4யமா', 'வைக2ரி' என்று பாகுபடும். 'பரா' என்பது ஒலியற்ற, நாதத்தின் வித்தாகும். 'வைக2ரி' என்பது வெளிப்படையான ஒலியாகும். 'பஸ்1யந்தி' மற்றும் 'மத்4யமா' என்பவை இடைப்பட்ட நிலைகளாகும்." நாத யோகம்
ஏழு சுரங்களும், வெளிப்படையான, 'அஹத' (உண்டாக்கப்பட்ட) நாதமாகும். எனவே இவை 'வைக2ரி' நிலையினைச் சேர்ந்ததாகும்.
"'ஸ' ஆத்துமாவாகவும், 'ரி' தலையாகவும், 'க' கைகளாகவும், 'ம' மார்பாகவும், 'ப' தொண்டையாகவும், 'த' உதடாகவும், 'நி' கால்களாகவும் கருதப்படும்" - ஏழு சுரங்கள்
ஏழு சுரங்களும் ஏழு உடல் சக்கரங்களும்.
C ராமானுஜாச்சாரியாரின் ‘Spiritual Heritage of Tyagaraja’ என்ற புத்தகத்தில், 'ஸப்த ஸ்வர க்3ரு2ஹமுல' என்ற சொற்களுக்கு, 'உடலில், ஏழு சுரங்கள் எழும், ஒலி எதிரொலிக்கும், உள்ளுறுப்புகளை (resonating sthAnas) குறிக்கும்' எனக் கூறப்பெற்றுள்ளது.
"'நாரதீய ஸிக்ஷ' என்ற நூலில், ஏழு சுரங்களுக்கும், ஒலி எதிரொலிக்கும் இடங்கள் (places of resonance) உடலில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது." 'Garland Encyclopaedia of World Music' (South Asia - Indian Sub-continent) by James Porter et al - Page 32. நோக்கவும்
Top
6 - ஸஹஜ ப4க்தி - இதனை 'இயற்கையான பக்தி' என்று மொழிபெயர்க்கலாம். ஆனால், பிரகலாதன், துருவன், மார்க்கண்டேயன், ருக்மணி, ராதா, மீரா, ஆண்டாள், திருஞான சம்பந்தர் போன்று, பிறவியிலேயே பக்தியுடன் பிறந்த பெருந்தகைகளையும், 'சின்ன நாடே3 நா செயி பட்டிதிவே' - 'சிறுவயதிலேயே எனது கைப்பற்றினாயே' என்று தியாகராஜர் 'சின்ன நாடே3' என்ற கிருதியில் கேட்பதனையும் கருதி, 'உடன்பிறந்த பக்தி' என்று இங்கு மொழிபெயர்க்கப்பட்டது.
7 - முக்துடு3 - முத்தனாவான். இங்கு 'சீவன் முத்தி' எனப்படும் 'உடலிருக்கையிலேயே முத்தியுறுதலை'க் குறிக்கும். இத்தகைய முத்தி, ஸத்3யோ முக்தி (உடன் முத்தி) என்றும் வழங்கும்.
"'பக்தி', 'ஞானம்' இவை, பல பிறவிகளில், படிப்படியான முத்தி (க்ரம முக்தி) வழங்கலாம். ஆனால், உடன்பிறந்த பக்தியுடன், இசை ஞானமும் உள்ளவன், 'நாதோபாஸனை' மூலமாக 'சீவன் முத்தி' (உடன் முத்தி) பெறலாம்" என்பது இரண்டாவது சரணத்தின் கருத்து என நான் கருதுகின்றேன்.
'நாதோபாஸனை' என்பதற்கு, இசைக்கும் மேற்பட்ட, பரந்த பொருளுண்டு. இது 'ஸ்ரீ வித்3யா' என்று வழங்கும்.
Top
10 - ஸ்வரார்ணவ மர்மமுலு - 'சுரக்கடலின் மருமங்கள்' என்பது இச்சொற்களின் பொருளாலானாலும், இத்தகைய பெயருடைய (ஸ்வரார்ணவ) ஒரு நூல், தியாகராஜருக்கு, அவருடைய குருவான, நாரதரின் மூலமாகக் கிடைத்ததாக, 'தியாகராஜ சரிதம்' எனும் பிரசங்கத்தில், ஹரிகதை சொற்பொழிவாளர், திருவாளர், பாலகிருஷ்ண ஸாஸ்திரிகள் கூறுகின்றார்.
உடன் பிறந்த பக்தியுடன் ராக ஞானமும் - 'உடன் பிறந்த பக்தியுடன் ராகமும் ஞானமும்' என்றும் கொள்ளலாம்.
பனி மலையீசன் - சிவன்
மலைமகள் - பார்வதி
Top
Updated on 09 Oct 2009
No comments:
Post a Comment