சக்கனி ராஜ மார்க3முலுண்ட3க3
1ஸந்து3ல தூ3ரனேல ஓ மனஸா
அனுபல்லவி
சிக்கனி 2பாலு மீக3ட3யுண்ட3க3
3சீ2யனு 4க3ங்கா3-ஸாக3ரமேலே (ச)
சரணம்
கண்டிகி ஸுந்த3ர-தரமகு3 ரூபமே
முக்கண்டி நோட செலகே3 நாமமே த்யாக3-
ராஜிண்டனே 5நெலகோன்னாதி3 தை3வமே-
யிடுவண்டி ஸ்ரீ ஸாகேத ராமுனி ப4க்தியனே (ச)
பொருள் - சுருக்கம்
ஓ மனமே! மேலான அரச பாட்டைகளிருக்க, சந்துகளில் நுழைவதேனோ?
கெட்டியான பாலும், ஏடுமிருக்க, 'சீ' யெனும் கள்ளேனோ?
கண்ணுக்கு எழில்மிகு உருவம், முக்கண்ணனின் நாவினிலிலங்கும் நாமம், தியாகராசனின் இல்லத்திலேயே நிலைபெற்ற முதற்கடவுள் - இப்படிப்பட்ட சாகேதராமனின் பக்தியெனும்
மேலான அரச பாட்டையிருக்க, சந்துகளில் நுழைவதேனோ?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
சக்கனி/ ராஜ/ மார்க3முலு/-உண்ட3க3/
மேலான/ அரச/ பாட்டைகள்/ இருக்க/
ஸந்து3ல/ தூ3ரனு/-ஏல/ ஓ மனஸா/
சந்துகளில்/ நுழைவது/ ஏனோ/ ஓ மனமே/
அனுபல்லவி
சிக்கனி/ பாலு/ மீக3ட3/-உண்ட3க3/
கெட்டியான/ பாலும்/ ஏடும்/ இருக்க/
சீ2/-அனு/ க3ங்கா3-ஸாக3ரமு/-ஏலே/ (ச)
'சீ'/ எனும்/ கள்/ ஏனோ/
சரணம்
கண்டிகி/ ஸுந்த3ர-தரமகு3/ ரூபமே/
கண்ணுக்கு/ எழில்மிகு/ உருவமே/
முக்கண்டி/ நோட/ செலகே3/ நாமமே/ தியாக3ராஜு-/
முக்கண்ணனின்/ நாவினில்/ இலங்கும்/ நாமமே/ தியாகராசனின்/
இண்டனே/ நெலகோன்ன/-ஆதி3/ தை3வமே/-
இல்லத்திலேயே/ நிலைபெற்ற/ முதற்/ கடவுளே/ -
இடுவண்டி/ ஸ்ரீ ஸாகேத/ ராமுனி/ ப4க்தி/-அனே/ (ச)
இப்படிப்பட்ட/ ஸ்ரீ சாகேத/ ராமனின்/ பக்தி/ எனும்/ மேலான...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
5 - நெலகோன்னாதி3 தை3வமே - நெலகோன்னதி3 தை3வமே - பிற்குறிப்பிட்ட சொல் தவறாகும். ஆனால் 'நெலகோன்னதி4 தை3வமே' என்றிருந்தால் பொருந்தும்.
Top
மேற்கோள்கள்
4 - க3ங்கா3-ஸாக3ரம் - எல்லாவிடங்களிலும் இதற்கு 'கள்' என பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் அத்தகைய பொருளுக்கு ஆதாரம் ஏதுமில்லை. தியாகராஜரின் காலத்தில் 'கங்கா ஸாகர்' என்ற பாடகர், தஞ்சை மன்னரின் அவையிலிருந்ததாகவும், அவர் பெரும் குடிகாரர் என்றும் சொல்லப்படுகின்றது. அவரைக் காரணமாகக் கொண்டு, கள்ளுக்கு, 'க3ங்கா3-ஸாக3ர'மென்று பெயர் வந்ததாக 'வில்லியம் ஜாக்ஸன்' தியாகராஜரைப் பற்றி் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகின்றது. கள்ளும் க3ங்கா3-ஸாக3ரமும்
Top
விளக்கம்
1 - ஸந்து3ல - சந்துகள் - தியாகராஜர் இசசொல்லினை விளக்காவிடினும், சரணத்தில் குறிப்பிட்ட பக்தி நெறியினைத் தவிர மற்றெல்லா நெறிகளையும் அங்ஙனம் அவர் கருதுகின்றார் என பொருள் படும்
2 - பாலு மீக3ட3 - இதனை 'பாலும், ஏடும்' என்றோ 'பாலேடு' என்றோ பொருள் கொள்ளலாம்
3 - சீ2 - அருவருக்கத்தக்கதொன்றைக் குறிக்கும் சொல்
சாகேத - அயோத்தி நகர்
Top
1 comment:
அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
’நெலகோன்ன’ என்பது நெலகொன்ன என்றல்லவா இருக்கவேண்டும். ’நெலகொன்ன தை3வமே என்று இது பாடப்படுகிறது.
வணக்கம்
கோவிந்தசாமி
e
Post a Comment