Friday, December 25, 2009

தியாகராஜ கிருதி - என்னக3 மனஸுகு - ராகம் நீலாம்ப3ரி - Ennaga Manasuku - Raga Nilambari

பல்லவி
என்னக3 மனஸுகு ரானி பன்னக3 ஸா1யி ஸொக3ஸு
பன்னுக3 கனுகொனனி கன்னுலேலே
1கன்னுலேலே கண்டி 2மின்னுலேலே

சரணம்
சரணம் 1
மோஹமுதோ நீல வாரி வாஹ காந்தினி கேரின
ஸ்ரீ ஹரினி கட்டுகொனனி தே3ஹமேலே
தே3ஹமேலேயீ கே3ஹமேலே (எ)


சரணம் 2
ஸரஸிஜ மல்லெ துளஸி விருவாஜி பாரிஜாதபு
விருலசே பூஜிஞ்சனி கரமுலேலே
கரமுலேலேயீ காபுரமுலேலே (எ)


சரணம் 3
3மாலிமிதோ த்யாக3ராஜுனேலின ராம மூர்தினி
லாலிஞ்சி பொக33னி நாலிகேலே
4நாலிகேலே ஸூத்ர மாலிகேலே (எ)


பொருள் - சுருக்கம்
  • எண்ணுதற்கு மனதிற்கெட்டாத, அரவணையோனின் ஒயிலினை நன்கு கண்டுகொள்ளாத கண்களெதற்கோ? கண்களெதற்கோ? கண்களின் ஒளியெதற்கோ?


  • பேருவகையுடன், நீல முகிலின் மிளிர்ச்சியினைப் பழிக்கும் அரியினை, அணைத்துக்கொள்ளாத மேனியெதற்கோ? மேனியெதற்கோ? இவ்வில்லமெதற்கோ?


  • தாமரை, மல்லிகை, துளசி, இருவாட்சி, பவளமல்லி ஆகிய மலர்கொடு தொழாத கரங்களெதற்கோ? கரங்களெதற்கோ? இக்குடும்பமெதற்கோ?


  • கனிவுடன், தியாகராசனை ஆண்ட இராம மூர்த்தியினை ஏத்திப் புகழாத நாவெதற்கோ? நாவெதற்கோ? செபமாலையெதற்கோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
என்னக3/ மனஸுகு/ ரானி/ பன்னக3/ ஸா1யி/ ஸொக3ஸு/
எண்ணுதற்கு/ மனதிற்கு/ எட்டாத/ அரவு/ அணையோனின்/ ஒயிலினை/

பன்னுக3/ கனுகொனனி/ கன்னுலு/-ஏலே/
நன்கு/ கண்டுகொள்ளாத/ கண்கள்/ எதற்கோ/

கன்னுலு/-ஏலே/ கண்டி/ மின்னுலு/-ஏலே/
கண்கள்/ எதற்கோ/ கண்களின்/ ஒளி/ எதற்கோ/


சரணம்
சரணம் 1
மோஹமுதோ/ நீல/ வாரி வாஹ/ காந்தினி/ கேரின/
பேருவகையுடன்/ நீல/ முகிலின்/ மிளிர்ச்சியினை/ பழிக்கும்/

ஸ்ரீ ஹரினி/ கட்டுகொனனி/ தே3ஹமு/-ஏலே/
ஸ்ரீ ஹரியினை/ அணைத்துக்கொள்ளாத/ மேனி/ எதற்கோ/

தே3ஹமு/-ஏலே/-ஈ/ கே3ஹமு/-ஏலே/ (எ)
மேனி/ எதற்கோ/ இந்த/ இல்லம்/ எதற்கோ/


சரணம் 2
ஸரஸிஜ/ மல்லெ/ துளஸி/ விருவாஜி/ பாரிஜாதபு/
தாமரை/ மல்லிகை/ துளசி/ இருவாட்சி/ பவளமல்லி ஆகிய/

விருலசே/ பூஜிஞ்சனி/ கரமுலு/-ஏலே/
மலர்கொடு/ தொழாத/ கரங்கள்/ எதற்கோ/

கரமுலு/-ஏலே/-ஈ/ காபுரமுலு/-ஏலே/ (எ)
கரங்கள்/ எதற்கோ/ இந்த/ குடும்பம்/ எதற்கோ/


சரணம் 3
மாலிமிதோ/ த்யாக3ராஜுனு/-ஏலின/ ராம/ மூர்தினி/
கனிவுடன்/ தியாகராசனை/ ஆண்ட/ இராம/ மூர்த்தியினை/

லாலிஞ்சி/ பொக33னி/ நாலிக/-ஏலே/
ஏத்தி/ புகழாத/ நா/ எதற்கோ/

நாலிக/-ஏலே/ ஸூத்ர மாலிக/-ஏலே/ (எ)
நா/ எதற்கோ/ செபமாலை/ எதற்கோ/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - மாலிமிதோ - மாலிமினி.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - கன்னுலேலே? - கண்டி மின்னுலேலே? - கண்களெதற்கோ? கண்களின் ஒளியெதற்கோ? - கண் குருடாகவே இருக்கலாம் என்று பொருளாகும்.

2 - மின்னுலேலே - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. 'மின்னுலு' என்ற தெலுங்கு சொல்லுக்கு 'வானம்' என்று பொருளாகும். அப்பொருள் இவ்விடம் பொருந்தாது. எல்லா புத்தகங்களிலும் இச்சொல்லுக்கு 'ஒளி' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. 'ஒளி' என்ற சொல்லுக்கு 'மினுலு' அல்லது 'மினுகுலு' என்பது தெலுங்கு சொல்லாகும். 'ஒளி' என்ற பொருள் இவ்விடம் பொருந்துமாதலால், அங்ஙனமே பொருள் கொள்ளப்பட்டது. 'மின்னுலு' என்பது கவிஞருக்குரித்தான poetic licence-ஆக (விலக்கு) இருக்கலாம்.

Top

4 - நாலிகேலே? - நாவெதறகோ? - இறைவனின் நாமம் செபித்தல், உலகம் முழுவதும், அனைத்து மதங்களுக்கும் பொதுவானதோர் வழிபாட்டு முறை. நாமம் செபித்தல் குறித்து விளக்கம் காணவும்.

இந்த பாடல், 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற நாட்டிய நாடகத்தின் அங்கமாகும். இப்பாடல், பிரகலாதன் இறைவனின் அண்மையில்லாமை குறித்து தன்னையே நொந்துகொள்வதாக அமைந்துள்ளது.

Top


Updated on 25 Dec 2009

No comments: