Saturday, January 22, 2011

தியாகராஜ கிருதி - ஸ்ரீ ராம ராமாஸ்1ரிதுலமு - ராகம் ஸாவேரி - Sri Rama Ramaasritulamu - Raga Saveri

பல்லவி
ஸ்ரீ ராம ராமாஸ்1ரிதுலமு காமா
நேரமா ப்3ரோவ பா4ரமா

சரணம்
சரணம் 1
மனஸா நா மாட வினி ஸாரெகு
முக்தி கனுமீ 1மஞ்சித3னுமீ (ஸ்ரீ)


சரணம் 2
2பலு வித4 கர்மம்பு3லயந்து3 மர்மமு
தெலுஸுகோ
3ஹரினி கலுஸுகோ (ஸ்ரீ)


சரணம் 3
லோகுலு 4தம த்ரோவயேகமந்து3ரு
5ஒப்புகோகவே மோஸ போகவே (ஸ்ரீ)


சரணம் 4
மாடி மாடிகி நூனெ ரோடியெத்3து3லு திருகு3
தா4டி ரா 6மதமே பாடிரா (ஸ்ரீ)


சரணம் 5
ஆ மதமுலயந்து3 நேமமு
ஸத்யமு ஏமர போகு பாமர (ஸ்ரீ)


சரணம் 6
3த்யந்தரமு லேது3 ப்ரத்யேகமுன ஜூடு3
நித்யுனி 7க்ரு2த-க்ரு2த்யுனி (ஸ்ரீ)


சரணம் 7
தொலி ப4வ நாடகமுல ஜேயு பாபமு
தொலகு3னு ஸுக2மு கலுகு3னு (ஸ்ரீ)


சரணம் 8
நா தலபுனனுண்டு3 ஸ்ரீ-து3னி மனஸெந்து3
மீத3னோ எவரி போ34னோ (ஸ்ரீ)


சரணம் 9
8ஜாட3 தெலுஸுகொனி வேடு3கோன்ன நன்னு
ஜூட3டு3 மாடாட3டு3 (ஸ்ரீ)


9சரணம் 10
க்ரோத4 லோப4முலதோ பா3தி4ஞ்சின
ஆராத4னோ லேக ஸோ14னோ (ஸ்ரீ)


சரணம் 11
ஸத3யுனி சிரு நவ்வு வத3னுனி பத34க்தி
வத3லனு எந்து3 கத3லனு (ஸ்ரீ)


10சரணம் 12
நேமமுக3 தொலி நோமுன தொ3ரிகின
ராமுனி ஜித காமுனி (ஸ்ரீ)


10சரணம் 13
ஸீ1லுனி ஸத்3-கு3ண ஸா1லினி ஜூசுடே
சாலுனு அன்யமேலனு (ஸ்ரீ)


சரணம் 14
வல ராஜ ஜனகுனி வலசுது3னனி பேர
கொலுதுனு யமுனி கெ3லுதுனு (ஸ்ரீ)


சரணம் 15
நா ஜயமுனு த்யாக3ராஜுனி 11ராஜாதி4-
ராஜுனகு
12கூர்து ராஜினி (ஸ்ரீ)


பொருள் - சுருக்கம்
  • இராமா!
    • (உன்னை) நம்பினவர்கள் அல்லவா! தவறேதுமுளதோ? காத்தல் பளுவா?


  • மனமே! அறிவிலியே!
    • என் சொல்லைக் கேட்டு, எவ்வமயமும், முத்தி காணேன்; 'நல்லது' என்று சொல்லேன்;
    • பலவிதமான (வேத) கருமங்களில் உட்பொருள் அறிந்துகொள்; அரியைக் கலந்து கொள்;
    • உலகோர் தமது நெறியொன்றே (உண்டு) என்பர்; ஒப்புக்கொள்ளாதே; மோசம் போகாதே;
    • திரும்பத்திரும்ப செக்கு மாடுகள்தான் சுற்றும்; கடந்து வா; அந்நெறிகளினால் என்ன பயன்?
    • அந்நெறிகளில் (சென்று) கட்டுப்பாட்டினையும், உண்மையினையும் மறந்து போகாதே,
    • போக்கு வேறில்லை; ஒவ்வொன்றிலும், காண்பாய் அழிவற்றோனை, யாவற்றையும் சாதித்தவனை;
    • (அங்ஙனம் கண்டால்) முன்னர், பிறவிக்கடலெனும் நாடகத்தில் செய்த பாவங்கள் தொலையும்; சுகம் உண்டாகும்;


  • எனது நினைவிலுறையும், சீரருள்வோனின் மனது எதன் மீதோ? யாருடைய போதனையோ?
  • (இறைவனின்) குறிப்பறிந்து, வேண்டிக்கொண்ட என்னைப் பார்க்கமாட்டான்; பேசமாட்டான்;

  • (இது) சினத்தினாலும், பேராசையாலும் பாதிக்கப்பட்ட வழிபாடோயன்றி (அவன்) சோதனையோ?
  • கருணையுள்ளத்தோனின், புன்னகை வதனனின் திருவடிப் பற்றினை விடமாட்டேன்; எங்கும் நகரமாட்டேன்;
  • கட்டுப்பாட்டுடன், முந்தைய நோன்பினால் கிடைத்த இராமனை, பற்று வென்றோனை, நல்லொழுக்கத்தோனை, நற்பண்பு இயல்பினனைக் காண்பதுவே போதும்; மற்றவையெதற்கு?
  • காதல் மன்னனை யீன்றோனைக் காதலிப்பேனென, (அவன்) பெயரைப் போற்றுவேன்; நமனை வெல்வேன்;
  • எனது வெற்றியினை இத்தியாகராசனின் பேரரசனுக்குச் சேர்ப்பேன், சம்மதத்துடன்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ ராம/ ராம/-ஆஸ்1ரிதுலமு/ காமா/
ஸ்ரீ ராமா/ ராமா/ (உன்னை) நம்பினவர்கள்/ அல்லவா/

நேரமா/ ப்3ரோவ/ பா4ரமா/
தவறேதுமுளதோ/ காத்தல்/ பளுவா/


சரணம்
சரணம் 1
மனஸா/ நா/ மாட/ வினி/ ஸாரெகு/
மனமே/ என்/ சொல்லை/ கேட்டு/ எவ்வமயமும்/

முக்தி/ கனுமீ/ மஞ்சிதி3/-அனுமீ/ (ஸ்ரீ)
முத்தி/ காணேன்/ 'நல்லது'/ என்று சொல்லேன்/


சரணம் 2
பலு/ வித4/ கர்மம்பு3ல-அந்து3/ மர்மமு/
பல/ விதமான/ (வேத) கருமங்களில்/ உட்பொருள்/

தெலுஸுகோ/ ஹரினி/ கலுஸுகோ/ (ஸ்ரீ)
அறிந்துகொள்/ அரியை/ கலந்து கொள்/


சரணம் 3
லோகுலு/ தம/ த்ரோவ/-ஏகமு/-அந்து3ரு/
உலகோர்/ தமது/ நெறி/ யொன்றே/ (உண்டு) என்பர்/

ஒப்புகோகவே/ மோஸ/ போகவே/ (ஸ்ரீ)
ஒப்புக்கொள்ளாதே/ மோசம்/ போகாதே/


சரணம் 4
மாடி/ மாடிகி/ நூனெ ரோடி/-எத்3து3லு/ திருகு3/
திரும்ப/ திரும்ப/ செக்கு/ மாடுகள்தான்/ சுற்றும்/

தா4டி/ ரா/ மதமு/-ஏ/ பாடிரா/ (ஸ்ரீ)
கடந்து/ வா/ அந்நெறிகளினால்/ என்ன/ பயன்/


சரணம் 5
ஆ மதமுல-அந்து3/ நேமமு/
அந்நெறிகளில்/ (சென்று) கட்டுப்பாட்டினையும்/

ஸத்யமு/ ஏமர/ போகு/ பாமர/ (ஸ்ரீ)
உண்மையினையும்/ மறந்து/ போகாதே/ அறிவிலியே/


சரணம் 6
3தி/-அந்தரமு/ லேது3/ ப்ரதி-ஏகமுன/ ஜூடு3/
போக்கு/ வேறு/ இல்லை/ ஒவ்வொன்றிலும்/ காண்பாய்/

நித்யுனி/ க்ரு2த-க்ரு2த்யுனி/ (ஸ்ரீ)
அழிவற்றோனை/ யாவற்றையும் சாதித்தவனை/


சரணம் 7
தொலி/ ப4வ/ நாடகமுல/ ஜேயு/ பாபமு/
முன்னர்/ பிறவிக்கடலெனும்/ நாடகத்தில்/ செய்த/ பாவங்கள்/

தொலகு3னு/ ஸுக2மு/ கலுகு3னு/ (ஸ்ரீ)
தொலையும்/ சுகம்/ உண்டாகும்/


சரணம் 8
நா/ தலபுன/-உண்டு3/ ஸ்ரீ/-து3னி/ மனஸு/-எந்து3/
எனது/ நினைவில்/ உறையும்/ சீர்/ அருள்வோனின்/ மனது/ எதன்/

மீத3னோ/ எவரி/ போ34னோ/ (ஸ்ரீ)
மீதோ/ யாருடைய/ போதனையோ/


சரணம் 9
ஜாட3/ தெலுஸுகொனி/ வேடு3கோன்ன/ நன்னு/
(இறைவனின்) குறிப்பு/ அறிந்து/ வேண்டிக்கொண்ட/ என்னை/

ஜூட3டு3/ மாட-ஆட3டு3/ (ஸ்ரீ)
பார்க்கமாட்டான்/ பேசமாட்டான்/


சரணம் 10
க்ரோத4/ லோப4முலதோ/ பா3தி4ஞ்சின/
(இது) சினத்தினாலும்/ பேராசையாலும்/ பாதிக்கப்பட்ட/

ஆராத4னோ/ லேக/ ஸோ14னோ/ (ஸ்ரீ)
வழிபாடோ/ யன்றி/ (அவன்) சோதனையோ/


சரணம் 11
ஸத3யுனி/ சிரு நவ்வு/ வத3னுனி/ பத3/ ப4க்தி/
கருணையுள்ளத்தோனின்/ புன்னகை/ வதனனின்/ திருவடி/ பற்றினை/

வத3லனு/ எந்து3/ கத3லனு/ (ஸ்ரீ)
விடமாட்டேன்/ எங்கும்/ நகரமாட்டேன்/


சரணம் 12
நேமமுக3/ தொலி/ நோமுன/ தொ3ரிகின/
கட்டுப்பாட்டுடன்/ முந்தைய/ நோன்பினால்/ கிடைத்த/

ராமுனி/ ஜித/ காமுனி/ (ஸ்ரீ)
இராமனை/ வென்றோனை/ பற்று/


சரணம் 13
ஸீ1லுனி/ ஸத்3-கு3ண/ ஸா1லினி/ ஜூசுடே/
நல்லொழுக்கத்தோனை/ நற்பண்பு/ இயல்பினனை/ காண்பதுவே/

சாலுனு/ அன்யமு/-ஏலனு/ (ஸ்ரீ)
போதும்/ மற்றவை/ யெதற்கு/


சரணம் 14
வல/ ராஜ/ ஜனகுனி/ வலசுது3னு/-அனி/ பேர/
காதல்/ மன்னனை/ யீன்றோனை/ காதலிப்பேன்/ என/ (அவன்) பெயரை/

கொலுதுனு/ யமுனி/ கெ3லுதுனு/ (ஸ்ரீ)
போற்றுவேன்/ நமனை/ வெல்வேன்/


சரணம் 15
நா/ ஜயமுனு/ த்யாக3ராஜுனி/ ராஜ-அதி4-ராஜுனகு/
எனது/ வெற்றியினை/ இத்தியாகராசனின்/ பேரரசனுக்கு/

கூர்து/ ராஜினி/ (ஸ்ரீ)
சேர்ப்பேன்/ சம்மதத்துடன்/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
5 - ஒப்புகோகவே - ஜெப்புகோகவே : இவ்விடத்தில் 'ஒப்புகோகவே' என்பதே பொருந்தும்.

11 - ராஜாதி4ராஜுனகு - ராஜாதி4ராஜுனு : இவ்விடத்தில் 'ராஜாதி4ராஜுனகு' என்பதே பொருந்தும் என்று நான் கருதுகின்றேன்.

Top

மேற்கோள்கள்
2 - பலு வித4 கர்மம்பு3லயந்து3 மர்மமு தெலுஸுகோ - பல விதமான வேத கருமங்களின் உட்பொருளினை அறிந்துகொள் - இது குறித்து, கண்ணன், கீதையில் (3-வது அத்தியாயம், 9-வது செய்யுள்) கூறியதாவது -

"வேள்விக்காகவே அன்றி, இயற்றப்படும் மற்ற கருமங்கள் யாவும், உலகோரைப் பிணைக்கின்றன.
எனவே, குந்தி மகனே, பற்றினைத் துறந்து, (வேள்விக்காகவே) கருமங்களை இயற்றுவாய்."
(ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)

மேலும், தியாகராஜர், தமது 'நீ ப4க்தி பா4க்3ய ஸுதா4' என்ற கீர்த்தனையில், 'வேதங்களில் உரைக்கப்பட்ட கரும நெறி (பற்றைத் துறந்து இயற்றப்படாதாகில்), துயர் விளைவிக்கும், பிறப்பு-இறப்பெனும் போக்குவரத்திலேயே கொண்டு சேர்க்கும்' என்கின்றார்.

Top

7 - க்ரு2த-க்ரு2த்ய - யாவற்றையும் சாதித்தவன் - சில கீர்த்தனைகளில், தியாகராஜர், இறைவனை, 'பூர்ண காம' (இச்சைகள் நிறைவேறப்பெற்றோன்) என்றும் குறிப்பிடுகின்றார். இதுகுறித்து, கீதையில் (3-வது அத்தியாயம், 22-வது செய்யுள்), கண்ணன் கூறியது -

"பார்த்தா! எனக்கு, மூவுலகிலும் செய்யவேண்டியது ஏதுமில்லை.
நான் அடையாததோ, அடையவேண்டியதோ இல்லை. ஆயினும், பணிகளை நான் தொடர்ந்து இயற்றுகின்றேன்."
(ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)

Top

விளக்கம்
1 - மஞ்சிதி3 - நல்லது - ஒப்புதலளித்தல்

3 - ஹரினி கலுஸுகோ - அரியைக் கலந்துகொள். இதற்கு 'அரியுடன் இணைவாய்' என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால், இவ்விடத்தில், அத்தகைய பொருள் பொருந்தாது. எனினும், 'அரியைக் கலந்துகொள்' என்பதுவும் ஒருவருடைய சொந்த அனுபவத்தினையே குறிக்கும். இதனை, சொற்களினால், மற்றவருக்கு உணர்த்த இயலாது.

4 - தம த்ரோவயேகமு - தமது நெறி ஒன்றுதான் உண்டு - 2-வது சரணத்தில் கூறப்பட்ட 'கருமங்களை'க் குறிக்கும். தியாகராஜர், தனது மனதிற்கு, 'கருமங்களின் சாரத்தினை அறிந்துகொள்' என்கின்றார்.

Top

6 - மதமு - நெறி - இது, பல 'விந்தையான' வழிபாட்டு முறைகளையுடைய, 'கௌள மார்க்கம்' எனப்படும் 'சக்தி வழிபாட்டினை'க் குறிக்கலாம். ('விந்தையான' என்பது, அவற்றினை, 'பொது மக்கள், எளிதில் புரிந்துகொள்வது கடினம்' என்ற பொருளில் கூறப்படுகின்றது.)

8 - ஜாட3 தெலுஸுகொனி - குறிப்பறிந்து - இது, இறைவனைக் குறிப்பதாகவோ, அல்லது தியாகராஜரைக் குறிப்பதாகவோ கொள்ளலாம்.

9 - சரணம் 10 - இந்த சரணத்தில் கூறப்பட்டவை, எந்த சூழ்நிலையில் கூறப்பட்டன என்று அறியாது, சரிவரப் பொருள் கூறுவது கடினம்.

10 - சரணம் 12 மற்றும் சரணம் 13 - இவற்றினை இணைத்தே பொருள் கொள்ள இயலும். 12-வது சரணத்திற்குத் தனியாக பொருள் கொள்ள இயலாது.

Top

12 - கூர்து - (வெற்றியினைச்) சேர்ப்பேன் - இறைவனின் விருதுப் பட்டியலில் சேர்ப்பேன் என. சில புத்தகங்களில், இச்சொல்லுக்கு, (இறைவனுக்கு) 'அர்ப்பணிப்பேன்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இச்சொல்லுக்கு, அத்தகைய பொருளேதும் இல்லை.

இந்த கீர்த்தனை, ஒரே கருத்தில் எழுதப்படவில்லை. முதல் ஏழு சரணங்களில், தியாகராஜர், தமது மனதிற்கு அறிவுரை கூறுகின்றார். மற்ற சரணங்களில், அவர், இறைவனைக் குறை கூறுகின்றார் மற்றும் இறைவனிடம் தன்னுடைய தீர்மானத்தினைக் கூறுகின்றார்.

முதல் ஏழு சரணங்களில் கூறப்பட்டவற்றின் சூழ்நிலை விளங்காததால், சரிவரப் பொருள் கொள்வது கடினம். புத்தகங்களில், முரண்பாடான பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

காதல் மன்னன் - காமன்

Top


Updated on 23 Jan 2011

No comments: