ஏ வரமடு3கு3து3ரா ராம நி(ன்னே)
அனுபல்லவி
பாவனமகு3 நீ பாத3 ப4ஜனமு ஸேயுடகைன
1தோ3வ லேப3ரமைனதி3 தே3வரயிந்து3 நே(னே)
சரணம்
சரணம் 1
ஸ்ரீ ரகு4வர ஸகலாதா4ர நீ மனஸுன
கோரின பனுலனு பத3 2ஸாரஸமுல நா
மனஸாரக3 விட3வனனே ஸாரதர வைராக்3யமு
ஸாரெகு ஸதத க3தி குமாருனி பாலைனதி3 (ஏ)
சரணம் 2
நீல க4னாப4 ஸதா3 காலமு நீ ப4க்துல
ஜாலமுலனு கனி பரிபாலன ஜேயுசு
3நீவோலிககா3 ஜூசு மேலுன கல ஸௌக்2யமு
பா3லுட3கு3 ரிபுக்4னுனி பாலையுண்ட3க3 நி(ன்னே)
சரணம் 3
நீ மஹிமல வினகா3 நாமமுனு தலசகா3
4பூ4மினி பத3 ரேக2லனேமரகனு கனகா3
தாமரஸ நயன கு3ண தா4ம மனஸு கரகே3
ப்ரேம ரஸமு ப4ரத ஸ்வாமி பாலையுண்ட3க3 (ஏ)
சரணம் 4
வாரமு நீது3 மனஸு தா3ரினனுஸரிஞ்சுசு
நேரமு லேகனு ஆஹார ஸுஷுப்துலனு
நிவாரணமு ஜேயு பரிசாரக 5பா4க்3யமலங்காரியகு3
ஸுமித்ர குமாருனி பாலைனதி3 (ஏ)
சரணம் 5
ஸ்ரீ ஹரி ப4ரித ஸ1ர ஸமூஹ ஸதா3 நினு ஹ்ரு2த்3-
கே3ஹமுனனு கனி து3ர்-தா3ஹமுலனு ரோஸி
6விவாஹனுடு3 நீவனு மோஹம்பு3னனு மரசி
ஸோஹமனு ஸுக2மு வைதே3ஹி பாலையுண்ட3க3 (ஏ)
சரணம் 6
ஈ ஜக3தினி கல ஸுக2 ராஜினி மரி 7நிர்ஜர
ராஜ பத3ம்பு3ல நேனீ ஜன்மமுனடு3க3னு
ராஜ வத3ன ஸ்ரீ த்யாக3ராஜுனி மதி3கெப்புடு3
8ராஜ பத2முலைதே ஜயமௌ கானி (ஏ)
பொருள் - சுருக்கம்
- இராமா!
- இறைவா!
- இரகுவரா! யாவற்றிற்கும் ஆதாரமே!
- நீலமுகில் வண்ணா!
- கமலக்கண்ணா! பண்புகளினுறைவிடமே!
- அரி! எண்ணற்ற அம்புகளோனே!
- மதி முகத்தோனே!
- என்ன வரம் வேண்டுவேனய்யா, உன்னிடம்?
- புனிதமான உனது திருவடி பஜனை செய்வதற்கான வழியிங்கு இல்லாதாயிற்று;
- 'உனது மனத்தினில் கோரிய பணிகளினையும்,
- (உனது) திருவடித் தாமரைகளினையும்,
- நான் மனதார விடேன்' எனும் சிறந்த மனத் திண்ணம்,
- எவ்வமயமும், வாயு மைந்தனைச் சேர்ந்ததாகியது.
- எக்காலமும், உனது தொண்டர் குழுமத்தினைக் கண்டு, (அவர்களைப்) பேணிக்கொண்டிருக்க,
- நீ ஒளிந்திருந்து நோக்கும் மேன்மையிலுள்ள சௌக்கியம்
- இளைஞனான சத்துருக்கினனைச் சேர்ந்ததாகியது.
- உனது மகிமைகளைக் கேட்பதில்,
- (உனது) நாமத்தினை நினைப்பதில்,
- தரையில் (உனது) திருவடிச் சுவடுகளினைத் தவறாது காண்பதில் (உள்ள),
- உள்ளம் உருகும் பேரன்புச் சுவை, பரத சுவாமியைச் சேர்ந்ததாகியது.
- நாளும், உனது மனப் போக்கினை, பிழைகளின்றி, அனுசரித்துக் கொண்டு,
- உணவு, உறக்கங்களை நிவாரணம் செய்யும், திருத்தொண்டெனும் பேறு,
- அலங்காரியான, சுமித்திரை மைந்தனைச் சேர்ந்ததாகியது.
- எவ்வமயமும் உன்னை இதயக் கோயிலில் கண்டு,
- இழிந்த வேட்கைகளைத் துறந்து,
- திருமணமானவன் நீயெனும் மோகத்தினையும் மறந்து,
- 'அவனே நான்' என்றுணரும் சுகம், வைதேகியைச் சேர்ந்ததாகியது.
- இப்புவியினிலுள்ள இன்பங்களையோ அன்றி
- மூப்பற்றோர் தலைவன் பதவியையோ
- 'உனது மனத்தினில் கோரிய பணிகளினையும்,
- நானிந்தப் பிறவியினில் வேண்டேன்;
- தியாகாராசனின் உள்ளத்திற்கெப்போழ்தும்.
- அரச பாட்டையானால் மட்டுமே, வெற்றி நண்ணும்.
- எனவே, என்ன வரம் வேண்டுவேனய்யா, உன்னிடம்?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஏ/ வரமு/-அடு3கு3து3ரா/ ராம/ நின்னு/-(ஏ)
என்ன/ வரம்/ வேண்டுவேனய்யா/ இராமா/ உன்னிடம்/
அனுபல்லவி
பாவனமகு3/ நீ/ பாத3/ ப4ஜனமு/ ஸேயுடகைன/
புனிதமான/ உனது/ திருவடி/ பஜனை/ செய்வதற்கான/
தோ3வ/ லேப3ரமு/-ஐனதி3/ தே3வர/-இந்து3/ நேனு/-(ஏ)
வழி/ இல்லாது/ ஆயிற்று/ இறைவா/ இங்கு/ நான்/ என்ன வரம்...
சரணம்
சரணம் 1
ஸ்ரீ ரகு4வர/ ஸகல/-ஆதா4ர/ நீ/ மனஸுன/
ஸ்ரீ ரகுவரா/ யாவற்றிற்கும்/ ஆதாரமே/ 'உனது/ மனத்தினில்/
கோரின/ பனுலனு/ பத3/ ஸாரஸமுல/ நா/
கோரிய/ பணிகளினையும்/ (உனது) திருவடி/ தாமரைகளினையும்/ நான் (எனது)/
மனஸாரக3/ விட3வனு/-அனே/ ஸாரதர/ வைராக்3யமு/
மனதார/ விடேன்'/ எனும்/ சிறந்த/ மனத் திண்ணம்/
ஸாரெகு/ ஸதத க3தி/ குமாருனி/ பாலு/-ஐனதி3/ (ஏ)
எவ்வமயமும்/ வாயு/ மைந்தனை/ சேர்ந்தது/ ஆகியது/
சரணம் 2
நீல/ க4ன/-ஆப4/ ஸதா3 காலமு/ நீ/ ப4க்துல/
நீல/ முகில்/ வண்ணா/ எக்காலமும்/ உனது/ தொண்டர்/
ஜாலமுலனு/ கனி/ பரிபாலன/ ஜேயுசு/
குழுமத்தினை/ கண்டு/ (அவர்களைப்) பேணிக்கொண்டிருக்க/
நீவு/-ஓலிககா3/ ஜூசு/ மேலுன/ கல/ ஸௌக்2யமு/
நீ/ ஒளிந்திருந்து/ நோக்கும்/ மேன்மையில்/ உள்ள/ சௌக்கியம்/
பா3லுட3கு3/ ரிபுக்4னுனி/ பாலை/-உண்ட3க3/ நின்னு/-(ஏ)
இளைஞனான/ சத்துருக்கினனை/ சேர்ந்ததாக/ இருக்க/ உன்னிடம்/ என்ன வரம்...
சரணம் 3
நீ/ மஹிமல/ வினகா3/ நாமமுனு/ தலசகா3/
உனது/ மகிமைகளை/ கேட்பதில்/ (உனது) நாமத்தினை/ நினைப்பதில்/
பூ4மினி/ பத3/ ரேக2லனு/-ஏமரகனு/ கனகா3/
தரையில்/ (உனது) திருவடி/ சுவடுகளினை/ தவறாது/ காண்பதில்/
தாமரஸ/ நயன/ கு3ண/ தா4ம/ மனஸு/ கரகே3/
கமல/ கண்ணா/ பண்புகளின்/ உறைவிடமே/ (உள்ள) உள்ளம்/ உருகும்/
ப்ரேம/ ரஸமு/ ப4ரத/ ஸ்வாமி/ பாலை/-உண்ட3க3/ (ஏ)
பேரன்பு/ சுவை/ பரத/ சுவாமியை/ சேர்ந்ததாக/ இருக்க/ என்ன வரம்...
சரணம் 4
வாரமு/ நீது3/ மனஸு/ தா3ரினி/-அனுஸரிஞ்சுசு/
நாளும்/ உனது/ மன/ போக்கினை/ அனுசரித்துக் கொண்டு/
நேரமு/ லேகனு/ ஆஹார/ ஸுஷுப்துலனு/
பிழைகள்/ இன்றி/ உணவு/ உறக்கங்களை/
நிவாரணமு/ ஜேயு/ பரிசாரக/ பா4க்3யமு/-
நிவாரணம்/ செய்யும்/ திருத்தொண்டெனும்/ பேறு/
அலங்காரியகு3/ ஸுமித்ர/ குமாருனி/ பாலு/-ஐனதி3/ (ஏ)
அலங்காரியான/ சுமித்திரை/ மைந்தனை/ சேர்ந்தது/ ஆனது/
சரணம் 5
ஸ்ரீ ஹரி/ ப4ரித/ ஸ1ர ஸமூஹ/ ஸதா3/ நினு/ ஹ்ரு2த்3-/
ஸ்ரீ அரி/ எண்ணற்ற/ அம்புகளோனே/ எவ்வமயமும்/ உன்னை/ இதய/
கே3ஹமுனனு/ கனி/ து3ர்/-தா3ஹமுலனு/ ரோஸி/
கோயிலில்/ கண்டு/ இழிந்த/ வேட்கைகளை/ துறந்து/
விவாஹனுடு3/ நீவு/-அனு/ மோஹம்பு3னனு/ மரசி/
திருமணமானவன்/ நீ/-எனும்/ மோகத்தினையும்/ மறந்து/
ஸ/-அஹம்/-அனு/ ஸுக2மு/ வைதே3ஹி/ பாலை/-உண்ட3க3/ (ஏ)
'அவனே/ நான்/ என்று உணரும்/ சுகம்/ வைதேகியை/ சேர்ந்ததாக/ இருக்க/ என்ன வரம்...
சரணம் 6
ஈ/ ஜக3தினி/ கல/ ஸுக2 ராஜினி/ மரி/ நிர்ஜர/
இந்த/ புவியினில்/ உள்ள/ இன்பங்களையோ/ அன்றி/ மூப்பற்றோர்/
ராஜ/ பத3ம்பு3ல/ நேனு/-ஈ/ ஜன்மமுன/-அடு3க3னு/
தலைவன்/ பதவியையோ/ நான்/ இந்த/ பிறவியினில்/ வேண்டேன்/
ராஜ/ வத3ன/ ஸ்ரீ த்யாக3ராஜுனி/ மதி3கி/-எப்புடு3/
மதி/ முகத்தோனே/ ஸ்ரீ தியாகாராசனின்/ உள்ளத்திற்கு/ எப்போழ்தும்/
ராஜ/ பத2முலைதே/ ஜயமௌ/ கானி/ (ஏ)
அரச/ பாட்டையானால்/ வெற்றி/ நண்ணும்/ மட்டும்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - தோ3வ லேப3ரமைனதி3 - தோ3வலே பரமைனதி3 - தோ3வ லேபரமைனதி3 : எல்லா புத்தகங்களிலும், 'வழி இல்லாமற்போயிற்று' என்றுதான் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அதனால், 'தோ3வ லேப3ரமைனதி3' என்பதே ஏற்கப்பட்டது.
2 - ஸாரஸமுல - ஸாரஸமுல - இவ்விடத்தில், 'ஸாரஸமுல' என்பதே பொருந்தும்.
3 - ஓலிககா3 - போலிககா3 : 'போலிககா3' என்ற சொல் இவ்விடத்தில் பொருந்தாது.
