Thursday, September 30, 2010

தியாகராஜ கிருதி - ஸமயமு தெலிஸி - ராகம் அஸாவேரி - Samayamu Telisi - Raga Asaveri

பல்லவி
1ஸமயமு தெலிஸி புண்யமுலார்ஜிஞ்சனி
2குமதி உண்டி3யேமி போயியேமி

அனுபல்லவி
1மத தோடி3 34ர்மமு ஜயமே கானி
4க்ரமமுதோ மனவினி வினவே 5ஓ மனஸா (ஸ)

சரணம்
சரணம் 1
ஸாரமௌ கவிதல வினி வெர்ரிவாடு3
ஸந்தோஷபடி3யேமி பட3கேமி
சேரெடே3ஸி கு3ட்3டி3 கன்னுலு பா3கு33
தெரசியேமி தெரவகுண்டி3னனேமி (ஸ)


சரணம் 2
துரக 6வீதி2லோ விப்ருனிகி 7பானக பூஜ
நெரய ஜேஸியேமி ஸேயகுண்டி3யேமி
84ரனீனி4ன கோட்லகு யஜமானுடு3
தா ப்3ரதிகியேமி த3ய்யமைனனேமி (ஸ)


சரணம் 3
பத3மு த்யாக3ராஜ நுதுனிபை கானிதி3
பாடி3யேமி பாட3குண்டி3னனேமி
9ஏத3னு ஸ்ரீ ராம ப4க்தியு லேனி நர ஜன்ம-
மெத்தியேமி எத்தகுண்டி3னனேமி (ஸ)


பொருள் - சுருக்கம்
ஓ மனமே!

  • முறையாக (எனது) வேண்டுகோளினைக் கேளாய்.
  • (மன) அடக்கத்துடன் (இயற்றும்) தருமமே வெல்லும்.
  • சமயமறிந்து, நல்வினையீட்டாத அறிவிலி இருந்தென்ன, போயென்ன?

    • சாரமான கவிதைகளைக் கேட்டு, பித்தன் களிப்பு உற்றாலென்ன, உறாவிடிலென்ன?
    • அகன்ற, பார்வையற்ற கண்கள், நன்கு திறந்தென்ன, திறவாதிருந்தென்ன?
    • துலுக்கர் வீதியினில், அந்தணனுக்கு, பானக பூசை நிறையச் செய்தென்ன, செய்யாதிருந்தென்ன?
    • புவியினில், ஈயாத செல்வம் கோடிகளுக்கு உரியவன், தான் பிழைத்தாலென்ன, பேயானாலென்ன?
    • பாடல், தியாகராசன் போற்றுவோன் மீது அல்லாதாகில், பாடியென்ன, பாடாதிருந்தென்ன?
    • என்னவாகிலும், இராமனின் பக்தியற்ற மனிதப் பிறவி எடுத்தென்ன, எடுக்காதிருந்தாலென்ன?


  • சமயமறிந்து நல்வினையீட்டாத அறிவிலி இருந்தென்ன, போயென்ன?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸமயமு/ தெலிஸி/ புண்யமுலு/-ஆர்ஜிஞ்சனி/
சமயம்/ அறிந்து/ நல்வினை/ யீட்டாத/

குமதி/ உண்டி3/-ஏமி/ போயி/-ஏமி/
அறிவிலி/ இருந்து/ என்ன/ போய்/ என்ன/


அனுபல்லவி
1மத தோடி3/ த4ர்மமு/ ஜயமே/ கானி/
(மன) அடக்கத்துடன்/ (இயற்றும்) தருமமே/ வெல்லுமே/ யன்றி/

க்ரமமுதோ/ மனவினி/ வினவே/ ஓ மனஸா/ (ஸ)
முறையாக/ (எனது) வேண்டுகோளினை/ கேளாய்/ ஓ மனமே/


சரணம்
சரணம் 1
ஸாரமௌ/ கவிதல/ வினி/ வெர்ரிவாடு3/
சாரமான/ கவிதைகளை/ கேட்டு/ பித்தன்/

ஸந்தோஷ/ படி3/-ஏமி/ பட3க/-ஏமி/
களிப்பு/ உற்றால்/ என்ன/ உறாவிடில்/ என்ன/

சேரெடே3ஸி/ கு3ட்3டி3/ கன்னுலு/ பா3கு33/
அகன்ற/ பார்வையற்ற/ கண்கள்/ நன்கு/

தெரசி/-ஏமி/ தெரவக/-உண்டி3ன/-ஏமி/ (ஸ)
திறந்து/ என்ன/ திறவாது/ இருந்து/ என்ன/


சரணம் 2
துரக/ வீதி2லோ/ விப்ருனிகி/ பானக/ பூஜ/
துலுக்கர்/ வீதியினில்/ அந்தணனுக்கு/ பானக/ பூசை/

நெரய/ ஜேஸி/-ஏமி/ ஸேயக/-உண்டி3/-ஏமி/
நிறைய/ செய்து/ என்ன/ செய்யாது/ இருந்து/ என்ன/

4ரனு/-ஈனி/ த4ன/ கோட்லகு/ யஜமானுடு3/
புவியினில்/ ஈயாத/ செல்வம்/ கோடிகளுக்கு/ உரியவன்/

தா/ ப்3ரதிகி/-ஏமி/ த3ய்யமு/-ஐன/-ஏமி/ (ஸ)
தான்/ பிழைத்தால்/ என்ன/ பேய்/ ஆனால்/ என்ன/


சரணம் 3
பத3மு/ த்யாக3ராஜ/ நுதுனிபை/ கானிதி3/
பாடல்/ தியாகராசன்/ போற்றுவோன் மீது/ அல்லாதாகில்/

பாடி3/-ஏமி/ பாட3க/-உண்டி3ன/-ஏமி/
பாடி/ யென்ன/ பாடாது/ இருந்து/ என்ன/

ஏத3னு/ ஸ்ரீ ராம/ ப4க்தியு/ லேனி/ நர/ ஜன்மமு/
என்னவாகிலும்/ ஸ்ரீ ராமனின்/ பக்தி/ யற்ற/ மனித/ பிறவி/

எத்தி/-ஏமி/ எத்தக/-உண்டி3ன/-ஏமி/ (ஸ)
எடுத்து/ என்ன/ எடுக்காது/ இருந்தால்/ என்ன/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - குமதி - த4னிகுடு3.
5 - ஓ மனஸா - மனஸ.
6 - வீதி2லோ - வீதி4லோ.
9 - ஏத3னு - எத3னு.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - ஸமயமு - சமயம் - இந்த மனிதப் பிறவியெடுத்த தருணத்தினைக் குறிக்கும்.

3 - 4ர்மமு - தருமம். இச்சொல்லுக்கு பல பொருளுண்டு - நன்னடத்தை, கடமை, கொடை ஆகிய. இவற்றில் எதனை, தியாகராஜர் குறிப்பிடுகின்றார் என, சரணங்களிலிருந்து புலப்படவில்லை.

4 - க்ரமமுதோ - முறையாக - இச்சொல் உள்ள இடத்தினை நோக்கில், 'மனவினி' (வேண்டுகோளினை) என்ற சொல்லுடன் இணைக்கவேண்டும். ஆனால், இதனை, நேரிடையாக, பல்லவியுடனும் இணைக்கலாம்.

7 - பானக பூஜ - பானக பூஜை - வெல்லம் கலந்த நீர், 'பானகம்' எனப்படும். பாகவதர்கள், இறைவனின் புகழைப் பாடிக்கொண்டு, வீதிகளில் வரும்போது, இல்லத்தோர், அவர்களைத் தமது இல்லத்திற்கு அழைத்து, அவர்களின் கால்களைக் கழுவி, வலம் வந்து, அவர்களை வணங்கி, அவர்களின் தாகத்தினைத் தணிப்பதற்காக, வெல்லம் கலந்த நீர் அருந்தத் தருவர். இது 'பானக பூஜை' எனப்படும்.

Top

8 - 4ரனு ஈனி - புவியில் ஈயாத - 'த4ரனு' (புவியில்) என்ற சொல்லினை, அடுத்து வரும் 'ஈனி' (ஈயாத) என்ற சொல்லுடன் இணைத்துப் பொருள் கொள்ளலாம். அல்லது, 'ப்3ரதிகி' (பி்ழைத்து) என்பதுடன் சேர்த்தும் பொருள் கொள்ளலாம்.

கோடிகளுக்கு - செல்வத்தினைக் குறிக்கும்
பானகம் - வெல்ல நீர்
தியாகராசன் போற்றுவோன் - இராமன்

Top


Updated on 01 Oct 2010

No comments: