Monday, September 14, 2009

தியாகராஜ கிருதி - மரியாத3 காது3ரா - ராகம் ஸ1ங்கராப4ரணம் - Mariyaada Kaaduraa - Raga Sankarabharanam

பல்லவி
மரியாத3 காது3ரா

அனுபல்லவி
கருணாகர வாரினி வீரினி
ஸரி ஜேஸி சூசுசுண்டு3னதி3 (ம)

சரணம்
ராக3மு தாளமு ரக்தி ப4க்தி ஞான
யோக3மு 1மரியனுராக3மு லேனி
2பா43வதுலுத3ர ஸ1யனுலே கானி
த்யாக3ராஜார்சித தாரக சரித (ம)


பொருள் - சுருக்கம்
கருணாகரா! தியாகராசன் தொழும், கடத்துவிக்கும் சரிதத்தோனே!
  • மரியாதையன்றய்யா;

  • அவர்களையும் இவர்களையும் சரி செய்து நோக்கிக்கொண்டிருத்தல் மரியாதையன்றய்யா;

  • இராகம், தாளம், கனிந்த பக்தி (கூடிய) ஞான யோகம், அனுராகம் (இவை) அற்ற பாகவதர்கள் உதரத்தினில் உறங்குபவர்களேயன்றோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மரியாத3/ காது3ரா/
மரியாதை/ அன்றய்யா/


அனுபல்லவி
கருணாகர/ வாரினி/ வீரினி/
கருணாகரா/ அவர்களையும்/ இவர்களையும்/

ஸரி/ ஜேஸி/ சூசுசு/-உண்டு3னதி3/ (ம)
சரி/ செய்து/ நோக்கிக்கொண்டு/-இருத்தல்/ மரியாதை...


சரணம்
ராக3மு/ தாளமு/ ரக்தி/ ப4க்தி/ ஞான/
இராகம்/ தாளம்/ கனிந்த/ பக்தி (கூடிய)/ ஞான/

யோக3மு/ மரி/-அனுராக3மு/ லேனி/
யோகம்/ மேலும்/ அனுராகம்/ (இவை) அற்ற/

பா43வதுலு/-உத3ர/ ஸ1யனுலே/ கானி/
பாகவதர்கள்/ உதரத்தினில்/ உறங்குபவர்களே/ அன்றோ/

த்யாக3ராஜ/-அர்சித/ தாரக/ சரித/ (ம)
தியாகராசன்/ தொழும்/ கடத்துவிக்கும்/ சரிதத்தோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
1 - அனுராக3மு - அனுராகம் - இறைவனிடம் இச்சைகளற்ற ஆழ்ந்த காதல். தியாகராஜர் தனது 'அனுராக3மு லேனி மனஸு' என்ற கீர்த்தனையில், இறைவனிடம் அனுராகம் ஏற்படாவிட்டால், மெய்யறிவு பெற முடியாது, என்கிறார்.

2 - உத3ர ஸ1யனுலே - உதரத்தினில் உறங்குதல் - மறுபடியும் தாய் வயிற்றினில் பிறத்தல். ஆதி சங்கரர் இயற்றிய 'ப4ஜ கோ3விந்த3ம்' என்ற பக்தி நூலில் 'புனரபி ஜனனம்' என்ற செய்யுளை நோக்கவும் -

மறுபடியும் பிறப்பு; மறுபடியும் இறப்பு;
மறுபடியும் தாயின் வயிற்றல் உறக்கம்;
இச்சமுசாரம் கடப்பதற்கு மிக்கரியது;
ஓ முராரி! அளவற்ற உனது கிருபையினால் காப்பாய் (என்னை).

ஞான யோகம் - கண்ணன் கீதையில் பகன்ற, இறைவனை அடையும், அறிவு நெறி

கடத்துவிக்கும் - பிறவிக்கடலைக் கடத்துவித்தல்

Top


Updated on 14 Sep 2009

No comments: