Sunday, September 20, 2009

தியாகராஜ கிருதி - ராம நினு வினா - ராகம் ஸ1ங்கராப4ரணம் - Rama Ninu Vinaa - Raga Sankarabharanam

பல்லவி
ராம நினு வினா நனு ரக்ஷிம்பனொருல கான

சரணம்
சரணம் 1
தல்லி தண்ட்3ரியன்ன தம்முலு தை3வமு நீவனி
உல்லமுனனுயன்னிட நினு சல்லக3 பா3கு33 ஜூசெத3 (ராம)


சரணம் 2
பாவன நீ ப4க்தி ஸதா3 1பாலிஞ்சுனு மோக்ஷமொஸகு3
மா-வர நீ ஸன்னிதி4னி ப்ரமாணமு ஜேஸி பல்கெத3 (ராம)


சரணம் 3
ஸத்வ கு3ணம்பு3னனுயுபாஸனமொனரிஞ்சிரி பெத்33லு
தத்வமு தெலிஸெனு இக ப4வ தரணோபாயமு நீவனி (ராம)


சரணம் 4
லோகுலு நிஜ தா3ஸுல கனி லோபடு3 து3ரஸூயலதோ
ஸ்ரீ கர நினு 2தூ3ஷிஞ்சின செடி3 போலேரு கானி (ராம)


சரணம் 5
கோரின கோரிகலொஸகே3 ஸ்ரீ ரமண நின்னனிஸ1மு
சேரிதி ஸ1ரணனுகொண்டினி ஸ்ரீ த்யாக3ராஜ நுத (ராம)


பொருள் - சுருக்கம்
இராமா! புனிதனே! மா மணாளா! சீரருள்வோனே! கோரிய கோரிக்கைகளையளிக்கும் இலக்குமி மணாளா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
  • உன்னையன்றி என்னைக் காப்பதற்கு மற்றவரைக் காணேன்;

  • தாய், தந்தை, அண்ணன், தம்பியர், தெய்வம் நீயென உள்ளத்தினில் யாவற்றிலும் உன்னைக் குளுமையாக, நன்கு கண்டேன்;

  • உனது பற்று எவ்வமயமும் பாதுகாக்கும்; வீடருளும்; (இதை) உனது புனித முன்னிலையில் ஆணையிட்டுச் சொன்னேன்;

  • சத்துவ குணத்துடன் (உன்னை) வழிபாடு செய்தனர், சான்றோர்; தத்துவம் தெரிந்தது - இனி பிறவிக்கடலைத் தாண்டுவிக்கும் சாதனம் நீயென;

  • உலகோர், உண்மையான தொண்டர்களைக் கண்டு, உட்படும் தீய பொறாமையினால், உன்னைத் தூற்றினாலும், கேடுறாரன்றோ;

  • உன்னை எவ்வமயமும் சேர்ந்தேன்; புகலெனக் கொண்டேன்.பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ நினு/ வினா/ நனு/ ரக்ஷிம்பனு/-ஒருல/ கான/
இராமா/ உன்னை/ அன்றி/ என்னை/ காப்பதற்கு/ மற்றவரை/ காணேன்/


சரணம்
சரணம் 1
தல்லி/ தண்ட்3ரி/-அன்ன/ தம்முலு/ தை3வமு/ நீவு/-அனி/
தாய்/ தந்தை/ அண்ணன்/ தம்பியர்/ தெய்வம்/ நீ/ என/

உல்லமுனனு/-அன்னிட/ நினு/ சல்லக3/ பா3கு33/ ஜூசெத3/ (ராம)
உள்ளத்தினில்/ யாவற்றிலும்/ உன்னை/ குளுமையாக/ நன்கு/ கண்டேன்/


சரணம் 2
பாவன/ நீ/ ப4க்தி/ ஸதா3/ பாலிஞ்சுனு/ மோக்ஷமு/-ஒஸகு3/
புனிதனே/ உனது/ பற்று/ எவ்வமயமும்/ பாதுகாக்கும்/ வீடு/ அருளும்/

மா/-வர/ நீ/ ஸன்னிதி4னி/ ப்ரமாணமு ஜேஸி/ பல்கெத3/ (ராம)
மா/ மணாளா/ (இதை) உனது/ புனித முன்னிலையில்/ ஆணை இட்டு/ சொன்னேன்/


சரணம் 3
ஸத்வ/ கு3ணம்பு3னனு/-உபாஸனமு/-ஒனரிஞ்சிரி/ பெத்33லு/
சத்துவ/ குணத்துடன்/ (உன்னை) வழிபாடு/ செய்தனர்/ சான்றோர்/

தத்வமு/ தெலிஸெனு/ இக/ ப4வ/ தரண/-உபாயமு/ நீவு/-அனி/ (ராம)
தத்துவம்/ தெரிந்தது/ - இனி/ பிறவிக்கடலை/ தாண்டுவிக்கும்/ சாதனம்/ நீ/ என/


சரணம் 4
லோகுலு/ நிஜ/ தா3ஸுல/ கனி/ லோபடு3/ து3ர்/-அஸூயலதோ/
உலகோர்/ உண்மையான/ தொண்டர்களை/ கண்டு/ உட்படும்/ தீய/ பொறாமையினால்/

ஸ்ரீ/ கர/ நினு/ தூ3ஷிஞ்சின/ செடி3/ போலேரு/ கானி/ (ராம)
சீர்/ அருள்வோனே/ உன்னை/ தூற்றினாலும்/ கேடு/ உறார்/ அன்றோ/


சரணம் 5
கோரின/ கோரிகலு/-ஒஸகே3/ ஸ்ரீ/ ரமண/ நின்னு/-அனிஸ1மு/
கோரிய/ கோரிக்கைகளை/ அளிக்கும்/ இலக்குமி/ மணாளா/ உன்னை/ எவ்வமயமும்/

சேரிதி/ ஸ1ரணு/-அனுகொண்டினி/ ஸ்ரீ த்யாக3ராஜ/ நுத/ (ராம)
சேர்ந்தேன்/ புகல்/ எனக் கொண்டேன்/ ஸ்ரீ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - தூ3ஷிஞ்சின செடி3 போலேரு - தூ3ஷிஞ்சின செடி3 போயேரு : 'செடி3 போலேரு' என்பதற்கு 'கேடு உறார்' என்று பொருளாகும்; 'செடி3 போயேரு' என்பதற்கு 'கேடு உற்றனர்' என்று பொருளாகும். தியாகராஜர், இவ்விடத்தில், 'கேடு உறார்' என்று கூறுவதாகத் தோன்றுகின்றது.

'தூ3ஷிஞ்சின' என்ற சொல் எல்லா புத்தகங்களிலும் சரியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே 'செடி3 போலேரு' என்பதுதான் பொருந்தும். ஆயினும், 'தூ3ஷிஞ்சின' என்பதற்கு பதிலாக, 'தூ3ஷிஞ்சி' என்று கொடுத்திருந்தால், 'செடி3 போயேரு' என்பது பொருந்தலாம் - அதாவது '(உன்னைத்) தூற்றி கேடு உற்றனர்' என்று.

Top

மேற்கோள்கள்
2 - தூ3ஷிஞ்சின செடி3 போலேரு - உன்னைத் தூற்றினாலும் கேடு உறார் - இது குறித்து, பாகவத புராணத்தில் (7-வது புத்தகம், அத்தியாயம் 1) நாரதருக்கும், யுதிஷ்டிரருக்கும், சிசுபாலன், கண்ணனால் கொல்லப்பட்டதைப்பற்றி நடந்த உரையாடலினை நோக்கவும்.

Top

விளக்கம்
1 - பாலிஞ்சுனு மோக்ஷமொஸகு3 - பாதுகாக்கும் வீடருளும். இது ஸம்ஸ்கிருதத்தில் 'பு4க்தி-முக்தி' எனப்படும்.

வீடு - மோக்கம்
சத்துவம் - தூய்மை - முக்குணங்களிலொன்று
தத்துவம் - உட்பொருள்

Top


Updated on 20 Sep 2009

No comments: