Tuesday, January 6, 2009

தியாகராஜ கிருதி - நீ ப4க்தி பா4க்3ய - ராகம் ஜய மனோஹரி - Tyagaraja Kriti - Nee Bhakti Bhaagya - Raga Jaya Manohari

பல்லவி
நீ ப4க்தி பா4க்3ய ஸுதா4 நிதி4னீதே3தே3 ஜன்மமு

அனுபல்லவி
பூ4-பா4ரமு கானி ஸுர பூ4-ஸுருலை 1ஜனிஞ்சின (நீ)

சரணம்
வேதோ3க்தம்பௌ3 கர்மமு வெத க3ல்கு3 23தாக3தமௌ
நாதா3த்மக த்யாக3ராஜ நாதா2ப்ரமேய ஸதா3 (நீ)


பொருள் - சுருக்கம்
நாத உருவினனே! தியாகராசனின் தலைவா! அளவிடற்கரியனே!

எவ்வமயமும் உனது பத்திப்பேறெனும் அமிழ்தக் கடலினை நீந்துவதே (நிசப்) பிறவியாகும்
அன்றேல், புவிக்குச் சுமையே, வானோராகவோ அந்தணராகவோ பிறந்தாலும்;
மறைகள் பகரும் கருமங்கள் துயரளிக்கும் பிறப்பு-இறப்புச் சுழலாகும்.


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நீ/ ப4க்தி/ பா4க்3ய/ ஸுதா4/ நிதி4னி/-ஈதே3தே3/ ஜன்மமு/
உனது/ பக்தி/ பேறெனும்/ அமிழ்த/ கடலினை/ நீந்துவதே/ (நிசப்) பிறவியாகும்/


அனுபல்லவி
பூ4/-பா4ரமு/ கானி/ ஸுர/ பூ4-ஸுருலை/ ஜனிஞ்சின/ (நீ)
புவிக்கு/ சுமையே/ யன்றி/ வானோராகவோ/ அந்தணராகவோ/ பிறந்தாலும்/ உனது...


சரணம்
வேத3/-உக்தம்பௌ3/ கர்மமு/ வெத/ க3ல்கு3/ க3த-ஆக3தமௌ/
மறைகள்/ பகரும்/ கருமங்கள்/ துயர்/ அளிக்கும்/ பிறப்பு-இறப்புச் சுழலாகும்/

நாத3/-ஆத்மக/ த்யாக3ராஜ/ நாத2/-அப்ரமேய/ ஸதா3/ (நீ)
நாத/ உருவினனே/ தியாகராசனின்/ தலைவா/ அளவிடற்கரியனே/ எவ்வமயமும்/ உனது...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஜனிஞ்சின - ஜன்மிஞ்சின.

மேற்கோள்கள்

விளக்கம்
2 - 3தாக3தமௌ - பிறப்பு-இறப்புச் சுழல் - வானுலகத்தினை (சுவர்க்கம்) குறிக்கோளாகக்கொண்டு இயற்றப்படும், மறை கூறும் கரும நெறியினால், முக்தி பெறவியலாதென்று தியாகராஜர் சுட்டிக் காட்டுகிறார். இது குறித்து, கீதையில் (அத்தியாயம் 3, செய்யுள் 9) கண்ணன் பகர்ந்த மொழிகள் யாதெனில் -

"உலகோர், வேள்விக்கென்றே அல்லாது இயற்றப்படும் கருமங்களால் கட்டுப்பட்டவராவர்; அதனால், ஓ குந்தி மகனே! பற்றறுத்து, வேள்விக்கென்றே கருமங்கள் இயற்றுவாயாக." (ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில உரையின் தமிழாக்கம்).

திருப்பதி வெங்கடேசப் பெருமானின் பெரும் தொண்டராகிய, தெலுங்கு கவி, அன்னமாசார்யா, தனது 'நானாடி ப3துகு' என்ற தனது கீர்த்தனையில் கூறுவது -

"நீ எதுவரைக்கும் சம்மதிக்கவில்லையோ, அதுவரை பாவங்களும் அறாது, புண்ணியங்களும் தீராது".
Top


Updated on 06 Jan 2009

No comments: