Sunday, December 12, 2010

தியாகராஜ கிருதி - ஸோ1பி4ல்லு ஸப்த ஸ்வர - ராகம் ஜகன்மோஹினி - Sobhillu Sapta Svara - Raga Jaganmohini

பல்லவி
ஸோ1பி4ல்லு 1ஸப்த ஸ்வர
2ஸுந்த3ருல ப4ஜிம்பவே மனஸா

அனுபல்லவி
3நாபி4 ஹ்ரு2த்கண்ட2 ரஸன
நாஸாது3
யந்து3 (ஸோ1)

சரணம்
4ர ரு2க் ஸாமாது3லலோ
வர 4கா3யத்ரீ ஹ்ரு23யமுன
ஸுர பூ4-ஸுர மானஸமுன
ஸு14 த்யாக3ராஜுனியெட3 (ஸோ1)


பொருள் - சுருக்கம்
  • திகழும் ஏழு சுரங்களெனும் சுந்தரர்களை வழிபடுவாய்.

  • கொப்பூழ், இதயம், தொண்டை, நாக்கு, மூக்கு ஆகியவற்றினில் திகழும் ஏழு சுரங்களெனும் சுந்தரர்களை வழிபடுவாய்.

    • ஆதாரமான, ருக், சாம ஆகிய மறைகளிலும்,
    • புனித காயத்திரி (மந்திரத்தின்) இதயத்திலும்,
    • வானோர், மற்றும் அந்தணர் உள்ளங்களிலும்,
    • மங்களம் நிறை இத்தியாகராசனிடமும்

  • திகழும் ஏழு சுரங்களெனும் சுந்தரர்களை வழிபடுவாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸோ1பி4ல்லு/ ஸப்த/ ஸ்வர/
திகழும்/ ஏழு/ சுரங்களெனும்/

ஸுந்த3ருல/ ப4ஜிம்பவே/ மனஸா/
சுந்தரர்களை/ வழிபடுவாய்/ மனமே/


அனுபல்லவி
நாபி4/ ஹ்ரு2த்/-கண்ட2/ ரஸன/
கொப்பூழ்/ இதயம்/ தொண்டை/ நாக்கு/

நாஸ/-ஆது3ல-அந்து3/ (ஸோ1)
மூக்கு/ ஆகியவற்றினில்/ திகழும்...


சரணம்
4ர/ ரு2க்/ ஸாம/-ஆது3லலோ/
ஆதாரமான/ ருக்/ சாம/ ஆகிய (மறைகளிலும்)/

வர/ கா3யத்ரீ/ ஹ்ரு23யமுன/
புனித/ காயத்திரி (மந்திரத்தின்)/ இதயத்திலும்/

ஸுர/ பூ4-ஸுர/ மானஸமுன/
வானோர்/ (மற்றும்) அந்தணர்/ உள்ளங்களிலும்/

ஸு14/ த்யாக3ராஜுனி-எட3/ (ஸோ1)
மங்களம் (நிறை)/ (இத்)தியாகராசனிடமும்/ திகழும்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - ஸப்த ஸ்வர - ஸ - ஷட்3ஜம், ரி - ரிஷப4ம், க - கா3ந்தா4ரம், ம - மத்4யமம், ப - பஞ்சமம், த - தை3வதம், நி - நிஷாத3ம்.

Top

விளக்கம்
2 - ஸுந்த3ருல ப4ஜிம்பவே - சுந்தரர்களை வழிபடுவாய் - நாதோபஸனை எனப்படும் இசை வழிபாடு.

3 - நாபி4 ஹ்ரு2த்கண்ட2 ரஸன நாஸ - கொப்பூழ், இதயம், தொண்டை, நாக்கு, மூக்கு - இசையின் ஏழு சுரங்கள் வெளிப்படும் இடங்களை (வழியினை) தியாகராஜர் கூறியுள்ளார். மேலும், 'ஆகிய' என்று கூறுகின்றார். இதனால், தியாகராஜர், 'மூலாதார'த்தினைக் குறிப்பிடுகின்றாரா என்று தெரியவில்லை.

Top

தியாகராஜர், தமது 'ஸ்வர ராக3 ஸுதா4' என்ற சங்கராபரண ராக கீர்த்தனையில், நாதம், மூலாதாரத்தினில் எழுகின்றது (மூலாதா4ரஜ) என்று கூறுகின்றார். அதே கீர்த்தனையில், ஏழு சுரங்களின் இருப்பிடங்கள் (ஸப்த ஸ்வர க்3ரு2ஹமுல) என்றும் கூறுகின்றார். இந்த இருப்பிடங்கள் யாவை என்று தெரியவில்லை. இவை, குண்டலினி யோகத்தினில் கூறிய, உடலில் உள்ள, ஏழு சக்கரங்களைக் குறிக்குமா என்றும் தெரியவில்லை. அப்படியானால், இந்த ஏழு இருப்பிடங்கள் முறையே - மூலாதா4ர - ஸ, ஸ்வாதி4ஷ்டா2ன - ரி, மணிபுர - க, அனாஹத - ம, விஸு1த்3தி4 - ப, ஆக்3ஞா - த, மற்றும் ஸஹஸ்ரார - நி - ஆகியவற்றினைக் குறிக்கும். இவ்விருப்பிடங்கள், இந்த கீர்த்தனையில் கூறிய, கொப்பூழ், இதயம், தொண்டை, நாக்கு, மூக்கு ஆகியவற்றுடன் எப்படி சம்பந்தப்படும் என்றும் விளங்கவில்லை.

லலிதா ஸஹஸ்ர நாமத்தினில், 'பரா, பஸ்1யந்தி, மத்4யமா, வைக2ரீ' என்பது அம்மையின் பெயர்கள்.

Top

"பரா - நாதத்தின் பிற மூன்று நிலைகளையும் (பஸ்1யந்தி, மத்4யமா, வைக2ரீ) கடந்த நிலை; 'பஸ்1யந்தி' - நாதம் செவிக்குக் கேளாத நிலை; 'வைக2ரீ' - நாதம் வெளிப்படையாக, கேள்விப்படும் நிலை; 'மத்4யமா' - பஸ்1யந்தி மற்றும் வைக2ரீ நிலைகளுக்கு இடைப்பட்ட நிலை. (ஸ்வாமி தபஸ்யானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.)

பரா, பஸ்1யந்தி, மத்3யமா, வைக2ரீ - இவற்றினைப் பற்றிய காஞ்சி மாமுனிவரின் விளக்கம் (Page 30) நோக்கவும்.

'ஏழு சுரங்களும், அவற்றிற்கும், உடலின் ஏழு சக்கரங்களுக்குமுள்ள சம்பந்தம்' பற்றிய கட்டுரை நோக்கவும்.

'அனாஹத' நாதத்தினைப் பற்றிய ஸ்வாமி சிவானந்தரின் ‘குண்டலினி யோகம்' என்ற e-book நோக்கவும்.

ஏழு சுரங்கள் 'அஹத' (ஒலிக்கப்படும்) நாத வகையினைச் சேர்ந்ததனால், 'வைக2ரீ' நிலையில்தான் அவற்றினைக் கேட்க இயலும்.

Top

4 - கா3யத்ரீ ஹ்ரு23யமுன - காயத்திரி மந்திரத்தின் இதயத்தினில் - ஓங்காரம் - தியாகராஜர் தமது 'ராக3 ஸுதா4 ரஸ' என்ற கீர்த்தனையில் இதனை 'ஸதா3ஸி1வ மயமகு3 நாதோ3ங்கார' (பரம்பொருளாகிய சதாசிவனின் நாதோங்காரத் தன்மை) என்று கூறுகின்றார். தியாகராஜர், தமது 'மோக்ஷமு க3லதா3' என்ற கீர்த்தனையில் கூறுவது -

"பிராணம் மற்றும் வெப்பத்தின் சேர்க்கையினால், பிரணவ நாதம் ஏழு சுரங்களாக வெளிப்படுகின்றது."

ஆதாரமான - படைப்புக்கு ஆதாரமான
ருக் - ருக்3-வேதம்

Top


updated on 12 Dec 2010

No comments: