Saturday, October 23, 2010

தியாகராஜ கிருதி - ஸங்கீ3த ஞானமு - ராகம் த4ன்யாஸி - Sangita Jnanamu - Raga Dhanyasi

பல்லவி
ஸங்கீ3த ஞானமு ப4க்தி வினா
ஸன்-மார்க3மு கலதே3 மனஸா

அனுபல்லவி
1ப்4ரு2ங்கி3 நடேஸ1 ஸமீரஜ க4டஜ
மதங்க3
2நாரதா3து3லுபாஸிஞ்சே (ஸ)

சரணம்
ந்யாயாந்யாயமு 3தெலுஸுனு ஜக3முலு
4மாயா-மயமனி 3தெலுஸுனு து3ர்-கு3
காயஜாதி3 ஷட்3-ரிபுல 4ஜயிஞ்சு
கார்யமு 3தெலுஸுனு 4த்யாக3ராஜுனிகி (ஸ)


பொருள் - சுருக்கம்
மனமே!

  • இசையறிவு, பக்தியின்றி, நன்னெறி சேர்க்காதே.

  • பிருங்கி முனி, நடேசன், வாயு மைந்தன், குடமுனி, மதங்கர், நாரதர் ஆகியோர் வழிபடும் இசையின் அறிவு, பக்தியின்றி, நன்னெறி சேர்க்காதே.

    • நியாயம், அந்நியாயம் தெரியும்,
    • உலகங்கள் மாயை மயமெனத் தெரியும்,
    • தீய குண காமம் முதலான ஆறு (உட்)பகைவரை வெல்லும் வகை தெரியும்.

  • தியாகராசனுக்கு இசையறிவு, பக்தியின்றி, நன்னெறி சேர்க்காதே.

    (அல்லது)

    • நியாயம், அந்நியாயம் தெரியும்,
    • உலகங்கள் மாயை மயமெனத் தெரியும்,
    • தீய குண காமம் முதலான ஆறு (உட்)பகைவரை வெல்லும் வகை தெரியும் தியாகராசனுக்கு.

  • இசையறிவு, பக்தியின்றி, நன்னெறி சேர்க்காதே.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸங்கீ3த/ ஞானமு/ ப4க்தி/ வினா/
இசை/ யறிவு/ பக்தி/ யின்றி/

ஸன்மார்க3மு/ கலதே3/ மனஸா/
நன்னெறி/ சேர்க்காதே/ மனமே/


அனுபல்லவி
ப்4ரு2ங்கி3/ நட-ஈஸ1/ ஸமீரஜ/ க4டஜ/
பிருங்கி முனி/ நடேசன்/ வாயு மைந்தன்/ குடமுனி/

மதங்க3/ நாரத3/-ஆது3லு/-உபாஸிஞ்சே/ (ஸ)
மதங்கர்/ நாரதர்/ ஆகியோர்/ வழிபடும்/ இசை...


சரணம்
ந்யாய/-அந்யாயமு/ தெலுஸுனு/ ஜக3முலு/
நியாயம்/ அந்நியாயம்/ தெரியும்/ உலகங்கள்/

மாயா/-மயமு/-அனி/ தெலுஸுனு/ து3ர்/-கு3ண/
மாயை/ மயம்/ என/ தெரியும்/ தீய/ குண/

காயஜ/-ஆதி3/ ஷட்3/-ரிபுல/ ஜயிஞ்சு/
காமம்/ முதலான/ ஆறு/ (உட்)பகைவரை/ வெல்லும்/

கார்யமு/ தெலுஸுனு/ த்யாக3ராஜுனிகி/ (ஸ)
வகை/ தெரியும்/ தியாகராசனுக்கு/ இசை...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - உபாஸிஞ்சே - உபாஸிஞ்சு.

4 - மாயா-மயமனி - ஜயிஞ்சு - த்யாக3ராஜுனிகி : மாயா-மயமனே - ஜயிஞ்சே - த்யாக3ராஜுனிகே.

Top

மேற்கோள்கள்
1 - ப்4ரு2ங்கி3 - பிருங்கி முனி - சிவனடியார் - வண்டாக மாறி சிவனை வழிபட்டவர் - பிருங்கி-1 and பிருங்கி-2

1 - மதங்க3 - மதங்கர். மதுரை மீனாட்சி, மதங்க முனிவரின் மகள் எனப்படும் - அதனால் அவளுக்கு 'மாதங்கி' என்று பெயர். காளிதாசரின் 'சியாமளா தண்டக'த்திலும் அங்ஙனமே குறிப்பிடப்பட்டுள்ளது - 'மாதங்க கன்யா' (மாதங்கரின் புதல்வி) என்று. வால்மீகி ராமாயணத்தில், வாலியை சபித்தவருக்கும், மதங்கர் என்றே பெயர்.

பத்தாவது நூற்றாண்டில் வாழ்ந்த, 'ப்3ரு2ஹத்3தே3ஸி1' என்ற இசையைப் பற்றிய நூல் இயற்றிய மதங்கரைப் பற்றிய குறிப்பு

1 - ப்4ரு2ங்கி3 ஸமீரஜ க4டஜ மதங்க3 - பிருங்கி முனிவர், அகத்தியர், மதங்கர் மற்றும் அனுமனைப் பற்றி இசைக்கலைக் குறிப்புக்கள் நோக்கவும்

Top

மதங்கர் -
கந்த னால்வகைப் பால மூலிதப்
பிரபந்தங் கள்தன் பெயராற் செய்து
வாயு மதங்கற் குபதே சித்தனன்
அவனனு மற்குமீ ரொன்பா னாகும்
சித்தர் தமக்குஞ் செப்பினன் றானே. ....44

அனுமன் -
அனுமன் விவாதிகள் கருவ மடங்க
அசல முருகக் குண்டகக் கிரியாவெனும்
இராகம் பாடி யடக்கி மேலும்
சன்னிய ராக மாறாயிரஞ் சமைத்ததற்
கனும கடக மெனும்பெய ரணிந்தனன். ....45

Top

பிருங்கி -
நந்தி நாட்டிய நிருத்திய நிருத்தம்
ஒரோ வொன்றையு மிருவகை யுஞற்றி
அவற்றையுங் கஞ்சக் கருவி யாதிய
வாத்திய விலக்கணம் பிருங்கி முனிவர்
உருத்திர கணிகைய ரவர்சுதர்க் குரைத்தனர். ....55

அகத்தியர் -
அகத்திய னவயவ பேதநா லேழனுள்
ஒரோ வொன்றை யிரண்டின் டுஞற்றி
அவற்றை நான்கொடு நந்நான் காக்கிச்
சிவன்சிவை முறையே வொருமையைத் தெரிந்து
ராச சேகர வழுதிக் கிசைத்தனன். ....56

Top

விளக்கம்
3 - தெலுஸுனு - தெரியும் - எல்லா புத்தகங்களிலும் இச்சொல்லுக்கு, 'தியாகராஜருக்குத் தெரியும்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இந்த கீர்த்தனை, தியாகராஜர், தனது மனதிற்கு அறிவுரையாகக் கூறுவதனால், அங்ஙனம் பொருள் கொள்வது சரியாகாது என்று நான் கருதுகின்றேன். எனினும் இரண்டு விதமாகவும் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

நடேசன் - சிவன்
வாயு மைந்தன் - அனுமன்
குடமுனி - அகத்தியர்
மாயைமயம் - தோன்றி மறையும் தன்மை
ஆறு உட்பகைவர் - இச்சை, கோபம், பேராசை, ஈயாமை, செருக்கு, காழ்ப்பு

Top


Updated on 24 Oct 2010

No comments: