பர லோக 1ப4யமு லேக
ப4வ பாஸ1 ப3த்3து4லையேரு
அனுபல்லவி
கரி வாஜி 2ஸ்1ரு2ங்கா3ராராம
ஸி1பி3காது3லெல்ல 3மனகே கலிகெ3னனி (ப)
சரணம்
கொன்ன காந்தலனு கன்ன பி3ட்3ட3லனு
வன்னெ சீரலனு வான கு3டி3ஸெலனு
தின்னகா3 கனி தை3வ லோகமனி
தன்னுகொள்ளலோ த்யாக3ராஜ நுத (ப)
பொருள் - சுருக்கம்
தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
- மறுமையின் அச்சமின்றி, உலக வாழ்க்கைச் சுருக்குக் கயிற்றினில் கட்டுண்டனர்
- கரி, பரி, சிங்கார வனங்கள், சிவிகை, ஆகியவை யாவும் தமக்கேயுண்டானவையென்று,
- மறுமையின் அச்சமின்றி, உலக வாழ்க்கைச் சுருக்கு கயிற்றினில் கட்டுண்டனர்
- கொண்ட மனைவியரையும், ஈன்ற மக்களையும், வண்ணச் சேலைகளையும், மழைக் குடில்களையும்
- திண்ணமெனக் கண்டு, (இதனையே) வானுலக மென்றெண்ணி,
- கொண்ட மனைவியரையும், ஈன்ற மக்களையும், வண்ணச் சேலைகளையும், மழைக் குடில்களையும்
- இழுபறிகளிலே, மறுமையின் அச்சமின்றி, உலக வாழ்க்கைச் சுருக்குக் கயிற்றினில் கட்டுண்டனர்
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பர லோக/ ப4யமு/ லேக/
மறுமையின்/ அச்சம்/ இன்றி/
ப4வ/ பாஸ1/ ப3த்3து4லு-ஐயேரு/
உலக வாழ்க்கை/ சுருக்குக் கயிற்றினில்/ கட்டுண்டனர்/
அனுபல்லவி
கரி/ வாஜி/ ஸ்1ரு2ங்கா3ர/-ஆராம/
கரி/ பரி/ சிங்கார/ வனங்கள்/
ஸி1பி3க/-ஆது3லு/-எல்ல/ மனகே/ கலிகெ3னு/-அனி/ (ப)
சிவிகை,/ ஆகியவை/ யாவும்/ தமக்கே/ உண்டானவை/ என்று/ மறுமையின்...
சரணம்
கொன்ன/ காந்தலனு/ கன்ன/ பி3ட்3ட3லனு/
கொண்ட/ மனைவியரையும்/ ஈன்ற/ மக்களையும்/
வன்னெ/ சீரலனு/ வான/ கு3டி3ஸெலனு/
வண்ண/ சேலைகளையும்/ மழை/ குடில்களையும்/
தின்னகா3/ கனி/ தை3வ/ லோகமு/-அனி/
திண்ணமென/ கண்டு/ (இதனையே) வான்/ உலகம்/ என்றெண்ணி/
தன்னுகொள்ளலோ/ த்யாக3ராஜ/ நுத/ (ப)
இழுபறிகளிலே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ மறுமையின்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில், இப்பாடலின் ராகம், 'நாம நாராயணி' என்று கொடுக்கப்பட்டுள்ளது.
1 - ப4யமு லேக - ப4யமு லேகனே.
2 - ஸ்1ரு2ங்கா3ராராம - ஸ்1ரு2ங்கா3ர ராம : 'ஸ்1ரு2ங்கா3ராராம' (ஸ்1ரு2ங்கா3ர ஆராம) என்பதற்கு 'சிங்கார வனங்கள்' என்றும், 'ஸ்1ரு2ங்கா3ர ராம' என்பதற்கு 'சிங்கார வனிதையர்' என்றும் பொருளாகும். இவ்விடத்தில் 'ஸ்1ரு2ங்கா3ராராம' என்பதே பொருந்தும் என்று கருதுகின்றேன்.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
3 - மனகே கலிகெ3னனி - தமக்கே உண்டானவையென்று - இது குறித்து, ப்3ரு2ஹதா3ரண்ய உபநிடதத்தினில்(II.iv.4), யாக்3ஞ வல்கியர் தமது மனைவி மைத்ரேயிக்கு உபதேசித்தது -
"பிரியமானவளே!
கணவனுக்காக கணவன் விரும்பப்படுவதில்லை; தனக்காக வேண்டியே;
மனைவிக்காக மனைவி விரும்பப்படுவதில்லை; தனக்காக வேண்டியே;
மக்களுக்காக மக்கள் விரும்பப்படுவதில்லை; தனக்காக வேண்டியே;
செல்வத்திற்காகச் செல்வம் விரும்பப்படுவதில்லை; தனக்காக வேண்டியே; .....
யாவருக்காகவும் யாவரும் விரும்பப்படுவதில்லை; தனக்காக வேண்டியே; ....
(தான் என்கின்ற) இந்த ஆன்மா, மைத்ரேயி, கேட்கத்தக்கது, அறியத்தக்கது, சிந்திக்கத்தக்கது, உணரத்தக்கது...."
(ஸ்வாமி மாதவானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)
Top
மறுமை - உடல் வீழ்ந்தபின் ஏற்படும் நிலைகள்.
சிவிகை - பல்லக்கு
வானுலக மென்று - இவ்வுலக இன்பங்களினை.
திண்ணமென - சாரமென என்றும் பொருள் கொள்ளலாம்.
இழுபறிகள் - உடைமைகள் என்றும் நீடிப்பதற்கு.
Top
Updated on 21 Apr 2010
No comments:
Post a Comment