Monday, October 25, 2010

தியாகராஜ கிருதி - இந்த பா4க்3யமனி - ராகம் புன்னாகவராளி - Inta Bhagyamani - Raga Punnagavarali

பல்லவி
இந்த பா4க்3யமனி நிர்ணயிம்ப
ப்3ரஹ்மேந்த்3ராது3ல தரமா

அனுபல்லவி
1சிந்தனீய ஸ்ரீ ராக4வ நினு மதி3
சிந்திஞ்சு ஸு-ஜனுல 2பூஜிஞ்சின வாரி(கிந்த)

சரணம்
சரணம் 1
மதி ஹீனுலைன நெம்மதி லேனி வாரைன
அதி பாப க்ரு2துலைன என்னடிகி
ஸத்33தி ரானி வாரைன ஸ்ரீ ராம
ஸ்1ருதி புராண நுத ப்ரதி லேனி நினு
ஸன்னுதி ஸேயு ப4க்துல ஜத கூடி3ன வாரி(கிந்த)


சரணம் 2
ஸாரெகு மாயா ஸம்ஸாரமந்து3 சால
தூ3ரின வாரைன காமாது3
பூரித மதுலைன ஸகல வேத3
ஸார நின்னு மனஸார நம்மின ஸுதா4
பூர சித்துல ஸேவ கோரின வாரி(கிந்த)


சரணம் 3
4ர்ம சேல நீது3 மர்மமு தெலியனி
3கர்ம மார்கு3லைன த்யாக3ராஜ நுத
4ர்ம ரஹிதுலைன லோகமுலு நிர்மிஞ்சின 4நீது3
1ர்மமு ஸ்மரியிஞ்சு
நிர்மல மதுல
1ர்மமெஞ்சின வாரி(கிந்த)


பொருள் - சுருக்கம்
  • சிந்திக்கத் தக்க, இராகவா!
  • இராமா! மறைகள், புராணங்கள் போற்றுவோனே!
  • அனைத்து மறைகளின் சாரமே!
  • பொன்னாடையோனே! தியாகராசன் போற்றுவோனே!

  • இத்தனைப் பேறென நிர்ணயிக்க பிரமன், இந்திராதியருக்கும் தரமா?

    • அறிவிலிகளாயினும்,
    • நிம்மதியற்றவர்களாயினும்,
    • மிக்கு பாவம் செய்தோராயினும்,
    • என்றுமே நற்பேறு வாராதவராயினும்,
    • எந்நேரமும், மாயமான, சமுசாரத்தினில் மிகவும் நுழைந்தோராயினும்,
    • இச்சைகள் முதலானவை நிறை உள்ளத்தினராயினும்,
    • உனது மருமம் அறியாத கரும நெறியினராயினும்,
    • அறமற்றோராயினும்,

    • உன்னை மனதில் சிந்திக்கும், நன்மக்களை வழிபடுவோருக்கு,
    • மாற்றில்லா உன்னை நற்போற்றி செய்யும் தொண்டர்களின் இணக்கம் கொண்டோருக்கு,
    • உன்னை மனதார நம்பின, அமிழ்து நிறை சித்தத்தோரின் தொண்டு விழைவோருக்கு,
    • உலகங்களைப் படைத்த, உனது பெயரினை நினைந்திருக்கும், களங்கமற்ற உள்ளத்தோரின் மகிழ்ச்சியினைக் கருதுவோருக்கு,

  • இத்தனைப் பேறென நிர்ணயிக்க பிரமன், இந்திராதியருக்கும் தரமா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
இந்த/ பா4க்3யமு/-அனி/ நிர்ணயிம்ப/
இத்தனை/ பேறு/ என/ நிர்ணயிக்க/

ப்3ரஹ்மா/-இந்த்3ர/-ஆது3ல/ தரமா/
பிரமன்/ இந்திரன்/ முதலானோருக்கும்/ தரமா/


அனுபல்லவி
சிந்தனீய/ ஸ்ரீ ராக4வ/ நினு/ மதி3/
சிந்திக்கத் தக்க/ ஸ்ரீ ராகவா/ உன்னை/ மனதில்/

சிந்திஞ்சு/ ஸு-ஜனுல/ பூஜிஞ்சின வாரிகி/-(இந்த)
சிந்திக்கும்/ நன்மக்களை/ வழிபடுவோருக்கு/ இத்தனை...


சரணம்
சரணம் 1
மதி ஹீனுலு/-ஐன/ நெம்மதி/ லேனி வாரு/-ஐன/
அறிவிலிகள்/ ஆயினும்/ நிம்மதி/ அற்றவர்கள்/ ஆயினும்/

அதி/ பாப/ க்ரு2துலு/-ஐன/ என்னடிகி/
மிக்கு/ பாவம்/ செய்தோர்/ ஆயினும்/ என்றுமே/

ஸத்3/-க3தி/ ரானி வாரு/-ஐன/ ஸ்ரீ ராம/
நற்/ பேறு/ வாராதவர்/ ஆயினும்/ ஸ்ரீ ராமா/

ஸ்1ருதி/ புராண/ நுத/ ப்ரதி/ லேனி/ நினு/
மறைகள்/ புராணங்கள்/ போற்றுவோனே/ மாற்று/ இல்லா/ உன்னை/

ஸன்னுதி/ ஸேயு/ ப4க்துல/ ஜத/ கூடி3ன வாரிகி/-(இந்த)
நற்போற்றி/ செய்யும்/ தொண்டர்களின்/ இணக்கம்/ கொண்டோருக்கு/ இத்தனை...


சரணம் 2
ஸாரெகு/ மாயா/ ஸம்ஸாரமு-அந்து3/ சால/
எந்நேரமும்/ மாயமான/ சமுசாரத்தினில்/ மிகவும்/

தூ3ரின வாரு/-ஐன/ காம/-ஆது3ல/
நுழைந்தோர்/ ஆயினும்/ இச்சைகள்/ முதலானவை/

பூரித/ மதுலு/-ஐன/ ஸகல/ வேத3/
நிறை/ உள்ளத்தினர்/ ஆயினும்/ அனைத்து/ மறைகளின்/

ஸார/ நின்னு/ மனஸார/ நம்மின/ ஸுதா4/
சாரமே/ உன்னை/ மனதார/ நம்பின/ அமிழ்து/

பூர/ சித்துல/ ஸேவ/ கோரின வாரிகி/-(இந்த)
நிறை/ சித்தத்தோரின்/ தொண்டு/ விழைவோருக்கு/ இத்தனை...


சரணம் 3
4ர்ம/ சேல/ நீது3/ மர்மமு/ தெலியனி/
பொன்/ ஆடையோனே/ உனது/ மருமம்/ அறியாத/

கர்ம/ மார்கு3லு/-ஐன/ த்யாக3ராஜ/ நுத/
கரும/ நெறியினர்/ ஆயினும்/ தியாகராசன்/ போற்றுவோனே/

4ர்ம/ ரஹிதுலு/-ஐன/ லோகமுலு/ நிர்மிஞ்சின/ நீது3/
அறம்/ அற்றோர்/ ஆயினும்/ உலகங்களை/ படைத்த/ உனது/

1ர்மமு/ ஸ்மரியிஞ்சு/ நிர்மல/ மதுல/
பெயரினை/ நினைந்திருக்கும்/ களங்கமற்ற/ உள்ளத்தோரின்/

1ர்மமு/-எஞ்சின வாரிகி/-(இந்த)
மகிழ்ச்சியினை/ கருதுவோருக்கு/ இத்தனை...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - சிந்தனீய - (முனி) சிந்தனீய - 'முனி' என்ற சொல் bracket-களில் கொடுக்கப்பட்டுள்ளது. 'சிந்தனீய' என்பதே முழுமையான பொருள் கொடுக்கும். மேலும், எதுகை-மோனையில் 'முனி' என்ற சொல் இங்கு பொருந்துவதாகத் தெரியவில்லை.

2 - பூஜிஞ்சின - பூஜிஞ்சு.

4 - ஸ்மரியிஞ்சு - ஸ்மரிஞ்சு.

Top

மேற்கோள்கள்
3 - கர்ம மார்கு3லு - கரும நெறி - இச்சைகள் வேண்டி வேள்விகள் இயற்றல். இது குறித்து கண்ணன் கீதையில் (அத்தியாயம் 3, செய்யுள் 9) கூறியது குறிப்பிடத்தக்கது -

"வேள்விக்காக மட்டுமேயன்றி, இயற்றப்படும் மற்ற காரியங்களெல்லாமே, உலகோரைப் பிணைப்பதாகும்.
எனவே, குந்தி மகனே, பற்றில்லாது, வேள்விக்காக மட்டுமே பணிகளை இயற்றுவாய்."

4 - நீது31ர்மமு ஸ்மரியிஞ்சு - உனது பெயரினை நினைப்பவர் - 'ராம' என்னும் நாமம், உலக வாழ்க்கையெனும் (பிறவிக்) கடலினைக் கடக்க உதவும் படகு (தாரகம்) ஆகும். 'தாரக நாம'த்தினைக் குறித்து காஞ்சி முனிவரின் உரை நோக்கவும்.

Top

விளக்கம்



Updated on 26 Oct 2010

No comments: