Wednesday, November 26, 2008

த்3வைதமு ஸுக2மா - ராகம் ரீதி கௌ3ள - Dvaitamu Sukhama - Raga Reeti Gaula

த்3வைதமு ஸுக2மா - ராகம் ரீதி கௌ3ள - dvaitamu sukhamA - rAga rIti gauLa



பல்லவி
1த்3வைதமு ஸுக2மா அத்3வைதமு ஸுக2மா

அனுபல்லவி
2சைதன்யமா வினு ஸர்வ ஸாக்ஷி
விஸ்தாரமுகா3னு தெல்புமு நாதோ (த்3வை)

சரணம்
33ன பவன தபன 3பு4வனாத்3யவனிலோ
நக34ராஜ ஸி1வேந்த்3ராதி3 ஸுருலலோ
43வத்34க்த வராக்3ரேஸருலலோ
பா33 ரமிஞ்சே 4த்யாக3ராஜார்சித (த்3வை)


பொருள் - சுருக்கம்
கேள், சைதன்யமே! யாவற்றிற்கும் சாட்சியே! ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், புவி ஆகியவற்றிலும், அரி, பிரமன், அரன், இந்திரன் முதலான வானோரிலும், கடவுள் பக்தர்களில் தலைசிறந்தோரிலும், நன்கு திருவிளையாடல் புரியும், தியாகராசனால் தொழப் பெற்றோனே!
துவைதம் சுகமா அன்றி அத்துவைதம் சுகமா? விவரமாகத் தெரிவிப்பாயெனக்கு.


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
த்3வைதமு/ ஸுக2மா/ அத்3வைதமு/ ஸுக2மா/
துவைதம்/ சுகமா/ அத்துவைதம்/ சுகமா/


அனுபல்லவி
சைதன்யமா/ வினு/ ஸர்வ/ ஸாக்ஷி/
சைதன்யமே/ கேள்/ யாவற்றிற்கும்/ சாட்சியே/

விஸ்தாரமுகா3னு/ தெல்புமு/ நாதோ/ (த்3வை)
விவரமாக/ தெரிவிப்பாய்/ எனக்கு/


சரணம்
33ன/ பவன/ தபன/ பு4வன/-ஆதி3/-அவனிலோ/
ஆகாயம்/ காற்று/ நெருப்பு/ நீர்/ ஆகியவற்றிலும்/ புவி/

நக3/ த4ர/-அஜ/ ஸி1வ/-இந்த்3ர/-ஆதி3/ ஸுருலலோ/
மலையை/ சுமந்தோன்/ பிரமன்/ சிவன்/ இந்திரன்/ முதலான/ வானோரிலும்/

43வத்3/-ப4க்த/ வர-அக்3ரேஸருலலோ/
கடவுள்/ பக்தர்களில்/ தலைசிறந்தோரிலும்/

பா33/ ரமிஞ்சே/ த்யாக3ராஜ/-அர்சித/ (த்3வை)
நன்கு/ திருவிளையாடல் புரியும்/ தியாகராசனால்/ தொழப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
4 - த்யாக3ராஜார்சித - த்யாக3ராஜ நுத

மேற்கோள்கள்

விளக்கம்
1 - த்3வைதமு - அத்3வைதமு - த்வைதம் - பரமான்மாவும் சீவான்மாவும் வேறெனல்; அத்வைதம் - பரமான்மாவும் சீவான்மாவும் ஒன்றேயெனல். பல பாடல்களில் தியாகராஜர் இதுபற்றி கேள்விகள் எழுப்பியுள்ளார். ஆங்கில மொழிபெயர்ப்பினில் விவரங்கள் தரப்பட்டுள்ளன - அவற்றினை நோக்கவும்.
2 - சைதன்யமா - ஸர்வ ஸாக்ஷி - சைதன்யம் - தன்னுணர்வு; தியாகராஜர் ராமன் தனக்கு விருப்பமான (இஷ்ட) தெய்வம் என்று குறிப்பிட்டுள்ளார; ஆனால் அவர் ராமனை பரம்பொருளாக வழிபட்டார்.
3 - பு4வன - பொதுவாக இச்சொல்லுக்கு இவ்விடத்தில் 'நீர்' எனப் பொருள்.
ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், புவி - ஐம்பூதங்கள்
Top

2 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே

பொருள் - சுருக்கம் பகுதியில் ‘பத்தர்களில்’ என்பது ‘பக்தர்களில்’ என்று இருக்கவேண்டும்.
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

பிழையைத் திருத்திவிட்டேன்.
சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

வணக்கம்
கோவிந்தன்