எந்த முத்3தோ3 எந்த ஸொக3ஸோ
எவரி வல்ல வர்ணிம்ப தகு3னே
அனுபல்லவி
எந்த வாரலைன கானி 1காம
சிந்தாக்ராந்துலைனாரு (எ)
சரணம்
2அத்த மீத3 கனுலாஸகு தா3ஸுலை
ஸத்த பா4க3வத வேஸுலைரி
3து3த்த பால ருசி தெலியு ஸாம்யமே
து4ரீணுடௌ3 த்யாக3ராஜ நுதுடு3 (எ)
பொருள் - சுருக்கம்
- பாரஞ் சுமப்போனாம், தியாகராசன் போற்றுவோன், எவ்வளவு கவர்ச்சியோ, எவ்வளவு ஒயிலோ!
- எவரால் வருணிக்க இயலுமோ!
- எப்படிப்பட்டவராயினும், காம எண்ணங்களால் பீடிக்கப் பட்டோராயினர்.
- அத்தை மீது கண்கள், ஆசைக்கடிமைகளாகி;
- (ஆயின்) தூய பாகவதர் வேடமணிந்தனர்.
- பாண்டம், பாலின் சுவையறிதல் போன்றதே!
- எப்படிப்பட்டவராயினும், காம எண்ணங்களால் பீடிக்கப் பட்டோராயினர்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எந்த/ முத்3தோ3/ எந்த/ ஸொக3ஸோ/
எவ்வளவு/ கவர்ச்சியோ/ எவ்வளவு/ ஒயிலோ/
எவரி வல்ல/ வர்ணிம்ப/ தகு3னே/
எவரால்/ வருணிக்க/ இயலுமோ/
அனுபல்லவி
எந்த வாரலு/-ஐன கானி/ காம/
எப்படிப்பட்டவர்/ ஆயினும்/ காம/
சிந்த/-ஆக்ராந்துலு/-ஐனாரு/ (எ)
எண்ணங்களால்/ பீடிக்கப் பட்டோர்/ ஆயினர்/
சரணம்
அத்த/ மீத3/ கனுலு/-ஆஸகு/ தா3ஸுலை/
அத்தை/ மீது/ கண்கள்/ ஆசைக்கு/ அடிமைகளாகி/
ஸத்த/ பா4க3வத/ வேஸுலைரி/
(ஆயின்) தூய/ பாகவதர்/ வேடமணிந்தனர்/
து3த்த/ பால/ ருசி/ தெலியு/ ஸாம்யமே/
பாண்டம்/ பாலின்/ சுவை/ யறிதல்/ போன்றதே/
து4ரீணுடௌ3/ த்யாக3ராஜ/ நுதுடு3/ (எ)
பாரஞ் சுமப்போனாம்/ தியாகராசன்/ போற்றுவோன்/ எவ்வளவு...<
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - காம - காந்த.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
2 - அத்த மீத3 கனுலு - அத்தை மீது கண்கள் - காமத்திற்கு அடிமையாகி, அதனால் மனைவிக்கு அடிமையாகி, அதனால், அத்தை என்ன சொல்வாளோ என அஞ்சி, அத்தையின் சொல்லை மீற இயலாது, என.
3 - து3த்த பால ருசி தெலியு ஸாம்யமே - பாண்டம், பாலின் சுவை யறிதற் போன்றதே. இதையே தமிழ்ச் சித்தர் ‘சிவ வாக்கியர்’ "சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை யறியுமோ?" என்று கூறுவார்.
Top
அனுபல்லவியில் கொடுக்கப்பட்டுள்ள, 'காம எண்ணங்களினால் பீடிக்கப்பட்டோராயினர்' என்பதுடன் இணைத்து நோக்குகையில், 'அங்ஙனம், காம எண்ணங்களினால் பீடிக்கப்பட்டோர், தூய பாகவதர்களாக வேடமிடுவரே யன்றி, உள்ளுறை இறைவனின் கவர்ச்சியினையும், ஒயிலையும் உணர மாட்டார்' என்று பொருள்படும்.
இதனையே, தியாகராஜர், தமது 'ராம நீயெட3' என்ற க2ரஹரப்ரிய என்ற ராக கீர்த்தனையில், 'நாடகத்தில் பெண் வேடமணிவோனுக்கு, கற்பரசியின் உள்ளப்பாங்கு தெரியுமா?' என்று கேட்கின்றார்.
அத்தை - மாமியார்
பாரஞ் சுமப்போன் - உலக பாரஞ் சுமக்கும் இறைவன்
Top
Updated on 06 Feb 2011
No comments:
Post a Comment