Saturday, February 6, 2010

தியாகராஜ கிருதி - லக்ஷணமுலு - ராகம் ஸு1த்34 ஸாவேரி - Lakshanamulu - Raga Suddha Saveri

பல்லவி
லக்ஷணமுலு-க3ல ராமுனிகி
ப்ரத3க்ஷிண1மொனரிந்துமு ராரே

அனுபல்லவி
2குக்ஷினி ப்3ரஹ்மாண்ட3ம்பு3லுன்னவட
3விசக்ஷுணுட3 4தீ3க்ஷா கு3ருட3 ஸு14 (ல)

சரணம்
5லக்ஷண லக்ஷ்யமு-க3ல ஸ்1ருதுலகு ப்ரத்யக்ஷம்பௌ3னட
ஸி1க்ஷ-படி3 ஸப4னு மெப்பிஞ்சு ப4க்த ரக்ஷகுண்டௌ3னட
6அக்ஷரஸ்து2லைன4ஜன பருலகே அந்தரங்கு3டௌ3னட
7ஸாக்ஷியை வெலயு த்யாக3ராஜ பக்ஷகுடௌ3னட 8முப்பதி3 ரெண்டு3 (ல)


பொருள் - சுருக்கம்
  • நல்லிலக்கணங்களுடைய இராமனை வலம் வருவோம் வாரீர்

    • வயிற்றினில் பிரமாண்டங்களுள்ளனவாம்;
    • பகுத்தறிவோனாம்;
    • தீக்கையருள் ஆசானாம்;

    • இலக்கண-இலக்குடைத்த மறைஞருக்குக் காணப்படுவானாம்;
    • கற்றறிந்து, அவையினை மேம்படுத்தும் தொண்டரைக் காப்பானாம்;
    • அழியா இறையில் நிலைத்து, பஜனையில் ஈடுபட்டோருக்கே உள்ளுறைவானாம்;
    • சாட்சியாகி விளங்கும் (அவன்), தியாகாராசனின் பக்கமிருப்பானாம்;


  • முப்பத்தியிரண்டு இலக்கணங்களுடைய இராமனை வலம் வருவோம் வாரீர்



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
லக்ஷணமுலு/-க3ல/ ராமுனிகி/
இலக்கணங்கள்/ உடைய/ இராமனை/

ப்ரத3க்ஷிணமு/-ஒனரிந்துமு/ ராரே/
வலம்/ வருவோம்/ வாரீர்/


அனுபல்லவி
குக்ஷினி/ ப்3ரஹ்ம-அண்ட3ம்பு3லு/-உன்னவட/
வயிற்றினில்/ பிரமாண்டங்கள்/ உள்ளனவாம்/

விசக்ஷுணுடு3-அட/ தீ3க்ஷா/ கு3ருடு3-அட/ ஸு14/ (ல)
பகுத்தறிவோனாம்/ தீக்கையருள்/ ஆசானாம்/ நல்/ இலக்கணங்கள்...


சரணம்
லக்ஷண/ லக்ஷ்யமு/-க3ல/ ஸ்1ருதுலகு/ ப்ரத்யக்ஷம்பு3-ஔனட/
இலக்கண/-இலக்கு/ உடைத்த/ மறைஞருக்கு/ காணப்படுவானாம்/

ஸி1க்ஷ-படி3/ ஸப4னு/ மெப்பிஞ்சு/ ப4க்த/ ரக்ஷகுண்டு3-ஔனட/
கற்றறிந்து/ அவையினை/ மேம்படுத்தும்/ தொண்டரை/ காப்பானாம்/

அக்ஷரஸ்து2லைன/ ப4ஜன/ பருலகே/ அந்தரங்கு3டு3-ஔனட/
அழியா இறையில் நிலைத்து/ பஜனையில்/ ஈடுபட்டோருக்கே/ உள்ளுறைவானாம்/

ஸாக்ஷியை/ வெலயு/ த்யாக3ராஜ/ பக்ஷகுடு3-ஔனட/ முப்பதி3/ ரெண்டு3/ (ல)
சாட்சியாகி/ விளங்கும் (அவன்)/, தியாகாராசனின்/ பக்கமிருப்பானாம்/ முப்பத்தி/ இரண்டு/ இலக்கணங்கள்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஒனரிந்துமு - ஒனரிந்தாமு.

Top

மேற்கோள்கள்
2 - குக்ஷினி ப்3ரஹ்மாண்ட3ம்பு3லுன்னவட - வயிற்றினில் பிரமாண்டங்கள் உள்ளனவாம். - பாகவத புராணம், 2-வது புத்தகம், 5-வது அத்தியாயம், 42-வது செய்யுள் -

பூலோகம் அவனது கால்களிலும்,வானுலகம் உந்தியிலும்,
மேலுலகம் தலையிலுமாக, உலகங்கள் படைக்கப்பட்டன.

வாயு புராணத்தில், பிரமன், விஷ்ணுவின் வயிற்றினில், பிரமாண்டங்களைக் கண்டதாக் கூறப்பட்டுள்ளது.

Top

3 - விசக்ஷுணுட3 - பகுத்தறிவோனாம் - விசக்ஷண என்ற சொல்லின் விளக்கம் (கௌஸி1டகி பிராமணத்தில் கூறியுள்ளபடி); கௌஸி1டகி பிராமணம் (உபநிடதம்).

4 - தீ3க்ஷா கு3ருட3 - சுவாமி சிவானந்தாவின் 'குரு தத்துவம்' (download) நோக்கவும்.

திருமுலரின் திருமந்திரத்தினில் குருவைப் பற்றி கூறப்பட்டது -

பத்திப் பணிந்துப் பரவும் அடிநல்கிச்
சுத்த வுரையால் துரிசறச் சோதித்துச்
சத்தும் அசத்தும் சதசத்துங் காட்டலாற்
சித்தம் இறையே சிவகுரு வாமே (1573)

Top

5 - லக்ஷண லக்ஷ்யமு - இலக்கண-இலக்கு - 'மகா வாக்கியங்கள்' எனப்படும் மறைச் சொற்களை இலக்காக. இது குறித்து விவரங்களை Vedanta for Beginners’ (download)-ல் நோக்கவும்.

மகா வாக்கியங்கள்.

Top

6 - அக்ஷரஸ்து2லைன - அழிவற்ற இறையில் நிலைத்த - 'அக்ஷர' என்ற சொல்லின் விளக்கம் கீதையில் (15-வது அத்தியாயம், செய்யுட்கள் 16 மற்றும் 17-ல்) நோக்கவும்.

பிரம்ம சூத்திரத்தில் 'அக்ஷர' என்ற சொல்லின் விளக்கம்.

இவற்றின்படி 'அக்ஷர' என்ற சொல் 'அழியாத இறை' என்று மொழிபெயர்க்கப்பட்டது.

தியாகராஜர், தமது 'எவரனி நிர்ணயிஞ்சிரி' என்ற கீர்த்தனையில், இராமனை, 'பரமான்மா' என்கிறார்.

Top

7 - ஸாக்ஷியை வெலயு - சாட்சியாகி விளங்கும் - இறைவன் அனைத்திற்கும் சாட்சி எனப்படும். கீதையில் 13-வது அத்தியாயம், 22-வது செய்யுள் நோக்கவும்.

8 - முப்பதி3 ரெண்டு3 - முப்பத்தியிரண்டு இலக்கணங்கள் - 'சாமுத்திரிகம்' எனப்படும் உடலுறுப்பு இலக்கணங்கள்.வால்மீகி ராமாயணத்தில் (பால காண்டம், முதல் அத்தியாயத்தில்) நாரதரும், (சுந்தர காண்டம், 35-வது அத்தியாயத்தில்) அனுமனும், இராமனின் அங்க இலக்கணங்களை வருணி்ப்பதை நோக்கவும்.

Top

விளக்கம்
மறைஞர் - மறைநெறி நிற்போர்.
பிரமாண்டம் - பல்லுலகங்கள்.
தீக்கை - தீட்சை - உபதேசம்.

Top


Updated on 07 Feb 2010

No comments: