களல 1நேர்சினா முனு ஜேஸினதி3
கா3கயேமி 23அரவை நாலுகு (களல)
அனுபல்லவி
கலிமி லேமுலகு காரணம்பு3 நீவே
கருண ஜூட3வே 3கடு3பு கொரகே (க)
சரணம்
கோரி 4நூவுல கொண்ட3 தீஸி 5ஸிங்க3ரி முனி
கூர்மி பு4ஜிஞ்செனா 6வைரி தம்முடு3
ஸாரமைன ரங்க3னியில்லு ஜேர்செனா
ஸரஸ த்யாக3ராஜ வினுத ப்3ரோவவே (க)
பொருள் - சுருக்கம்
இனிய, தியாகராசனால் போற்ற பெற்றோனே!
- வயிற்றுக்காக, அறுபத்து நான்கு கலைகள் கற்றாலும், முன்பு செய்தவை யன்றி மற்றென்ன?
- செல்வத்திற்கும் வறுமைக்கும் காரணம் நீயே.
- கோரி எள் மலையைப் பெற்று, சிங்கரி முனி, விரும்பியருந்தினானா?
- (உனது) பகைவனின் தம்பி, அருமையான அரங்கனை வீடு சேர்த்தானா?
- கோரி எள் மலையைப் பெற்று, சிங்கரி முனி, விரும்பியருந்தினானா?
- கருணை காட்டுவாயய்யா.
- காப்பாயய்யா.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
களல/ நேர்சினா/ முனு/ ஜேஸினதி3/
கலைகள்/ கற்றாலும்/ முன்பு/ செய்தவை/
கா3க/-ஏமி/ அரவை/ நாலுகு3/ (க)
அன்றி/ மற்றென்ன/ அறுபத்து/ நான்கு/ கலைகள்...
அனுபல்லவி
கலிமி/ லேமுலகு/ காரணம்பு3/ நீவே/
செல்வத்திற்கும்/ வறுமைக்கும்/ காரணம்/ நீயே/
கருண/ ஜூட3வே/ கடு3பு கொரகே/ (க)
கருணை/ காட்டுவாயய்யா/ வயிற்றுக்காக/ கலைகள்...
சரணம்
கோரி/ நூவுல/ கொண்ட3/ தீஸி/ ஸிங்க3ரி/ முனி/
கோரி/ எள்/ மலையை/ பெற்று/ சிங்கரி/ முனி/
கூர்மி/ பு4ஜிஞ்செனா/ வைரி/ தம்முடு3/
விரும்பி/ அருந்தினானா/ (உனது) பகைவனின்/ தம்பி/
ஸாரமைன/ ரங்க3னி/-இல்லு/ ஜேர்செனா/
அருமையான/ அரங்கனை/ வீடு/ சேர்த்தானா/
ஸரஸ/ த்யாக3ராஜ/ வினுத/ ப்3ரோவவே/ (க)
இனிய/ தியாகராசனால்/ போற்ற பெற்றோனே/ காப்பாயய்யா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நேர்சினா - எல்லா புத்தகங்களிலும், 'நேர்சின' என்று கொடுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில், 'நேர்சினா' என, சொல்லின் கடைசி உயிரெழுத்தினை நீட்டியே பொருள் கொள்ள இயலும்.
3 - கடு3பு கொரகே - கடு3பு கொரகை - கடு3பு கோஸமை.
4 - நூவுல - நூல : 'நூல' என்பது பேச்சு வழக்கில் இருக்கலாம்.
5 - ஸிங்க3ரி - ஸிங்கா3ரி.
Top
மேற்கோள்கள்
2 - அரவை நாலுகு3 களல - அறுபத்து நான்கு கலைகள் - லலிதா ஸஹஸ்ர நாமத்தில், அம்மையின் ஓர் பெயர், 'சது: ஷஷ்டி கலா-மயி' (236) - 'அறுபத்து நான்கு கலைகளின் வடிவத்தினள்' என்பதாகும்.
Top
6 - வைரி தம்முடு3 - பகைவனின் தம்பி - (இராவணனின் தம்பி) - விபீடணன் - திருவரங்கத்தின் தல புராணத்தின்படி, அரங்கநாதப் பெருமாள், முன்னம், பிரமனால் வழிபடப்பட்டவர். பின்னர், ரகு குலத்தினைச் சேர்ந்த, இக்ஷ்வாகு மன்னன், பிரமனிடமிருந்து பெற்றான். அதுமுதல், ரகு குல மன்னர்களின் குல தெய்வமாக, அரங்கநாதப் பெருமாள் விளங்கினார். இலங்கைப் போருக்குப் பின், விபீடணன் அயோத்திக்கு வந்தபோது, அரங்கனை, இலங்கையில் தான் வழிபட, தனக்குக் கேட்டான். அங்ஙனமே, ராமனும் அரங்கனை அளித்து, வழியில் எங்கும் பெருமாளை கீழே வைக்கக் கூடாது என்றும், அப்படித் தவறி வைத்தால், பெருமாள் அங்கேயே தங்கிவிடுவார் என்றும் கூறினான். ஆனால், இலங்கைக்கு, அரங்கனைக் கொண்டு செல்கையில், காலைக் கடன்களுக்காக, ஒரு சிறுவனிடம் அரங்கனை விபீடணன் கொடுக்க, அவனோ, விபீடணன் குறிப்பிட்ட நேரத்திற்குள் வராததனால், அரங்கனை கீழே வைத்துவிட, அன்று முதல் அரங்கன் அங்கேயே தங்கிவிட்டதாகக் கூறப்படும். அப்படி வைக்கப்பட்ட இடம், இன்று திருவரங்கமாக வழங்குகின்றது.
Top
ராமாயணத்தின், உத்தர காண்டத்தில் (108-வது அத்தியாயம்), ராமன்-விபீடணனின் உரையாடல் -
ராமன் - "அரக்கரிற் சிறந்தோனே .... எவ்வமயமும் அனைத்து தேவர்களாலும், கடவுளர்களாலும் வழிபடத்தக்க, இக்ஷ்வாகு குல தெய்வமாகிய ஜகந்நாதனை வழிபடுவாய்."
"அங்ஙனமே" என்று விபீடணனன் மறுமொழி கூறினான்.
(உத்தர காண்டம் வால்மீகி ராமாயணத்தினைச் சேர்ந்ததா என ஐயமுள்ளது.)
Top
விளக்கம்
4 - நூவுல கொண்ட3 - எல்லா புத்தகங்களிலும் 'கொண்ட3' - (எள்) 'மலை' என்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்து மதக் கோட்பாடுகளின்படி, தங்களது, மறைந்த மூதாதையருக்காக, அவ்வப்போது இயற்றப்படும், 'ஸ்1ராத்3த4ம்' எனப்படும் 'திவச'த்தில், எள்ளுருண்டை மிக முக்கியமானதோர் இனிப்பாகும். மேலும், அடுத்துவரும், 'அருந்தினானா' என்ற சொல்லினைக் கருத்தில் கொண்டு, என் சிற்றறிவுக்கு எட்டியவரை, இது 'உண்ட3' (உருண்டை) - 'நூவுல வுண்ட3' (எள்ளுருண்டை) என்றிருக்க வேண்டும்; 'நூவுல கொண்ட3' (எள் மலை) என்றல்ல.
Top
5 - ஸிங்க3ரி முனி - இவரைப் பற்றியோ, இந்த நிகழ்ச்சி பற்றியோ, குறிப்புகள் எதும் காணப்படவில்லை. மேற்கூறிய 'திவச'த்தில், மூதாதையரின் இடத்தில் அமரும் அந்தணர்களுக்கு, உணவுடன், எள்ளுருண்டை இடப்படும். ஆனால், எள்ளுருண்டையை, இரண்டாவது முறை இடுவதில்லை, என தமிழ் அந்தணர்களில் ஓர் மரபுண்டு. இங்கு தியாகராஜர் கூறும் நிகழ்ச்சி, இந்த மரபுக்கு ஏதும் தொடர்புடையதா எனத் தெரியவில்லை.
முன்பு செய்தவை - முன் செய் வினையின் விளைவுகள்
எள் மலை - எள்ளுருண்டை என்றும் கொள்ளலாம்.
இனிய - இறைவனைக் குறிக்கும்
Top
Updated on 23 Apr 2010
No comments:
Post a Comment