Top
5 - அலங்காரியகு3 - அலமு காரியமு : 'அலமு காரியமு' என்பதற்கு ஏதும் பொருள் இருப்பதாகத் தெரியவில்லை. 'அலங்காரி' என்பதற்கு, 'பணிகளை மெச்சத்தகு வகையில் இயற்றுபவன்' என்று பொருள் கொள்ளலாம். வால்மீகி ராமாயணத்தில் (ஆரண்ய காண்டம், 15-வது அத்தியாயம், செய்யுட்கள் 28 - 31), ராமன், இலக்குவனுடைய திறமையினை மெச்சி, சீதையிடம் உரைப்பதனை இதற்கோர் உதாரணமாகக் கொள்ளலாம்.
அனைத்து சரணங்களிலும், கடைசி சொற்களான, 'பாலையுண்ட3க3', 'பாலைனதி3', 'நின்னு', ஒரே மாதிரியாக, புத்தகங்களில் கொடுக்கப்படவில்லை. அதனால், திரு TK கோவிந்த ராவ் அவர்களின் 'Compositions of Tyagaraja' என்ற புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை அனுசரிக்கப்பட்டது.
Top
மேற்கோள்கள்
4 - பூ4மினி பத3 ரேக2லனேமரகனு கனகா3 - தரையில் (உனது) திருவடிச் சுவடுகளினைத் தவறாது காண்பதில் : பரதன், ராமனைக் காட்டிலிருந்து அழைத்து வருவதற்காக, ராமன் சென்ற வழியிலேயே சென்று, அவனைக் கண்டுபிடித்த நிகழ்ச்சியினை, தியாகராஜர், இங்கு குறிப்பிடுவதாகக் கருதுகின்றேன்.
Top
7 - நிர்ஜர ராஜ பத3ம்பு3ல - இந்திரப் பதவியும் வேண்டேன். இது குறித்து வைணவப் பெருந்தகை, தொண்டரடிப் பொடியாழ்வார், அரங்கனைப் புகழ்ந்து இயற்றிய திருமாலை குறிப்பிடத்தக்கது -
பச்சை மாமலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா! அமரர் ஏறே! ஆயர் தம் கொழுந்தே! என்னும்,
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்,
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகர் உளானே! (2)
திருமாலை - PDF version
8 - ராஜ பத2மு - அரசபாட்டை - தியாகராஜர், 'சக்கனி ராஜ மார்க3மு' என்று கீர்த்தனையில், 'இராமனின் பக்தியெனும் அரச பாட்டையிருக்க (ராமுனி ப4க்தியனே ராஜ மார்க3முலுண்ட3க3), சந்துகளில் நுழைவதேன் (ஸந்து3ல தூ3ரனேல)?' என்று கேட்கின்றார்.
Top
விளக்கம்
1 - தோ3வ லேப3ரமைனதி3 - வழி இல்லாதாயிற்று. தியாகராஜர், முதல் ஐந்து சரணங்களிலும், இறைவனிடம் பற்று கொண்டவன் விரும்பும் பணிகளை விவரித்து, அவற்றையெல்லாம், இராமனைச் சேர்ந்தோர் தமதாக்கிக் கொண்டபின், தமக்கேதும் வழியில்லை என்று கூறி, கடைசி சரணத்தில், தான் விரும்பவதும், விரும்பாததும் என்ன என்றும் விவரிக்கின்றார்.
Top
6 - விவாஹனுடு3 - திருமணமானவன். சீதை, இராமனை, கணவனாகக் கருதி, அவனுடன் இல்வாழ்வின் இன்பங்களைத் துய்ப்பதைக் காட்டிலும், அவனை (ராமனை) தனது உள்ளத்தில் கண்டு, அவனுடன் 'ஸோஹம்' (அவனே நான்) என்ற உள்ளப் பாங்கினில், ஒன்றியிருப்பதனையே விரும்புவதாகக் கூறுகின்றார். சீதை, மனைவியை விட, தொண்டராக இருப்பது உயர்ந்தது என்று உணர்வதாகக் கூறி, தியாகராஜர், தொண்டனை, இறைவனின் இல்லாளுக்கும் மேலாக உயர்த்திவிட்டார்.
சுமித்திரை மைந்தன் - இலக்குவன்
மூப்பற்றோர் - வானோர் - அவர்தம் தலைவன் - இந்திரன்
அவனே நான் - 'ஸோஹம்' எனப்படும் பரம்பொருளுடன் ஒன்றிய நிலை
வைதேகி - சீதை
Top
Updated on 28 May 2010
No comments:
Post a Comment