1ஹரியனுவாரி ஸரியெவ்வரே
சரணம்
சரணம் 1
பலு வித4முல தலபுல ரோஸி
நிலவரமகு3 ப4க்தியு ஜேஸி
2மலயனி 3மத பே4த3மு கோஸி (ஹ)
சரணம் 2
கரகு3சு மதி3லோ காமிஞ்சி ஹரி
சரணமுலனு ஹ்ரு2த3யமுனுஞ்சி
வர 4ஸு1க முக2 த4னமனியெஞ்சி (ஹ)
சரணம் 3
ஈ ஸுக2மெருக3னி ஜன செலிமி
வாஸுகி விஸமே மரி கொலிமி நிஜ
தா3ஸுல ஸம்பா4ஷண 5ப3லிமி (ஹ)
சரணம் 4
6நீ ஜபமுன ஹ்ரு2த3யமு வேக3
ராஜில்லனு ஜேஸின த்யாக3-
ராஜ நுதுனி பேருல பா3க3 (ஹ)
பொருள் - சுருக்கம்
- 'அரி' யென்பவருக்கீடு எவரே?
- பல விதமான எண்ணங்களை வெறுத்து,
- நிலையான பக்தி செய்து,
- வளையாத மத வேறுபாடுகளை யறுத்து,
- உருகிக்கொண்டு உள்ளத்தினில் காதலித்து,
- அரியின் திருவடிகளை இதயத்தினிலிருத்தி,
- உயர் சுகரின் சொற்செல்வமென்று எண்ணி,
- பல விதமான எண்ணங்களை வெறுத்து,
- 'அரி' யென்பவருக்கீடு எவரே?
- இந்த சுகத்தினை யுணராத மக்களின் நட்பு வாசுகி நஞ்சேயென, மேலும் சூளையென,
- உண்மையான தொண்டர்களுடன் உரையாடல் வலிமையென (எண்ணி),
- இந்த சுகத்தினை யுணராத மக்களின் நட்பு வாசுகி நஞ்சேயென, மேலும் சூளையென,
- 'அரி' யென்பவருக்கீடு எவரே?
- உனது ஜெபத்தினால், இதயத்தினை விரைவாக ஒளிரச் செய்த, தியாகராசன் போற்றுவோனின் பெயர்களைச் சிறக்க
- 'அரி' யென்பவருக்கீடு எவரே?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஹரி/-அனுவாரி/ ஸரி/-எவ்வரே/
'அரி'/ யென்பவருக்கு/ ஈடு/ எவரே/
சரணம்
சரணம் 1
பலு/ வித4முல/ தலபுல/ ரோஸி/
பல/ விதமான/ எண்ணங்களை/ வெறுத்து/
நிலவரமகு3/ ப4க்தியு/ ஜேஸி/
நிலையான/ பக்தி/ செய்து/
மலயனி/ மத/ பே4த3மு/ கோஸி/ (ஹ)
வளையாத/ மத/ வேறுபாடுகளை/ யறுத்து/ 'அரி'...
சரணம் 2
கரகு3சு/ மதி3லோ/ காமிஞ்சி/ ஹரி/
உருகிக்கொண்டு/ உள்ளத்தினில்/ காதலித்து/ அரியின்/
சரணமுலனு/ ஹ்ரு2த3யமுன/-உஞ்சி/
திருவடிகளை/ இதயத்தினில்/ இருத்தி/
வர/ ஸு1க/ முக2/ த4னமு/-அனி/-எஞ்சி/ (ஹ)
உயர்/ சுகரின்/ சொற்/ செல்வம்/ என்று/ எண்ணி/ 'அரி'...
சரணம் 3
ஈ/ ஸுக2மு/-எருக3னி/ ஜன/ செலிமி/
இந்த/ சுகத்தினை/ யுணராத/ மக்களின்/ நட்பு/
வாஸுகி/ விஸமே/ மரி/ கொலிமி/ நிஜ/
வாசுகி/ நஞ்சேயென/ மேலும்/ சூளையென/ உண்மையான/
தா3ஸுல/ ஸம்பா4ஷண/ ப3லிமி/ (ஹ)
தொண்டர்களுடன்/ உரையாடல்/ வலிமையென (எண்ணி)/ 'அரி'...
சரணம் 4
நீ/ ஜபமுன/ ஹ்ரு2த3யமு/ வேக3/
உனது/ ஜெபத்தினால்/ இதயத்தினை/ விரைவாக/
ராஜில்லனு/ ஜேஸின/ த்யாக3ராஜ/
ஒளிர/ செய்த/ தியாகராசன்/
நுதுனி/ பேருல/ பா3க3/ (ஹ)
போற்றுவோனின்/ பெயர்களை/ சிறக்க/ 'அரி'...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஹரியனுவாரி - ஹரியனுவானி.
5 - ப3லிமி - ப3லிமின்.
Top
மேற்கோள்கள்
3 - மத - சிவன், விஷ்ணு, சக்தி, கணபதி, சூரியன் மற்றும் முருகன் என உருவ வழிபாட்டின் ஆறு முறைகள்.
Top
விளக்கம்
2 - மலயனி - சில புத்தகங்களில், இதற்கு 'வளையாத' என்றும் மற்ற புத்தகங்களில் 'வேற்றுமை பயக்கும்' என பொருள் கொள்ளப்பட்டது. 'மலயனி' என்ற தெலுங்கு சொல்லுக்கு அத்தகைய பொருளேதும் இருப்பதாகத் தெரியவில்லை. இச்சொல், 'மலகு3' அல்லது 'மலுகு3' என்ற தெலுங்கு சொல்லின் திரிபாக இருக்கலாம் என்று கருதுகின்றேன். எனவே 'வளையாத' என்ற பொருள் கொள்ளப்பட்டது.
4 - ஸு1க முக2 - சுகரின் சொற்செல்வம் - சுகர் ஆகிய தலைசிறந்தோரின் செல்வமென்று என்றும் கொள்ளலாம்.
Top
6 - நீ ஜபமுன - உனது ஜெபத்தினால். இந்த கீர்த்தனை முழுதும் படர்க்கையில் உள்ளது. ஆனால், இவ்விடத்தில் மட்டும், தியாகராஜர் முன்னிலையைப் பயன்படுத்துகின்றார். இவ்விடத்தில் 'நீ' என்ற சொல், தியாகராஜர், தமது உள்ளத்தினைக் குறிப்பதாகவோ அல்லது இறைவனைக் குறிப்பதாகவோ கொள்ளலாம்.
வளையாத - வளைந்து கொடுக்காத
சுகரின் சொற்செல்வம் - பாகவதத்தினை எடுத்துரைத்தவர் சுகர்
வாசுகி - அரவுகளின் அரசன் - கொடிய நஞ்சென
Top
No comments:
Post a Comment