பல்லவி
ஸர்வாந்தர்யாமி நீவனே
ஸாம்ராஜ்யமு நிஜமே ராம
அனுபல்லவி
நிர்வாஹமு லேனியீ ஜனுல கனி
நிர்மலாத்முலெடு ஸைரிஞ்சிரோ கானி (ஸ)
சரணம்
தா3ரி தெலிய லேரு கொந்த3ரு
த3ரித்3ருலைனாரு ஸு-
து3ரஹங்காருலை பரம நிக்ரு2ஷ்ட
மதாசாருலைனாரு
ஜாருலைனாரதி3 கா3க தாரு
மாரு பனுல ஜேஸெத3ரு
ஸம்ஸாருலைனாரு த்யாக3ராஜ
ஸ்வாந்த ஸத3ன 1கபடமேமோ தெலிய (ஸ)
பொருள் - சுருக்கம்
தியாகராசனின் உள்ளுறையே, இராமா!
இந்தக் கபடமென்னவோ அறியேன்
(எல்லா உயிர்களிலும் இறைவன் உள்ளியக்கமாக உள்ளான் என்றால், ஏன் இத்தனை முரண்பாடுகள் உள்ளன என்று இறைவனைக் கேட்கிறார்)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸர்வ/-அந்தர்யாமி/ நீவு/-அனே/
யாவரிலும்/ உள்ளியங்குவோன்/ நீ/ எனும்/
ஸாம்ராஜ்யமு/ நிஜமே/ ராம/
பேராட்சி/ உண்மையா/ இராமா/
அனுபல்லவி
நிர்வாஹமு/ லேனி/-ஈ/ ஜனுல/ கனி/
கட்டுப்பாடு/ அற்ற/ இந்த/ மக்களை/ கண்டு/
நிர்மல/-ஆத்முலு/-எடு/ ஸைரிஞ்சிரோ/ கானி/
தூய/ உள்ளத்தோர்/ எங்ஙனம்/ பொறுத்தனரோ/ என்னவோ/
சரணம்
தா3ரி/ தெலிய லேரு/ கொந்த3ரு/
நன்னெறி/ அறிந்திலர்/ சிலர்/
த3ரித்3ருலு/-ஐனாரு/
வறியோர்/ ஆயினர்/
ஸு-து3ரஹங்காருலை/ பரம/ நிக்ரு2ஷ்ட/
தீய அகந்தையுற்று/ மிக்கு/ இழிந்த/
மத/-ஆசாருலு/-ஐனாரு/
கொள்கைகளை/ கடைபிடிப்பவர்/ ஆயினர்/
ஜாருலு/-ஐனாரு/-அதி3 கா3க/
பிறர்மனை நயப்பவர்/ ஆயினர்/ மேலும்/
தாரு மாரு/ பனுல/ ஜேஸெத3ரு/
முரண்பாடான/ பணிகளை/ செய்தனர்/
ஸம்ஸாருலு/-ஐனாரு/ த்யாக3ராஜ/
இல்வாழ்வில் உழல்பவர்/ ஆயினர்/ தியாகராசனின்/
ஸ்வாந்த/ ஸத3ன/ கபடமு/-ஏமோ/ தெலிய/
உள்ளத்தில்/ உறைபவனே/ கபடம்/ என்னவோ/ அறியேன்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
விளக்கம்
1கபடம் - தந்திரம், வஞ்சகம் -
'ப்3ரு2ஹதா3ரண்யக' உபநிடதத்தில், யாவரிலும் உள்ளியக்கமான பரம்பொருளின் தன்மையை சிறக்க விவரிக்கப்பட்டுள்ளது.
அந்த உபநிடதத்தில் 'அந்தர்யாமி ப்3ராஹ்மணம்' எனப்படும் III.vii -வது அத்தியாயத்தினை நோக்கவும்.
உபநிடதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு
ஸ்வாமி கிருஷ்ணானந்தாவின் விளக்கவுரை
பிறர் மனை நயத்தல் - மற்றவர் மனைவியை விரும்புதல்
Top
No comments:
Post a Comment