ஸாமஜ வர க3மன ஸாது4
ஹ்ரு2த்ஸாரஸாப்3ஜ பால காலாதீத விக்2யாத
அனுபல்லவி
1ஸாம நிக3மஜ ஸுதா4 மய கா3ன விசக்ஷண
கு3ண ஸீ1ல த3யாலவால மாம் பாலய (ஸா)
சரணம்
2வேத3 ஸி1ரோ மாத்ரு2ஜ ஸப்த-ஸ்வர
3நாதா3சல தீ3ப ஸ்வீக்ரு2த
யாத3வ குல முரளீ வாத3ன வினோத3
4மோஹன கர த்யாக3ராஜ வந்த3னீய (ஸா)
பொருள் - சுருக்கம்
களிற்றின் சிறந்த நடையோனே! நல்லோரிதயக் கமலத்தைப் பேணுவோனே! காலத்திற்கப்பாற்பட்டோனே! புகழுடைத்தோனே!
சாம வேதத்துதித்த அமிழ்த மயமான இசை வல்லுநனே! நற்பண்புகளோனே! கருணைக் கடலே!
மறைமுடியின் அன்னை ஈன்ற ஏழ் பதமெனும் நாதக்குன்றின் (மேலிட்ட) விளக்கே! யாதவ குலத் தோன்றலே! குழலிசைப்போனே! விளையாடலாக சொக்கவைப்போனே! தியாகராசனால் வந்திக்கப்பெற்றோனே!
என்னைக் காப்பாய்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸாமஜ/ வர/ க3மன/ ஸாது4/ ஹ்ரு2த்-/
களிற்றின்/ சிறந்த/ நடையோனே/ நல்லோர்/ இதய/
ஸாரஸ-அப்3ஜ/ பால/ கால/-அதீத/ விக்2யாத/
கமலத்தை/ பேணுவோனே/ காலத்திற்கு/ அப்பாற்பட்டோனே/ புகழுடைத்தோனே/
அனுபல்லவி
ஸாம/ நிக3மஜ/ ஸுதா4/ மய/ கா3ன/ விசக்ஷண/
சாம/ வேதத்துதித்த/ அமிழ்த/ மயமான/ இசை/ வல்லுநனே/
கு3ண ஸீ1ல/ த3யா/-ஆலவால/ மாம்/ பாலய/
நற்பண்புகளோனே/ கருணை/ கடலே/ என்னை/ காப்பாய்/
சரணம்
வேத3/ ஸி1ரோ/ மாத்ரு2ஜ/ ஸப்த/-ஸ்வர/
மறை/ முடியின்/ அன்னை ஈன்ற/ ஏழ்/ பதமெனும்/
நாத3/-அசல/ தீ3ப/ ஸ்வீக்ரு2த/
நாத/ குன்றின்/ (மேலிட்ட) விளக்கே/ தோன்றலே/
யாத3வ/ குல/ முரளீ/ வாத3ன/ வினோத3/
யாதவ/ குல/ குழல்/ இசைப்போனே/ விளையாடலாக/
மோஹன கர/ த்யாக3ராஜ/ வந்த3னீய/
சொக்க வைப்போனே/ தியாகராசனால்/ வந்திக்கப்பெற்றோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
4 - மோஹன கர - மோஹனாகார
மேற்கோள்கள்
1 - ஸாம நிக3மஜ - சாம வேதத்துதித்த - இசை, சாம வேதத்தினின்றும் தோன்றியது என்கிறார் தியாகராஜர். பஞ்சாபகேச ஐயர் எழுதியுள்ள 'கர்நாடக ஸங்கீத ஸாஸ்திரம்' என்ற புத்தகத்தில் - 'ருக்', 'யஜூர்' வேதங்களில், மூன்று சுரங்களே பயன்படுத்தப்படுகின்றனவென்றும், சாம வேதத்தில் ஏழு சுரங்களும் பயன் படுத்தப்படுகின்றன என்றும் எழுதியுள்ளார். மேலும் சாம வேதத்திற்கும் ஸங்கீதத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து அறியவும்.
Top
விளக்கம்
2 - வேத3 ஸி1ரோ மாத்ரு2ஜ - மறை முடியின் அன்னை ஈன்ற - உபநிடதங்கள் மறை முடிவெனக் கருதப்படும். ஏழு சுரங்களும் நாதோங்காரமெனும் பிரணவத்தினின்றும் தோன்றியதாக தியாகராஜர் பல கீர்த்தனைகளில் கூறியுள்ளார். அதன்படி - மறைமுடியின் அன்னை எனப்படுவது நாதோங்காரம் எனக்கொள்ள வேண்டும். ஆனால் காயத்திரி வேதங்களின் அன்னையாக கருதப்படும். காயத்திரி மந்திரமும் பிரணவத்தினை ஆதாரமாகக் கொண்டுள்ளதால் இங்கு முரண்பாடு காணப்படுகின்றது. மறைமுடியின் அன்னை நாதோங்காரம் என்றால் நாதோங்காரமும் காயத்திரியும் ஒன்றே எனப் பொருள் கொள்ள நேரும்.
3 - நாதா3சல தீ3ப - தமிழில் 'குன்றின் மேலிட்ட விளக்கு' என்னும் வழக்கினை நோக்கவும்.
ஏழ் பதம் - இசையின் ஏழு சுரங்கள்
சொக்கவைப்போன் - ஆய்ச்சியரையும் உலகோரையும்
Top
2 comments:
அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
கண்ணனை யாதவகுலத்தோன்றல் என்பது சரியா. ஸ்வீக்ரு2த யாத3வ குல என்பது யாதவகுலத்தை நீயாக விரும்பி ஏற்றுக்கொண்டாய் என்று பொருள் தராதா?
வணக்கம்
கோவிந்தசாமி
Lord Sri Krishna selected yathava kula and took avatharam.
Post a Comment