1ஸ்ரீ ராம தா3ஸ தா3ஸோஹம் அன
நீரஜ நேத்ர நீகேல 2ஸந்தே3ஹமு
சரணம்
சரணம் 1
க3ட்டு கான ரானி கு3ண்ட ராம
3பட்டுக தா3ட நீ பேரு தெப்பண்ட (ஸ்ரீ)
சரணம் 2
4காமாதி3 நக்ர பா3த4 தீர்ப
ராமய்ய நீ சேதி சக்ரமு லேதா3 (ஸ்ரீ)
சரணம் 3
சல 5சித்தமனு அலலகு ராம
செலகு3 நீ வாம ஹஸ்தமு வைரியகு3னு (ஸ்ரீ)
சரணம் 4
மத3 மத்ஸரமுலனு க3ஜமுலகு நீ
பத3 6கமலாங்குஸ1 ரேக2 அங்குஸ1மு (ஸ்ரீ)
சரணம் 5
ஸோ1காது3லனு பர்வதமுலகு நீ
கராங்கித வஜ்ர ரேக2 வஜ்ரமு (ஸ்ரீ)
சரணம் 6
அஹமனு ஜட3த்வமணசி ப்3ரோவ
ஸஹஜமௌ நீ சேதி ஸ1ரமுலு லேவா (ஸ்ரீ)
சரணம் 7
7து3ஷ்-கர்மமனு கொண்ட3லெக3ய 8ஸேய
நிஷ்-கல்மஷ 9பவனஜுடு3ண்டு3 10ஸத3ய (ஸ்ரீ)
சரணம் 8
ஜனன மரணமனு ஸுடி3னி நில்ப
க4னமைன நீயாக்3ஞ காத3னு வடி3னி (ஸ்ரீ)
சரணம் 9
ஜாதிகொகரு 11கூடி3னாரமு ப்ரீதி
சேத தெலுஸுகொண்டிமி நாம 11ஸாரமு (ஸ்ரீ)
சரணம் 10
பன்னுக3 ப4வமதி 12கோ4ரமு ராம
நின்னு வினான்ய 12தை3வமுலனு கோரமு (ஸ்ரீ)
சரணம் 11
வர கு3ண ராஜாதி4 ராஜ ராம
பரம பாவன பாலித த்யாக3ராஜ (ஸ்ரீ)
பொருள் - சுருக்கம்
கமலக்கண்ணா! இராமா! இராமைய்யா! தயாளா! நற்பண்புகளோனே! அரசர்க்கரசே! முற்றிலும் புனிதனே! தியாகராசனைப் பேணுவோனே!
- 'இராமனின் தொண்டருக்கடியவன் நான்' என்றால், உனக்கேன் ஐயம்?
- கரை காணமுடியாத கடல்; பற்றிக்கொண்டு தாண்டுவதற்கு, உனது பெயர் தெப்பமாம்!
- இச்சை முதலான முதலைகளின் தொல்லைகளைத் தீர்க்க, உனது கை ஆழியுண்டன்றோ!
- நிலையற்ற மனமெனும் அலைகளுக்கு, ஒளிரும், உனது இடது கை எதிரியாகும்;
- செருக்கு, பொறாமையெனும் யானைகளுக்கு உனது கமலத் திருவடியின் வளைந்த கோடுகள் அங்குசமாகும்;
- துயரங்கள் ஆகியவை எனும் மலைகளுக்கு, உனது கைகளிலுள்ள ஆழ்ந்த கோடுகள் குலிசமாகும்;
- 'நான்' எனும் அறிவீனத்தையடக்கி, (என்னைக்) காக்க, இயற்கையான உனது கையம்புகளுண்டன்றோ!
- தீவினைகளெனும் மலைகளைப் பறக்கடிக்க, களங்கமற்ற, வாயு மைந்தன் உண்டு;
- பிறப்பு இறப்பெனும் சுழலை நிறுத்த, வல்லமைமிகு உனது ஆட்சியன்றோ, காலத்தின் மீது!
- சாதிக்கொருவர் கூடினோம்; காதலுடன், தெரிந்துகொண்டோம் (உனது) பெயரின் சாரத்தினை;
- நேர்த்தியான பிறவிக்கடல் மிக்கு கோரமானது; உன்னைத் தவிர மற்ற கடவுளரை வேண்டோம்.
- கரை காணமுடியாத கடல்; பற்றிக்கொண்டு தாண்டுவதற்கு, உனது பெயர் தெப்பமாம்!
- 'இராமனின் தொண்டருக்கடியவன் நான்' என்றால், உனக்கேன் ஐயம்?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ ராம/ தா3ஸ/ தா3ஸ:/-அஹம்/ அன/
ஸ்ரீ ராமனின்/ தொண்டருக்கு/ அடியவன்/ நான்/ என்றால்/
நீரஜ/ நேத்ர/ நீகு/-ஏல/ ஸந்தே3ஹமு/
கமல/ கண்ணா/ உனக்கு/ ஏன்/ ஐயம்/
சரணம்
சரணம் 1
க3ட்டு/ கான/ ரானி/ கு3ண்ட/ ராம/
கரை/ காண/ முடியாத/ கடல் (குளம்)/ இராமா/
பட்டுக/ தா3ட/ நீ/ பேரு/ தெப்ப-அண்ட/ (ஸ்ரீ)
பற்றிக்கொண்டு/ தாண்டுவதற்கு/ உனது/ பெயர்/ தெப்பமாம்/
சரணம் 2
காம/-ஆதி3/ நக்ர/ பா3த4/ தீர்ப/
இச்சை/ முதலான/ முதலைகளின்/ தொல்லைகளை/ தீர்க்க/
ராமய்ய/ நீ/ சேதி/ சக்ரமு/ லேதா3/ (ஸ்ரீ)
இராமைய்யா/ உனது/ கை/ ஆழி/ உண்டன்றோ/
சரணம் 3
சல/ சித்தமு/-அனு/ அலலகு/ ராம/
நிலையற்ற/ மனம்/ எனும்/ அலைகளுக்கு/ இராமா/
செலகு3/ நீ/ வாம/ ஹஸ்தமு/ வைரி/-அகு3னு/ (ஸ்ரீ)
ஒளிரும்/ உனது/ இடது/ கை/ எதிரி/ ஆகும்/
சரணம் 4
மத3/ மத்ஸரமுலு/-அனு/ க3ஜமுலகு/ நீ/
செருக்கு/ பொறாமை/ யெனும்/ யானைகளுக்கு/ உனது/
பத3/ கமல/-அங்குஸ1/ ரேக2/ அங்குஸ1மு/ (ஸ்ரீ)
திருவடி/ கமலத்தின்/ வளைந்த/ கோடுகள்/ அங்குசமாகும்/
சரணம் 5
ஸோ1க/-ஆது3லு/-அனு/ பர்வதமுலகு/ நீ/
துயரங்கள்/ ஆகியவை/ எனும்/ மலைகளுக்கு/ உனது/
கர-அங்கித/ வஜ்ர/ ரேக2/ வஜ்ரமு/ (ஸ்ரீ)
கைகளிலுள்ள/ ஆழ்ந்த (வலிய)/ கோடுகள்/ குலிசமாகும்/
சரணம் 6
அஹம்/-அனு/ ஜட3த்வமு/-அணசி/ ப்3ரோவ/
'நான்'/ எனும்/ அறிவீனத்தை/ யடக்கி/ (என்னைக்) காக்க/
ஸஹஜமௌ/ நீ/ சேதி/ ஸ1ரமுலு/ லேவா/ (ஸ்ரீ)
இயற்கையான/ உனது/ கை/ அம்புகள்/ உண்டன்றோ/
சரணம் 7
து3ஷ்-கர்மமு/-அனு/ கொண்ட3லு/-எக3ய ஸேய/
தீவினைகள்/ எனும்/ மலைகளை/ பறக்கடிக்க/
நிஷ்-கல்மஷ/ பவனஜுடு3/-உண்டு3/ ஸத3ய/ (ஸ்ரீ)
களங்கமற்ற/ வாயு மைந்தன்/ உண்டு/ தயாளா/
சரணம் 8
ஜனன/ மரணமு/-அனு/ ஸுடி3னி/ நில்ப/
பிறப்பு/ இறப்பு/ எனும்/ சுழலை/ நிறுத்த/
க4னமைன/ நீ/-ஆக்3ஞ/ காத3னு/ வடி3னி/ (ஸ்ரீ)
வல்லமைமிகு/ உனது/ ஆட்சி (ஆணை)/ யன்றோ/ காலத்தின் மீது/
சரணம் 9
ஜாதிகி/-ஒகரு/ கூடி3னாரமு/ ப்ரீதி சேத/
சாதிக்கு/ ஒருவர்/ கூடினோம்/ காதலுடன்/
தெலுஸுகொண்டிமி/ நாம/ ஸாரமு/ (ஸ்ரீ)
தெரிந்துகொண்டோம்/ (உனது) பெயரின்/ சாரத்தினை/
சரணம் 10
பன்னுக3/ ப4வமு/-அதி/ கோ4ரமு/ ராம/
நேர்த்தியான/ பிறவிக்கடல்/ மிக்கு/ கோரமானது/ இராமா/
நின்னு/ வினா/-அன்ய/ தை3வமுலனு/ கோரமு/ (ஸ்ரீ)
உன்னை/ தவிர/ மற்ற/ கடவுளரை/ வேண்டோம்/
சரணம் 11
வர/ கு3ண/ ராஜ/-அதி4 ராஜ/ ராம/
நற்/ பண்புகளோனே/ அரசர்க்கு/ அரசே/ இராமா/
பரம/ பாவன/ பாலித/ த்யாக3ராஜ/ (ஸ்ரீ)
முற்றிலும்/ புனிதனே/ பேணுவோனே/ தியாகராசனை/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில், சரணங்களின் வரிசை மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது.
1 - தா3ஸோஹம் அன - தா3ஸோஹம்.
2 - ஸந்தே3ஹமு - ஸந்தே3ஹம்.
3 - பட்டுக - பட்டுகோ. இந்த சொல்லுக்கு 'பற்றிக்கொண்டு' என்று பொருள் கொள்ளப்பட்டாலும், 'பட்டுக' என்ற சொல்லின் வடிவம் சரிவர விளங்கவில்லை.
4 - காமாதி3 - காமாது3லனு.
5 - சித்தமனு அலலகு - சித்தமனு அலலகுனு.
7 - து3ஷ்-கர்மமனு - து3ஷ்-கர்மமுலனு.
8 - ஸேய - ராம.
9 - பவனஜுடு3ண்டு3 - பவனஜுடு3ண்ட3.
11 - கூடி3னாரமு - ஸாரமு : கூடி3னாரம் - ஸாரம்.
12 - கோ4ரமு - தை3வமுலனு கோரமு : கோ4ரம் - தை3வமுலனு கோரம்.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
1 - ஸ்ரீ ராம தா3ஸ தா3ஸோஹம் - இதற்கு ஆந்திராவைச் சேர்ந்த 'பத்ராசல ராமதாஸரின் தொண்டன்' என்றும் பொருள் கொள்ளலாம். தியாகராஜர் தமது 'ப்3ரு2ந்தா3வன லோல' என்று தோடி ராக கீர்த்தனையிலும், 'க்ஷீர ஸாக3ர ஸ1யன' என்ற தேவ காந்தாரி ராக கீர்த்தனையிலும் அவரைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
6 - அங்குஸ1 ரேக2 - இது (இறைவனின்) கால் கோடுகளையோ அல்லது குலசத்தைப் போன்ற வளைந்த காலின் வடிவத்தினையோ குறிக்கலாம்.
10 - ஸத3ய - இது இறைவனின் அடைமொழியாகக் கொள்ளப்பட்டது. ஆனால், இதனை அனுமனைக் குறிப்பதாகவும் ('அனுமன் கருணையோடுள்ளான்' என்று) கொள்ளலாம்.
Top
கரை காணமுடியாத கடல் - உலக வாழ்வெனும் கடல்
இச்சை முதலான - உட்பகை ஆறு - இச்சை, சினம், பேராசை, ஈயாமை, செருக்கு, காழ்ப்பு
ஆழி - திருமாலின் சக்கரம்
யானைகளுக்கு - யானைகளை அடக்க
குலிசம் - (இந்திரனின்) வச்சிராயுதம்
(இந்திரன், மலைகளை, குலிசத்தினால் தூளாக்கினான் எனப்படும்)
வாயு மைந்தன் - அனுமன்
நேர்த்தியான - நேர்த்தியாகத் தோற்றமளிக்கும்
Top
Updated on 23 Oct 2010
No comments:
Post a Comment