ஸந்தே3ஹமுனு தீர்புமய்ய
ஸாகேத நிலய ராமய்ய
அனுபல்லவி
1நந்தா3ர்சித பத3 யுக3முலு மேலோ
நாக3ரீகமகு3 2பாது3கா யுக3ம்பு3லு மேலோ (ஸ)
சரணம்
வர மௌனுலெல்ல சரணம்பு3லனு
ஸ்மரியிம்ப நீது3 பத3மொஸங்கெ3னே
3ப4ரதார்சன சே பாது3கலு
4த4ர நின்னொஸங்கே3 த்யாக3ராஜ பா4க்3யமா (ஸ)
பொருள் - சுருக்கம்
சாகேத நகருறையே, இராமய்யா! தியாகராசனின் பேறே!
- ஐயத்தினைத் தீர்ப்பீரய்யா;
- நந்தர் தொழுத (உனது) திருவடி இணை மேலோ?
- நாகரீகமான (உனது) பாதுகை இணை மேலோ?
- உயர் முனிவர்கள் யாவரும் (உனது) திருவடிகளினை சிந்திக்க, உனது பதத்தினை யளித்தனவே;
- பரதன் தொழுத பாதுகைகளோ, அணிவோன் உன்னை யளித்தனவே.
- உயர் முனிவர்கள் யாவரும் (உனது) திருவடிகளினை சிந்திக்க, உனது பதத்தினை யளித்தனவே;
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸந்தே3ஹமுனு/ தீர்புமு/-அய்ய/
ஐயத்தினை/ தீர்ப்பீர்/ அய்யா/
ஸாகேத/ நிலய/ ராமய்ய/
சாகேத (நகர்)/ உறையே/ இராமய்யா/
அனுபல்லவி
நந்த3/-அர்சித/ பத3/ யுக3முலு/ மேலோ/
நந்தர்/ தொழுத/ (உனது) திருவடி/ இணை/ மேலோ/
நாக3ரீகமகு3/ பாது3கா/ யுக3ம்பு3லு/ மேலோ/ (ஸ)
நாகரீகமான/ (உனது) பாதுகை/ இணை/ மேலோ/
சரணம்
வர/ மௌனுலு/-எல்ல/ சரணம்பு3லனு/
உயர்/ முனிவர்கள்/ யாவரும்/ (உனது) திருவடிகளினை/
ஸ்மரியிம்ப/ நீது3/ பத3மு/-ஒஸங்கெ3னே/
சிந்திக்க/ உனது/ பதத்தினை/ யளித்தனவே/
ப4ரத/-அர்சன சே/ பாது3கலு/
பரதன்/ தொழுத/ பாதுகைகளோ/
த4ர/ நின்னு/-ஒஸங்கே3/ த்யாக3ராஜ/ பா4க்3யமா/ (ஸ)
அணிவோன்/ உன்னை/ அளித்தனவே/ தியாகராசனின்/ பேறே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
4 - த4ர - த4ரணி : இவ்விடத்தில் 'அணிவோன்' என்ற பொருள்படும் ஓர் சொல் தேவைப்படும். அது 'த4ர' அல்லது 'தா4ரின்' என்பவையாகும். எனவே, 'த4ர' ஏற்கப்பட்டது.
Top
மேற்கோள்கள்
1 - நந்த3 - சன, சனக, சனந்த மற்றும் சனாதன ஆகிய முனிவர்கள் - பிரமனின் மைந்தர்கள்
2 - பாது3கா - பாதுகை. இராமாயணத்தில்தான் பாதுகையின் வழிபாடு முதன்முதலில் கூறப்பட்டது. வைணவ வழிபாட்டு முறைகளில், இறைவனின் பாதுகைகளுக்கு ஓர் சிறந்த இடம் உண்டு. பாதுகா ஸஹஸ்ரம் என்ற நூலினை நோக்கவும்.
Top
3 - ப4ரதார்சன சே பாது3கலு - பரதன் தொழும் பாதுகைகள் - இராமனைத் திரும்ப அயோத்திக்கு அழைத்துச் செல்ல, பரதன் செய்த முயற்சி ஏதும் பலிக்காததனால், கடைசியாக, தான் கொண்டுவந்திருந்த, புது பாதுகைகளை, இராமனின் முன் வைத்து, அவற்றின் மேல் இராமனை நிற்க, பரதன் கோரினான். அங்ஙனமே, இராமன் அவற்றின் மீது நின்று, இறங்கிய பின்னர், அந்த பாதுகைகளை, தலைமேல் சுமந்துகொண்டு, பரதன் அயோத்தி சென்று, அவற்றிற்கு (பாதுகைகளுக்கு) முடி சூட்டினான் (பட்டாபிஷேகம் செய்தான்). பாதுகைகளை, சிங்காதனத்தின் மீது இருத்தி, அவற்றினை இராமனாகவே உணர்ந்து, பதினான்கு ஆண்டு காலம் அவற்றின் சேவகனாகப் பணிபுரிந்து, நாட்டினைக் காத்தான்.
Top
விளக்கம்
நாகரீகமான - புதுமையான
உனது பதம் - வைகுண்டம்
அணிவோன் - இராமன்
Top
Updated on 23 Apr 2010
No comments:
Post a Comment