Friday, June 26, 2009

தியாகராஜ கிருதி - விராஜ துரக3 - ராகம் ப3லஹம்ஸ - Viraaja Turaga - Raga Balahamsa

பல்லவி
1விராஜ துரக3 ராஜ ராஜேஸ்1வர
நிராமயுனி ஜேயவே

அனுபல்லவி
ஜராதி3 ரோக3 யுத தனுவுசே
நராத4முலுயேமி ஸாதி4ஞ்சிரி (விராஜ)

சரணம்
நிரந்தரமு ஸகல விஷய து3க்க2
பரம்பரலசே சிவுகக3 மதி3லோ
து3ரந்த காம மத3முனு பா3தி4ஞ்சக3
து3ர்மதுடே3 த்யாக3ராஜ ஸன்னுத (விராஜ)


பொருள் - சுருக்கம்
கருடன் மீது விரைவோனே! பேரரசர்க்கும் ஈசனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
  • (என்னை) நோயற்றவனாகச் செய்வாய்;

  • மூப்பினால் விளையும், நோயுற்ற உடலுடன், மனிதரில் இழிந்தோர் என்ன சாதித்தனர்?

    • இடைவிடாது, அனைத்து விடய (துய்ப்பின்) துன்பத் தொடரினால் (உடல்) மெலிய,

    • மனத்தினில், தீய முடிவுடைய, இச்சை, செருக்கு (ஆகியவை) தாக்க,

    • தீயவுள்ளத்தோராகினர்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
விராஜ/ துரக3/ ராஜ ராஜ/-ஈஸ்1வர/
கருடன் மீது விரைவோனே! பேரரசர்க்கும்/ ஈசனே/

நிராமயுனி/ ஜேயவே/
(என்னை) நோயற்றவனாக/ செய்வாய்/


அனுபல்லவி
ஜரா/-ஆதி3/ ரோக3/ யுத/ தனுவுசே/
மூப்பினால்/ விளையும்/ நோய்/ உற்ற/ உடலுடன்/

நர/-அத4முலு/-ஏமி/ ஸாதி4ஞ்சிரி/ (விராஜ)
மனிதரில்/ இழிந்தோர்/ என்ன/ சாதித்தனர்/


சரணம்
நிரந்தரமு/ ஸகல/ விஷய/ து3க்க2/
இடைவிடாது/ அனைத்து/ விடய (துய்ப்பின்)/ துன்ப/

பரம்பரலசே/ சிவுகக3/ மதி3லோ/
தொடரினால்/ (உடல்) மெலிய/ மனத்தினில்/

து3ரந்த/ காம/ மத3முனு/ பா3தி4ஞ்சக3/
தீய முடிவுடைய/ இச்சை/ செருக்கு (ஆகியவை)/ தாக்க/

து3ர்மதுடே3/ த்யாக3ராஜ/ ஸன்னுத/ (விராஜ)
தீயவுள்ளத்தோராகினர்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - விராஜ - கருடன் - திருவஹீந்திபுரம் (திரு அஹீந்த்ர புரம்) தல புராணத்தின்படி, கருடன் வைகுண்டத்தினின்று 'விராஜ' நதியினையும், சேடன், பாதாள தீர்த்தத்தினையும் இங்கு கொணர்ந்தனர். அந்த நதி, 'கருட நதி' என ('கடிலம்' என தற்போது பேச்சு வழக்கில்) கூறப்படும்.

விளக்கம்
விடயம் - புலன்களால் நுகரப்படுபவை

Top


Updated on 26 Jun 2009

No comments: