Tuesday, November 9, 2010

தியாகராஜ கிருதி - தெலிய லேரு ராம - ராகம் தே4னுக - Teliya Leru Rama - Raga Dhenuka

பல்லவி
தெலிய லேரு ராம ப4க்தி மார்க3முனு

அனுபல்லவி
இலனந்தட திருகு3சுனு
1கலுவரிஞ்சேரு கானி (தெ)

சரணம்
வேக3 லேசி நீட முனிகி3 பூ4தி பூஸி
2வேள்ளனெஞ்சி 3வெலிகி ஸ்1லாக4னீயுலை
பா33 பைகமார்ஜன லோலுலைரே
கானி த்யாக3ராஜ வினுத (தெ)


பொருள் - சுருக்கம்
இராமா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!

  • தெரிந்திலரே, பக்தி நெறியினை.

    • புவியெங்கும் திரிந்துகொண்டு, பிதற்றினரேயன்றி,

  • தெரிந்திலரே, பக்தி நெறியினை

    • விடியற்காலை யெழுந்து, நீரில் மூழ்கி (யெழுந்து), நீறு பூசி, விரல்களை யெண்ணி,
    • வெளிப் பார்வைக்கு, போற்றத் தக்கோராகி,
    • நன்றாக பணம் ஈட்டும் ஆசைகொண்டவராகினரே யன்றி,

  • தெரிந்திலரே, பக்தி நெறியினை.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தெலிய லேரு/ ராம/ ப4க்தி/ மார்க3முனு/
தெரிந்திலரே/ இராமா/ பக்தி/ நெறியினை/


அனுபல்லவி
இலனு/-அந்தட/ திருகு3சுனு/
புவி/ எங்கும்/ திரிந்துகொண்டு/

கலுவரிஞ்சேரு/ கானி/ (தெ)
பிதற்றினரே/ யன்றி/ தெரிந்திலரே...


சரணம்
வேக3/ லேசி/ நீட/ முனிகி3/ பூ4தி/ பூஸி/
விடியற்காலை/ யெழுந்து/ நீரில்/ மூழ்கி (யெழுந்து)/ நீறு/ பூசி/

வேள்ளனு/-எஞ்சி/ வெலிகி/ ஸ்1லாக4னீயுலை/
விரல்களை/ யெண்ணி/ வெளிப் பார்வைக்கு/ போற்றத் தக்கோராகி/

பா33/ பைகமு/-ஆர்ஜன/ லோலுலு/-ஐரே/
நன்றாக/ பணம்/ ஈட்டும்/ ஆசைகொண்டவர்/ ஆகினரே/

கானி/ த்யாக3ராஜ/ வினுத/ (தெ)
அன்றி/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ தெரிந்திலரே...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - கலுவரிஞ்சேரு - கலுவரிஞ்செத3ரு.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
2 - வேள்ளனெஞ்சி - விரல்களினையெண்ணி - ஜபம் செய்தல் - இவ்விடத்தில், மன ஈடுபாடு இன்றி, இயந்திரம் போன்று, ஜபம் செய்தலைக் குறிக்கும்.

3 - வெலிகி - தெலுங்கில், 'வெலிகி' (வெளிப் பார்வைக்கு) என்றும், 'வெலிகி3' (திகழ்ந்து) என்றும் இரண்டு சொற்கள் உண்டு. இவ்விடத்தில், 'வெலிகி' (வெளிப் பார்வைக்கு) என்பதுதான் பொருந்தும். எனவே, சொல்லின் கடைசியில் உள்ள 'கி' என்பதனை 'கி3' என்று மாற்றக்கூடாது.

Top


Updated on 09 Nov 2010

No comments: